புதன், 14 மார்ச், 2018


ஆரியர்கள் யார்














வரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.
சில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.
சில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

அதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...

இந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர்?. இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.

மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் " சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது." என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும்என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).

"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது."

"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்."

சரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன.அலேசேண்டேரும் இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.

சந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.

அசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.

தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.

இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.
ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.

முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.

இதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.
வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது


சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்றுக் காண்போம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் - குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது. இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களை காண செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.

அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா.

அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.

மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது...ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க. இப்படிப்பட்ட ராஜ்புட்டுக்களைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைக் காணாது இன்றைக்கு நம் நாட்டில் நாம் காணும் வருணாசிரம தருமத்தை நாம் அறிந்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.

என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி... இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முற்றும்

நீர் இல்லாமல் உலகம் இல்லை என்றால் எவர்க்கும் வான்மழையின்றி ஒழுக்கம் இல்லை.




புவியில் உள்ள திரவங்களிலேயே நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு மட்டும்தான், நமது அன்றாட வாழ்க்கையின் மொழியில் நுழைந்திருக்கிறது. H2O என்பதில் என்னென்ன இருக்கிறது என்பது பற்றித் தெரியவில்லையென்றாலும், H2O என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நீர் என்பது மிகவும் சாதாரணமான விஷயம்போல் தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல.
அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பொருள், நம்முடன் மிகவும் நெருங்கியிருப்பதாலேயே கொஞ்சம் சலிப்பூட்டுவதுபோல் தோன்றலாம். ஆனால், அது எந்த அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதும், தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பது என்பதும் நீரின் இயல்புக்குள் ஆழமாய் எட்டிப்பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
விதிகளை உடைக்கும்
எல்லா விதிகளையும் உடைக்கும் இயல்புடையது நீர். திரவங்கள் என்றால் என்ன என்பதை விவரிப்பதற்கான பெரிய வரையறையை 19-ம் நூற்றாண்டிலிருந்து வேதியியலாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீரின் விநோதமான பண்புகளை விளக்குவதில், இந்த வரையறைகள் எல்லாம் பெரும்பாலும் பொய்த்தே போகின்றன.
ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போடும்போது என்ன நிகழ்கிறது என்பதில்தான், நீரின் விநோதமான இயல்பு அடங்கியிருக்கிறது. இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் முன்னே ஒரு திடப்பொருள் இருக்கிறது, அது தன்னுடைய திரவ நிலையின் மீதே மிதக்கிறது! ஆனால், திட மெழுகு திரவ மெழுகில் மிதக்காது; உருக்கிய வெண்ணெயில் வெண்ணெய்க் கட்டி மிதக்காது; எரிமலையிலிருந்து பீறிட்டு வரும் எரிமலைக் குழம்பில் கற்கள் மிதக்காது.
விநோத இயல்பு
உறைய வைக்கப்படும்போது நீர் விரிவடைவதால், ஐஸ் கட்டிகள் மிதக்கின்றன. குளிர்பதனப் பெட்டியின் உறைநிலைப் பெட்டியில் ஓர் இரவு முழுவதும் சோடாவை விட்டுவைத்தால், அதனால் ஏற்படும் விரிவு எவ்வளவு சக்திமிக்கது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்: கண்ணாடியையே சுக்குநூறாகச் சிதறடித்துவிடும்.
நீரின் இந்த இயல்பு கொஞ்சம் விசித்திரமாகவோ, முக்கியமற்றதாகவோ தோன்றலாம். ஆனால், நீரின் எண்ணற்ற விநோதங்களுள் ஒன்றான இந்த விசித்திர இயல்புதான், நமது கோளையும் அதிலுள்ள உயிர்வாழ்க்கையையும் வடிவமைத்தது.
யுகம்யுகமாக நிகழ்ந்த உறைதல், உருகுதல் என்ற தொடர் நிகழ்வுகள் காரணமாகப் பெரும் பாறைகள் வழியாக நீர் துளைத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது, அந்தப் பாறைகளை இரண்டாகப் பிளந்திருக்கிறது, அவற்றைச் சுக்குநூறாகச் சிதறடித்து மண்ணாக மாற்றியிருக்கிறது.
உறைபனியும் நீரும்
நமது பானங்களில் மட்டும் பனிக்கட்டிகள் மிதக்கவில்லை, நமது பெருங்கடல்களில் பனிக்கட்டிக் கடல்களும் (sea ice) பளபளக்கும் பனிப்பாளங்களும் மிதந்துகொண்டிருக்கின்றன.
உறைந்த ஏரிகளிலும் ஆறுகளிலும் உறைபனி சும்மா அலங்காரப் பொருள்போல இருப்பதில்லை. கீழே இருக்கும் நீரின் வெப்பநிலையைப் பாதுகாத்து, மேற்பரப்பின் வெப்பநிலையைவிட சில டிகிரி அதிகமாக வைத்திருக்கிறது, கடும் குளிர்காலத்திலும்கூட. 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான், நீர் அதன் அதிகபட்ச அடர்த்தியைக் கொண்டிருக்கும். ஆகவே, அந்த வெப்பநிலையில் ஏரி, ஆறு போன்றவற்றின் கீழ் பரப்புக்கு நீர் போய்விடும்.
நீர்நிலைகள் மேலிருந்து கீழாக உறைவதால், நீர்நிலையில் வாழும் மீன்களும் தாவரங்களும் மற்றும் பல உயிரினங்களும் கடும் குளிர் காலங்களில் தப்பிப் பிழைப்பதற்கு, வேறு இடங்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் எப்படியோ எண்ணிக்கையிலும் அளவிலும் அவை பெருகிவிடுகின்றன. புவியின் காலப்போக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த பனியுகங்கள், வேறு பல காலகட்டங்கள் போன்றவற்றை மீறியும் உயிரினங்கள் தப்பிப் பிழைத்ததற்கு மேற்கண்ட விநோதம்தான் காரணம்.
திரவமாக இருப்பது
மற்ற திரவங்களைப் போல் நீர் நடந்துகொண்டிருந்தால் ஈரப்பதமே இல்லாத, உறைந்துபோன நிலத்திலிருந்தும் உறைந்துபோன கடல்களிலிருந்தும் நொய்மையான உயிரினங்களெல்லாம் துடைத்தெறியப் பட்டிருக்கும்.
இது வெறும் தொடக்கம்தான். ஒரு கண்ணாடிக் குவளை நீரை எடுத்துக்கொண்டு அதனூடாகப் பாருங்கள். நிறமில்லா, மணமில்லா இந்த திரவத்தைப் பற்றிய விசித்திரமான விஷயம் என்னவென்றால், இது திரவமாக இருப்பதுதான்.
விதிமுறைகளையெல்லாம் நீர் பின்பற்றியிருக்குமானால் கண்ணாடிக் குவளையில் நாம் எதையும் பார்த்திருக்க முடியாது, நம் கோளில் எந்தக் கடலும் இருந்திருக்காது.
திரவமான வாயு
புவியில் உள்ள ஒட்டுமொத்த நீரும் நீராவியாகத்தான் இருக்க முடியும். உயிரினங்கள் வாழ முடிந்திருக்காத புவி என்று, அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் உலர்ந்த மேற்பரப்பில் கொதித்துக்கொண்டும் அடர்த்தியாகவும் இருந்திருக்கக்கூடிய வளிமண்டலத்தின் ஒரு பகுதியாக நீராவியின் வடிவில் நீர் இருந்திருக்கும்.
நீர் மூலக்கூறு என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய கனமற்ற இரண்டு தனிமங்களின் அணுக்களால் ஆனது. அதாவது, ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்.
புவி மேற்பரப்பின் சூழல்களைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, நீர் என்பது ஒரு வாயுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடும் (H2S) ஒரு வாயுதான். ஆனால், நீரின் மூலக்கூறு எடையைவிட இரு மடங்கு எடை கொண்டது அது. நீர் மூலக்கூறினுடைய அளவில் மூலக்கூறுகளைக் கொண்ட அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு போன்றவையும் வாயுக்களே.
பிரிக்க முடியாதது
எல்லா விதிமுறைகளையும் நீர் ஏன் வளைத்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீரின் மேற்பரப்பில் கிழித்துக்கொண்டு செல்லும் நீர்ப்பூச்சியைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நீரில் மூழ்காமல் அந்தப் பூச்சியால் எப்படிச் செல்ல முடிகிறது? மற்ற எல்லா திரவங்களுடன் ஒப்பிடும்போது நீரின் பரப்பு இழுவிசை என்பது மிகவும் அதிகம்.
எனவேதான், அந்தப் பூச்சி நீரின் ஆழத்தில் மூழ்கிப்போகவில்லை. நீர் மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை என்பதால்தான், நீருக்குப் பரப்பு இழுவிசை என்ற இயல்பு ஏற்பட்டிருக்கிறது.
நீரின் ஒரு மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் மற்ற மூலக்கூறுகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை. ஒவ்வொரு நீர் மூலக்கூறும், இது போன்ற நான்கு ஹைட்ரஜன் பிணைப்புகள்வரை உருவாக்கக்கூடியவை. இப்படியாக ஒட்டுமொத்தமாகச் சேர்வது, திரவங்களில் நீருக்கே உரித்தான ஒருங்கிணைவுத்தன்மையைத் தருகிறது.
புவியின் மேற்பரப்பில் நீர் ஏன் திரவ நிலையில் இருக்கிறது என்பதற்கான காரணத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: ஹைட்ரஜன் பிணைப்புகள் நீரின் மூலக்கூறுகளையெல்லாம் ஒன்றாக வைத்திருக்கின்றன. அவற்றைப் பிரிக்க வேண்டுமென்றால் சற்றே அதிகமான ஆற்றல் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கொதிக்க வைப்பதன் மூலம் நீரை ஆவியாக்குவதைச் சொல்லலாம்.
உயிர் வளர்ப்பது
நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இதற்கு மேலும் வலியுறுத்திச் சொல்வதென்பது கடினம். நமது உடலின் மிகக் குறுகலான ரத்தக் குழாய்களின் வழியாகவும் நீர் மூலக்கூறுகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு செல்கின்றன என்றால், அதற்குக் காரணம் அந்தப் பிணைப்புகள்தான். பெரும்பாலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே அவை செயல்படுகின்றன.
உடலுக்குள்ளே அவ்வளவு எளிதில் சென்றடைய முடியாத இடங்களுக்கெல்லாம் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துகளையும் நீர் கொண்டுசேர்ப்பது இப்படித்தான். தரையின் ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சி இலைகளுக்கும் கிளைகளுக்கும் அனுப்பி, சூரிய ஒளியில் அவற்றைச் செழிக்க வைப்பது தாவரங்களால் சாத்தியப்படுவதும் இந்த ஹைட்ரஜன் பிணைப்புகளால்தான்.
எல்லாம் சாத்தியம்
நீரின் இந்த ஒட்டும் தன்மைதான், நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கருதும் பல்வேறு நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்துகிறது. அதாவது, நம் வீடுகளில் உள்ள ரேடியேட்டர்களுக்கு நீரைச் செலுத்துவது, டப்பாவில் இருக்கும் ஆரஞ்சு சாற்றைப் பிதுக்கிக் குடிப்பது, நமது தோட்டங்களில் உள்ள பூச்செடிகளுக்குக் குழாய் வழியாக நீரை இறைப்பது போன்ற எல்லாவற்றுக்கும் அந்தத் தன்மைதான் காரணம்.
நீரைக் குறுக்க முடியாது என்பதால்தான் இவையெல்லாம் சாத்தியமாகிறது. ஏனெனில், மூலக்கூறுகளெல்லாம் ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்வதுடன் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. மற்ற திரவங்களில் இருப்பதைவிடவும் இந்த நெருக்கம் அதிகம். ஒன்றைக் குறுக்குவது எந்த அளவுக்குக் கடினமோ, அதேபோல் அதன் ஒரு பக்கத்தில் மட்டும் அழுத்துவதன் மூலம் அதைப் பாயவைப்பதும் மிகவும் எளிது.
அனைத்தையும் கரைக்கும்
நீரை மட்டுமே நீர் ஈர்ப்பதில்லை, அது கடக்க நேரிடும் எல்லாவற்றுடனும் ஒட்டிக்கொள்கிறது. அனைத்தையும் கரைக்கக்கூடிய கரைப்பான் என்ற தகுதியைக் கிட்டத்தட்டப் பெறுவது, நீர் மட்டும்தான். மற்ற சேர்மங்களைத் தனித் தனியாகப் பிய்த்துப்போடக் கூடிய தன்மை கொண்டது அது.
சோடியம் குளோரைடு படிகங்களால் ஆன சமையல் உப்பு நீரில் எளிதாகக் கரைகிறது. நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள், உப்பில் உள்ள சோடியம் அணுக்களையும் குளோரின் அணுக்களையும் படிகத்திலிருந்து தனித்தனியாகப் பிய்த்து நீரினுள் மிதக்கச் செய்கின்றன.
அத்துடன், நீர் என்பது மிகச் சிறந்த கரைப்பான் என்பதால் சுத்தமான வடிவத்தில் நீரை நாம் காண்பதே அரிது. எப்படிப் பார்த்தாலும், நீரில் ஏதாவது ஒன்று கரைந்திருக்கும். ஆய்வகங்களில் தூய்மையான நீரை உருவாக்குவதும்கூடக் கடினமே. நாம் அறிந்திருக்கும் அனைத்து வேதிச் சேர்மங்களும், நம்மால் உணரக்கூடிய வகையில் சிறிதளவுக்காவது நீரில் கரையும். அதனால்தான், நாம் அறிந்த வேதிப்பொருட்களிலேயே மிக அதிக அளவில் வினைபுரியக் கூடியதும் அரிக்கக் கூடியதுமாக நீரே இருக்கிறது.
உடலுக்கு அடிப்படை
ஏராளமான பொருட்களுடன் ஊடாடக் கூடிய இயல்புதான் உயிர்வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இந்த இயல்பால்தான் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும் வேறு பொருட்களையும் நீர் கரைத்து நம் உடலுக்குள் பரவ விடுகிறது. உயிர்வாழ்க்கைக்கு அடிப்படையான டி.என்.ஏ., புரதங்கள், செல்களில் உள்ள சவ்வுகளை உருவாக்கும் மூலக்கூறுகள் போன்றவையும் இன்ன பிறவும் நீரில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.
அதேநேரத்தில் நீரை விலக்கும் எண்ணெய் போன்றவையும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள நூறு கோடிக்கணக்கான புரதங்கள், சரியான அளவில் மடங்கி உருவங்களைப் பெற்றுத் தங்கள் பணிகளைச் சரியாகப் புரிகின்றன என்றால், அதற்குக் காரணம் நீர்தான். நீருடன் உறவாடுவது, அந்தப் புரதங்களைச் சரியான அளவில் முப்பரிமாணங்களை பெறச் செய்கிறது.
எங்கும் எதிலும்
நீங்கள் எந்தத் திரவத்தைப் பற்றி நினைத்துப்பார்த்தாலும் அதில் நீர் இருக்கிறது. ரத்தம், பியர், ஆப்பிள் பழரசம் என்று எதையெடுத்தாலும் எல்லாமே நீர்தான். அதில் சிறிதளவு மற்ற விஷயங்களும் கலந்து பரவியிருக்கின்றன, அவ்வளவுதான். பெட்ரோலியம், சமையல் எண்ணெய் போன்ற தூய்மையான திரவங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் நீருடன் நாம் கொள்ளும் உறவுக்குப் பக்கத்தில், அவையெல்லாம் வரவே முடியாது.
நீர் என்பது எங்கும் காணப்படுவது, நம்முடன் நெருக்கமானது என்பதாலேயே, அதை ஒரு முக்கியமான விஷயமாகவே நாம் கருதுவதில்லை: தினமும் நாம் அதைக் குடிக்கிறோம், தொடுகிறோம், அதைக் கொண்டு கழுவுகிறோம், துவைக்கிறோம், பொருட்களை ஈரப்பதத்துக்கு உள்ளாக்குகிறோம், உலரவைக்கிறோம், நீரைக் கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம், அதில் நீந்துகிறோம்.
முற்றுப்பெறாத புதிர்
வெவ்வேறு தட்பவெப்ப நிலையையும் அழுத்தத்தையும் கொண்டிருக்கும் நீரின் வெவ்வேறு பரப்புகளைத் தேடி பயணம் செய்ய வைக்கும் இயற்கைச் சூழலைக் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். வேறுபட்ட அந்தத் தட்பவெப்பநிலைகளில் நீர் வெகு லாவகமாகத் திடப்பொருளாகவும் திரவமாகவும் வாயுவாகவும் மாறுகிறது (சில சமயங்களில் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளையும் அடைகிறது).
நீரை ஆராய ஆராய, அது மென்மேலும் புதிரானதாகத்தான் தோன்றுகிறது. நாம் அதிலிருந்து உருவானவர்கள் என்பதால், அதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நாம் எதனால் உருவாகியிருக்கிறோமோ, அது இப்படிப்பட்ட ஒரு புதிராக இருக்கிறது என்பதே, ஒருவேளை நமக்கு வியப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
மாணவன் கண்டுபிடித்த விளைவு
நீரைப் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்கு விநோதமாகத் தோன்றினால், கீழே வரும் விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?: குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவாக உறைந்துவிடும். இந்த விசித்திர இயல்புக்கு பெம்பா விளைவு என்று பெயர் (Mpemba effect).
தான்சானியாவைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன் எராஸ்டோ பி பெம்பா, 1963-ல் வகுப்பறைப் பரிசோதனையின்போது கண்டுபிடித்ததால்தான், அந்த விளைவுக்கு இந்தப் பெயர். சூடான ஐஸ்கிரீம், ஜில்லென்ற ஐஸ்கிரீமைவிட வேகமாக உறைந்துபோனதை அவன் கண்டுபிடித்தான். அவனது ஆசிரியர் அதை நம்பாமல், அவனைக் கேலி செய்திருக்கிறார்.
ஆனால், நீரின் விசித்திரமான இந்த இயல்பைக் கண்டுகொண்டவர்கள் பெம்பாவுக்கு முன்னரே இருந்திருக்கிறார்கள்; அரிஸ்டாட்டில், ஃபிரான்சிஸ் பேகன், ரெனே தெகார்தே போன்றோரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
(அலோக் ஜா, ஐ.டிவி நியூஸின் அறிவியல் செய்தித்தொடர்பாளர், நீரைப் பற்றி ‘தி வாட்டர் புக்’ என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.)






























