சுமேரு மொழி தமிழா? அல்லையா?
சுமேரு மொழி தமிழா? அல்லையா? முதல் தொகுதி
முனைவர் கி. லோகநாதன் 13-3-13
அன்பர்களே
நான் பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் சுமேரு மொழி தொல்தமிழே என்று காட்டி வருகின்றேன். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளேன் தமிழக தமிழ் அன்பர்களிடையே இது இன்னும் பரவ வேண்டும் என்பதற்காக இந்த இழை. நான் சேகரித்துள்ள சுமேருத் தமிழ் நூற்களிலிருந்து சில வரிகளை எடுத்து அது தமிழா என்ற கேள்வியையும் கேட்டுள்ளேன், சில விளக்கங்களோடு இவ்வரிகள் தொல் தமிழே என்று தமிழ் அறிந்த அனைவராலும் உணர முடியும் என்றே நினைக்கின்றேன். இதனையே 'recognizability' என்று கூறி அதனை மையமாகக் கொண்டு 'கூர்தல் வரலாற்று மொழியியல்' என்ற ஓர் துறையையும் ஓரளவு உருவாக்கியுள்ளேன்.
இங்கு சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சில வரிகள்.
1. lugal-e mu-ni nig-du-se
The king's name, according to what is becoming
உளுகள்ளே மோஅன்னை நிக்துசேய்
2.u-su-du inim pa-e ag-de
In order to bring (it) into light , for distant days, by means of the word...
ஊ சூடு எனம் பார் ஏ ஆக்கிடே
3. Sul-gi lugal Uri-ma-ke
Sulgi's, he king of Ur
சூல்கி, உளுகள் ஊரிம்மக்கே
4. a-na za-mi-bi-im kalag-ga-na sir-bi-im
This is the song of his power, this is the hymn of his valour
ஆன்ன சாமீபியம் கல்ஆக்கன்ன சீர்பியம்
5. gal-an-zu nig sag-bi-se e-a-na mu-da-ri-bi-im
Of the wise, in all things foremost, this is the lasting record
கலஞ்-சு நிக சான்பிசே ஏயன்ன முதரீபியம்
காண்க:
1, வரி 3-இல் 'ஊர்' எனும் சொல்'
2, வரி 4-இல் 'சீர்பியம்' இங்கும் இன்னும் ப்ல இடங்களிலும் 'சீர்' என்றால் 'பாடு' என்று பொருள்படும் இதே வரியில் ;சாமீபியம்' என்று வருகின்றது . இதுவும் தெய்வங்களை வாழ்த்துதல் போன்று வாழ்த்துதல். zami> சாமி: தெய்வக் குறிப்பு.
3. வரி 5-இல் மிக அழகிய 'முதரீபியம் அதாவது முது+அரி+பியம்: முதுமையாவதை அரிப்பது, அதாவது அழிப்பது. என்றும் நிலவச் செய்வது.
இந்தப் சொல்லையேத் தேர்ந்தெடுத்து இந்த அகவலுக்கு பெயர் வைத்துள்ளேன்.
ஓர் சிறிது சிந்தித்து இப்பொழுது சொல்லுங்கள் -- இது தமிழா? அதாவது தொல் தமிழா? அல்லையா?
உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நான் பெரிதும் மகிழ்வேன்
உலகன்
2- வது
இதே முதரீபியத்தில் இன்னும் பல அழகிய தொல் தமிழே என்று புரிந்துகொள்ளும் வகையில் பல வரிகள் உண்டு, இன்றும் வழக்கத்தில் உள்ள பல சொற்களின் மூலம் அங்குண்டு என்றும் நாம் அறிய வருகின்றோம். அவ்வகையில் கீழ் வரும் ஓர் வரியைக் காணுங்கள் கருதுங்கள்:
11. lugal-e lugal-a-ri-a nin-e-tu-ud-me-en
I, the king of royal descent, whom a princess bore
உளுகளே உளுகள் ஆரிய நின்னே தொட்ட மான்
1.
Lu> உளு? > ஆள், ஆளு: ஒருவன் என்று பொருள் படும். Gal என்பது இன்றும் தமிழில் பழகும் ‘கள்’ என்ற சொல் தான். சுமேருத் தமிழில் அரிதாக பண்மை விகுதியாகவும் பயிலும்; kingal> கண்கள். ‘lugal’ என்ற சொல்லே இடம் மாறி-‘கள்-ளு’ ஆகி பின் கள்ளர் ஆகி இருக்க வேண்டும் இங்கு கள்ளர் என்பார் பாண்டிய அரசர்கள் தோன்றிய ஓர் பெருங்குடி. ‘கணம்’ ‘கணவான்’ என்றெல்லாம் இப்பொழுது பயில்கின்றது. ஆயினும் சுமேருத் தமிழில் ‘gal-la” என்ற சொல்லோடு மருவி ‘கள்ளர்’ என்றால் திருடர் என்றும் ஆகி விட்டது.
2.
இங்கு வரலாற்று சிறப்பு மிக்க சொல் a-ri-a> ஆரிய என்பது, இது வடமொழி அல்ல தூயத் தமிழே. ‘ஆர்’(ar) சுடருதல் என்ற வேரிலிருந்து பிறந்த அழகிய தமிழ் சொல். பிற்கு பல நாடுகட்கு பரவி மிகவும் புகழ் பெற்ற சொல். ‘Iran” என்று இப்பொழுது பாரசீக மொழ்யில் மருவி நிற்கின்றது. ‘உளுகள் ஆரிய’ என்பது ‘ஆரிய வேந்தன்’ எனப் படும். இங்கு இனக் குறிப்பு இல்லை, பண்பு குறிப்புத் தான்
3.
Tu-du> தொடுதல். இன்றும் வழக்கத்தில் இருக்கும் ஓர் சொல். பெறுதல் உருவாக்குதல் என்ற கருத்தில் பயில்கின்றது. Nin’ என்றால் ‘அம்மை’ யாகும்.
4.
Me-en > மான் என்று சிறிது திரிந்து நிற்கின்றது. கடைச் சங்கத் தமிழில் “அதிகை-மான்’ ‘சேர-மான்’ என்றெல்லாம் பயில்கின்றது,
உலகன்
3-வது இடுகை
அன்பர் திரு அண்ணா கண்ணன் பல நல்ல மொழியியல் சான்ற கேள்விகளை தொடுத்துள்ளார். நான் ஓரளவு இவற்றைத் தேர்ந்து ஆய்வுக் கட்டுரைகளாகப் பல படைத்துள்ளேன் ஆயினும் புதிய அணுகு முறைகள் தேவை. அவற்றை விளக்குவதாக இன்றைய இடுகை.
இதுவும் சூல்கியின் முதரீபியத்திலிருந்து( Hymn B) வரும் ஒன்றுதான், மிக எளிதாக தொல் தமிழ் என்று அடையாளங் காணத் தருவது. ‘துர் முதே இல் துப்பைய ஆ ஆம்’ எனும் இக்கிளவியே இங்கு ஆரயபடுவது. இங்கு ‘ஏன் மூலமாகிய “tur-mu-de e-dub-ba-a-a am (Since my very youth, I belong to edubba) என்பதை சிறிது திருத்தினேன் என்பதை பல உத்திகளால் விளக்குகின்றேன். இக்கிளவி தெளிவாக தொல் தமிழே என்று நான் உனர்வதற்கு உதவிய சிறு மாற்றங்களே இவை
இவற்றையெல்லாம் தொகுத்து ‘ஒலியன் உத்திகள்’ ‘பொருண்மை உத்திகள்’ ‘’உருபு உத்திகள்: ‘இலக்கண உத்திகள்’ என்றவாறு வகுத்து விளக்கியுள்ளேன் இந்த உத்திகளைப் பெய்து தெரிய வரும் மாற்றங்களைக் கொண்டு, இந்த கிளவி தொல் தமிழே என விளங்க நிற்கின்றது.
இப்படிப்பட்ட மொழியியலை ‘விரி மொழியியல்’ என்றும் பெயரிட்டுள்ளேன் இந்த சுமேருக் கிளவி பல விரிவுகட்கு மாற்றங்கட்கு ஆளாகி காட்டப்பட்ட கிளவியாக தமிழ் அறிந்த ஒருவனால் இது தொல் தமிழே என்று அடையாளம் காணத் தருகின்றது. இதுவே சுமேரு மொழி தொல் தமிழ் என்று கூறுவதற்கு சான்றாகவும் அமைகின்றது என்றே நினைக்கின்றேன்.
