இயேசுவைக் கொன்ற யூத தேசியம்
கிருத்துவ சமயத்தின்நம்பிக்கைகளைக் குறித்தேநாம் இங்கே ஒவ்வொன்றாய்கண்டு வந்துகொண்டிருக்கின்றோம்.அந்த வரிசையில் நாம்இப்பொழுது இயேசு கிருத்துபலியானதைப் பற்றியே வேண்டியிருக்கின்றது.
மக்களின் பாவத்திற்காகஇயேசு மனிதனாக வந்துபலியானார் என்பதேஇன்றைக்கு கிருத்துவசமயம் கொண்டிருக்கும்நம்பிக்கையாகும். மனிதர்களின் பாவத்திற்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார்என்றே இன்று பெரிதும் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. அந்தநம்பிக்கையையும் போதனையையும் பற்றி நாம் பின்னர் மெதுவாய் காணலாம்,ஆனால் இப்போதைக்கு நாம் முக்கியமாக காண வேண்டிய விடயம் என்னவென்றால்'இயேசு தன்னைத்தானே பலியாகத் தருவதற்காகத் தான் மனிதனாக வந்தார் என்கின்றஅந்த விடயத்தை, இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் யார் யார் அறிந்திருந்தார்கள்'என்பதே ஆகும்.
இயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதை இயேசுவின் சீடர்கள்அறிந்திருந்தார்களா?
இல்லை. இயேசு மரணிப்பார் என்பதை அவர்கள் சிறிதும் கூட எண்ணியிருக்கவில்லை. 'நான் எருசலேமில் சித்திரவதை செய்யப்பட்டு மரணிப்பேன்' என்று இயேசு அவர்களிடம்முன்கூட்டியே கூறிய பொழுது, அவரை தனியே அழைத்து 'அப்படி எல்லாம் நடக்காதுஆண்டவரே!' என்று பேதுரு கூறியது இதனை மெய்ப்பிக்கின்றது. இயேசு தங்களுடையயூத இராஜ்யத்தை மீட்டுக் கொடுத்து அதற்கு அரசராவார் என்றும் தாங்கள் அவருடையமந்திரிகளாக இருப்போம் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவேஇயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது அவருடைய சீடர்களுக்குத்தெரியாது.
இயேசுவின் சீடர்களுக்கே தெரியாது என்ற பொழுது இயேசு பலியாவதற்காகத் தான்வந்திருக்கின்றார் என்பது வேறு யாருக்குத் தெரிந்திருக்க கூடும்? எவருக்கும்தெரிந்திருக்காது.
இயேசு ஒருவருக்கு மட்டுமே தான் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது,அதாவது தன்னை கொலை செய்வார்கள் என்பது தெரியும். இயேசுவின் மரணத்திற்குபின்னர், பவுல் அவர்கள் எழுதிய நடபடிகளில் தான் இயேசு பலியானார் என்ற விடயம்பொதுவாக வெளி வருகின்றது. அதனைப் பற்றி நாம் விரிவாக வேறு பதிவுகளில்காணலாம். இப்பொழுது நாம் காண வேண்டியது இயேசு உயிருடன் இருந்தகாலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே தான். எனவே, இயேசு உயிருடன்இருந்த காலத்தில் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதனை அவரைத் தவிரவேறு எவரும் அறிந்திராத காரணத்தினால், 'இயேசு பலியானார்' என்று நாம் இன்றுஅறிந்திருக்கும் விடயத்தினை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு, அன்று மக்கள்அறிந்திருந்த விடயமான 'இயேசு கொலை செய்யப்பட்டார்' என்பதனையே நாம்கருத்தில் இப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நாம்பார்க்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியானது புறந்தள்ள முடியாத வண்ணம்முக்கியமானதொன்றாக நின்று கொண்டிருக்கின்றது. 'இயேசு எதற்காக கொலைசெய்யப்பட்டார்?' என்ற கேள்விதான் அது.
'இயேசு எதற்காக கொலை செய்யப்பட்டார்?' என்கின்ற கேள்விக்கு வருகின்ற நேரடியானவிடை என்னவென்றால், 'இயேசு தன்னைதானே இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டமையினால் கோபப்பட்ட யூத சமய மதகுருக்கள், இயேசு இறைவனை நிந்தித்துவிட்டார் ஆகையால் தங்களுடைய சட்டத்தின்படி அவர் மரணமடைய வேண்டும் என்றுகூறி அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு ரோமர்களை நிர்பந்தித்தனர்' என்றேதான் வருகின்றது. விடையினைத் தான் நாம் மேலும் கவனமாக காணவேண்டியிருக்கின்றது.
