செவ்வாய், 18 அக்டோபர், 2016


 

சிந்துசமவெளி நாகரிகம்...!



சிந்துச் சமவெளி நாகரிகம் - தமிழர் நாகரிகமே...!
.
*இது உலகின் மிக தொன்மையான நாகரிகம் 
*மிகப் பெரிய நாகரிகம் 
*பல துறைகளில் சிறந்து விளங்கும் நாகரிகம் 
*இது நம் தமிழர்களின் நாகரிகமே......!






"புதிய தமிழ்ப்புலிகள்''
"தமிழீழ விடுதலைப்புலிகள்'' ஆக உருவெடுத்தது - 05..05.1976
"புதிய தமிழ்ப்புலிகள்'' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த பிரபாகரன், அதை ஒரு பெரிய ராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, "தமிழீழ விடுதலைப்புலிகள்'' அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். இந்த அமைப்புக்கான சின்னத்தையும் அவர் வடிவமைத்திருந்தார். வட்டத்தின் நடுவே, கர்ஜனை செய்யும் புலியின் தலை. பின்னணியில் இரு துப்பாக்கிகள். "தமிழீழ விடுதலைப்புலிகள்'' என்ற எழுத்துக்கு மேலே, வட்டத்தைச் சுற்றிலும் துப்பாக்கித் தோட்டாக்கள். இதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னம்.
அமைப்பை நிர்வாகிக்க, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ராணுவ தளபதி, தலைவர் ஆகிய பொறுப்புகளை பிரபாகரன் ஏற்றார். அவரைத் தவிர செல்லக்கிளி, நாகராஜா, அய்யர், விஸ்வேஸ்வரன் ஆகியோர் முதலாவது மத்தியக் குழுவில் இடம் பெற்றனர். விடுதலைப்புலிகளுக்கு என்று கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் புகை பிடிக்கக்கூடாது; மது அருந்தக்கூடாது; 'செக்ஸ்' கூடாது. குடும்பத்துடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இயக்கத்தை விட்டு வெளியேறுகிறவர்கள், வேறு இயக்கங்களில் சேரக்கூடாது; புதிய இயக்கம் தொடங்கக்கூடாது.
தமிழ் ஈழத்தை அடைய ஒரு செயல் திட்டத்தை பிரபாகரன் வகுத்தார். அது பின்வருமாறு:- "காட்டிக்கொடுக்கும் துரோகிகளை ஒழிக்க வேண்டும். போலீசுக்கு உளவு சொல்பவர்களை அழிப்பதன் மூலம், நமது திட்டங்களையும், வியூகங்களையும் போலீசாரும், ராணுவமும் அறிந்து கொள்ள முடியாதபடி தடுக்கலாம்.
இதுவே நமது வெற்றிக்குத் துணை நிற்கும்.
ஆயுதப்புரட்சி நடத்தி, இலங்கை அரசாங்கத்தை செயல்பட முடியாதபடி முடங்கச் செய்யவேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளை ஒருங்கிணைத்து "தமிழீழம்'' அமைப்பதற்கு முதல் படியாக, அந்தப் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவ முகாம்களை அழிக்க வேண்டும். அந்தப் பகுதிகளை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். தமிழ் ஈழத்துக்கு முழு சுதந்திரம் பெற்று, அங்கு சோசலிச ஜனநாயகக் குடியரசை நிறுவவேண்டும்.'' மேற்கண்டவாறு செயல் திட்டத்தை வகுத்தார், பிரபாகரன்.
தமிழீழம் அடைய ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும், பிற்காலத்தில் மோதிக்கொண்டார்கள். ஒற்றுமையாக செயல்பட்ட காலத்தில், கைகோர்த்து நிற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:
1. சிறிசபாரத்தினம் (தமிழீழ விடுதலை இயக்கம் - TELO)
2. பத்மநாபா (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF)
3. பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகள் - LTTE)
4. பாலகுமார் (ஈழப்புரட்சி அமைப்பு - EROS)

















இலங்கையை வென்ற ராஜராஜ சோழன் !

கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகன்முதலாம் இராஜராஜ சோழன். சுந்தர சோழனுக்கும், சேர நாட்டு வானவன் மாதேவிக்கும், ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்டான். 

இவன் ஆட்சியின் 3–ம் ஆண்டு முதலே “ராஜ ராஜ சோழன்” எனப்பட்டான். தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே “மும்முடிச் சோழன்” என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது. இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும்,”காந்தளூர்ச் சாலை கலமறுத்த” என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்படுகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, கேரளாவிலுள்ள “விழிஞம்” என்னும் கடற்கோட்டையைப் பிடித்தான். உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியதும், முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை, குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் “கலிங்கத்துப் பரணி” உதகையைக் கைப்பற்றியதை பற்றி குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும், இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால், அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று, உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும், மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது ‘திருமகள் போல’ என்று தொடங்கும் கி.பி. 993–ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். ‘கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது’, ‘தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த பெரிய கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29–ம் ஆண்டில் தானமாக அளித்தான்’ என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
இப்படையெடுப்பின் போது , ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடவில்லை.

‘மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது. ராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வட பகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம், இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது.இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், இராஜராஜன் சிவனுக்கு அழகிய சிவாலயம் அமைத்தான். இந்த சிவாலயம், தஞ்சை பெரிய கோயில் போன்றே அமைந்துள்ளது.மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன.
இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து, வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர், மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும், தலைக்காட்டையும் தாக்கிய சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.
மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜனின் படைத்தளபதி கொண்டு வந்தார்.கர்நாடகத்தில் தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007-ம் ஆண்டைச் சேர்ந்த சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, “சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், கன்னியரை மனைவியராக்கியும், அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்” கூறுகிறது.

அங்கோர் வாட் (ANGKOR WAT) 



அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.

இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல். சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது.

 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். இரண்டாம் சூரியவர்மன் (Suryavarman II ([Khmer]) (இறப்புக்குப் பின்னர்: பரமவிஷ்ணுலோகன், Paramavishnuloka) கெமர் பேரரசை கிபி 1113 முதல் கிபி 1145-1150 வரை ஆண்ட பேரரசர். இவர் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற பெருமாள் கோயிலைக் கட்டியவர். இது உலகின் மிகப் பெரும் கோயிலாகக் கருதப்படுகிறது.

இவருடைய கட்டிடக் கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வளார்கள் கருதுகிறார்கள். இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதபுரம் (Yashodapura) ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon), பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.


இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்.

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது ,

 அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!! இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

 இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!!

வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

 இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...