திங்கள், 16 அக்டோபர், 2023

 தமிழில் எழுதும் போது.........

1. வாழ்த்துக்கள் என்பது தவறு.
‘வாழ்த்துகள்‘என்பதே சரி. ‘க்‘ வரக்கூடாது.
2. வாழ்க வளமுடன் என்பது தவறு.
‘வாழ்க வளத்துடன்‘ என்பதே சரி.
3. ‘நிகழும் மங்களகரமான ஆண்டு‘ என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. ‘மங்கலகரமான‘ என்பதே சரி.
‘மங்கள இசை‘ என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது.
‘மங்கல இசை ‘ என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).
இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு ‘மங்களம்‘ என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.
ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் ‘சுப மங்களம்‘ என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.
ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப்பெண் குழந்தைக்கு ‘மங்களா‘ என்று பெயர் சூட்டுவர். இத்துடன் போதும் என்று பொருள்.
திருவள்ளுவர் தம் குறளில்,
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு – என்று பாடியிருக்கிறார். காண்க – மங்கலம். ( மங்களமில்லை )
4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு என்பது தவறு. நச்சு என்றால் நஞ்சு (விஷம்).
நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.
நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.
நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன்.
சுருக்கென்று எடுத்துக் கொள்க…
எல்லா உணர்ச்சிகளும்:
2

புதன், 29 மார்ச், 2023

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை


பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...