மூலத்திற்கும் திருத்திய வடிவத்திற்கும் பெரிய வேற்றுமைகள் யாதும் இல்லை என்பதைக் காண்க. மேலும் இந்த திருத்தங்கள் இன்றியும் மூலம் தொல் தமிழே என்று அறிய நிற்பதையும் காண்க.
இன்னும் ஒன்று. தமிழ் அறிஞர்கல் மூல கோல் எழுத்துப் படிவங்களை ஆய்ந்து வாசித்தால் இத்தகைய திருத்தங்கள் தேவை இல்லாது போகவும் இடம் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை
The Utti-s of Viri Linguistics
While I hope to write in the near future a monograph on this, for now I shall contend myself by providing some concrete examples of such utti-s that constitute the essence of this science for which there are NO other ways.
For this let me take the following sentence from Sulgi Hymn B (C. 2000 BC)
13. tur-mu-de e-dub-ba-a-a am ( Since my very youth, I belonged to edubba)
The Tamil reconstruction would be :
Ta. tur-mutee il tubbaiya aa aam ( Since my very youth I attended the tablet house(school))
துர் முதே இல் துப்பைய ஆ ஆம்
In this reconstruction , in phonology morphology and semantics and so forth, the basic utti-s constituting the Viri Linguistics are already there. Here let me overlook the problems about transcription of the cuneiform texts where some refinements are required but not a fundamental revision. For example ‘e’ is rewritten as ‘il’ and which can be incorporated in future readings of the Sumerian itself. Leaving aside such issues for the time being, let me come to the discussion of the utti-s relevant to the issue.
1.
The Phonological Utti-s
Here we have ‘mude’ rendered as ‘mutee’ with the mapping of ‘d’ into ‘t” and ‘e’ into ‘ee’ . The root of this could be Su. mus (the foundation, the initial etc) and hence also s > d. t etc.
We have also ‘a’ as > Ta. aa (to become) and am> Ta. aam ( a particle of affirmation etc). Here while the ‘–a’ in e-dub-ba-a’ is rendered as ‘y-a’, the next ‘a’ and ‘am’ are rendered as ‘aa aam’ i.e. with the long vowel. Here we note that ‘y’ might have been present but the script was defective for symbolizing it. It could have been read as such but not rendered accurately in the script.
We notice that ‘tur’ remains the SAME both in phonological shape and meaning
We also have ‘dub’ rendered as ‘tub’ where we have d > t , something we see also in Sumerian itself e.g dug and tuk
2.
The Semantic Utti-s
Now looking at the meanings we see that the meaning of ‘tur’ remains the same as Ta. where tur, tul, tun means ‘small, fine’ and metaphorically ‘evil” etc. The Tamil tur-umbu means something small , tul-li-yam means something fine, minute etc. Tur-neRi is the ‘little way”, the evil way in semantic implications.
The ‘mude’ has become Ta. mutee and mutalee as in ‘akaram mutala ezuttellaam ( KuRal 200 AD). The Mutu also means ancient old etc. The ‘mutal’ also means the foundation, the basis etc. In all these we see a family of semantic relationships that are linked to each with some meanings, perhaps the metaphorical as historically later. The most primordial meaning may be that of Su. mus, the foundation, the basis etc.
3.
The Morphological utti-s
Now we notice that ‘dub’ or ‘dub-ba’ has the Tamil equivalent of Tubbu, the clue, the sign etc that has to be read or deciphered as in tuppu tulangkaL etc. Now we can also see some grammatical operations: dub-ba> bud-da > buddi (Ta. putti) ; intelligence etc. What we have here is metathesis along with the birth of an associated meaning – from a tablet of knowledge to that of intellect of intelligence. We can also see the possible derivation: dub-ba> bud-da> poti and il-dub-ba> poti-il, the famous centre in the ancient Madurai where the Tamil Academy is said to have functioned. The “poti-il’ may actually be ‘il-tub-bu” but distorted or extended somewhat in meaning
Here we also notice the SAMNESS of meaning in relation to ‘tur’ ‘a or aa’ ‘am or aam’ etc.
Thus the Semantic Utti-s bring out both the SAMENESS in meaning as well DIFFERENCE but where the difference can be explained in terms of historical evolution of various kinds.
4.
The Grammatical Utti-s
Now when we take up ‘e-dub-ba-a” and render it as Ta. il tubbaiya we have ‘-a’ as the Tamil genitive. locative suffix “-a” that is also widely present in C. Tamil and with same grammatical function. The ‘am’ and Ta. aam are almost the same in grammatical function – an enclitic of agreement, emphasis etc.
Now in the clause ‘tur-mu-de’ we have an identity in grammatical function in the word order: akara mutal, iLamai mutalee etc. Here the “mu-de’ is an adverb of time(?) and the same word order holds in Tamil as well. Now in ‘e-dub-ba’ we see a different word order - in fact the reversal – tubbaiya il etc. This is one of the DIFFERENCES in grammar and which is rule governed. While there is agreement in having the formative ‘-a’ as the adjectival format, ( nall-a maintain ( good man), peri-a viidu ( big house) while in Tamil it is before the Noun in Sumerian it is post the qualified noun. For example e-gal-la > Ta. il kaLLa> kaLLa il etc.
The rule is : N1 ^ N2-a > N2-a ^ N1
The IlakkaNam is Already There
Now the kind of phonological morphological semantic and grammatical features that I have discussed briefly are the IlakkaNam in the sense of Tolkaappiyar, the features that constitute the identity of the object ,here the language These are the features that constitute the identity of Tamil Language as such and since they are present in Sumerian either as the same and where different, it is something that can be explained in terms of evolutionary developments, it follows that Sumerian is Tamil but Archaic Tamil as it is an earlier shape from which C.Tamil has evolved.
The most important aspect of such studies is that I need NOT fall back upon PaNini or Tolkaappiyar or anyone for the matter to work out these aspects. Everything that we need is ALREADY THERE in situ in the Sumerian texts as transcribed (but which we can improve upon here and there). What we have to do is study the texts and let them disclose from within themselves as to what kind of language it is and so forth. We have take the TEXTS and let them SPEAK to us from within themselves.
In order to understand as what exactly they are, e.g. it is Archaic Tamil etc, our mind must be FREE and OPEN (Tol vinaiyin niiGki) and should not be fixated to PaNini and such others. We can consult them but we should NOT let them dictate what we see in the Sumerian Texts. We must delve deep into the texts themselves and UNEARTH the grammar and so forth already there by the application of utti-s that will illuminate the mind by making us UNDERSTAND them better.
4-வது இடுகை
அன்பர்களே,
சுமேருத் தமிழ் இலக்கியங்களைக் கற்க கற்க அது தொல்தமிழ் என்பதொடு திராவிட பாரதீய மக்களின் மெய்யறிவு சிந்தனைகளின் தோற்றத்தையும் அங்குக் கண்டு பெரிதும் வியந்துள்ளேன் எனது ‘திராவிட மெய்யறிவு வரலாறு’ எனும் பெரும் நூலை சுமேருத் தமிழிலிருந்துதான் தொடங்குகிண்றேன். இதற்கு ஆதாரமாக ‘தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட’ என்ற தொடரை எழுதி எட்டுத் தொகுதிகளாகப் பிரித்து மரபு விக்கியில் பதிவு செய்துள்ளேன், பல ஆண்டு கால முயற்சியில் எழுந்த ஒன்று,
கீழே சைவ சிதாந்தத்தி அடிப்படை கருத்துக்களை உள்ளடக்கிய சிவ வழிபாடு அன்றே இருந்தது என்பதை ஆதார பூர்வமாக விளக்க்கும் வகையில் ‘சூல்கி கண்ட சிவன்’ என்றவோர் கட்டுரையின் ஒரு பகுதி . முழு கட்டுரை மரபு விக்கி சுமேரிய பகுப்பிலும் கீழே வரும் சுட்டியிலும் கிடைக்கும்:
https://sites.google.com/site/sumerutamiltex/sulgi-kanda-siva
>>>>
சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் 73-74ங்குகளை ஆழ ஆழ சிந்திக்க உலக சமயங்கள் அனைத்தையும் ஒத்து நோக்கி அவை எவ்வகையில் ஒன்றுபடுகின்றன எவ்வகையில் பேதப்படுகின்றன என்று ஓரளவு தெளிவாக அந்தத் தெளிவின் அடிப்படையில் இந்தக் கட்டுரை. சுமேருத் தமிழில், சுமேரு மக்கள் வளர்த்த சமயத்தில் எழுந்த கருத்துக்களே திரிபுற்று சைவம் வைணவம் சாக்தம் என்றும் கிறித்துவம் இசுலாம் என்றும் இன்னொரு வகையில் புத்தம் வேதாந்தம் என்றெல்லாம் பிளவு பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒன்றாகிய மூலக் கருத்தை, சுமேருத் தமிழில் புதைந்து கிடப்பதை இந்த உலக சமயங்கள் வரலாற்று சூழல்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் அந்தப் பழைய சுத்தசமயத்தையே நிலைநிறுத்த முயன்றிருக்கின்றன என்றும் தெரிகின்றது. அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இந்த சமயத்தை 'சுத்த சமயம்' என்றே அழைப்போம். இந்த சுத்தசமயம் சுமேருத் தமிழர்களின் சிந்தனையில் இருந்த ஒன்றாகத் தெரிய அதனை சற்று விளக்குவதாக இந்தக் கட்டுரை.
சிபனே சிவன்
வரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கீழ் வருவன
73. sipa ildum-ma-bi su-bi hu-mu-dug
(and) for the shepherds and pack dogs it was a pleasant (time)
Ta. Sipa ezuttummabi suubi thuukkummu
சிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு
74. u-me-da u-ul-li-a-se
(though) always and always
uNmaiyodu uu uuziyasee
உண்மையொடு ஊ ஊழியசே
இங்கு நிச்சயமாக முதல்வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: "உண்மையோடு ஊழி காலம் வரை" என்பதாகக் கொள்ளலாம். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்" என்பார்கள். ":உண்மையொடு" என்பதை " மெய்யாக" , "அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்" என்றெல்லாம் கூறலாம். அடுத்து "su-bi hu-mu-dug" "சூர்பி தூக்கும்மு" என்பது. இங்கு "கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்> கரம்) சுட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் சூல்கியின் மாட்டும் ஆகவே மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை? என்று கேள்வி எழ "sipa" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த "sipa"? இங்குதான் "sipa ildumm-ma" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் "இயல்தும்ம" அல்லது "எழு(ந்)த்தும்ம" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் "நாத தத்துவம் " அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை "நாதசிவன்" என்று பிரித்தறிவோம்.
இன்னும் ஒன்று. சுமேரு மொழியில் அடிக்கடி வரும் ஒர் சொற்றொடர்: sipa sag-gig-ga என்பது. இதனைப் பொதுவாக " the shepherd of the black-headed people" என்றே மொழிபெயர்க்கின்றனர். இதுவும் முற்றிலும் பொருந்தாத ஒன்று என்றே தெரிகின்றது. " சிவ சான் கிங்க> சிவன் சான் கிரிங்க> சிவ சான் கிலிங்க> சிவன் சான் கலிங்க" என்று கொண்டால் "கலிங்க சனத்தின் சிவன்" அதாவது "கலிங்க சனத்தின் காவலன், சேவியன் " என்றாகின்றது. சீனர்கள் தமிழர்களை கருப்பர்கள் என்ற குறிப்பில் "kling" என்றே இன்றளவும் அழைத்து வருகின்றனர் என்பதைக் காண்க. இங்கு 'சிவன்' சேவகன் அல்லது சேவியன் ஆகின்றான. மாணிக்கவாசகரின் "சேயோன்" என்பதின் பொருளும் இதுவாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் தொடர்ந்து உயிர் வாழ்தலைத் தரக்கூடிய 'நாத சிவன்' இங்கு சுட்டப்படுவதைக் காண்க.
பிற்காலத்தில் கிரேக்கர்களால் தொழப்பட்ட தெய்வங்களுள் 'zeus" என்றோர் தெய்வம் உண்டு. இச்சொல்லை "zi-us" என்பதின் திரிபாகக் கொள்ளலாம். அதன் பொருளை "உசிரின் ஜீவன்" என்று கொண்டால் மீண்டும் 'நாத சிவன்" வருவதைக் காண்க.
உலகன்
5வது இடுகை
அன்பர்களே
பல வரலாற்று சிறப்புமிக்க சொற்கள் நிறைந்த சில வரிகளை அன்பர்கட்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி,. கிழே வரும் வரிகள் அத்தகையன, இவையும் சூல்கியின் முதரீபியத்திலிருந்து வரும் வரிகள் தாம்.
முதலில் நாம் கவனிக்க வேண்டியது இவ்வரிகள் சூல்கி சிறுவனாக இருந்த போது தான் படித்த இளம்பள்ளி அனுபவங்களை வர்ணிக்கும் வரிகள் ஆகும். இங்கு உலகில் முதல் முதலில் சுமேருத் தமிழர்களே மொழியை எழுத்து மொழியாக்கினர் என்பதொடு அந்த கலையை இளவல்கட்குக் கற்றுத் தர e-dub-ba> இல் துப்பு (ஏடுகள் இல்லம்) என்ற பள்ளியைக் கண்டதொடு அங்கே இளவல்கட்கு இந்தக் கலையை போதிக்க dub-sar ( துப்பு சாற்றி?) எனும் ஆசியர்களை உருவாக்கிய சிறப்பும் இங்கு வெளிப்படுகின்றது.
இதுவே உலகெல்லாம் பரந்து மக்களி படிப்பறிவுள்ள மாந்தர்களாக எழ உதவியுள்ளது.
கீழே சில முக்கியமான சொற்களை மட்டும் விளக்குகின்றேன்
>>>>
14. dub ki-en-gi -ki-uri-ka nam-dub-sar-ra mi-ni-zu
(And) on the tablets of Sumer and Akkad I learnt I learned the art of the scribe
துப்உ கீழ் ஏண்கி கீழ் ஊரியகம் துப்பு சாற்றுநம் சூமினி
15. nam-tur-ra ga-e gin-nam im nu-mu-sar
Of the young, none could write tablets like me
துர்ரநம் ஙாயே அங்ஙின்னம் இஇயம் நா மோ சாற்று
16. nam-dub-sar-ra ki nam-ku-zu-ba lu im-mi-DU.DU
People frequented the place of learning (to acquire) the scribal art
துப்புசாற்றுநம் கீழ் நன்கு சூப ஆளு DU.DUஇம்மின்
17. zi-zi-i ga-ga sid-nig-sid-de / zag im-mi-til-til
And striving and toiling went through their course in all the science of numbers
விழிவிழீஇ கார்கார் சித்து நிக சித்து சாகை தீர்தீர்யிம்மின்
>>>>
வரி 14:
Dub> துப்பு. இன்றும் நம்மோடு இருக்கின்ற சொல். சுமேருவில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட களிமண் வட்டுகள். இன்றும் ‘துப்பு துலங்குதல்’ என்பது போன்ற ஆடலில் ‘துப்பு’ ஓர் குறியீட்டுப் பொருள், தடயம். ‘துப்பு இல்லாதவன்’ என்பது திறமை தகுதி இல்லாதவன் என்று பொருள் படும் இது பண்டைய காலத்து துப்பு எனும் இத்தகைய ஏடுகள் ஒருவனிடம் இருக்க அவன் திறமையானவன் என்று பொருள் பட்டிருக்க இல்லாதவன் திறமை அற்றவானாக கருதப் பட்டிருக்கலாம்
Ki-en-gi> கீழ் ஏங்கி : மிக உயர்ந்த கிழம், ஊர் நாடு என்றெல்லாம் படும். இது சுமேருவிற்கு சிறப்புப் பெயர்.
Ki-uru-ka: கீழ் ஊர்-இ அகம்? இங்கு ‘ஊர்’ என்றால் ஆற்காடு எனும் வடக்கில் இருந்த ஓர் ஊர். ‘அகம்’ எனூம் வேற்றுமை உருபு பெயர்ச் சொல்லின் ஈற்றில் இன்றையத் தமிழில் இருபப்துபோல் வருவதைக் காண்க. இதுபோன்ற பல இலக்கணக் கூறுகள் சுமேருத் தமிழை ஒட்டு மொழியாக்கி அது செமித்திய மொழி அல்ல இந்தோ-ஐரோப்பிய மொழியும் அல்ல திராவிட மொழியே என்று நிறுத்துகின்றது.
Nam-dub-bu-sar-ra > நம் துப்பு சாற்ற > துப்பு சாற்றுநம் . இங்கு ‘நம்; எனும் ஒட்டு பெயர்சொல் ஆக்கி( abstract noun formative), இப்பொழுது கட-மை அர்சாண்-மை ஆளு-மை என்றவாறு ‘மை’ என்ற விகுதியாக இருக்கின்றது,. இது ஓர் வேறுபாடு, கடைச் சங்கத் தமிழில் இத்தகைய முன்னொட்டுகள் இல்லை.
Mi-ni-zu> suuminee? இங்கு செப்பு மின்! என்பது போன்று ‘மின்’ என்பது ஓர் வகையான மூவிடப் பெயராக இருக்கலாம்.
Zu> சூ, சூழ்: அறிவது. இச்சொல் சூத்திரம் எனும் சொல்லின் வேறாக இன்றளவு இருக்கின்றது. ஆழமான அறிவினைத் தாங்கி வரும் சொற்களே சூத்திரம் ஆகும்
வரி 15
Nam-tur-a> நம்துர்-அ < துர்ரநம்: இங்கு இளவல்கள், ‘துர்’ என்றால் சுமேருவில் ‘இளம் சிறு’ என்று பொருள்பட்டு இளவல்களைக் குறிக்கும் பிற்காலத்தில் இது துர்> துன் என்று சிறுமைத் தனத்தையும் குறிக்கத் தொடங்கிவிட்டது. இன்றளவு ‘துரும்பு’ என்ற சொல்லில் இது இருக்கின்றது
வரி 17
Zi-zi-i> ஜீஜீ.இ . ஜீஜீயி: zi, ji என்ற சொல் ஜீவனையும் கடுமையாக உழைப்பதையும் குறிக்கும் இது தமிழ் சீவன் என்றிருக்க வடமொழியில் மாறாது ஜி, ஜீவன் என்றெல்லாம் இருக்கின்றது. “ஜ’ என்ற எழுத்து சுமேருத் தமிழில் இருக்க கடைச் சங்கத் தமிழில் ஒதுக்கப்பட்டு விட்டது இதேப் போலத்தான் ‘ஷ, ஸ’ என்ற எழுத்துக்களும்
அடுத்து மிக முக்கியமான ஓர் சொல்
Sid-nig-sid> சித்து நிக சித்து> ‘அறிவு எல்லா அறிவு’ ஓர் துப்பு இல்லாகியக பள்ளியில் போதிக்கப் பட்ட போதகங்கள். இவையே.
Sid என்றால் ஓதுதல் , மந்திரங்க்ஜளை செபித்தல் என்ர பொருளும் உண்டு. இச்சொல் இன்றும் நம்மிடையே ‘சித்தர்’ என்ற சொல்லில் கிடைக்கின்றது. மேலும் sid> vid> வித்தை என்றாகி வடமொழியிலும் பயில்கின்றது என்று நினைக்கின்றேன்
Nig> நிக : அனைத்தும் முடிவான என்றெல்லாம் பொருள் படும். நிகர இலாபம், நிகமனம் என்பன போன்ற சொற்களில் இச்சொல் அழியாது இருக்கின்றது போலும்
குறிப்பு:
நான் இங்கு சொல்ல வேண்டிய சொல்லக் கூடிய அனைத்தையும் சொல்லி விட வில்லை, ஆயினும் சுமேருத் தமிழர்கள் எவ்வாறு மொழிக்கு எழுத்து முறையை கண்டு பிடித்து அந்தக் கலையை இளவல்களுக்குக் கற்றுத் தர தொடக்கப்பள்ளிகளை உருவாக்கி பெரும் புரட்சி செய்துள்ளனர் என்பதை இவ்வர்கள் நலமே காட்டுகின்றன என்று நினைக்கின்றேன்.
உலகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக