"கானாங்கெளுத்தி".. அள்ளி அள்ளி தரும் அயிலை மீன்.. சூப்பர் பவர்.. சர்க்கரை நோயாளிகள் அயிலா சாப்பிடல
சென்னை: அன்றைய காலங்களில், மற்ற இறைச்சிகளைவிட, கானாங்கெளுத்தி மீன்களுக்குதான் கிராக்கி அதிகமாம்.. அதனால் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது.. இதற்கெல்லாம் காரணம் இந்த மீனின் சத்துக்கள்தான். கானாங்கெளுத்தியை, அயிலை மீன் என்றும் சிலர் சொல்வார்கள்.. புரோட்டீன் அதிகம் உள்ள மீன் ஆகும்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மிகச்சிறந்த மீன் இது.. எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது..
ஒமேகா: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான நன்மைகளை தருபவையாகும்.. அது இந்த கானாங்கெளுத்தி மீனில் அதிகமாகவே உள்ளது. எனவே, இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தலில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு.. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அயிலை மீன்.. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனச்சோர்விலிருந்து பாதுகாக்கின்றன என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.. ஒமேகா-3 ஃபேட்டி அமிலத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, மக்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். ஒமேகா 3 என்ற சத்துக்கள் வழக்கமாக மீன்களில் இருக்கிறது என்றாலும், இந்த அயிலா மீனில் அளவுக்கு அதிகமாகவே நிறைந்துள்ளது.. Recommended For You "மக்கள் நீதி மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.. நடிகை வினோதினி அறிவிப்பு" மாரடைப்பு: சத்து கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.. அதனால்தான், இந்த மீன்களுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்ற இதய பிரச்சனையின் அபாயத்தையும் குறைக்கிறது.. மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் D இந்த மீனில் நிறைய உள்ளது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மீனை எடுத்துக்கொண்டால், ஆயுள் நீட்டிக்கும் என்கிறார்கள்.. இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் உள்ளது.. அதுமட்டுமல்ல, நல்ல கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன.. புரதச்சத்து அதிகமாக இருப்பதால், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாகும்.
அலர்ஜி: இந்த மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள DHA அல்சைமர் அல்லது பார்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும். சத்துக்கள் பலவிருந்தாலும்கூட, மீன் அலர்ஜி இருப்பவர்கள், இந்த கானாங்கெளுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மீனை பிடித்த அன்றே சமைத்து சாப்பிட்டுவிட வேண்டும்.. பதப்படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.. சத்துக்கள்: இந்த மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருக்கிறது. இது உடல் திசுக்களை பராமரிக்க உதவும், அயிலை மீனில் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. அதனால்தான், தமிழகத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டாலும், கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறதாம்.. எனவே, வாரத்துக்கு 2 முறையாவது, இந்த மீனை அனைவரும் எடுத்துக்கொள்வது, பல்வேறு பிரச்சனைகளை தடுத்து நிறுத்தும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக