கசகசா... உஷார், உஷார்!
சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.
மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆறுச்சாமி
இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.
கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆறுச்சாமி
கசகசா
போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை கசகசா எனப்படும். இது குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச்சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். இகசகசா, வால்மிளகு,பாதாம்பருப்பு, கற்கண்டு வற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத்தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும்அடிவயிற்று வலி குறையும். மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம்.பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது. கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத்தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம். பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில்போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்கு“வாக்விவர்த்தனம்” அதாவது சொல்வன்மை கூடுமென்றும்எடுத்துரைத்திருக்கிறார். நிகண்டுரத்னாகரம் எனும் ஆயுர்வேத அகராதியில் கசகசா குடலில் தேவையற்ற கிருமிகளை அழிக்கக் கூடியது, சோகை மற்றும் காசநோய்களுக்கு நல்லதொரு உணவாகவும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெண்மை, கருமை, மஞ்சள் மற்றும் பலவர்ணமென நான்கு வகையான வண்ணங்களையுடைய கசகசாவைப் பற்றிய செய்திக் குறிப்பில் வெண்மை நிறமுடைய கசகசாவானது உண்ட உணவை நன்றாக செரிக்கச்செய்யுமென்றும், கருமை நிறமுடையதை அதிக அளவில் உட்கொண்டால் மரணமேற்படுமென்றும், மஞ்சள் நிறமுடைய கசகசாவானது கிழத்தன்மையைப் போக்குமென்றும், இவற்றின் கலவையை ஒருங்கே கொண்ட வகையானது மலத்தை நன்றாகஇளக்கி வெளியேற்றுமென்றும் காணப்படுகிறது. தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளுக்குகசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத்தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். குளிர்ச்சி தரும் கசகசாவை உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக