திங்கள், 10 ஏப்ரல், 2017


உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்



வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில
் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?
ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.
தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.
தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.
சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.
இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டேதான் இருப்பான்.


தமிழர் நாகரீகமே : சுமேரிய நாகரீகம்



மேரு மலை

கடல், மலை, யானை, தொடர்வண்டி: எவரையும் சிறு பிள்ளைகளாக மாற்றச்செய்து விடும் விசயங்கள்.
அதிலும் இந்த மலை குறிப்பாக மேரு மலை, படிக்கப்படிக்க ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தூண்டிய மலை. காண்பதற்கு மட்டுமல்ல கற்பதற்கும். இம்மலை பல வரலாறுகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.இந்த மேரு மலை என்பது நம்ம இமய மலைதான்.
உலக நாகரீகங்கள் பல இந்த மேரு மலையோடு தொடர்புடையதே.

சிந்து நாகரீகம், சுமேரிய நாகரீகம், சீன மஞ்சளாற்று நாகரீகம், தென்கிழக்காசிய அங்கோர்வாட் நாகரீகம், பாபிலோனிய, மெசோபேடாமியா நாகரீகம், ஏன் அமெரிக்க மாயன் நாகரீகம் என அனைத்திலும் தொடர்புடையது இந்த மலை. மேரு என்றால் மேடான பகுதி, மலை என்று பொருள். காண்க: வளவு 
இந்த மலையிலிருந்துதான் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான ஆறுகள் உற்பத்தியாகின்றன. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து,  கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா என எல்லா நாட்டுக்கும் சோறு போடுவது இந்த மலைதான்.
ஆதலால், உலகின் தொப்பூழ்க்கொடி என்று அழைக்கப்படும் இந்த மலை (Himalaya: Michael Palin),
தமிழர்களின் வாழ்க்கையோடும்  பின்னிப்பிணைந்தது. 

சிலப்பதிகாரப்பாடல் :
    
1) இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

2) பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்     கோடும் கொடுங்கடல் கொள்ள

மணிமேகலைப்பாடல் :  


1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்
 

2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண

போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப்பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன.


இதில் உள்ள எவரெஸ்ட் என்று அழைக்கப்படும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ (8848 மீட்டர்) உயரம் உள்ளது. இந்தப் பூவுலகின் உச்சபட்ச உயரமான இடம் இதுதான். 
  
எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான பெயர் சாகர்மாதா அ கடல்மாதாதான்.


 நேப்பாளியர்கள் இன்னமும் சாகர் மாதா என்று தான் அழைக்கின்றனர்.



காண்க: விக்கிப்பீடியா 


இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டேதியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh)என்பார் சூட்டினார். பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு தமிழ்ப்பெயர் வெறும் 150 ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆங்கிலேயனால் மாற்றப்பட்டிருக்கிறது. என்னவொரு கொடுமை. 
இதைப்போலவே  தஞ்சையில் கட்டப்பட்ட பெரியகோவில், உயரத்தின் காரணமாக தென்திசை மேரு, தக்ஷிண மேரு (தக்ஷிண, தெக்கண, தெற்கத்திய )என்று அழைக்கப்படுகிறது. கி.பி 1000 இல் இந்தக்கோவில் கட்டப்பட்டபோது உலகில் பிரமிடுக்கு அடுத்து மிக உயரமான கட்டடமாக இது இருந்தது.

இப்போது ஒரு முக்கியமான செய்திக்கு வருவோம். மேருவை ஒட்டியே தொல் நாகரீகங்கள் அமைந்ததால் இந்த மேரு மலையின் இருபக்க முனையில் அமைந்த நாகரீகங்களின் பெயர்கள் இந்த மலையின் பெயரைத் தாங்கியே வந்தது.
ஒன்று சுமேரிய (சு-மேரு) நாகரீகம் இன்னொன்று குமேரிய (கு-மேரு) நாகரீகம்.
காண்க: (The Su Meru and ku-Meru, are said to be the poles or the Zenith and Nadir of the residence of the gods.) தமிழ் அகராதியில் காணலாம்.

சுமேரு (Sumeria)

கசுமேருவிலிருந்து (kashmer-காஷ்மீர்) ஈராக் வரை உள்ள பகுதி அவ்வாறே அழைக்கப்பட்டது. காசுமீர், காசுமேரு, Kashmeru-kasumeru


ஆங்கிலேயர்களால் பல பெயர்கள் உருமாறியது. இன்னமும் தமிழ் நாட்டை கூட ஆங்கிலேயர்கள் போலத்தானே நாமும் எழுதுகிறோம் டமில் நடு (Tamilnadu) என்று.
சுமேரு என்பது மேரு மலையின் ஒரு முனை என்பது மட்டுமல்ல அது மேல் அ மேற்கு பகுதி என்பதையும் குறிக்கிறது.

சுமேரு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு  முக்கிய இடம், பாமீர் பீடபூமி அ பாமீர் முடிச்சு. (Pamir Plateau)

பாமீர் முடிச்சு அப்படின்னு வரலாறு, புவியியலில் படிச்சது நமக்கு ஞாபகத்தில் இருக்கும். இது பாமீர் அல்ல பாமேரு - அதாவது, பா-மேரு, பத்து மேரு, பத்து மலை. இதன் அருகில் தமிழர்களுக்கு முக்கியமான இடம் தட்சசீலம் (Taxila).
இந்த பாமேரு அ தட்சசீலம் என்பதன் அர்த்தம் ஒன்றே. பத்து மலைகள். உலகின் முதல் பல்கலைக்கழகம் இருந்த இடம். 



இதற்கு பிறகு வந்ததுதான் நாளந்தா, புத்த பல்கலைக்கழகம். தட்சசீலம் என்றால் தச சைலம். (தசம்-பத்து. சைலம் அல்லது சேலம்-மலை) பத்து மலைகள் சேரும் இடம், முடிச்சு. கீழே உள்ள நில படத்தைப்பார்த்தாலே பல மலைகள் வந்து சேருவது தெரிகிறது. தச சைலம்  தற்போது இருப்பது ஹரப்பா, மொஹஞ்சதாரோ இருக்கும் அதே பாகிஸ்தான் நாட்டிற்குள்.



அதே போல குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது.
கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம்.



மேருமலையின் தென் முனையில் இருக்கும் நாடு கம்போடியா. இங்கு நாட்டு மக்களே, குமர் என்றுதான்  அழைக்கப்படுகின்றனர்.
கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். 


அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்)


கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.
கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட்.
 
அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காண்க: நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம்.




அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள  பெருங்கடலை குறிக்கும். (சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்)

கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது. 



அங்கோர்வாட் கோயிலின் கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் கவர்ந்த ஒரு புராண கதை செதுக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை. இது கதையல்ல, தமிழர்களின் அறிவியல். வேறொரு தலைப்பில் இது பற்றி காணலாம். 


மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்கள். கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்களாம்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
காண்க: ஈகரை.

இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். 




கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது.


அடுத்து

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு semeru.

மேலதிக தகவலுக்கு. காண்க:

இன்னொரு மிக முக்கிய தகவல் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரையே. 
நம்மூர்ல ஆங்கிலேயர்களால் மதுரையானது madura (மஜுரா) என்றே அழைக்கப்பட்டது. நம்பாதவர்களுக்கு இன்னும் கூட, மதுரையில் ஒரு கல்லூரியின் பெயர் Madura College தான். 


அந்த மதுரை தீவு மற்றும் நீரிணைப்பு இந்தோனேசியாவிலுள்ள யாவகத்தீவில் உள்ளது.



இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுரையில் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.



காரணம் என்னவென்றால் துவக்க காலத்தில் அங்குதான் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதோடு கி.பி 10, 11 ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களின் அரசு குறிப்பாக, உலகின் முதல் கடற்படையைக்கொண்டிருந்த ராஜேந்திர சோழனுடைய கடற்படையின் காரணமாக தமிழ் மிகப்பரவலாக அங்கு இருந்தது. அவரது அரசு எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.
 


இந்தோனேசியாவின் தென் கிழக்கு முனையில் இருந்து 21 ம் நூற்றாண்டின் முதல் புதிய நாடான கிழக்கு திமோர் (இந்தோனேசியாவில் மேற்கு திமோர்). இதில் திமோர் என்பதன் பொருளே தெ-மேரு, தெற்கு-மேரு என்பதே.



சீனர்கள் மேரு மலையை மையப்படுத்தி இருந்ததன் காரணமாக உருவாக்கியிருந்த ஒரு வரைபடம். காண்க:



கொரியர்கள் மேரு மலையை மையப்படுத்தி உருவாக்கின வரைபடம்.காண்க:



ஒரு துணைச்செய்தி. மலேசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை இருக்குமிடத்தின் பெயர் பத்து மலை.

  

இந்த மேரு மலை இந்தியா, தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள தன்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயர் மேரு தான்.

இந்தியாவின் தென் முனை குமரி முனை என்று சொல்கிறோம். அது தவறு. அது குமரி முனை அல்ல, மாறாக குமேரு முனை. காரணம், மேற்கு தொடர்ச்சி மலை குறுகி கடலுள் மூழ்கும் இடம். கூகுள் வரைபடம் பார்த்தால் கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு நிலத்தை ஒட்டி மிகப்பெரும் பரப்பு கடலுக்குள்ளே இருப்பதைப்பார்க்கலாம்.


இதில் 100 மீட்டர் கடல் அளவு குறைந்தால் தமிழ்நாடும் ஈழமும் இணைந்துவிடும்.


அவ்வளவு ஏன் 18 மீட்டர் குறைந்தால் நகரப்பேருந்துலேயே போய்விடலாம். 20 கி.மீ. தான்.


இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிக்கப்படாத காலத்தில், அதாவது மிகப்பெரிய பனி உருகிய காலத்திற்கு முன்பாக (கி.மு 10,000 என்று நில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்) தமிழ்நாட்டின் பரப்பு கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரம் வரை இருந்தது. பல தமிழ்  நகரங்களின் கட்டடங்கள் தென்படுவதாக தூத்துக்குடிபகுதியில் கடல் அகழாய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இதை ஆய்வும் செய்திருக்கின்றார் திரு. பாலு என்பவர். தமிழருக்கான தமிழர்களால் உருவாகும் தமிழரசு வரும்போதுதான் இது மீண்டும் அகழ்வாய்வு செய்யப்படும்.

                                                         தொடர்ந்து தேடுவோம் ...

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...