உலகின் முதல்மொழி தமிழ்; ஆதாரங்களுடன் ‘டாப் 10’ வரிசையில் பழமையான சில மொழிகள்
ஆதாரப்பூர்வமான ஆய்வுகளின் மூலமாக மிகத்தொன்மையான பத்து மொழிகளை தேர்வு செய்து, வரிசைப்படுத்தியுள்ளனர்.
உலகத்தின் முதல் மொழியாக தமிழ் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இப்படி மேலும் சில மொழிகளையும் ’டாப் 10’ வரிசையில் வெளியிட்டுள்ளனர்.
இப்போது உலகில் 6000 மொழிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழிகள் பல இருக்கின்றன.
எது பழமையான மொழி என தீர்மானிப்பதில் சூடான விவாதங்களும் அடங்கியுள்ளன.
ஆனாலும், இந்த கடினமான முயற்சிக்கும் பல்வேறு தரப்பு ஆய்வாளர்களின் அங்கீகரிப்புடன் ஒரு சரியான தீர்வு கிடைத்துள்ளது.
முதல் 10 மொழிகளின் வரிசை
10- லத்தீன்
கி.மு.75 க்கு முன்பிலிருந்து லத்தீன் இருந்துள்ளது. இத்தாலியில் ரோமப் பேரரசுகளின் முதன்மை மொழியாக இருந்து, பல போர்களையும் வெற்றிகளையும் தன் வரலாற்றில் ஏந்தி நிற்கிறது.
இப்போது உள்ள பல ரோமானிய மொழிகள் லத்தீனிலிருந்தே தோன்றியுள்ளன. ஆங்கிலம் உட்பட பல நவீன மொழிகளில் லத்தீன் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்போதும், லத்தீனில் உயர்கல்வி படிப்புகள் ஒரு அனுபவிப்பாக கற்றுத்தரப்படுகிறது.
9- ஆர்மேனியன்
இது இந்தோ- யூரோப்பியன் மொழி. இதற்கு பழமையான இலக்கண வரலாறு உண்டு. 5 ம் நூற்றாண்டில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட பைபில் குறிப்புகள் இந்த மொழியின் பழமைக்கு சான்று. இது சுமார் கி.மு. 450 களிலே தோன்றியுள்ளது. இப்போதும் இதை தாய்மொழியாக கொண்ட மக்கள் 50 லட்சம் பேர் உள்ளனர்.
8- கொரியன்
கி.மு. 600 ம் நூற்றாண்டு பழமையுடையது. கொரியன் தீபகற்பத்தில் 6.5 கோடி மக்களும் மற்ற நாடுகளில் 55 லட்சம் மக்களும் தாய்மொழியாக கொண்டுள்ளனர்.
கொரியாவின் வலிமையான தேசிய அடையாளமாகவும் மக்களால் பேசவும் எழுதவும் பயன்படும் முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.
7 - ஹீப்ரு
கி.மு.1000 ம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இஸ்ரேலின் தேசிய மொழியான இது. பல காலமாக புனித நூல்கள், புனித வாசகங்கள் எழுதும் மொழியாக மட்டுமே பயன்பட்டு வந்துள்ளது. அதனால் ’பரிசுத்த மொழி’ என பெயர் பெற்றது. தற்சமயம், யூதர்களுக்கு பேசவும் எழுதவும் அவர்களை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது.
6- அராமைக்
இநத மொழி கி.மு.1000 ம் ஆண்டு பழமையுடையது என்றும் ஹீப்ரு, அரபு போன்ற மொழிகளே அராமைக்கிலிருந்து மருவி உருவாயின, அந்த மொழிகளின் பெரும்பாலான வேர்ச்சொற்கள் அராமைக் மொழிக்குரியது.
ஈராக், ஈரான், சிரியா, இஸ்ரேல், லெபனான் மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் பல்வேறு மொழிகளுக்கு தாய்மொழியாக இருப்பதோடு, ரஷ்யா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர்கள் பலருக்கும் இது தாய்மொழியாக திகழ்கிறது.
5- சைனீஸ்
சைனீஸ் மொழிக்கு கிடைத்துள்ள எழுத்து ஆதாரம், 3000 ஆண்டுகளில் இருந்து கி.மு.1200 ஆண்டுகளுக்குரியது. 1.2 பில்லியன் மக்கள் சைனீஸை முதன்மை மொழியாக பேசுகிறார்கள். இதுவே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது.
4- கிரேக்கம்
இந்த மொழியின் பழமையான எழுத்துப் பதிவு கி.மு.1450 ஆண்டுகளுக்கு உரியது. இது ஐரோப்பியர்களின் நீண்ட, வலிமையான வரலாற்றுக்குரிய மிகப்பழமையான மொழி, இதன் மருவிய மொழிகளான க்ரீஸ், அல்பனா மற்றும் சிப்ரஸ் உட்பட இந்த மொழி பேசும் மக்கள் ஒரு கோடியே 30 லட்சம்.
3- எகிப்தியன்
இது எகிப்தின் பழமையான மொழி, இது அஃரோ- ஆசியாடிக் மொழி குடும்பத்தை சேர்ந்தது. அங்குள்ள கல்லறை சுவரில் கி.மு.2600- கி.மு.2000 காலத்திற்குரிய ஒரு மூதாதையரின் சுயசரிதை குறிப்பு உள்ளது.
2- சமஸ்கிருதம்
தமிழிலிருந்து உருவான சமஸ்கிருதம் பல ஐரோப்பிய மொழிகளுக்கு வளமை சேர்த்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமஸ்கிருதம் இந்தியாவின் பாரம்பரிய மொழியாக விளங்குகிறது. கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி இந்தியாவின் அலுவலக மொழியாக இருந்தாலும் இதன் தாய்மொழிக்கான அங்கீகாரம் மிககுறைவானது.
1- தமிழ்
தமிழ் மொழி 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி இதன் இலக்கணம் மற்றும் மொழிவளம் சிறந்தது விரிவானது. 14 வருடங்களுக்கு முன்பு எடுத்த சர்வேயின் படி 1,863 பத்திரிகைகள் தமிழில் நடத்தப்படுவதே அதன் நிகழ்கால வளத்துக்கும் சான்று.
தமிழ் தோன்றிய காலத்தில் வேறுசில மொழிகளும் தோன்றியிருக்கலாம். பிறகு, அழிந்தும் இருக்கலாம்.
ஆனால், தமிழ் பழமையிலும் இன்னும் 8 கோடிக்கு மேற்பட்ட மக்களின் தாய்மொழியாக பயன்பாட்டில் இருப்பது தனியொரு வளமை. அது தமிழர்களுக்கு தன்னிகரில்லா பெருமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக