புதன், 12 ஜூலை, 2017

ஆங்கிலத்திலும் இரண்டறக் கலந்துள்ள தமிழ் ! தமிழ் சொற்கள் அறிவோம்!

சுமார் 60% விழுக்காடு ஆங்கில வார்த்தைகளை நாம் சொல்லாய்வு கொண்டு ஆராய்ந்தால் தெரியவரும் . அத்தகைய சொல்லாய்வு ( Etymology ) செய்த சொற்களை சிலவற்றை காண்போம் . படத்தில் கொடுக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களோடு ஸ்(S) என்ற வார்த்தை பயன்டுத்தி மருவி வந்த ஆங்கில சொற்களை கவனிக்கவும் .
பெரும்பாலான ஆங்கில சொற்கள் தமிழுடன் நேர் தொடர்பு கொண்டவையாக இருக்கிறது , மீதம் உள்ள ஆங்கில சொற்கள் லட்டின் மொழியில் இருந்து மருவி இருக்கும் பட்சத்தில் , லட்டின் சொற்களை சொல்லாய்வு கொண்டால் ,அவை மருவி இருக்கும் இடமும் தமிழே .
குறிப்பாக மற்றொன்டையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும் அதாவது இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசும் இன்றைய தமிழில் 60% விழுக்காடு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல் அழித்து இருக்கிறோம் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.எத்தனை விவாத மேடைகளாக இருக்கட்டும் , எத்தனை பட்டிமன்றகளாக இருக்கட்டும் , பொது தளமாக இருக்கட்டும் , எப்படி கொண்டு ஆராய்ந்தாலும் சரி , தமிழ் வளர்ந்திருக்கிறதா ? ,அழிந்து இருக்கிறதா ? அல்லது அழிந்து விட்டதா ? என்ற கேள்வி எழும் நிலையில் மெய்யான முடிவுகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை தாண்டி சென்று அழிந்து விட்டது என்ற பொருள் பெரும் பெறுவதற்கான முன் நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம் .
சிலர் ..இல்லை இல்லை அதெல்லாம் அழியாது என்று வாதாடுவார்கள் ..அது எப்படி ? என் மகன் , மகள் ,பேரன் ,பேத்தி டாடி மம்மி என்று பேசினால் தமிழ் அழியும், அவை அழியாது என்று கூச்சலிடுவார்கள்.சரி அப்படி இருக்கையில் இன்று மெரும்பாலான தமிழ் மக்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகள் அறிந்ததுண்டா என்று சோதித்தால் இன்று தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில் , இன்றைய நாள் {30-06-2013}கணக்கு கொண்டு பார்த்தால் குறைந்த பட்சம் 50 லட்சம் தமிழர்களுக்கு சொந்த தாய் மொழி தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், அறிந்து இருகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மிகையே . முடிவுகள் 100% விழுக்காட்டில் 10% விழுக்காடு கூட தேராது ..சரி வாங்க அத்தகைய வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் , பயன் படுத்துவோம் , பலரை பயன்படுத்தவும் செய்வோம் .
பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...

செவ்வாய், 11 ஜூலை, 2017

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி


களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்
இந்த காலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரைவிட சிறப்பாக காட்டி கொள்ள முனைந்தனர்.
இதில் இருவர் சேர வில்லை, ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவர் தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன்.
அதே நேரத்தில் இந்த பார்ப்பன மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துகொண்டு எங்காவது கூலி வேலைக்கு தான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பார்ப்பனிடம் கூலி வேலை செய்ய வேண்டும்
முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்று நோக்க வேண்டியது என்ன வென்றால், இந்த மக்கள் புரட்சி காஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்க வில்லை.
இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, அனால் நமக்கு இந்த காலம் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் - கள பறையர், அஃதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர். இந்த புரக்ட்சிக்கு பின் அவர்கள் பல ஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பார்ப்பனருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினார்.
முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் - ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை - திரையன் - (Today's dharmapuri)
2. வேங்கடம் - புள்ளி - (Today's Tirupathi)
3. மிலாடு - காழிமலையன் - (Today's Thirukoilur)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (Today's Dottabeta - Ooty)
5. முதிரமலை - இளங்குமணன் - (Today's Palani)
6. நடுநாடு - இடக்காலி - (Today's center of Karnataka)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(Today's Mysore)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
பார்ப்பனர் வருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே (Like City states of Greece) இருந்த்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலைய வில்லை. மக்கள் அமைதியாக வாழ வழி செய்தனர்.
கி.பி. 300-ல் பாரசீகத்திலிருந்து வந்து தொண்டைமண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன் காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்பிராச்சியத்தை உருவாக்கினான்.
இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள்,
இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டுவிட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர்.
தமிழகத்தில் வருணாசிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8ஆம் நூற்றாண்டு கால கட்டமே
ஆக மொத்தத்தில்,
களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
- கிருஷ்ணவேல் தி.எஸ்

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...