'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்று கூறியதாலா யூதர்கள் இயேசுவைகொல்ல எத்தனித்தனர்?' என்ற கேள்விக்கு இயேசுவின் வரலாற்றினை அறிந்த எவரும்கூறக்கூடிய பதில் 'இல்லை' என்பதாகத் தான் இருக்கும். ஆம்!!! இயேசுவிற்கு மரணதண்டனை விதிப்பதற்கு அவர்கள் 'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்றுகூறி இறை நிந்தனை செய்து விட்டான்' என்றே காரணம் கூறினாலும், உண்மை அதுகிடையாது. அது வெறும் ஒரு சாக்குப்போக்கு. அவ்வளவே. இதனை கிருத்துவர்கள்இயேசுவின் மீது நடந்த அந்த விசாரணையைப் பற்றிப் படித்தாலே அறிந்து கொள்வர்.
இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இயேசுவை கைதுசெய்கின்றனர். ஆனால் தவறேதும் செய்யாத அவருக்கு சட்டப்படி மரண தண்டனைவழங்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றார்கள். அவருக்கு மரண தண்டனைவழங்கக்கூடிய வண்ணம் இருக்கின்ற சாட்சிகளை அவர்கள் தேடுகின்றனர்.அவ்வேளையில், 'தான் இறைவனின் மகன்' என்று இயேசு என்றோ கூறியிருந்தது அங்கேநினைவில் வர, அதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் அவருக்கு மரண தண்டனைவழங்குகின்றனர். அதாவது, இயேசு தன்னை இறைவனின் மகன் என்று கூறியதால்அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை...மாறாக, அவருக்கு மரண தண்டனைவழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அந்த கூற்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த முழு விசாரணையுமே 'இயேசுவை எப்படியாவது கொன்று விடவேண்டும்' என்ற குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது.இதனை அநேகமாக அனைத்து கிருத்துவர்களும் அறிவர்.
ஏன் 'இயேசுவை கொல்ல வேண்டும்' என்று யூதர்கள் அவ்வளவு முயன்றார்கள்? அதுவும்யூத இனத்தின் மீட்பராக மக்கள் பலரும் அவரை எண்ணிக் கொண்டிருந்த பொழுது(இன்றும் கூட பல கிருத்துவர்கள் அவரை அவ்வாறு தான் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்) யூத மக்களே எதற்காக அவரைக் கொலை செய்ய முயற்சிக்கவேண்டும்?
இந்த கேள்விகளுக்கான விடையினை நாம் காண வேண்டும்
யூதர்கள் எதற்காக இயேசுவை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றே நாம் கண்டுவந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாம் ஒரு நிகழ்வினைக் காணவேண்டியிருக்கின்றது.
முதல் நிகழ்வு: இயேசுவைகொல்ல வேண்டும் என்றுதலைமை ஆசாரியன் காய்பாமுடிவெடுத்தல்.
'இயேசுவை கொலை செய்யவேண்டும், அது தான்யூதர்களின் தேசத்திற்கும் யூதர்களின் கோவிலுக்கும் நல்லதொன்றாக இருக்கும். மாறாக அவ்வாறுசெய்யாது போனால் யூதர்கள் சிதறுண்டு போய் விடுவார்கள், ரோமர்கள் அனைத்தையும்எடுத்துக் கொள்வார்கள். எனவே ஒரு தேசத்திற்காக ஒரு மனிதனை கொலை செய்வது என்பதுதவறில்லை' என்று யூதர்களின் தலைமை ஆசாரியனாக இருந்த காய்பா என்பவன் கூறியகருத்தின் அடிப்படையிலேயே தான் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவினை யூதமதகுருக்கள் அனைவரும் ஏற்கின்றனர். இதனை நாம் விவிலியத்தில் இருந்து (யோவான் 11) அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் இந்த கூற்று சற்று விசித்திரமானதாக அல்லவா இருக்கின்றது. ஏனென்றால், அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவித்து தங்களது இசுரவேல் இராஜ்யத்தை மீட்டுத்தருவதற்காக ஒரு மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த 'மீட்பராகவே தான்' இயேசுவை இன்று கிருத்துவ சமயமானது சித்தரித்துக் கொண்டிருக்கின்றது. அந்தகோட்பாட்டினை அடிப்படையாக வைத்தே தான் இன்றைக்கு ஒட்டுமொத்த கிருத்துவ சமயமேஇசுரவேல் நாட்டினை கண்மூடித்தனமாக ஆதரித்து கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், அதுவேற கதை...அதனை பின்னர் காணலாம். இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால்'யூத தேசம் எதிர்பார்த்திருந்த மீட்பராக இன்றைக்கு கிருத்துவ சமயமானது இயேசுவைசித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இயேசுவை உயிரோடு விட்டால் யூத தேசமே சிதைந்துவிடும் என்று கூறியே இயேசுவை கொலை செய்வதற்காக அன்றைக்கு யூதர்கள் திட்டமிட்டுஇருக்கின்றனர்' - இந்த முரண்பாட்டினையே தான் நாம் இப்பொழுது காண வேண்டும்.
இயேசுதான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் என்றால், எதற்காக யூதர்களே அவரைக் கொல்லதிட்டமிட வேண்டும்?
இயேசு வாழ்ந்திருந்த அந்த காலக்கட்டத்தில் யூதர்கள் ரோமர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்துகொண்டிருந்தனர். யூத தேசமானது ரோமப் பேரரசின் கீழ் இயங்கி வந்து கொண்டிருந்தது. அந்நிலையில் யூதர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், இறைவன் அவர்களைஅடிமைத்தளையில் இருந்து மீட்டு அவர்களது அந்த இராஜ்யத்தை அவர்களுக்கே தருவார் - அதற்காக ஒரு மீட்பர் வருவார் என்பதாகவே இருந்து வந்தது. ஒரு அரசியல் தலைவரை, ரோமர்களிடமிருந்து தங்களது தேசத்தை விடுவிக்கும் ஒரு அரசரை அவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தனர். தங்களது சமய நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும்பூர்த்தி செய்யுமாறும், தங்களது நம்பிக்கைகளை மெய்ப்பிக்குமாறும் ஒருவர் வருவார் என்றேஅவர்கள் காத்திருந்தனர்.
சிக்கல் அங்கு தான் இருந்தது. இயேசு அவர்கள் எதிர்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.
- யூதர்கள் ஓய்வு நாளான சபாத்தை அனுசரிக்க வேண்டும் என்றனர் - இயேசு ஓய்வு நாள்என்று எதுவும் இல்லை என்றார்.
- யூதர்கள் விரதமிருப்பது முக்கியம் என்றனர் - இயேசு அதையும் முக்கியமில்லை என்றுகூறினார்.
- இறைவன் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி விருத்தசேதனம் அவசியம் என்றே யூதர்கள்கூறினர் - இயேசு விருத்தசேதனத்தை தேவையற்றது என்றார் (இன்றைக்கு கிருத்துவர்கள்விருத்தசேதனம் செய்வது இல்லை)
- யூதர்கள் சமாரியர்களை எதிரிகளாக கருதினர் - இயேசு சமாரியர்களுடன் சமமாகசகோதரராக பழகினார். அவ்வாறே அவர் மற்றவர்களையும் பழகச் சொன்னார்.
- எருசலேமில் இருக்கின்ற கோவிலில் தான் இறைவன் வீற்று இருக்கின்றார் என்று யூதர்கள்கூறினர் - இயேசு அதனை மறுத்தார். இறைவன் மனிதர்களின் மனதில் இருக்கின்றார்என்றே அவர் கூறினார்.
- மோசேவுக்கு கடவுள் தந்த கட்டளைகள் என்று யூதர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தகட்டளைகளையும் அவர் மறுத்தார்.
- அனைத்திற்கும் மேலாக, யூதர்கள் தாங்கள் மட்டுமே தான் இறைவனால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் தங்களின் இனம் மட்டுமே தான் சிறந்த இனம் என்றும்கருதி வந்தனர் - இயேசு அதனை முற்றிலுமாக நிராகரித்தார். இறைவன் மக்கள்அனைவரையும் சமமாகக் காண்கின்றார் என்றும் இறைவனின் பார்வையில் பல்வேறுதேசங்களோ அல்லது பல்வேறு இனங்களோ கிடையாது, அனைத்தும் ஒன்றே என்றே அவர்கூறினார்.
இவை தான் சிக்கலுக்கு வழிவகுத்தன. தாங்கள் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ, இயேசு அவ்வாறு இருந்திருக்கவில்லை. முற்றிலும் மாறாக இருந்தார். ஆனாலும் யூத மக்களுள்சிலர் இயேசு செய்த அதிசயங்கள்/போதனைகளின் காரணமாக அவர்தான் தங்களின் மீட்பராகஇருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டிருந்தனர். அது தான் யூத சமய மதகுருக்களுக்குசிக்கலாக இருந்தது.
அவர்களின் பார்வையின்படி இயேசு அவர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் அல்ல. அவர் வேறு யாரோஒருவர்...ஏதோ சில நூல்களைப் படித்துவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பவர்...அவர்அதிசயம் பண்ணுகின்றார் என்று மக்கள் பலர் கூறுகின்றனர் - ஏதோ வித்தைகளின் மூலமாகஅவர் அவ்வாறு செய்யக் கூடுமாயிருக்கும் அல்லது அவை தற்செயலான நிகழ்வுகளாக இருக்கும், மக்கள் அதனை அறியாமல் அவர் அதிசயங்கள் செய்கின்றார் என்று கூறக் கூடுமாயிருக்கும். ஆனால் நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் இல்லை. நம்முடையநம்பிக்கைகளுக்கும் அவருடைய கூற்றுகளுக்கும் முரண்பாடுகள் அநேகம் இருக்கின்றன. நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்க்கும் மீட்பர் அல்ல - இது தான் பெரும்பாலான யூத சமய மதகுருக்களின் நம்பிக்கையாக இருந்தது.
அதனால் தான் அவர்கள் மக்களை இயேசுவிடமிருந்து பிரிப்பதற்கும், இயேசுவின் கூற்றுகள்தவறானவை என்று நிரூபணம் செய்வதற்கும், இயேசுவை சிக்கலில் சிக்க வைப்பதற்கும் அநேகமுயற்சிகள் எடுக்கின்றனர். அந்த முயற்சிகளை நம்மால் விவிலியத்தில் இருந்தே அறிந்து கொள்ளமுடிகின்றது. அவர்களின் நோக்கம் ஒன்று தான் - இயேசு யூதர்களின் மீட்பர் அல்ல...இது நிச்சயம். எனவே மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்று பிரிந்து விடாதவாறு நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு தான் அவர்களது குறிக்கோள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்றுஅவர்கள் தொடக்கத்தில் எண்ணியிருக்கவில்லை. அவர் மீட்பர் அல்ல என்றும் அவருடையகூற்றுகள் தவறானவை என்றும் மக்களை நம்ப வைத்து, மக்களை அவரிடமிருந்து விலக வைக்கவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. அவர் செய்த அதிசயங்களைக் குறித்தசெய்திகளை எல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறுஇருக்கையில் திடீரென்று அவரைக் கொலை செய்வது தான் யூத இனத்தையும் யூத மக்களையும்காப்பாற்றக் கூடிய ஒரே வழி என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். அவர்களது இந்த திடீர்முடிவிற்கான காரணத்தை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அந்த முடிவினைஎடுத்த சுழலினை நாம் காண வேண்டியிருக்கின்றது.
இயேசு லாசருவை மரணத்தில் இருந்து உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னரே தான் யூத சமயமதகுருக்கள் அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி அதில் 'வேறு வழியில்லை...இயேசுவைகொன்றாகத் தான் வேண்டியிருக்கின்றது' என்று முடிவெடுக்கின்றார்கள். இங்கே ஒரு கேள்விகேள்வி எழுகின்றது...'எதற்காக இயேசு லாசருவை உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னர் அவர்கள்இம்முடிவினை எடுக்கின்றனர்? இயேசு இதற்கு முன்பாக இறந்து போயிருந்த ஒரு சிறுமியைஉயிர்த்தெழ செய்தாரே, அப்பொழுது அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யாமல்எதற்காக லாசருவை உயிர்த்தெழ செய்த பொழுது அம்முடிவினை எடுக்கின்றனர்?
இதற்கு விடையாய் நாம் கண்டோம் என்றால் 'இயேசு அந்த சிறுமியை உயிர்த்தெழ வைத்தார்என்பதை பெருவாரியான யூத மதகுருக்கள் நம்பியிருக்கவில்லை' என்றே தான் வருகின்றது. 'நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது மயங்கிஇருந்திருக்கலாம், அதனை அறியாத மக்கள் அவசரப்பட்டு அவள் இறந்து விட்டாள் என்று முடிவுசெய்திருக்கலாம். பின்னர் இயேசு அங்கே சென்றிருந்த பொழுது அவள் விழித்தெழுந்துஇருக்கலாம் - அதனை அறியாது அம்மக்கள் இயேசு சிறுமியை மரணத்திலிருந்து உயிர்த்தெழவைத்து விட்டார் என்று கூறி இருப்பர்' என்பதே தான் அவர்களது எண்ணமாக இருந்தது. ஆகையால் அதனை அவர்கள் ஒரு பெரிய நிகழ்வாக கருதியிருக்கவில்லை.
ஆனால் லாசருவின் கதையோ முற்றிலும் வேறானது. அவன் இறந்து நான்கு நாட்களானதற்குப் பின்னர் தான் அவனை அவனது கல்லறையிலிருந்து உயிருடன் இயேசு எழுப்புகின்றார். இறந்து போனவன் என்று ஊரால் அடக்கம் செய்யப்பட்டவன், நான்கு நாட்களுக்கு பின்னர் கல்லறையிலிருந்து உயிருடன் வருவதை தற்செயலான ஒரு செயல் என்று எவராலும் கூற முடியாது. அத்தகைய அதிசயங்கள் மக்களின் கவனத்தினை நிச்சயம் ஈர்க்கும் என்பதனை அந்த மதகுருக்கள்அறிந்திருந்தனர். எனவே தான் இயேசு எப்பொழுது லாசருவை உயிர்த்தெழ செய்தநிகழ்வு அவர்களது கவனத்திற்கு வந்ததோ, அப்பொழுது அவர்கள் உடனடியாககூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவுசெய்கின்றார்கள்.
ஆனால் இங்கே முக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால், இறந்து போன லாசருவை தான்உயிருடன் எழுப்பினால், நிச்சயமாக யூத மதகுருக்கள் தன்னை கொலை செய்வதற்கு வழி தேட ஆரம்பிப்பார்கள் என்று இயேசுவும் அறிந்துதான் இருந்தார். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நான்கு நாட்கள் கழித்து லாசருவை உயிருடன் எழுப்புகின்றார். லாசரு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்று முன்னமே அறிந்திருந்தும் உடனடியாக அவனைக் காண செல்லாமல், அவன் இறந்ததற்கு பின்னரே அவனைக் காண்பதற்காக அவர் புறப்படுகின்றார். மேலும் அவன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்பதனை அறிந்த பொழுதே அவர் தன்னுடைய சீடர்களிடம் 'அவன் இந்த நோயினால் மரணம் அடைய மாட்டான். தேவனின் குமாரனை மகிமைப்படுவதற்கான இறைவனின் சித்தம் இது' என்றே அவர் கூறியும் இருக்கின்றார். மேலும் அவனை அவ்வாறு உயிர்த்தெழச் செய்தால் தான் அவரை மக்கள் நம்புவார்கள் என்றுமே அவர் கூறி இருக்கின்றார்.
அவர் எதிர்பார்த்தபடியே, அவர் லாசருவை உயிர்த்தெழச் செய்த நிகழ்வு யூத மதகுருக்களின் கவனத்திற்கு எப்பொழுது வந்ததோ, அப்பொழுது அவர்கள் உடனடியாக கூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்கின்றார்கள்
'இயேசு அதிசயங்களை செய்கின்றார். அது உறுதி. எனவே மக்கள் அவரைப் பின்பற்றப் போவதும் உறுதி. ஆனால் மக்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்றால் நம்முடைய தேசம் சிதறுண்டு போகும், ஏனென்றால் அவர் நம்முடைய நம்பிக்கைகளுக்கு மாறானதாக இருக்கக்கூடிய விடயங்களையே போதிக்கின்றார். யூதர்களுக்கும் மற்ற மக்களுக்கும் வேறுபாடுகள் கிடையாது என்றே அவர் கூறுகின்றார். இது யூதர்கள் தனித்தன்மையானவர்கள் என்ற கூற்றினை உடைத்துவிடும். இறைவனின் பார்வைக்கு பல்வேறு தேசங்கள் என்பது கிடையாது என்றே அவர் கூறுவதை நம் மக்கள் நம்பினர் என்றால், யூத தேசம் கடவுளின் பிள்ளைகளின் தேசம் என்ற நம்முடைய கூற்றினை அவர்கள் மறுத்து விடுவர். நமக்குள்ளேயே இப்படி வேறுபாடுகள் தோன்றினால் எளிதாக ரோமர்கள் நம்மளை முற்றிலுமாக வீழ்த்தி விடுவர். எனவே நம்முடைய தேசத்தின் நலனுக்காக இயேசு கொலை செய்யப்பட வேண்டும்.' என்று எண்ணியே இயேசுவை கொலை செய்வதற்கு அவர்கள் முடிவு செய்கின்றனர்.
அதாவது, தங்களது தேசம் நன்றாக இருக்க வேண்டும், தேச மக்கள் சிதறி விடக்கூடாது, யூதர்கள் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்கின்ற நம்பிக்கை மறைந்து விடக்கூடாது என்கின்ற அந்த ஒரு காரணத்திற்காகவே தான் இயேசு கொலை செய்யப்படுகின்றார். மக்கள் அனைவரும் சமம், தேசங்கள் என்று மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பிரிவினைகளை இறைவன் மதிப்பதில்லை என்கின்ற இயேசுவின் அந்த கொள்கைகளுக்காகவே அவர் கொலை செய்யப்படுகின்றார்.
இதனையே தான் நாம் இந்த முதல் நிகழ்வின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். சரி இப்பொழுது நாம் இரண்டாவது நிகழ்வினைக் காணலாம்.
