வெள்ளி, 27 மார்ச், 2026

 உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனியெல்லாம் சுகமே
உன் நெஞ்சிலே பாரம்உனக்காகவே நானும்சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்எதற்காகவோ ஈரம்கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்வெறும்பனி விலகலாம்வெண்மேகமே புது அழகிலேநானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனியெல்லாம் சுகமே
வாழ்வென்பதோ கீதம்வளர்கின்றதோ நாதம்நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்இனி வாழ்வெல்லாம் இன்பம்சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்கடலிலே கலந்ததுநம் சொந்தமோ இன்று இணைந்ததுஇன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனியெல்லாம் சுகமேஇனியெல்லாம் சுகமே

திங்கள், 16 மார்ச், 2026

ஓ வசந்த ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Oh Vasantha Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா…
உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…

BGM

ஆண் : மென் பஞ்சு மேகங்கள்…
உன் பிஞ்சுப் பாதங்கள்…
மண் தொட்டதால் இன்று…
செவ்வானம் போல் ஆச்சு…

ஆண் : விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
சூடிய பூச்சரம் வானவில் தானோ…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…

ஆண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…

BGM

பெண் : ஆராதனை நேரம்…
ஆலாபனை ராகம்…
அலைபாயுதே தாகம்…
அனல் ஆகுதே மோகம்…

பெண் : என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
மன்மதக் கோவிலில் பாலாபிஷேகம்…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…

பெண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…

ஆண் : என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…

பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…
ஆண் & பெண் : ஓஹோ…

சனி, 14 மார்ச், 2026

 

உன் பேரை சொல்லும் போதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்…

பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு…
அர்த்தம் சொன்னாய்…
முன் அறியாத வெட்கங்கள்…
நீயே தந்தாய்…

ஆண் : என் உலகம் தனிமை காடு…
நீ வந்தாய் பூக்களோடு…
என்னை தொடரும் கனவுகளோடு…
பெண்ணே பெண்ணே…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : ஓஓ… நீ பார்க்கும் போதே…
மழை ஆவேன்… ஓஓ…

ஆண் : உன் அன்பில்…
கண்ணீர் துளி ஆவேன்…

BGM

ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான்…
எண்ணம் தோன்றும்…
உன் காதோரம் உரையாடிதான்…
ஜென்மம் தீரும்…

பெண் : உன் மார்போடு சாயும்…
அந்த மயக்கம் போதும்…
என் மனதோடு சேர்த்து வைத்த…
வலிகள் தீரும்…

ஆண் : உன் காதல் ஒன்றை தவிர…
என் கையில் ஒன்றும் இல்லை…
அதை தாண்டி ஒன்றுமே இல்லை…
பெண்ணே பெண்ணே…

ஆண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் & பெண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

 

வாடாத ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிராமத்து அத்தியாயம்

Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…

ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…

ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

 

நான் போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஜேம்ஸ் வசந்தன்நாணயம்

Naan Pogiren Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…

ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்…
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…

பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்…
இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…

பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…

ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…

பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…

ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

சனி, 7 பிப்ரவரி, 2026

 

தேவி ஸ்ரீதேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Devi Sridevi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே…
ஆட்டும் பக்தனம்மா…
சூடம் ஏத்தி மேலும் கீழும்…
காட்டும் பித்தனம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு…
தேவி அவதாரம் நான்தானா உனக்கு…
போலி பூசாரியே…

ஆண் : பட்ட போடாத பூசாரி நான்…
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்…
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி…
அன்பன் தொட வேண்டுமே…

பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே…
எனக்கா தெரியாது…
ஆண் : ஹே ஹே ஹே…

பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்…
எனக்கா புரியாது…
ஆண் : ஆஆஹா…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி…
அண்ட முடியாது ஆங்கார சக்தி…
ஆசை ஆகாதைய்யா…

ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே…
அன்பின் உருவான அபிராமியே…
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி…
எனக்கு நீதானம்மா…

பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்…
ஊர்போய் சேராது…
ஆண் : ததரினா தன தன…

பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்…
மயக்கம் தீராது…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

 

வந்தனம் என் வந்தனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

ஆண் : வந்தனம் என் வந்தனம்… ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : ஒரு ராத்திரி ஒரு காதலி…
விளையாடத்தான் போதுமா…

BGM

ஆண் : ஒரு சூரியன் பல தாமரை…
உறவாடினால் பாவமா…

ஆண் : மனம் ஒரு வண்டினம்…
தினம் ஒரு பெண்ணிடம்…
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா…
அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…

BGM

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன…
திரனன திரனன திரனன திரனன…
திரனதீந்தனன திரனதீந்தனன…
திரன திரன திரன திரன ஹா…

BGM

ஆண் : பாதங்களில் சதங்கைகளின்…
நாதங்களைக் கேட்கிறேன்…

BGM

ஆண் : பூப்பந்தலா பொன்னூஞ்சலா…
புரியாமல் நான் பார்க்கிறேன்…

ஆண் : பழைய பால் புளித்தது…
புதிய தேன் இனித்தது…
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை…
இதில் தங்கிப் போக என்ன வாடகை…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...