சனி, 14 மார்ச், 2026

 

உன் பேரை சொல்லும் போதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

BGM

ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்…

பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு…
அர்த்தம் சொன்னாய்…
முன் அறியாத வெட்கங்கள்…
நீயே தந்தாய்…

ஆண் : என் உலகம் தனிமை காடு…
நீ வந்தாய் பூக்களோடு…
என்னை தொடரும் கனவுகளோடு…
பெண்ணே பெண்ணே…

பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

பெண் : ஓஓ… நீ பார்க்கும் போதே…
மழை ஆவேன்… ஓஓ…

ஆண் : உன் அன்பில்…
கண்ணீர் துளி ஆவேன்…

BGM

ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான்…
எண்ணம் தோன்றும்…
உன் காதோரம் உரையாடிதான்…
ஜென்மம் தீரும்…

பெண் : உன் மார்போடு சாயும்…
அந்த மயக்கம் போதும்…
என் மனதோடு சேர்த்து வைத்த…
வலிகள் தீரும்…

ஆண் : உன் காதல் ஒன்றை தவிர…
என் கையில் ஒன்றும் இல்லை…
அதை தாண்டி ஒன்றுமே இல்லை…
பெண்ணே பெண்ணே…

ஆண் : நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே…
உள் நெஞ்சில் கொண்டாட்டம்…
உன்னோடு வாழதானே…
உயிர் வாழும் போராட்டம்…

ஆண் & பெண் : நீ பார்க்கும் போதே மழை ஆவேன்… ஓஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்…
நீ இல்லை என்றால் என் ஆவேன்… ஓஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  உன் பேரை சொல்லும் போதே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் நா. முத்துக்குமார் நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் & ஹரிசரண் ஜி. வி...