உறவுகள் தொடர்கதை
வெள்ளி, 27 மார்ச், 2026
திங்கள், 16 மார்ச், 2026
ஓ வசந்த ராஜா
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | நீங்கள் கேட்டவை |
Oh Vasantha Raja Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா…
உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…
பெண் : ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…
—BGM—
ஆண் : மென் பஞ்சு மேகங்கள்…
உன் பிஞ்சுப் பாதங்கள்…
மண் தொட்டதால் இன்று…
செவ்வானம் போல் ஆச்சு…
ஆண் : விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
விண் சொர்க்கமே பொய் பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
சூடிய பூச்சரம் வானவில் தானோ…
பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…
ஆண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…
பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா… ஓஹோ…
—BGM—
பெண் : ஆராதனை நேரம்…
ஆலாபனை ராகம்…
அலைபாயுதே தாகம்…
அனல் ஆகுதே மோகம்…
பெண் : என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
என் மேகமே வா வா…
இதழ் நீரைத் தூவு…
மன்மதக் கோவிலில் பாலாபிஷேகம்…
பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…
பெண் : உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
ஆண் : என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…
பெண் : ஓ… வசந்த ராஜா…
ஆண் : தேன் சுமந்த ரோஜா…
ஆண் & பெண் : ஓஹோ…
சனி, 14 மார்ச், 2026
உன் பேரை சொல்லும் போதே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண் | ஜி. வி. பிரகாஷ் குமார் | அங்காடித் தெரு |
Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…
ஆண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
—BGM—
பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…
பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
—BGM—
ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்…
பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு…
அர்த்தம் சொன்னாய்…
முன் அறியாத வெட்கங்கள்…
நீயே தந்தாய்…
ஆண் : என் உலகம் தனிமை காடு…
நீ வந்தாய் பூக்களோடு…
என்னை தொடரும் கனவுகளோடு…
பெண்ணே பெண்ணே…
பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…
பெண் : ஓஓ… நீ பார்க்கும் போதே…
மழை ஆவேன்… ஓஓ…
ஆண் : உன் அன்பில்…
கண்ணீர் துளி ஆவேன்…
—BGM—
ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான்…
எண்ணம் தோன்றும்…
உன் காதோரம் உரையாடிதான்…
ஜென்மம் தீரும்…
பெண் : உன் மார்போடு சாயும்…
அந்த மயக்கம் போதும்…
என் மனதோடு சேர்த்து வைத்த…
வலிகள் தீரும்…
ஆண் : உன் காதல் ஒன்றை தவிர…
என் கையில் ஒன்றும் இல்லை…
அதை தாண்டி ஒன்றுமே இல்லை…
பெண்ணே பெண்ணே…
ஆண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…
ஆண் & பெண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...
-
சிவஞானபோதம் சிவஞானபோதம்...!!! தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களா...
-
இராவண ன் முன்னொரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஆண்ட மன்னன் இராவணன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக இலங்கை நகர...
-
திருவள்ளுவர் கூறும் இறைவன் யார் திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில...