சனி, 7 பிப்ரவரி, 2026

 

வந்தனம் என் வந்தனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

ஆண் : வந்தனம் என் வந்தனம்… ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : ஒரு ராத்திரி ஒரு காதலி…
விளையாடத்தான் போதுமா…

BGM

ஆண் : ஒரு சூரியன் பல தாமரை…
உறவாடினால் பாவமா…

ஆண் : மனம் ஒரு வண்டினம்…
தினம் ஒரு பெண்ணிடம்…
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா…
அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…

BGM

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன…
திரனன திரனன திரனன திரனன…
திரனதீந்தனன திரனதீந்தனன…
திரன திரன திரன திரன ஹா…

BGM

ஆண் : பாதங்களில் சதங்கைகளின்…
நாதங்களைக் கேட்கிறேன்…

BGM

ஆண் : பூப்பந்தலா பொன்னூஞ்சலா…
புரியாமல் நான் பார்க்கிறேன்…

ஆண் : பழைய பால் புளித்தது…
புதிய தேன் இனித்தது…
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை…
இதில் தங்கிப் போக என்ன வாடகை…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  தேவி ஸ்ரீதேவி பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் வாலி எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் கங்கை அமரன் வாழ்வே மாயம் ...