வியாழன், 8 மே, 2025

 

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே.....

திரைப்படம்: உலகம் சுற்றிய வாலிபன்
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா
வரிகள்: வாலி

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ

தஙத் தோணியிலே தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

(தஙத் தோணியிலே)

அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ

(தஙத் தோணியிலே)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...