செவ்வாய், 18 அக்டோபர், 2016

தாய் மொழி!!


தமிழை வாழ வைக்க சில வழிகள் உண்டு. வீட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் தமிழாக இருக்க வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனைச் சந்தித்தால் தமிழில் பேச வேண்டும். கோயில் வழிபாடு தமிழில் இல்லாத கோயில்களுக்குப் போகக் கூடாது. 

தமிழ் தெரியாத கடவுளர் எங்களுக்குத் தேவையில்லை. எங்கேயிருந்து வந்தார்களோ அங்கு போய்விட வேண்டும். எடுத்துக்காட்டு வாதாபி கணபதி. அவர் வாதாபிக்குப் போய்விட வேண்டும். திருமணம் செந்தமிழில் திருக்குறள் ஓதி நடத்த வேண்டும். 

அல்லது திருமுறை ஓதி செய்ய வேண்டும். நுண்கலை கற்றுக் கொடுப்போர் தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கோயில் கட்டினால் ஒரு தமிழப் பள்ளிக்கூடமும் கட்ட வேண்டும். அங்கே தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நீதி நெறி இருக்க வேண்டும். அவற்றை பிள்ளைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநெறி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வுலகிற்கு பல நீதி நூல்களை வழங்கி உள்ளது. அனைத்திற்கும் மேலாக உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழர்களின் ஒப்பற்ற படைப்பாகும். அறம், வீரம் , காதல், சமூக வாழ்வு, இலக்கியம் என பலவற்றையும் உள்ளடடிக்கிய சங்க இலக்கிய நூல்கள் ஏராளாமாக உள்ளன. இவ்வனைத்தும் உலக மக்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல்களாகும்.

                                                                                                           

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

பாடல் : பாரதிதாசன்

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். 


அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஆகிய 12 (உயிர் எழுத்துக்களுக்கும்)முன்பு ஓர் என்ற எழுத்து வரும்.

உதாரணம் ஓர் அம்மா,ஓர் இலை,ஓர் உடும்பு,ஓர் ஓளவைப்பாட்டி.
மற்றய (மெய் எழுத்துக்களுக்கு) முன்னால் ஊதாரணம் ஞ ய ன ந ம ண ய ர ல வ ழ ற பேன்றவைகளுக்கு முன் ஒரு என்ற எழுத்து வரும்.

ஊதாரணம் ஒருமாடு,ஒரு ஞானி,ஒரு நண்பன்.

ஆக்கம்

ஆசியர் தமிழன்பன் லண்டன்


















தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.


247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக 
விளங்குகின்றன.

 அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. 

அவற்றைத் தெரிந்து கொள்வோம் .

அ -----> எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும்.ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும்,நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் தான்..



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலியூர் சோமசுந்தரப் புலவர்-

உலகின் முதல் அறிவியல் நூல் தொல்காப்பியம் 

 


பழங்காலத்து தமிழ் எழுத்து.










 



வழக்குத் தமிழ் – தனித்தமிழ்

1.தை – சுறவம்
2.மாசி – கும்பம்
3.பங்குனி – மீனம்
4.சித்திரை – மேழம்
5.வைகாசி – விடை
6.ஆனி – இரட்டை
7.ஆடி – கடகம்
8.ஆவணி – மடங்கல்
9.ஐப்பசி – துலை
10.புரட்டாசி – கன்னி
11.கார்த்திகை – நளி
12.மார்கழி – சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

1.ஞாயிறு – ஞாயிறு
2.திங்கள் – திங்கள்
3.செவ்வாய் – செவ்வாய்
4.புதன் – அறிவன்
5.வியாழன் – வியாழன்
6.வெள்ளி – வெள்ளி
7.சனி – காரி

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1.இளவேனில் -தை – மாசி மாதங்கள்
2.முதுவேனில் -பங்குனி – சித்திரை மாதங்கள்
3.கார் – வைகாசி – ஆனி மாதங்கள்
4.கூதிர் – ஆடி – ஆவணி மாதங்கள்
5.முன்பனி- புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6.பின்பனி– கார்த்திகை – மார்கழி மாதங்கள்


ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. 
இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. 
உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. 
ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. 
எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. 
ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. 
ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. 
ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. 
ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. 
ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. 
அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. 
கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. 
ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. 
சனி நீராடு / 16. Shower regularly.
17. 
ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. 
இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. 
இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. 
தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. 
நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. 
பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. 
மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. 
இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. 
அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. 
இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. 
வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. 
அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. 
இளமையில் கல் / 29. Learn when young.
30. 
அரனை மறவேல் / 30. Cherish charity.
31. 
அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. 
கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. 
காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. 
கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. 
கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. 
குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. 
கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. 
கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. 
கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. 
கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. 
கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. 
கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. 
கெளவை அகற்று / 43. Don't vilify.
44. 
சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. 
சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. 
சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. 
சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. 
சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. 
சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. 
செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. 
சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. 
சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. 
சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. 
சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. 
தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. 
தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. 
திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. 
தீவினை அகற்று / 58. Don't sin.
59. 
துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. 
தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. 
தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. 
தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. 
தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. 
தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. 
தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. 
நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. 
நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. 
நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. 
நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. 
நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. 
நூல் பல கல் / 71. Read variety of materials.
72. 
நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. 
நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. 
நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. 
நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. 
நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. 
பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. 
பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. 
பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. 
பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. 
புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. 
பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. 
பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. 
பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. 
பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. 
பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. 
போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. 
மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. 
மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. 
மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. 
மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. 
முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. 
மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. 
மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. 
மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. 
மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. 
மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. 
மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. 
வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. 
வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. 
வித்தை விரும்பு / 101. Long to learn.
102. 
வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. 
உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. 
ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. 
வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. 
வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. 
வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. 
ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. 
ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
ஔவையார்.















‪#‎பிறமொழி‬ = ‪#‎தாய்மொழி‬
*ஸ்வீட் ஸ்டால் = இனிப்பகம்
*காபி பார் = குளம்பிக் கடை
*ஹோட்டல் = உணவகம்
*தியேட்டர் = திரையகம்
* போட்டோ ஸ்டூடியோ = புகைப்பட (அ) நிழற்பட நிலையம்
*ஆட்டோ = தானி
*பியூட்டி பார்லர் = அழகு நிலையம் (அ) எழில் புனையகம்
*ரெடிமேட்ஸ் = ஆயத்த ஆடைகள்
*பேக்கரி = அடுமனை
*பேட்டரி = மின்கலன்













பெண்ணின் பருவங்கள் ஏழு... 

 > பேதை : 1 முதல் 8 வயது வரை

 > பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...

 > மங்கை : 11 முதல் 14 வயது வரை...

 > மடந்தை : 15 முதல் 18 வயது வரை...

 > அரிவை : 19 முதல் 24 வயது வரை...

 > தெரிவை : 25 முதல் 29 வயது வரை...

> பேரிளம் : பெண் 30 வயது முதல்...
 பெண்மையை போற்றுவோம்...!

ஆய கலைகள் அறுபத்து நான்கும்!!!





பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்
விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்."
எவ்வளவு எளிமையாக உள்ளது.! தமிழின் பெருமைகளை தமிழர்களே உணர்வீர்களாக..!
வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்

1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : ம்மைய, நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி

நன்றி
செந்தமிழ் சோழன் விஜய் குமார் ..

தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! 


பாரதி

எழிதில் தமிழ் கற்க சில காணொளிகள் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...