இயேசுவை யூதர்கள் கொன்றதற்கானகாரணம் யூத தேசியம் தான் என்றே நாம் கொண்டிருக்கின்றோம். நாம் அவ்வாறுகூறுவதற்கு சான்றாக, இப்பொழுதுஇரண்டாவது நிகழ்வினை நாம் காணவேண்டியிருக்கின்றது.
இரண்டாவது நிகழ்வு : இயேசுவைகிரேக்கர்கள் சந்திக்க விரும்புதல்
யூதர்களின் பஸ்கா பண்டிகையின்பொழுது இயேசு மீண்டும் எருசலேம்நகருக்குச் செல்லுகின்றார். அது பண்டிகைகாலம் என்பதினால் எருசலேம் நகரில் யூதமக்களுடன் பல்வேறு இன மக்களும்இருக்கின்றனர். அங்கே அவர் மக்களுக்குபோதனைகள் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்பொழுது அங்கிருந்த கிரேக்க மக்களுள்சிலர் இயேசுவைத் தாங்கள் சந்திக்கவிரும்புவதாக பிலிப்பிடம் கூறுகின்றனர். இங்கே தான் நாம் பிலிப்பின் செயலினைக்கவனிக்க வேண்டியிருக்கின்றது.
இயேசுவை தாங்கள் சந்திக்க வேண்டும்என்று கிரேக்கர்கள் தன்னிடம் கேட்டதற்குஒன்று 'சரி' என்று சொல்லிவிட்டுஅவர்களை இயேசுவிடம் பிலிப்புஅழைத்துச் சென்றிருக்கலாம், அல்லது 'இல்லை' என்று மறுத்திருக்கலாம். ஆனால் பிலிப்பின்செயலோ வேறாக இருக்கின்றது. பிலிப்பு முதலில் தயங்குகிறான் - பின்னர் கிரேக்கர்கள்இயேசுவை சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக அந்திரேயுவிடம் அவன் கூறுகின்றான். பின்னர்அவர்கள் இருவருமாய் சென்று இயேசுவிடம் அந்த கிரேக்க மக்களைப் பற்றி கூறுகின்றனர். மேலும், கிரேக்கர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக தன்னுடைய சீடர்களிடமிருந்துகேள்விப்பட்ட இயேசுவின் செயல்களும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. அவர்கலக்கமடைகின்றார், பின்பு தன்னுடைய மரணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பிக்கின்றார். தான்மரணமடைவதற்கான தருணம் நெருங்குவதனை அறிந்தவராய், மனிதர்கள் தங்களது தனிப்பட்டவாழ்வினை பெரிதாக எண்ணக் கூடாது என்றும் அதனை இழப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றுமே அவர் கூறுகின்றார். அதாவது கிரேக்கர்கள் தன்னைச் சந்திப்பதற்குவிரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கு முன்பு இயல்பாக இருக்கின்ற அவர், அந்தவிடயத்தினை அறிந்து கொண்டதற்குப் பின்னர் கலக்கமடைகின்றார். ஏன் அவர் அவ்வாறுகலக்கமடைய வேண்டும்? ஏன் அவர் அவ்வாறு மாற வேண்டும்?
முதலில் சீடர்கள் தயங்குகின்றனர். கிரேக்கர்கள் இயேசுவை சந்திப்பதில் ஏன் அந்த சீடர்களுக்குஅவ்வளவு தயக்கம்? பின்னர் இயேசுவே கலங்குகிறார்...ஏன் அவர் அவ்வாறு மாறுகின்றார்?
இந்த கேள்விகளுக்கு விடை எளிதானதொன்று தான். யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள்மட்டுமே தான் இறைவனுக்கு உரியவர்கள். மற்ற இனத்தவர்களை அவர்கள் புற ஜாதியினராக - தகுதி குறைந்தவர்களாக கருதி வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இறைவனிடம் இருந்துவரும் தீர்க்கத்தரிசிகள் யாவரும் யூதர்களுக்காக மட்டுமே வருபவர்கள். மற்ற இன மக்கள்இறைவனை அறியாதவர்கள் எனவே அவர்களுக்கு இறைவன் உதவ மாட்டார் - இதுவே தான்யூதர்கள் கொண்டிருந்த நம்பிக்கை.
இந்நிலையில் தான் நாம் இயேசுவை சந்திக்க வேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பிய அந்தசூழலினைக் காண வேண்டியிருக்கின்றது. லாசருவை உயிர்த்தெழ செய்ததால் இயேசுவின் புகழ்மக்களிடம் அதிகமாக பரவியிருக்கின்றது. தங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டுதங்களுடைய இராஜ்யத்தை மீண்டும் வென்று தருவதற்கு வந்திருக்கும் மீட்பர் அவர் தான்என்கின்ற நம்பிக்கையும் யூத மக்களிடம் பரவலாக பரவியிருக்கின்றது. எனவே ரோமர்களின்பிடியில் இருந்து அவர்களை மீட்டு அவர்களது இராஜ்யத்தை தரப்போகின்ற அந்த 'மீட்பரை'க்காணவும் அவர் கூறுவதைக் கேட்கவும் அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
ஆனால் இங்கே ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றது. யூத இன மீட்பர் யூத மக்களுக்கு மட்டுமேஉரியவர். யூதர்களின் நம்பிக்கை வரலாறுதோறும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது. ஏனென்றால் அவர்களது கூற்றின்படி அவர்கள் மட்டுமே தான் இறைவனை அறிந்திருக்கின்றார்கள்- மற்ற இன மக்கள் எல்லாம் இறைவனை அறியாமல் சிலை வழிபாடு செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசு யூத மக்களால் புற ஜாதியினர் என்றுகருதப்படுகின்ற கிரேக்கர்களையும் யூதர்களுக்கு சமமாக மதித்து அவர்களுக்கும் போதித்தார்என்றால், 'என்ன இவர்...மற்ற இன மக்களுக்கும் போதனை செய்கின்றாரே...அவர்களையும்சமமாய் நடத்துகின்றாரே...இறைவனை அறியாத அவர்களுடன் இவர் தொடர்பு கொள்கின்றார்என்றால் இவர் உண்மையிலேயே நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் தானா? இல்லையேல்நம்முடைய மதகுருக்கள் கூறுவது போல இவர் இறைவனுக்கும் யூதர்களுக்கும் விரோதமானவரா?' என்ற எண்ணம் நிச்சயமாய் அங்கிருந்த யூத மக்களுக்குள் எழத்தான் செய்யும். யூதர்களும் மற்றமக்களும் சமமே என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காகவே இயேசுவை அந்த மக்கள்வெறுக்கவும் வாய்ப்பிருக்கத் தான் செய்கின்றது.
இயேசுவின் சீடர்கள் அதனை அறிந்து தான் இருந்தனர். அதனாலேயே தான் அவர்கள்இயேசுவிடம் கிரேக்க மக்களின் அந்த விருப்பத்தைக் கொண்டு செல்வதற்கு யோசிக்கின்றனர். இருந்தும், அவர்கள் முடிவில் இயேசுவிடம் கிரேக்கர்களின் அந்த விருப்பத்தைக் கூறத்தான்செய்கின்றனர்.
இயேசுவின் அதனை அறிந்தே தான் இருந்தார். கிரேக்கர்களுக்கும் போதித்தால் யூத மக்கள்தன்னை வெறுக்கக் கூடும் என்பதனை அவர் தெளிவாக அறிந்திருந்தார். மேலும் அதனைஅடிப்படையாக வைத்தே யூத மதகுருக்கள் மக்களை தண்னிடமிருந்து பிரிப்பர் என்பதனையும்அவர் அறிந்திருந்தார். ஏற்கனவே 'ரோமர்களிடம் பணிபுரிகின்ற வரி வசூலிக்கும் யூதர்களுடன்நெருங்கிப் பழகுகின்றார்' என்று அவர் மீது யூத சமய மதகுருக்கள் குற்றம் சாட்டியிருந்தநிலையில், கிரேக்கர்களுக்கும் இயேசு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கும் போதனை செய்தார்என்றால் நிச்சயமாக அதனை வைத்தே 'இவன் நம்மை மீட்க வந்த மீட்பர் அல்ல. இவன் யூத இனதுரோகி. ஏதோ தீய சக்தியின் ஆற்றலினால் இவன் அதிசயம் செய்கின்றான். இவன் யூதர்களைப்பிரிக்கின்றான்' என்று கூறி மக்களை தனக்கு எதிராக அவர்கள் திருப்புவர் என்பதனை அவர்அறிந்திருந்தார்.
எனவே தான் அந்த நேரத்தில் இயேசு கலக்கமடைந்தார். தன்னை கொலை செய்வதற்கு யூதமதகுருக்கள் ஆயுத்தமாகி விட்டனர் என்பதனை அவர் அறிந்திருந்தார். லாசருவைமரணத்திலிருந்து அவர் எழுப்பிய பொழுதே அவர் அதனை அறிந்திருந்தார். இப்பொழுதோ, கிரேக்கர்களுக்கும் சேர்த்து தான் போதனை செய்தால், அதனைக் காரணமாக வைத்தே மக்களையூத மதகுருக்கள் தம்மிடமிருந்து பிரித்து விடுவர் என்பதனையும் அவர்கள் அவ்வாறு பிரித்துமக்களை குழப்பி விட்டால் தன்னைக் கொல்வது அவர்களுக்கு மேலும் எளிதாகி விடும்என்பதனையும் அவர் அறிந்திருந்தார். தான் மரணமடைய வேண்டிய தருணம் அருகில் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். ஏனென்றால் நிச்சயமாக கிரேக்கர்களை அவரால் புறக்கணிக்கமுடியாது - மக்கள் அனைவரும் சமமே, இறைவனின் முன்னே பல்வேறு தேசங்கள் என்றபிரிவினைகள் எதுவும் கிடையாது என்கின்ற அவரது போதனைகளுக்கு ஏற்ப அவரால் நிச்சயம்கிரேக்கர்களைப் புறக்கணிக்க முடியாது. யூதர்கள் நம்பியது போல அவர் யூதர்களின் மீட்பராகவரவில்லை மாறாக உலக மீட்பராகவே வந்திருந்தார். எனவே கிரேக்கர்களை அவரால்புறக்கணிக்க முடியாது. கிரேக்கர்களை அவர் புறக்கணிக்காவிட்டால் நிச்சயமாக மக்களைஅவருக்கு எதிராக யூத மதகுருக்கள் திருப்பி விடுவார்கள். அந்நிலையில் தான் மரணமடையவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டதை அவர் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஆகவேதான் ஒரு மனிதனாய் அவர் கலக்கமடைகின்றார். தன்னுடைய மரணத்தைப் பற்றியும்பேசுகின்றார். நிற்க.
இயேசுவை கொலை செய்தது யூத தேசியமே என்றே நாம் இந்த பதிவில் கண்டு வந்துகொண்டிருக்கின்றோம். அதற்கு சான்றாய் இரண்டு நிகழ்வுகளையும் கண்டு இருக்கின்றோம். 'தேச நலனுக்காகவும் தேச மக்களின் ஒற்றுமைக்காகவுமே தான் இயேசுவை கொலை செய்ய யூதசமய மதகுருக்கள் முடிவெடுக்கின்றனர் என்பதனை முதலாம் நிகழ்வில் கண்டோம். அவ்வாறேயூதர்களை மற்ற இனமக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காததால் தான் மரணம் அடையநேரிடும் என்று இயேசு அறிந்து கொண்டதை இரண்டாவது நிகழ்வின் மூலமாக கண்டோம்.
இதன் மூலமாக 'எங்கள் தேசம் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் மக்கள் நன்றாக இருக்கவேண்டும்...மற்ற மக்களும் நாங்களும் ஒன்றல்ல' என்று இருக்கின்ற அந்த தேசியச் சிந்தனையேதான் இயேசுவைக் கொன்றது என்பதனை நாம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் வருத்தகரமாககிருத்துவ மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லை. மக்களைப் பிரித்து வைக்கின்ற அந்ததேசியச் சிந்தனைகளையையே அவர்களும் போற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்தச்சிந்தனையே இயேசுவை கொலை செய்திருந்த போதிலும், அவர்கள் இன்றும் கூட இயேசுவைகொலை செய்த அந்த கொள்கையையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
தேசியம் என்ற கொள்கையினை, அதாவது ஒரு தேசத்தைச் சார்ந்தவர்கள் மற்ற தேசத்தைச்சார்ந்தவர்களை விட உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சமமானவர்கள் அல்ல என்றும் எண்ணிக்கொள்ளுகின்ற தேசியக் கொள்கையினை எந்த கிருத்துவன் ஏற்றுக் கொள்ளுகின்றானோ, அதுஇஸ்ரேலை ஆதரிக்கும் தேசியமாக இருக்கட்டும், அமெரிக்க தேசியமாகட்டும், இந்தியதேசியமாகட்டும், தமிழ் தேசியமாகட்டும், அவன் "பரபாஸை விடுதலை செய்...இயேசுவைதூக்கில் போடு" என்று கோஷமிட்ட யூதனாகவே இருக்கின்றானே ஒழிய இயேசு கூறியகிருத்துவனாக இருக்கவில்லை. இது நிச்சயம். இயேசு கூறிய வழிகளின்படி வாழுகின்றஒருவனால் நிச்சயமாக தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஒருபோதும் காண முடியாது. அவ்வாறு வேறுபாடுகள் காண்பவர்களால் இயேசு கூறிய வழிகளின்படி வாழ முடியாது.
ஏனென்றால் தேசியம் மக்களைப் பிரிக்கின்றது...ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துகிறது.
பயணம் தொடரும்!
"ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு" - தீத்து 3:2 (புனித
பைபிள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக