மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
சிறப்புப்பாயிரம்
- மலர்தலை யுலகின் மாயிரு டுமியப் மலர் தலை உலகின் மா இருள் துமியப்
- பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்>
- காண்டல் செல்லாக் கண்போ லீண்டியகாண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய
- பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து
- தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி // 05 //அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
- மயர்வற நந்தி முனிகணத் தளித்தமயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த
- வுயர்சிவ ஞான போத முரைத்தோன்உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்
- பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
- பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்
- பவநனி வன்பகை கடந்த // 10 //பவம் நனி வன் பகை கடந்த
- தவரடி புனைந்த தலைமை யோனே.தவர் அடி புனைந்த தலைமையோன் ஏ.
சிறப்புப்பாயிரம் முடிந்தது
மங்கலவாழ்த்து
- கல்லா னிழன்மலை கல் ஆல் நிழல் மலைவு
- வில்லா ரருளிய இல்லார் அருளிய
- பொல்லா ரிணைமலர் பொல்லார் இணை மலர்
- நல்லார் புனைவரே.நல்லார் புனைவர் ஏ.
மங்கலவாழ்த்து முடிந்தது
அவையடக்கம்
- தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார்
- ரெம்மை யுடைமை யெமையிகழார்- தம்மைஎம்மை உடைமை எமை இகழார் - தம்மை
- யுணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மின்
- புணராமை கேளாம் புறன்.புணராமை கேளாம் புறன்.
அவையடக்கம் முடிந்தது
அ. பொதுவதிகாரம்[
1. பிரமாணவியல்
சூத்திரம்: 01 (அவனவள்)
- அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின்
- றோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாதோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
- மந்த மாதி யென்மனார் புலவர். அந்தம் ஆதி என்மனார் புலவர்.
சூத்திரம்: 02 (அவையே)
- அவையே தானே யாயிரு வினையிற் அவையே தானே ஆ இரு வினையின்
- போக்கு வரவு புரிய வாணையிபோக்கு வரவு புரிய ஆணையின்
- னீக்க மின்றி நிற்கு மன்றே. (02)நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.
சூத்திரம்: 03 (உளதிலது)
- உளதில தென்றலி னெனதுட லென்றலிஉளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
- னைம்புல னொடுக்க மறிதலின் கண்படிஐம் புலன் ஒடுக்கம் அறிதலின் கண் படின்
- னுண்டிவினை யின்மையி னுணர்த்த வுணர்தலின்உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
- மாயா வியந்திர தநுவினு ளான்மா. (03)மாயா இயந்திர தநுவினுள் ஆன்மா.
2. இலக்கணவியல்
சூத்திரம்: 04 (அந்தக்கரண)
- அந்தக் கரண மவற்றினொன் றன்றவை அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
- சந்தித்த மான்மாச் சகசமலத் துணராசந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
- தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே. (04)அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்து ஏ.
சூத்திரம்: 05 (விளம்பிய)
- விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக் விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
- களந்தறிந் தறியா வாங்கவை போலத்அளந்து அறிந்து அறியா ஆங்கு அவை போலத்
- தாந்த முணர்வின் றமியருள்தாம் தம் உணர்வின் தமியர் உள்
- காந்தங் கண்ட பசாசத் தவையே. (05)காந்தம் கண்ட பசாசத்து அவை ஏ.
சூத்திரம்:06 (உணருரு)
- உணருரு வசத்தெனி னுணரா தின்மையிஉணர் உரு அசத்து எனின் உணராது இன்மையின்
- னிருதிற னல்லது சிவசத் தாமெனஇரு திறன் அல்லது சிவ சத்து ஆம் என
- விரண்டு வகையி னிசைக்குமன் னுலகே. (06)இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.
ஆ. உண்மையதிகாரம
3. சாதனவியல்
சூத்திரம்:07 (யாவையுஞ்)
- யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராகலிற்
- சத்தே யறியா தசத்தில தறியா
- திருதிற னறிவுள திரண்டலா வான்மா. (07)
சூத்திரம்:08 (ஐம்புல)
- ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
- தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
- டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே. (08)
சூத்திரம்:09 (ஊனக்கண்)
- ஊனக்கண் பாச முணராப் பதியை
- ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
- யுராத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவத்
- தண்ணிழலாம் பதிவிதி யெண்ணுமஞ் செழுத்தே. (09)
4.பயனியல்
சூத்திரம்:10 (அவனே)
- அவனே தானே யாகிய வந்நெறி
- யேக னாகி யிறைபணி நிற்க
- மலமாயை தன்னொடு வல்வினை யின்றே. (10)
சூத்திரம்:11 (காணுங்)
- காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
- காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி
- னயரா வன்பி னரன்கழல் செலுமே. (11)
சூத்திரம்:12 (செம்மலர்)
- செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
- வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
- மாலற நேய மலிந்தவர் வேடமு
- மாலயந் தானு மரனெனத் தொழுமே. (12)
சிறப்புப் பாயிரம்
- எந்தை சனற்குமர னேத்தித் தொழவியல்பாய்
- நந்தி யுரைத்தருளு ஞானநூல்- சிந்தைசெய்து
- தானுரைத்தான் மெய்கண்டான் றாரணியோர் தாமுணர
- வேதுதிருட் டாந்தத்தா லின்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக