சனி, 7 பிப்ரவரி, 2026

 

தேவி ஸ்ரீதேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Devi Sridevi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே…
ஆட்டும் பக்தனம்மா…
சூடம் ஏத்தி மேலும் கீழும்…
காட்டும் பித்தனம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு…
தேவி அவதாரம் நான்தானா உனக்கு…
போலி பூசாரியே…

ஆண் : பட்ட போடாத பூசாரி நான்…
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்…
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி…
அன்பன் தொட வேண்டுமே…

பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே…
எனக்கா தெரியாது…
ஆண் : ஹே ஹே ஹே…

பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்…
எனக்கா புரியாது…
ஆண் : ஆஆஹா…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி…
அண்ட முடியாது ஆங்கார சக்தி…
ஆசை ஆகாதைய்யா…

ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே…
அன்பின் உருவான அபிராமியே…
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி…
எனக்கு நீதானம்மா…

பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்…
ஊர்போய் சேராது…
ஆண் : ததரினா தன தன…

பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்…
மயக்கம் தீராது…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  தேவி ஸ்ரீதேவி பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் வாலி எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் கங்கை அமரன் வாழ்வே மாயம் ...