முதல் மொழி, பாபேல் கோபுரம் குறித்த சுவாரசியங்கள்
இன்று உலகில் 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. சில எழுத்து வடிவம் பெற்றுள்ளன, சில எழுத்து வடிவம் பெறவில்லை. சில மிகவும் பழமையானவை, மற்றவை பிற்காலத்தில் தோன்றியவை. சில இன்றும் நிலைத்து நிற்கின்றன, சில காணாமல் போய்விட்டன. இந்த மொழிகள் எல்லாம் எப்படி தோன்றின? இத்தனை மொழிகள் தானாக தோன்றுவது என்பது சாத்தியமா? இதற்கு ஆய்வியல் கூறும் பதில் "இல்லை" என்பதே. அப்படி என்றால் இந்த மொழிகள் எப்படித்தான் தோன்றின?
ஏற்கனவே உள்ள ஒரு மொழியில் இருந்து பிரிந்து, காலப்போக்கில் வேறுபட்டு புதிய மொழிகள் உருவாகுகின்றன. உதாரணத்திற்கு மலையாளத்தை எடுத்து கொள்ளலாம். மலையாளம் தமிழில் இருந்து பிரிந்தது என்பது ஆய்வின் முடிவு. சேர நாட்டு மக்களின் தமிழ் காலபோக்கில் உச்சரிப்பில் வேறுபட்டு 'மலையாளம்' என்ற புது மொழியாகவே மாறிவிட்டது. மலையாளம் சிறிது காலங்கள் முன்பே எழுத்து வடிவம் பெற்றது. இது போலதான் உலகில் இருந்த மொழிகள் எல்லாம் வேறுபட்டு ஒவ்வொன்றாக தோன்றின. இப்படி ஒவ்வொரு மொழியின் தோன்றலையும் நோக்கி கொண்டே வந்தால் அவை ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற்று குறைந்து கொண்டே வருகின்றன (உதாரணத்திற்கு: மலையாளம் தமிழின் கீழ் வருவது போல்); இன்று வரை 8 மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் இருந்ததே இன்றிருக்கும் அத்தனை மொழிகளும் காலப்போக்கில் வேறுப்பட்டு பிரிந்து தோன்றியிருக்கலாம். இந்த மொழிகளைத் தான் செம்மொழிகள் என்போம்.
"செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்" - தமிழ் விக்கிபீடியா
இன்று உலகில் உள்ள 8 செம்மொழிகள் - கிரேக்கம், லத்தீன், தமிழ், ஹீப்ரு, அரபி, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம். இந்த எட்டு மொழிகளும் வேறெந்த மொழிகளையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் உலகில் உள்ள மற்ற அத்தனை மொழிகளும் இந்த மொழிகளில் இருந்தே பிரிந்து வந்திருக்கின்றன என்பது ஆய்வு முடிவு. 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் சிறிது சிறிதாக வடிகட்டப்பட்டு இறுதியாக எட்டே மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எது முதன்மையானது? அதனை கண்டுபிடித்துவிட்டால் முதல் மொழி எது என்பது தெரிந்துவிடும். ஆனால் ஒரு உண்மை, இந்த எட்டு மொழிகளும் தொடர்பற்று விளங்குகின்றன. இந்த எட்டு மொழிகளுக்கும் கீழ் குறைப்பது மிகவும் கடினம். இந்த மொழிகளின் எழுத்துக்கள் கொண்ட பழங்கால சுவடுகள், கல்வெட்டுகள், ஓலைசுவடிகள் சில கிடைத்துள்ளன. ஆனால் அவை 5000 வருடங்களுக்கு உட்பட்டவை (அதவாது கி.மு 3000). 5000 வருடங்களுக்கு முன்பு விளங்கிய ஏதாவது சுவடுகள் இந்த மொழிகளுக்கு உள்ளதா என்று பார்த்தால், "ஒன்று கூட இல்லை".
ஆனால் 5000 வருடங்களுக்கு முன்பு முற்றிலும் வேறுப்பட்ட மொழிகளுக்கான தடயங்கள் உள்ளன. ஆதாரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அந்த மொழிகள் இன்று உலகில் இல்லை. முற்றிலுமாக பழக்கத்தில் இருந்து அழிந்துவிட்டன. அவை தான் பண்டைய எகிப்து-சுமேரிய சமவெளி நாகரீக மொழிகள். இந்த மொழிகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை அல்ல. தொடர்புடையதாக விளங்குகின்றன.

முதல் மொழி |
எனவே இந்த மொழிகள் எல்லாம் ஒரே மொழியில் இருந்து பிரிந்து வந்திருக்கக்கூடும். மேலும் சுமேரிய சமவெளி பகுதி ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா ஆகிய 3 கண்டகளுக்கு நடுவில் சரியாக அமைந்துள்ளது. எனவே இங்கிருந்து மூன்று கண்டுகளுக்கும் மொழிகள் பரவியிருக்க வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகின்றன.
இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றால் கிட்டத்தட்ட மொழிகளுக்கான தடயங்களையே காணவில்லை. ஆய்வியலில் கண்டுகொள்ளப்பட்ட கி.மு 3000 என்ற காலமும், சுமேரிய சமவெளி என்ற பகுதியும் இன்றுள்ள அத்தனை மொழிகளுக்கும் விடைகள் தருகின்றன. அது என்ன?
சுமேரிய சமவெளி பகுதி |

"பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்" - பைபிள் (ஆதியாகமம் 11:1-10)
சிநெயார் சமபூமி - சுமேரிய சமவெளி பகுதிகளுக்குள் உட்பட்டது. பைபிளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது கி.மு 4000 - கி.மு 2000 என்ற கால அளவிற்குள் வருகிறது. 'பாபேல்' என்பது பாபிலோனை (இராக் நாட்டில் உள்ள பழமையான நகரம்) குறிக்கலாம். சுமேரிய சமவெளி பகுதிகளில் ஜிக்கருட் என்ற பழமையான கோபுரங்கள் காணப்படுகின்றன. சுமேரிய சமவெளியில் தான் பாபிலோனும் உள்ளது. பாபிலோனிலும் பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்று காணப்படுகின்றது. அதன் பெயர் எடேமேனாங்கி. இந்த கோபுரத்தை எழுப்பினவர் நேபுகாத்நேச்சார் என்ற மன்னர். பைபிளில் கூறப்பட்டுள்ள பாபேல் கோபுரம் நேபுகாத்நேச்சார் எழுப்பின ஜிக்கருட் கோபுரம் என்று கூறப்படுகிறது. இதற்கு பல தடயங்கள் ஒத்து வருகின்றன.
பாபிலோன் ஜிக்கருட் கட்டமைப்பு |
நேபுகாத்நேச்சார் மன்னன் வாழ்ந்த காலம் கி.மு 600. பாபேல் கோபுரம் கட்டப்பட்ட காலம் கி.மு 4000 - கி.மு 2000. நேபுகாத்நேச்சார் மன்னர் ஏற்கனவே இருந்த முழுவதாக கட்டி முடிக்கப்படாத ஒரு சிதைந்த பழமையான கோபுரத்தையே மீண்டும் சீர்படுத்தி எடேமேனாங்கி என்ற கோபுரமாக கட்டினதாக கல்வெட்டு ஒன்று அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 'எனுமா எலிஸ்' என்ற பாபிலோனிய பழங்கால சுவடு கி.மு 3000 காலத்திலேயே பாபிலோனில் சிதைந்த கட்டிமுடிக்கப்படாத கோபுரம் ஒன்று இருந்ததாக கூறுகிறது. எனவே முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் விடப்பட்டு, சிதைந்து இருந்த கோபுரம் பைபிள் கூறும் பாபேல் கோபுரமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நேபுகாத்நேச்சார் அவரது ஆட்சி காலத்தில் இஸ்ரேல் யூதேயா பகுதிகளின் மீது போர் புரிந்து வெற்றி பெற்று அந்த பகுதிகளை தன் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தவர். இஸ்ரேல் மக்கள் பலரை தன் நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு சென்றார். அங்கு சென்றாலும், இஸ்ரேல் நாட்டு மக்கள் தங்கள் தெய்வமான கர்த்தரை மட்டும் வழிபட்டு வந்தனர். நேபுகாத்நேச்சார் இஸ்ரேல் நாட்டு அடிமை கைதிகளை தங்கள் தெய்வங்களை வழிபடுமாறு நிர்பந்தித்தார்.
மேற்கோள்:
"நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா? இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும் போது, தாழ விழுந்து, நான் பண்ணி வைத்த சிலையைப் பணிந்து கொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்து கொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்" - தானியேல் 3:14-18 (பைபிள்)
நேபுகாத்நேசர் படம் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு |
அவருக்கு இஸ்ரேல் மக்களின் கர்த்தர் மீது ஒரு வித வெறுப்பு இருந்தது. இதன் காரணமாக கர்த்தர் கட்டவிடாமல் தடுத்த பாபேல் கோபுரத்தை அவர் மீண்டும் எழுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த கோபுரத்தை 'மர்துக்' என்ற தன் தெய்வத்திற்கு ஆலயமாக மாற்றியிருக்கிறார். "மர்துக் தான் தெய்வங்களில் பெரியவன் " என்று பொறித்து வைத்துள்ளார். இதனால் அவருக்கு கர்த்தர் மேல் இருந்த வெறுப்பு தெளிவாகிறது. அது மட்டும் இன்றி அவர் கற்களில் பொறித்து வைத்துள்ள சில செய்திகள் கீழே:
"நான் கட்டின இந்த கோபுரம் நிரந்தரமானது. நான் வெள்ளியாலும், தங்கத்தாலும், உலோகங்களாலும், கற்களாலும், செங்கற்களாலும், மரங்களாலும் கட்டி முடித்து பிரமிக்க வைத்து விட்டேன். இதுதான் பூமியின் முதல் கட்டிடம், பாபிலோனின் பழமையான கோபுரம். நான் கட்டி விட்டேன் கட்டி முடித்து விட்டேன். செங்கற்களால் மேல்பகுதியை கட்டி செப்பு தகடுகளால் மூடி அலங்கரித்து விட்டேன். அனைவரிடமும் சொல்லுங்கள் - இந்த கம்பீரமாக கட்டிடம் உலகத்திற்கு ஏழு வெளிச்சங்களை வீசும்; இதுதான் பொர்ஷிப்பாவின் பழமையான சிகரம். இதனை முன்னிருந்த ஒரு அரசன் கட்டினான் ஆனால் அவனால் மேல்பகுதி வரை கட்டி முடிக்கவில்லை. காலபோக்கில் மக்களும் மறந்து தள்ளிவிட்டனர். அதனை பற்றி பேசாமல் இருந்துவிட்டனர். அன்றிருந்து நிலநடுக்கங்களும், வானில் இருந்து விழுந்த இடிகளும் அந்த கட்டிடத்தை சிதைத்துவிட்டன. அந்த கட்டிடத்தின் செங்கற்கள் உடைந்து போயின அதன் அஸ்திவாரங்கள் பிளவுண்டு போயின. தெய்வங்களில் பெரியவனான மர்துக் அந்த கட்டிடத்தை சீர்படுத்த சொல்லி என் மனதை ஏவினான். நான் அந்த கட்டிடத்தை இடம் மாற்றவும் இல்லை, அதன் அஸ்திவாரங்களை அகற்றவும் இல்லை. ஒரு நல்ல மாதத்தில் நல்ல அதிர்ஷ்டமான நாளில் அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டி முடித்துவிட்டேன். இதில் என் பெயரையும் பொறித்துவிட்டேன்" - கல்வெட்டு
"நான் எடேமேனாங்கியை, பாபிலோனின் ஜிக்கருட்டை கட்டி முடித்து விட்டேன். உலக மக்களுக்கு ஒரு அதிசயமாக அதனை கட்டி விட்டேன். அதன் மேல்கூரையை வானளவு உயர்த்தி விட்டேன், சொர்கத்தின் கதவுகளை எட்டும் அளவிற்கு அமைத்து விட்டேன். நான் அதை செங்கற்களாலும் நீலக்கீலாலும் செய்து முடித்து விட்டேன்" - கல்வெட்டு
இந்த வாக்கியங்கள் பைபளில் உள்ள பாபேல் கோபுரத்தின் குறியீடுகளோடு பொருந்துகின்றன.
நேபுகாத்நேச்சார் காலப்போக்கில் இஸ்ரேலின் தெய்வமான கர்த்தரை ஏற்றுக் கொண்டதாக பைபிள் கூறுகிறது. தன் அகந்தையை கர்த்தர் அடக்கினதாக நேபுகாத்நேச்சார் பைபிளில் ஒரு பகுதியில் கூறுகிறார்.
"நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப் படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்" - தானியேல் 4:31
நேபுகாத்நேச்சார் எழுப்பின எடேமேனாங்கி ஜிக்கருட்டை பண்டைய சரித்திர ஆசிரியர் ஹெரோடாடஸ் கண்டு பிரமித்து போனதாக எழுதிவைத்துள்ளார். பின்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் தன் காலத்தில் (கி.மு 300) இந்த கட்டிடத்தை படையெடுப்பின் காரணமாக அழித்துவிட்டார். இன்று நம் பார்வைக்காக சிதைந்த நிலையில் ஒரு சில பகுதிகளே உள்ளன.