மாயன் கூட்டம் தமிழர்கள்




மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன்.
தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன.
கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம்.
உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.
இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.
தமிழ் திரு ஆலயங்களின் வடிவிலேயே பிரமிடுகள் என்னும் எகிப்திய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பலாம். கோயில் என்பது அரசனின் வீடு என்னும் பொருள் படும். அரசர்கள் இறந்தபின்னும் வாழும் வீடுதான் பிரமிடுகள். மயன்களின் பிரமிடுகளும் இதில் தமிழ் கட்டிட கலை என்கிறார்கள். தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளன.
தமிழ் மண்ணில் இருந்த நாகர்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இவர்கள் அறிவீர் சிறந்தவர்கள். இவர்கள் தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம்.
அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. நாகர் , நகார், நகர் என்கிற வார்த்தைகளில் நான் ஒரு ஒற்றுமையை காண்கிறேன்.
நகார் என்பது மாளிகை கட்ட பயன்படும் ஒரு பொருள். நாகர் என்பவர்கள் தமிழர்கள். நகர் என்பது மாளிகை அமைந்த பகுதி. நகரம் அமைப்பவர்கள் மாயன்கள். ( தலை சுத்துதா ? ). நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்ந்தவர்கள்.
இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.
இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்று நிறைய சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலோன் என்பது கூட சிவலங்கை என்பதின் திரிபோ என்னவோ.
மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறை தமிழர்களின் திருகனித பஞ்சாங்கம் போல் உள்ளதாம். பஞ்சாங்கம் என்பது தமிழ் வார்த்தை போல் தெரிகிறது. பஞ்சம் என்பதை தமிழ் கொண்டு விளங்க வேண்டும் என்றால் - தமிழில் நான்கு தினைகளே ஆரம்பத்தில் இருந்ததாம்.
இந்த நான்கு திணைகளில் பஞ்சம் ( ஐந்தாம் நிலை ) ஏற்பட்டால் அது பாலை ஆகுமாம். அதாவது பஞ்சம் உள்ள பகுதி ஆகுமாம். ஐந்தாம் பகுதி பஞ்ச பகுதி.
நிரம்பவே என் சரக்கும் இருந்தாலும் - மாயன்கள் தமிழர்கள், அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள். ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.
மொத்தத்தில் கதை இதுதான் தமிழன் அழிந்து கொண்டே உள்ளான்.
ஆப்பிள் இபோனில் பயன்படுத்தப்படும் குறுக்குவழி ( short cut நு அதானேங்க ? ) யாவும் மாயன் குறி சித்திரங்கள் போல் உள்ளதாம்.
கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் மாயன்கள். அதி-தேய்த்தவன் - அதிதியன் - அதித்ய என்பவை கதிரவனே. திருக்குறள் அதி பகலன் முதற்றே உலகு என்கிறாராம். அகர ( ஆல்பா ) முதல எழுத்து எல்லாம் - எனபது உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கும் பொருத்தும்.

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...