செவ்வாய், 18 அக்டோபர், 2016



உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் - தெரிந்துகொள்வோம்



உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருகிறேன்.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் :-
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)
ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)
கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று
சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)
இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

.5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.


கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races” என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.
இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.
எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.
அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.
ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.
Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது….
Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.
siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.
“Heinrich Kari Brugsh” – “History of Egypt” என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.
இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 – 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l”Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.
ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
==========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” -

 ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.


உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான் வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823.அடிகளாரின் வான்புகழை கொண்டாடுவோம்!

இந்து மதமும் சைவ மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில்வள்ளலார் இந்த சமயங்களில்உள்ள புராணங்கள்கட்டுக் கதைகள் முதலானவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்றுஅறிவுறுத்தினார்ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் நேரத்தைவீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்கடவுள் என்பவர் ஒருவரேபலர் அல்லஅவர் ஒளியின்ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார்ஒளியை கடவுளாக பாவித்துஉயிர் இரக்கமேகடவுள் வழிபாடாக கொண்டு , அன்பும்தயவு சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தரஅமைதியை நிலை நாட்டும்அதுவே சமரச சன்மார்க்க உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார்போதித்தார்.
சாதிகள்மதங்கள்சமயங்கள்அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார்சிறுதெய்வவழிபாடுசிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தைஏற்படுத்திக் கொடுத்தார்ஆரிய இந்து மதம் மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும்மறுக்கச் சொன்னார் வள்ளலார்இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும்இறந்தவர்களுக்கு திதிதவசம் முதலிய ஈமக் கிரியையை செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார்சிறு தெய்வ வழிபாடுசெய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம்என்றும் கூறினார்கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் ,கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை ஒளிவழிபாடே உண்மை வழிபாடு என்றும் போதித்தார்இயற்கையின் சகல சக்திகளையும் நேரே வள்ளலார்உள்வாங்கியதால்நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார் வள்ளலார்உண்மைக் கடவுளை,உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் ,இயற்கை அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப வாழ்வில் மனிதர்கள் என்றும்வாழலாம் என்று உலகிற்கு வழிகாட்டினர் வள்ளலார்.
மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு நம்பிக்கையைபண்பாட்டை , மொழியை திணிக்கமுயலும் மதவாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார்சாதியும் மதமும் சமயமும் மனிதற்குஉண்மையை உணர்த்தாது துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார வள்ளலார்.இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிரஉலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதுதமிழ்நாட்டையும்இந்திய நாட்டையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டைகலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும்அவசியமாகிறது.
இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்குவழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொருதமிழரின் கடமையாகும்போற்றுவது மட்டுமல்லாதுஅவர் கூறிய வழியில் நாம் அனைவரும் நடக்கமுயற்சிக்க வேண்டும்தமிழகத்திற்கு தமிழ்மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம்உலகில் உள்ள எல்லா மொழிகளிலும்மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும்.குறிப்பாக இன வெறியை உமிழ்ந்து இந்தி,சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும்திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்குவள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டுசெல்வோம்இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலரஇந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க வேண்டும்அப்போது தான்கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும்நல்லாட்சி மலரும்அனைத்து மாநில மக்களும்நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள்பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கட்டும் ! வாழ்கவள்ளலாரின் வான்புகழ் !

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் 
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே ! 
அருட்பெருஞ்சோதி அகவல்

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 


2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்துடன் 'பெருவழுதி' என்று பெயர் பொறிக்கப்பட்ட சங்க கால மோதிரம் கண்டுபிடிப்பு ! தமிழர்களுக்கு அறிவு இல்லை, வரலாறு இல்லை, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்தும் ஆரிய திராவிடர்களே, இந்த செய்தியை பாருங்கள் !

இந்திய கண்டத்திலேயே முதன் முதலில் எழுத்துக்களுடன் நாணயம் வெளியிட்டது தமிழர்கள் தான் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. இப்போது தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து வெள்ளியை இறக்குமதி செய்து அதில் மோதிரம் முதலான அணிகலன்களை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது . புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பாண்டிய மன்னன் பெருவழுதியின் மீன் சின்னத்தையும் , பெயரையும் தமிழி எழுத்துருவில் பொறித்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் மோதிரம் உருவாகியுள்ளனர் தமிழர்கள்.

இந்த மோதிரத்தை தமிழ் வணிகர் ஒருவர் வைத்திருந்தார். இவரிடம் இருந்து மலையாள தொல் பொருள் ஆய்வாளர் பீனா என்பவர் வாங்கி இதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவருக்கு நம் பாராட்டுகள். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தமிழக தொல்லியல் துறை இந்த அரிய கண்டுபிடிப்பை வாங்க வேண்டும். இப்படியான தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் பொருட்களை தமிழக அரசு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்து வரும் தமிழ் தலைமுறைக்கு காட்ட வேண்டும். அப்போது தான் தமிழின் தொன்மையும், தமிழர்களின் அறிவாற்றல் பற்றியும் இப்போதுள்ள தலைமுறை அறிந்து கொள்வார்கள்.

உலகில் முதல் கப்பல் படை

உலகில் முதல் கப்பல் படையை நிறுவி,தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த தமிழ் மன்னன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகு பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு, சிதைந்த அக்கப்பலின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய மாதிரிவடிவம் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா தெரிவிக்கிறார்.
உலகில் கப்பலை கண்டுபிடித்தவர்கள் மட்டுமன்றி கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவர்களும் தமிழர்களே என்று கூறப்படுகிறது. கப்பல் கட்டுமானத்தில் வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள்
இதே போல் தென்பசிபிக்மா கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், “கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவுக்கு வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயற்கைக் கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,
ஊரு——–ஆஸ்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்——–மெக்ஸிகோ
திங்வெளிர்——————–ஐஸ்லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்?
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.
லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிடிஷ்காரர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது.
உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள்
இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது.
அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”.
* இதில் “கனம்” என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு)
இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”.
* “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்கான குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, (“கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும்)
இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப் போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
* “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.
* “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்!
* “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது!
* “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி”
மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.
* “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது,
இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர், இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால்
* “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்றது.
இந்த கப்பல் படையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் இம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளதா என்பது சந்தேகம்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...