வெள்ளி, 8 மே, 2015

←மொழி மரபு தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) தொல்காப்பியர் புணரியல்→ உந்தி முதலா முந்து வளி தோன்றி தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலை பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல திறப்படத் தெரியும் காட்சியான. 1 அவ் வழி, பன்னீர் உயிரும் தம் நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2 அவற்றுள், அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3 இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன அவைதாம், அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4 உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5 தம்தம் திரிபே சிறிய என்ப. 6 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் நா நுனி பரந்து மெய் உற ஒற்ற தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 அணரி நுனி நா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்து எழு வளி இசை அரில் தப நாடி அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

எழுத்ததிகாரம் 



நூல் மரபு தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) தொல்காப்பியர் பிறப்பியல்→ குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1 புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2 நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3 இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே கடப்பாடு அறிந்த புணரியலான. 4 குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5 ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6 உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா ஆய்தம் அஃகாக் காலையான. 7 குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8 ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9 நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10 குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11 ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12 மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13 தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14 ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15 அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16 குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17 செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18 னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19 மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20 அகர இகரம் ஐகாரம் ஆகும். 21 அகர உகரம் ஔகாரம் ஆகும். 22 அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23 ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே தேரும் காலை மொழிவயினான. 24 இகர யகரம் இறுதி விரவும். 25 பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26 உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27 க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28 சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29 உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30 ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31 ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32 முதலா ஏன தம் பெயர் முதலும். 33 குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34 முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35 உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36 க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37 எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38 ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39 ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40 உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41 உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42 உப் பகாரம் ஒன்று என மொழிப இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43 எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44 ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45 உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46 உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே அப் பொருள் இரட்டாது இவணையான. 47 வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48 மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49

எழுத்ததிகாரம் 


எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1 அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2 அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3 ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4 மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5 நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6 கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7 ஔகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8 னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9 மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10 மெய்யின் அளபே அரை என மொழிப. 11 அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12 அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. 13 உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14 மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15 எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16 புள்ளி இல்லா எல்லா மெய்யும் உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும் ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும் ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17 மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18 வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19 மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20 இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21 அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22 ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23 அவற்றுள், ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24 ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25 அவற்றுள், ண னஃகான் முன்னர் க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26 ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27 மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28 ய ர ழ என்னும் புள்ளி முன்னர் முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29 மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30 அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31 ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32 அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் உள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். 33
தொல்காப்பியர் காலம்[தொகு] தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு. ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர். இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார். விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும். தொல்காப்பியம் - பெயர் விளக்கம்[தொகு] தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன. தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்[தொகு] தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். இந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை. கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது. தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்[தொகு] இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.[2] தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது. தோற்றம்[தொகு] தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர்[3] என்று சிலரும் பிராமணர்[4] என்று சிலரும் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர். தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[5] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். . அமைப்பு[தொகு] மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது. எழுத்ததிகாரம்[தொகு] தொல்காப்பி எழுத்து நடை - ஒரு பகுதி. நூல் மரபு - (நூன்மரபுச் செய்திகள்) மொழி மரபு - (மொழிமரபுச் செய்திகள்) பிறப்பியல் - (பிறப்பியல் செய்திகள்) புணரியல் - (புணரியல் செய்திகள்) தொகை மரபு - (தொகைமரபுச் செய்திகள்) உருபியல் (உருபியல் செய்திகள்) உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்) புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்) குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்) எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்[தொகு] எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும், சொல் தொடங்கும் எழுத்துக்கள், சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன. நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது. ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன. ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது. ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரம்[தொகு] கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்[தொகு] சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது. இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது. மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும், பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது. நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது. ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும், அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது. ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும், ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும், எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன. ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது. ஒன்பதாவது எச்சவியலில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும், பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும், ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும், இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும், காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே. மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம். பொருளதிகாரம்[தொகு] அகத்திணையியல் புறத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்[தொகு] பொருளதிகாரம் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன. மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள். ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது. ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது. ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது. எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது. ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன. உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன. மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம். இலக்கணம் - சொல்விளக்கம்[தொகு] தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்
பொருளடக்கம் [மறை] 1 தொல்காப்பியர் காலம் 2 தொல்காப்பியம் - பெயர் விளக்கம் 2.1 தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் 2.2 தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் 3 தோற்றம் 4 அமைப்பு 4.1 எழுத்ததிகாரம் 4.1.1 எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் 4.2 சொல்லதிகாரம் 4.2.1 சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் 4.3 பொருளதிகாரம் 4.3.1 பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் 5 இலக்கணம் - சொல்விளக்கம் 6 தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் 6.1 தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள் 7 தொல்காப்பியம் சிறப்புப்பற்றிய பேராசிரியர்களின் கருத்து 8 செய்தித் தொகுப்புக் கட்டுரைகள் 9 மேற்கோள்கள் 10 வெளி இணைப்புகள்
தமிழ் இலக்கியம் சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்மேற்கணக்கு எட்டுத்தொகை நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண்கீழ்க்கணக்கு நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது களவழி நாற்பது கார் நாற்பது ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி ஏலாதி கைந்நிலை சங்கநூல் தரும் செய்திகள் தமிழ்ச் சங்கம் சங்ககால நிலத்திணைகள் சங்க காலப் புலவர்கள் சங்ககாலப் பெண் புலவர்கள் சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள் சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள் சங்ககால விளையாட்டுகள்
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...