தமிழ் ஈழம்
முன்பொரு காலத்தில் ஈழம் உட்பட இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் இருந்த ஒரே மொழி தமிழாகும். ஈழம் உட்பட இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் இருந்த ஒரே எழுத்து வரிவடிவம் சிந்துவெளி எழுத்து வரிவடிவமாகும்.ஆனால் சீன எழுத்துகளும் யப்பானிய எழுத்துகளும் இன்றுவரை பட எழுத்து வடிவங்களாகவே விளங்குகின்றன.சீன மொழியில் மலையைச் சூரியன் தொடும் படம் மேற்கைக் குறிக்கும், மலையைச் சூரியன் தொடாத படம் கிழக்கைக் குறிக்கும்.ஆனால் தமிழில் இருப்பது வரிவடிவ எழுத்துகள். இது சிந்துவெளி காலத்திலேயே வரிவடிவ எழுத்துக்களாக உருவாகிவிட்டது.
எனவே உலகின் பண்டைய மொழிகளிலேயே தமிழ் மொழி ஒன்றுதான் காலத்தால் மிகத் தொன்மையான வரிவடிவ எழுத்துக்களை கொண்ட ஒரே மொழியாக காணப்படுகிறது. இச் சிந்துவெளி தமிழ் எழுத்தை உருவாக்கியவர் ஐந்திரனார்.அவ் வரிவடிவ எழுத்துக்களுக்கும் இலக்கணம் சொன்ன உலகின் ஒரே மொழி தமிழாகும். எனவேதான் உலகின் பல்வேறு இடங்களிலும் தமிழ் மொழி வழங்கியமைக்கான ஆதாரங்கள் அவர்களுடைய மொழிகளில் காணப்படுகின்றன. அத்தோடு அத்தமிழ் மொழிக்குரிய சிந்துவெளி எழுத்துக்களும் (குறியீடுகள் உட்பட ) வி(ப)ரவிக் காணப்படுகின்றன.
இந்த சிந்து வெளி எழுத்தில் ஆண் பால் விகுதியைப் பிரித்து எழுதியிருக்கிறார்கள். கந்தன் என்று இப்போது நாம் எழுதுவதை, கந்த அன் என்று அன் விகுதியைப் பிரித்து எழுதுவார்கள். எகிப்தில் உள்ள பிரமிட்டில் கந்த அன் என்று சிந்துவெளி எழுத்தில் எழுதியிருக்கிறார்கள்.ஈழத்தில் ஆனைக்கோட்டை கல்வெட்டில் மேலே சிந்துவெளி எழுத்தும் கீழே தமிழி எழுத்தும் இருக்கின்றன. இறையனார் களவியல் உரை மூன்று சங்கங்களைப் பற்றிப் பேசுகிறது. முதல் சங்கம் பட எழுத்துக்குரியது. இரண்டாவது சங்கம் சிந்து வெளி எழுத்துக்குரியது. மூன்றாம் சங்கம் தமிழி எழுத்துக்குரியது.சிந்துவெளிக் கட்டமைப்பை ஒட்டித் தான் தமிழி தோன்றியது. இந்த இறையனார் களவியல் உரை பண்டைய தமிழர்களான பாண்டியர்களுடைய கபாடபுரம் திகழ்ந்த குறித்தும் வெளிப்படுத்துகின்றது . அது பாண்டியர்களுடைய பழைய நிலப்பரப்பில் அதாவது ஈழத்தில் அமைந்திருந்தது .
மேலும் சிந்துவெளி நாகரிகமானது தெற்கில் இருந்து தான் வடக்குக்குப் போனது என்பதை எளிதாக நிறுவ முடியும்.அதனை ஆதிச்சநல்லூரில் கிடைத்த குடிநீர்க் குவளை விளிம்பு இல்லாதது; சிந்துவெளியில் கிடைத்த குடிநீர்க்குவளை விளிம்பு உடையது. விளிம்பு இல்லாத குவளையை அடுத்தே விளிம்பு உடைய குவளை உருவாக்கியிருப்பார்கள் எனவே சிந்துவெளி காலத்திற்கு முன்பே அதன் மூலம் தெற்கிலுள்ள நிலப்பரப்பில் நிலவியது இவை எடுத்துரைக்கின்றன. அத்தோடு சிந்துவெளி எழுத்துக்கள் ,தமிழி எழுத்துகள் அல்லாத வெற்று முதுமக்கள் தாழிகள் அவ்விடத்தே கிடைக்கப்பெற்றன. இவை போன்ற சம காலத்தை சேர்ந்த தாழிகள் ஈழத்தினுடைய மேற்கில் பொன்பரப்பியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.எனவே
தொல் பழங்காலத்தின் மூன்று பிரிவுகளான
பழைய கற்காலம் (Palaeolithic Period)
முன் கற்காலம் (Lower Palaeolithic)
இடைக் கற்காலம் (Middle Paleolithic)
கடைக் கற்காலம் (Upper Paleolithic)
நுண்கற்காலம் (Microlithic அல்லது Mesolithic period), என்பன தென்னிந்திய பெருநிலப்பரப்பில் இருக்கும் அளவுக்கு வேறிடங்களில் காணப்படவில்லை. அத்தகைய பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி ஒன்று அத்திராம்பாக்கம் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. ஆகவே தமிழர்களுடைய தொன்மையான வரலாற்று தாயகமாக தென்னிந்திய, ஈழ பிராந்தியங்கள் திகழ்கின்றன என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க போதுமானதாகும். எனவே சிந்துவெளி நாகரீகம் ஓர் நகர நாகரீகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பாக அம்மக்களின் தொன்மம் பண்டைய தமிழக, ஈழப்பகுதிகளாகவே விளங்கின என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இச்சிந்துவெளி நாகரீகம் அழிவடைந்த பின்பாக தோன்றிய தமிழின் இன்னொரு வரிவடிவமான தமிழி தோற்றம் பெற்றது.
இத் தமிழி எழுத்துகளுக்குத்தான் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார். இவரது காலத்தை கி.மு. 865 என்கிறார் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் .
இச்சிந்துவெளிக்கு பின்னான காலத்தில் தமிழி எழுத்துகளின் அடிப்படையில் தான் இந்தியாவில் இருக்கும் எல்லா மொழி எழுத்துகளும் தோற்றம் பெற்றன . அவற்றுள் ஆந்திர சாதவாகனர் தாய்மொழியாகக் கொண்ட பிராகிருதம் உட்பட எல்லா மொழிகளும் தமிழி எழுத்துருவில் எழுந்தவை. அக்காலத்தில் சமற்கிருதத்திற்குத் தனி எழுத்தே இல்லை. மக்களின் பேச்சு மொழியாக காணப்படாமையால் அதற்குரிய எழுத்து வடிவமில்லை. சமஸ்கிருதம் இருந்ததற்கான கல்வெட்டுச்சான்றுகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்துதான் கிடைத்திருக்கின்றன. அதற்கு முன்பான சான்றுகள் எவையும் இதுவரை இல்லை
மேலும் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் பெண் தெய்வ வழிபாடு தமிழர்களுடையதாக இருந்திருக்கிறது. பசுபதி கூடப் பெண் உருவம் என்று அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அத்தகைய கொற்றவையுடன் கூடிய மான்கள்
பொறிப்பு தமிழக மூணாறு அருகில் மறையூரில் இருக்கின்றன. சிந்துவெளியில் கொற்றவையுடன் காணப்படும் மான்கள் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுபவை.வட இந்தியாவில் மான்கள் கிடையாது. அதனை போன்ற கொற்றவை வடிவம் ஆதித்தநல்லூரிலும் கிடைத்தது.
சிந்துவெளியிலும் புலியுடன் சண்டையிடும் பெண்ணுருவம் கிடைத்தது. இக் கொற்றவையைச் சமணர்கள் இயக்கி ஆக்கினார்கள். தமிழருடைய வழக்கின் வழியாக ஒரு பெண் தெய்வம் கன்னியாக இருக்க வேண்டும் என்பது நிலைப்பாடாகையால். அவளை செல்லி,சல்லி செல்வி என பல்வேறுபட்ட பெயர்களில் அழைத்தனர்.
பிற்காலத்தில் தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் கிடைத்திருக்கின்றன. அதே போன்று ஆரம்பகால சிங்கள மொழி கல்வெட்டுக்களும் இதே காலப்பகுதியை சேர்ந்தவையாகும்.
கி.பிபதினைந்தாம் நூற்றாண்டில் தான் மலையாளம் என்ற மொழி தமிழில் ஏற்பட்ட சங்கத கலப்பு காரணமாக தமிழில் இருந்து பிரிந்தது. அதே போன்று கன்னட,தெலுங்கு மொழிகளும் சங்கத மொழி கலப்புற்று தோற்றியவை ஆகும். சிங்கள மொழி கூட பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாடு சங்கத மொழி மணிப்பிரவாள நடையை கொண்ட வீரசோழியம் என்ற இலக்கண நூலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாகும்.