புதன், 12 ஜூலை, 2017

ஆங்கிலத்திலும் இரண்டறக் கலந்துள்ள தமிழ் ! தமிழ் சொற்கள் அறிவோம்!

சுமார் 60% விழுக்காடு ஆங்கில வார்த்தைகளை நாம் சொல்லாய்வு கொண்டு ஆராய்ந்தால் தெரியவரும் . அத்தகைய சொல்லாய்வு ( Etymology ) செய்த சொற்களை சிலவற்றை காண்போம் . படத்தில் கொடுக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களோடு ஸ்(S) என்ற வார்த்தை பயன்டுத்தி மருவி வந்த ஆங்கில சொற்களை கவனிக்கவும் .
பெரும்பாலான ஆங்கில சொற்கள் தமிழுடன் நேர் தொடர்பு கொண்டவையாக இருக்கிறது , மீதம் உள்ள ஆங்கில சொற்கள் லட்டின் மொழியில் இருந்து மருவி இருக்கும் பட்சத்தில் , லட்டின் சொற்களை சொல்லாய்வு கொண்டால் ,அவை மருவி இருக்கும் இடமும் தமிழே .
குறிப்பாக மற்றொன்டையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும் அதாவது இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசும் இன்றைய தமிழில் 60% விழுக்காடு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல் அழித்து இருக்கிறோம் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.எத்தனை விவாத மேடைகளாக இருக்கட்டும் , எத்தனை பட்டிமன்றகளாக இருக்கட்டும் , பொது தளமாக இருக்கட்டும் , எப்படி கொண்டு ஆராய்ந்தாலும் சரி , தமிழ் வளர்ந்திருக்கிறதா ? ,அழிந்து இருக்கிறதா ? அல்லது அழிந்து விட்டதா ? என்ற கேள்வி எழும் நிலையில் மெய்யான முடிவுகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை தாண்டி சென்று அழிந்து விட்டது என்ற பொருள் பெரும் பெறுவதற்கான முன் நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம் .
சிலர் ..இல்லை இல்லை அதெல்லாம் அழியாது என்று வாதாடுவார்கள் ..அது எப்படி ? என் மகன் , மகள் ,பேரன் ,பேத்தி டாடி மம்மி என்று பேசினால் தமிழ் அழியும், அவை அழியாது என்று கூச்சலிடுவார்கள்.சரி அப்படி இருக்கையில் இன்று மெரும்பாலான தமிழ் மக்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகள் அறிந்ததுண்டா என்று சோதித்தால் இன்று தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில் , இன்றைய நாள் {30-06-2013}கணக்கு கொண்டு பார்த்தால் குறைந்த பட்சம் 50 லட்சம் தமிழர்களுக்கு சொந்த தாய் மொழி தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், அறிந்து இருகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மிகையே . முடிவுகள் 100% விழுக்காட்டில் 10% விழுக்காடு கூட தேராது ..சரி வாங்க அத்தகைய வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் , பயன் படுத்துவோம் , பலரை பயன்படுத்தவும் செய்வோம் .
பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...

செவ்வாய், 11 ஜூலை, 2017

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி


களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்
இந்த காலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரைவிட சிறப்பாக காட்டி கொள்ள முனைந்தனர்.
இதில் இருவர் சேர வில்லை, ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவர் தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன்.
அதே நேரத்தில் இந்த பார்ப்பன மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துகொண்டு எங்காவது கூலி வேலைக்கு தான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பார்ப்பனிடம் கூலி வேலை செய்ய வேண்டும்
முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்று நோக்க வேண்டியது என்ன வென்றால், இந்த மக்கள் புரட்சி காஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்க வில்லை.
இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, அனால் நமக்கு இந்த காலம் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் - கள பறையர், அஃதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர். இந்த புரக்ட்சிக்கு பின் அவர்கள் பல ஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பார்ப்பனருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினார்.
முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் - ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை - திரையன் - (Today's dharmapuri)
2. வேங்கடம் - புள்ளி - (Today's Tirupathi)
3. மிலாடு - காழிமலையன் - (Today's Thirukoilur)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (Today's Dottabeta - Ooty)
5. முதிரமலை - இளங்குமணன் - (Today's Palani)
6. நடுநாடு - இடக்காலி - (Today's center of Karnataka)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(Today's Mysore)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
பார்ப்பனர் வருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே (Like City states of Greece) இருந்த்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலைய வில்லை. மக்கள் அமைதியாக வாழ வழி செய்தனர்.
கி.பி. 300-ல் பாரசீகத்திலிருந்து வந்து தொண்டைமண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன் காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்பிராச்சியத்தை உருவாக்கினான்.
இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள்,
இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டுவிட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர்.
தமிழகத்தில் வருணாசிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8ஆம் நூற்றாண்டு கால கட்டமே
ஆக மொத்தத்தில்,
களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
- கிருஷ்ணவேல் தி.எஸ்

செவ்வாய், 9 மே, 2017

மனித இனத்தின் தோற்றம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? மதங்கள் கடவுள்கள் என்ற ஓர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? இவை மிகப்பெரிய கேள்விகளே.
பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருகை தந்தனர் எனவும், அவர்கள் பூமியில் தங்கம் என்ற கனிமத்தை எடுக்கவே வந்தார்கள் எனவும் கடந்த பதிவில் பார்த்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக உண்மைத் தன்மைப் பற்றியும், மனித இனத்தின் தோற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ள அதிர்ச்சிமிக்க தகவல்களை பார்க்கலாம். முதல் பதிவை பார்வையிட இங்கே அழுத்தவும்
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கத்தை எடுக்கவே வந்தார்கள் என்பதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கி.மு 3000 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த சுமேரிய நாகரீகம் ஓர், ஆதி நாகரீகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நாகரீகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துப் படிவங்களில் ஓர் விடயம் கூறப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து அநூனாக்கி (Anunnaki) எனப்படும் தமது கடவுள் பூமியில் தங்கத்தை எடுப்பதற்காக வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடவுள், அவர்களை (மனிதர்களை) தமது அடிமைகளாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை 1976ஆம் ஆண்டு Zecharia Sitchin ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்தன.
அதிலும் குறிப்பாக உலகில் முதல் மனிதன் ஆதாம் என பைபிள் கூறுகின்றதனை, அதற்கு முன்னராகவே சுமேரிய கல்வெட்டுப் படிமங்களில் உலகின் முதல் மனிதன் அடெமு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.
மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.
வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதை Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு.,
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
அதற்காக ஆரம்பகால பூமியில் புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து அவற்றின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என Zecharia Sitchin அடித்துக் கூறுகின்றார்.
இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக இன்று வரை மனிதனின் பரிணாம வளர்ச்சி சர்ச்சைக்கு உரியதாகவே காணப்பட்டு வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோன்று ஆதி மனிதர்கள், பண்டைய கால குகை ஓவியங்களில் தமது கடவுள்கள் அல்லது தலைவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆதிகாலத்தில் அதாவது கப்பல் பயணமே சாத்தியமற்ற காலப்பகுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்களும் பூமியில் காணப்படுகின்றது.
இவ்வாறாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித இனத்தை தோற்றுவித்ததாகவும், மனிதர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி மனிதர், தமக்கு அறிவு கொடுத்து, பலத்தை அதிகரித்தவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர்.
அவ்வாறு வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தங்கிய இடங்களே காலப்போக்கில் வழிபாட்டுத்தலங்களாக மாறிப் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக பிரமிட் என்ற கட்டுமானத்தில் கற்களுக்கு இடையே பூசப்பட்டுள்ள ஒரு வித பசைத் தன்மை மிக்க கனிமம் பூமியில் எங்குமே இல்லாத கனிமத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தோடு எத்தகைய தாக்கத்தாலும் அழிக்க முடியாத சக்தி மிக்கதோர் கனிமத்தைக் கொண்டு இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று இப்போதைய மனித தொழில் நுட்ப அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புராண குறிப்புகள், கதைகள் போன்ற அனைத்துமே கூறுவது தமது கடவுள்கள் வேறு உலகத்தில் இருந்து பறந்து வந்தவர்கள் என்பதனையே.
மேலும் மதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் கூறினாலும் அடிப்படையில் இந்த ஓர் கருத்தையே அனைத்து மதங்களும் முன்வைக்கின்றன என்பது தெளிவு.
அதேபோல் இப்போது வாழும் எந்த மனிதனுக்கும் கடவுளாக கூறப்பட்டவர்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை இது ஏன்? என்ற கேள்வி எவருக்கும் இலகுவில் வந்து விடாது.
அதற்கான பதில் ஆரம்ப காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் மனிதர்களின் வாழ்கையோடு பயணித்துள்ளனர், அதனால் அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர்.
ஆனால் இப்போது அவ்வாறான கடவுள்கள் பூமியை விட்டு சென்று விட்டனர் அதனால் அவர்கள் (வேற்றுக்கிரக வாசிகள்) புலப்படுவதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும் இன்றும் அவர்கள் பூமிவாசிகளை கண்காணித்தவாறே இருக்கின்றார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் உண்மையாயின், ஏன் இப்போது பூமிவாசிகளுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தென்படுவதில்லை? என்ற கேள்வி எழக்கூடும்.

வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! 



இதற்கான பதிலோடு, யார் அந்த Anunnaki எனப்பட்ட கடவுள்? இந்துக் கடவுள்களோடு இவருக்கு தொடர்பு உண்டா?
அவர் மூலம் மனித இனம் கற்றுக் கொண்டது எதனை? வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இருண்ட கிரகம் எனப்படும் Planet Nibiru எனப்படும் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
பூமியின் அழிவு இந்த கிரகத்தாலேயே ஏற்படும் என புராணக்கதைகள் கூறுவதோடு ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் அவை ஏன் வெளி உலகிற்கு சொல்லப்படவில்லை இதற்கான பதில்கள் அடுத்த பதிவில்.,

திங்கள், 10 ஏப்ரல், 2017


உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்



வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில
் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?
ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.
தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.
தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.
சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.
இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டேதான் இருப்பான்.


தமிழர் நாகரீகமே : சுமேரிய நாகரீகம்



மேரு மலை

கடல், மலை, யானை, தொடர்வண்டி: எவரையும் சிறு பிள்ளைகளாக மாற்றச்செய்து விடும் விசயங்கள்.
அதிலும் இந்த மலை குறிப்பாக மேரு மலை, படிக்கப்படிக்க ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தூண்டிய மலை. காண்பதற்கு மட்டுமல்ல கற்பதற்கும். இம்மலை பல வரலாறுகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.இந்த மேரு மலை என்பது நம்ம இமய மலைதான்.
உலக நாகரீகங்கள் பல இந்த மேரு மலையோடு தொடர்புடையதே.

சிந்து நாகரீகம், சுமேரிய நாகரீகம், சீன மஞ்சளாற்று நாகரீகம், தென்கிழக்காசிய அங்கோர்வாட் நாகரீகம், பாபிலோனிய, மெசோபேடாமியா நாகரீகம், ஏன் அமெரிக்க மாயன் நாகரீகம் என அனைத்திலும் தொடர்புடையது இந்த மலை. மேரு என்றால் மேடான பகுதி, மலை என்று பொருள். காண்க: வளவு 
இந்த மலையிலிருந்துதான் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான ஆறுகள் உற்பத்தியாகின்றன. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து,  கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா என எல்லா நாட்டுக்கும் சோறு போடுவது இந்த மலைதான்.
ஆதலால், உலகின் தொப்பூழ்க்கொடி என்று அழைக்கப்படும் இந்த மலை (Himalaya: Michael Palin),
தமிழர்களின் வாழ்க்கையோடும்  பின்னிப்பிணைந்தது. 

சிலப்பதிகாரப்பாடல் :
    
1) இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

2) பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்     கோடும் கொடுங்கடல் கொள்ள

மணிமேகலைப்பாடல் :  


1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்
 

2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண

போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப்பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன.


இதில் உள்ள எவரெஸ்ட் என்று அழைக்கப்படும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ (8848 மீட்டர்) உயரம் உள்ளது. இந்தப் பூவுலகின் உச்சபட்ச உயரமான இடம் இதுதான். 
  
எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான பெயர் சாகர்மாதா அ கடல்மாதாதான்.


 நேப்பாளியர்கள் இன்னமும் சாகர் மாதா என்று தான் அழைக்கின்றனர்.



காண்க: விக்கிப்பீடியா 


இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டேதியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh)என்பார் சூட்டினார். பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு தமிழ்ப்பெயர் வெறும் 150 ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆங்கிலேயனால் மாற்றப்பட்டிருக்கிறது. என்னவொரு கொடுமை. 
இதைப்போலவே  தஞ்சையில் கட்டப்பட்ட பெரியகோவில், உயரத்தின் காரணமாக தென்திசை மேரு, தக்ஷிண மேரு (தக்ஷிண, தெக்கண, தெற்கத்திய )என்று அழைக்கப்படுகிறது. கி.பி 1000 இல் இந்தக்கோவில் கட்டப்பட்டபோது உலகில் பிரமிடுக்கு அடுத்து மிக உயரமான கட்டடமாக இது இருந்தது.

இப்போது ஒரு முக்கியமான செய்திக்கு வருவோம். மேருவை ஒட்டியே தொல் நாகரீகங்கள் அமைந்ததால் இந்த மேரு மலையின் இருபக்க முனையில் அமைந்த நாகரீகங்களின் பெயர்கள் இந்த மலையின் பெயரைத் தாங்கியே வந்தது.
ஒன்று சுமேரிய (சு-மேரு) நாகரீகம் இன்னொன்று குமேரிய (கு-மேரு) நாகரீகம்.
காண்க: (The Su Meru and ku-Meru, are said to be the poles or the Zenith and Nadir of the residence of the gods.) தமிழ் அகராதியில் காணலாம்.

சுமேரு (Sumeria)

கசுமேருவிலிருந்து (kashmer-காஷ்மீர்) ஈராக் வரை உள்ள பகுதி அவ்வாறே அழைக்கப்பட்டது. காசுமீர், காசுமேரு, Kashmeru-kasumeru


ஆங்கிலேயர்களால் பல பெயர்கள் உருமாறியது. இன்னமும் தமிழ் நாட்டை கூட ஆங்கிலேயர்கள் போலத்தானே நாமும் எழுதுகிறோம் டமில் நடு (Tamilnadu) என்று.
சுமேரு என்பது மேரு மலையின் ஒரு முனை என்பது மட்டுமல்ல அது மேல் அ மேற்கு பகுதி என்பதையும் குறிக்கிறது.

சுமேரு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு  முக்கிய இடம், பாமீர் பீடபூமி அ பாமீர் முடிச்சு. (Pamir Plateau)

பாமீர் முடிச்சு அப்படின்னு வரலாறு, புவியியலில் படிச்சது நமக்கு ஞாபகத்தில் இருக்கும். இது பாமீர் அல்ல பாமேரு - அதாவது, பா-மேரு, பத்து மேரு, பத்து மலை. இதன் அருகில் தமிழர்களுக்கு முக்கியமான இடம் தட்சசீலம் (Taxila).
இந்த பாமேரு அ தட்சசீலம் என்பதன் அர்த்தம் ஒன்றே. பத்து மலைகள். உலகின் முதல் பல்கலைக்கழகம் இருந்த இடம். 



இதற்கு பிறகு வந்ததுதான் நாளந்தா, புத்த பல்கலைக்கழகம். தட்சசீலம் என்றால் தச சைலம். (தசம்-பத்து. சைலம் அல்லது சேலம்-மலை) பத்து மலைகள் சேரும் இடம், முடிச்சு. கீழே உள்ள நில படத்தைப்பார்த்தாலே பல மலைகள் வந்து சேருவது தெரிகிறது. தச சைலம்  தற்போது இருப்பது ஹரப்பா, மொஹஞ்சதாரோ இருக்கும் அதே பாகிஸ்தான் நாட்டிற்குள்.



அதே போல குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது.
கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம்.



மேருமலையின் தென் முனையில் இருக்கும் நாடு கம்போடியா. இங்கு நாட்டு மக்களே, குமர் என்றுதான்  அழைக்கப்படுகின்றனர்.
கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். 


அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்)


கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.
கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட்.
 
அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காண்க: நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம்.




அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள  பெருங்கடலை குறிக்கும். (சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்)

கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது. 



அங்கோர்வாட் கோயிலின் கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் கவர்ந்த ஒரு புராண கதை செதுக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை. இது கதையல்ல, தமிழர்களின் அறிவியல். வேறொரு தலைப்பில் இது பற்றி காணலாம். 


மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்கள். கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்களாம்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
காண்க: ஈகரை.

இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். 




கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது.


அடுத்து

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு semeru.

மேலதிக தகவலுக்கு. காண்க:

இன்னொரு மிக முக்கிய தகவல் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரையே. 
நம்மூர்ல ஆங்கிலேயர்களால் மதுரையானது madura (மஜுரா) என்றே அழைக்கப்பட்டது. நம்பாதவர்களுக்கு இன்னும் கூட, மதுரையில் ஒரு கல்லூரியின் பெயர் Madura College தான். 


அந்த மதுரை தீவு மற்றும் நீரிணைப்பு இந்தோனேசியாவிலுள்ள யாவகத்தீவில் உள்ளது.



இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுரையில் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.



காரணம் என்னவென்றால் துவக்க காலத்தில் அங்குதான் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதோடு கி.பி 10, 11 ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களின் அரசு குறிப்பாக, உலகின் முதல் கடற்படையைக்கொண்டிருந்த ராஜேந்திர சோழனுடைய கடற்படையின் காரணமாக தமிழ் மிகப்பரவலாக அங்கு இருந்தது. அவரது அரசு எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.
 


இந்தோனேசியாவின் தென் கிழக்கு முனையில் இருந்து 21 ம் நூற்றாண்டின் முதல் புதிய நாடான கிழக்கு திமோர் (இந்தோனேசியாவில் மேற்கு திமோர்). இதில் திமோர் என்பதன் பொருளே தெ-மேரு, தெற்கு-மேரு என்பதே.



சீனர்கள் மேரு மலையை மையப்படுத்தி இருந்ததன் காரணமாக உருவாக்கியிருந்த ஒரு வரைபடம். காண்க:



கொரியர்கள் மேரு மலையை மையப்படுத்தி உருவாக்கின வரைபடம்.காண்க:



ஒரு துணைச்செய்தி. மலேசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை இருக்குமிடத்தின் பெயர் பத்து மலை.

  

இந்த மேரு மலை இந்தியா, தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள தன்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயர் மேரு தான்.

இந்தியாவின் தென் முனை குமரி முனை என்று சொல்கிறோம். அது தவறு. அது குமரி முனை அல்ல, மாறாக குமேரு முனை. காரணம், மேற்கு தொடர்ச்சி மலை குறுகி கடலுள் மூழ்கும் இடம். கூகுள் வரைபடம் பார்த்தால் கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு நிலத்தை ஒட்டி மிகப்பெரும் பரப்பு கடலுக்குள்ளே இருப்பதைப்பார்க்கலாம்.


இதில் 100 மீட்டர் கடல் அளவு குறைந்தால் தமிழ்நாடும் ஈழமும் இணைந்துவிடும்.


அவ்வளவு ஏன் 18 மீட்டர் குறைந்தால் நகரப்பேருந்துலேயே போய்விடலாம். 20 கி.மீ. தான்.


இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிக்கப்படாத காலத்தில், அதாவது மிகப்பெரிய பனி உருகிய காலத்திற்கு முன்பாக (கி.மு 10,000 என்று நில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்) தமிழ்நாட்டின் பரப்பு கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரம் வரை இருந்தது. பல தமிழ்  நகரங்களின் கட்டடங்கள் தென்படுவதாக தூத்துக்குடிபகுதியில் கடல் அகழாய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இதை ஆய்வும் செய்திருக்கின்றார் திரு. பாலு என்பவர். தமிழருக்கான தமிழர்களால் உருவாகும் தமிழரசு வரும்போதுதான் இது மீண்டும் அகழ்வாய்வு செய்யப்படும்.

                                                         தொடர்ந்து தேடுவோம் ...

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...