திங்கள், 17 அக்டோபர், 2016





அனைவரும் அறிய வேண்டிய அரிய செய்தி!!!

அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன. சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டில் ரிக்கு வில்லிசு என்பவரின் பார்வைக்கு வந்தன. XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 – கி.மு 2000(4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது. இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம் நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம்.
செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-” கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் ”
பொருள் :- கூனயத்தம் என்பது ஊர்ப்பெயர். அவ்வூரில் வாழ்ந்த ‘ ‘சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ‘ என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.
இது 14 தமிழ் சொற்களை கொண்ட நெடுந்தொடர். இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதலாம். இந்த செப்பேட்டின் இடது புறத்தில் குள்ளநரி முகம் கொண்ட ஓக நிலையில் அமர்ந்த சித்தரின் உருவம் உள்ளது.
இதிலிரு ந்து இரண்டு செய்திகள் கிடைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கப்பல் கட்டி கடலை ஆட்சி செய்துள்ளனர் மற்றும் ஓக கலையில் அப்பொழுதே சிறந்து விளங்கியுள்ளனர்.
இத்தகவல் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதிய “சிந்துவெளியில் கிடைத்த முந்துதமிழ்ச் செப்புப் பட்டயம் ” என்னும் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.






வெள்ளி, 10 ஜூன், 2016

முதல் மொழி, பாபேல் கோபுரம் குறித்த சுவாரசியங்கள்

இன்று உலகில் 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. சில எழுத்து வடிவம் பெற்றுள்ளன, சில எழுத்து வடிவம் பெறவில்லை. சில மிகவும் பழமையானவை, மற்றவை பிற்காலத்தில் தோன்றியவை. சில இன்றும் நிலைத்து நிற்கின்றன, சில காணாமல் போய்விட்டன. இந்த மொழிகள் எல்லாம் எப்படி தோன்றின? இத்தனை மொழிகள் தானாக தோன்றுவது என்பது சாத்தியமா? இதற்கு ஆய்வியல் கூறும் பதில் "இல்லை" என்பதே. அப்படி என்றால் இந்த மொழிகள் எப்படித்தான் தோன்றின?

ஏற்கனவே உள்ள ஒரு மொழியில் இருந்து பிரிந்து, காலப்போக்கில் வேறுபட்டு புதிய மொழிகள் உருவாகுகின்றன. உதாரணத்திற்கு மலையாளத்தை எடுத்து கொள்ளலாம். மலையாளம் தமிழில் இருந்து பிரிந்தது என்பது ஆய்வின் முடிவு. சேர நாட்டு மக்களின் தமிழ் காலபோக்கில் உச்சரிப்பில் வேறுபட்டு 'மலையாளம்' என்ற புது மொழியாகவே மாறிவிட்டது. மலையாளம் சிறிது காலங்கள் முன்பே எழுத்து வடிவம் பெற்றது. இது போலதான் உலகில் இருந்த மொழிகள் எல்லாம் வேறுபட்டு ஒவ்வொன்றாக தோன்றின. இப்படி ஒவ்வொரு மொழியின் தோன்றலையும் நோக்கி கொண்டே வந்தால் அவை ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற்று குறைந்து கொண்டே வருகின்றன (உதாரணத்திற்கு: மலையாளம் தமிழின் கீழ் வருவது போல்); இன்று வரை 8 மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் இருந்ததே இன்றிருக்கும் அத்தனை மொழிகளும் காலப்போக்கில் வேறுப்பட்டு பிரிந்து தோன்றியிருக்கலாம். இந்த மொழிகளைத் தான் செம்மொழிகள் என்போம்.

"செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்" - தமிழ் விக்கிபீடியா

இன்று உலகில் உள்ள 8 செம்மொழிகள் - கிரேக்கம், லத்தீன், தமிழ், ஹீப்ரு, அரபி, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம். இந்த எட்டு மொழிகளும் வேறெந்த மொழிகளையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் உலகில் உள்ள மற்ற அத்தனை மொழிகளும் இந்த மொழிகளில் இருந்தே பிரிந்து வந்திருக்கின்றன என்பது ஆய்வு முடிவு. 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் சிறிது சிறிதாக வடிகட்டப்பட்டு இறுதியாக எட்டே மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எது முதன்மையானது? அதனை கண்டுபிடித்துவிட்டால் முதல் மொழி எது என்பது தெரிந்துவிடும். ஆனால் ஒரு உண்மை, இந்த எட்டு மொழிகளும் தொடர்பற்று விளங்குகின்றன. இந்த எட்டு மொழிகளுக்கும் கீழ் குறைப்பது மிகவும் கடினம். இந்த மொழிகளின் எழுத்துக்கள் கொண்ட பழங்கால சுவடுகள், கல்வெட்டுகள், ஓலைசுவடிகள் சில கிடைத்துள்ளன. ஆனால் அவை 5000 வருடங்களுக்கு உட்பட்டவை (அதவாது கி.மு 3000). 5000 வருடங்களுக்கு முன்பு விளங்கிய ஏதாவது சுவடுகள் இந்த மொழிகளுக்கு உள்ளதா என்று பார்த்தால், "ஒன்று கூட இல்லை".

ஆனால் 5000 வருடங்களுக்கு முன்பு முற்றிலும் வேறுப்பட்ட மொழிகளுக்கான தடயங்கள் உள்ளன. ஆதாரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அந்த மொழிகள் இன்று உலகில் இல்லை. முற்றிலுமாக பழக்கத்தில் இருந்து அழிந்துவிட்டன. அவை தான் பண்டைய எகிப்து-சுமேரிய சமவெளி நாகரீக மொழிகள். இந்த மொழிகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை அல்ல. தொடர்புடையதாக விளங்குகின்றன. 

முதல் மொழி
முதல் மொழி

எனவே இந்த மொழிகள் எல்லாம் ஒரே மொழியில் இருந்து பிரிந்து வந்திருக்கக்கூடும். மேலும் சுமேரிய சமவெளி பகுதி ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா ஆகிய 3 கண்டகளுக்கு நடுவில் சரியாக அமைந்துள்ளது. எனவே இங்கிருந்து மூன்று கண்டுகளுக்கும் மொழிகள் பரவியிருக்க வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. 


சுமேரிய சமவெளி பகுதி

இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றால் கிட்டத்தட்ட மொழிகளுக்கான தடயங்களையே காணவில்லை. ஆய்வியலில் கண்டுகொள்ளப்பட்ட கி.மு 3000 என்ற காலமும், சுமேரிய சமவெளி என்ற பகுதியும் இன்றுள்ள அத்தனை மொழிகளுக்கும் விடைகள் தருகின்றன. அது என்ன?

"பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்" - பைபிள் (ஆதியாகமம் 11:1-10)

சிநெயார் சமபூமி - சுமேரிய சமவெளி பகுதிகளுக்குள் உட்பட்டது. பைபிளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது கி.மு 4000 - கி.மு 2000 என்ற கால அளவிற்குள் வருகிறது. 'பாபேல்' என்பது பாபிலோனை (இராக் நாட்டில் உள்ள பழமையான நகரம்) குறிக்கலாம். சுமேரிய சமவெளி பகுதிகளில் ஜிக்கருட் என்ற பழமையான கோபுரங்கள் காணப்படுகின்றன. சுமேரிய சமவெளியில் தான் பாபிலோனும் உள்ளது. பாபிலோனிலும் பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்று காணப்படுகின்றது. அதன் பெயர் எடேமேனாங்கி. இந்த கோபுரத்தை எழுப்பினவர் நேபுகாத்நேச்சார் என்ற மன்னர். பைபிளில் கூறப்பட்டுள்ள பாபேல் கோபுரம் நேபுகாத்நேச்சார் எழுப்பின ஜிக்கருட் கோபுரம் என்று கூறப்படுகிறது. இதற்கு பல தடயங்கள் ஒத்து வருகின்றன.

பாபிலோன் ஜிக்கருட் கட்டமைப்பு
பாபிலோன் ஜிக்கருட் கட்டமைப்பு


நேபுகாத்நேச்சார் மன்னன் வாழ்ந்த காலம் கி.மு 600. பாபேல் கோபுரம் கட்டப்பட்ட காலம் கி.மு 4000 - கி.மு 2000. நேபுகாத்நேச்சார் மன்னர் ஏற்கனவே இருந்த முழுவதாக கட்டி முடிக்கப்படாத ஒரு சிதைந்த பழமையான கோபுரத்தையே மீண்டும் சீர்படுத்தி எடேமேனாங்கி என்ற கோபுரமாக கட்டினதாக கல்வெட்டு ஒன்று அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 'எனுமா எலிஸ்' என்ற பாபிலோனிய பழங்கால சுவடு கி.மு 3000 காலத்திலேயே பாபிலோனில் சிதைந்த கட்டிமுடிக்கப்படாத கோபுரம் ஒன்று இருந்ததாக கூறுகிறது. எனவே முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் விடப்பட்டு, சிதைந்து இருந்த கோபுரம் பைபிள் கூறும் பாபேல் கோபுரமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நேபுகாத்நேச்சார் அவரது ஆட்சி காலத்தில் இஸ்ரேல் யூதேயா பகுதிகளின் மீது போர் புரிந்து வெற்றி பெற்று அந்த பகுதிகளை தன் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தவர். இஸ்ரேல் மக்கள் பலரை தன் நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு சென்றார். அங்கு சென்றாலும், இஸ்ரேல் நாட்டு மக்கள் தங்கள் தெய்வமான கர்த்தரை மட்டும் வழிபட்டு வந்தனர். நேபுகாத்நேச்சார் இஸ்ரேல் நாட்டு அடிமை கைதிகளை தங்கள் தெய்வங்களை வழிபடுமாறு நிர்பந்தித்தார். 


மேற்கோள்:
"நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா? இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும் போது, தாழ விழுந்து, நான் பண்ணி வைத்த சிலையைப் பணிந்து கொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்து கொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்" - தானியேல் 3:14-18 (பைபிள்)
 

நேபுகாத்நேசர் படம் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு
நேபுகாத்நேசர் படம் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு

அவருக்கு இஸ்ரேல் மக்களின் கர்த்தர் மீது ஒரு வித வெறுப்பு இருந்தது. இதன் காரணமாக கர்த்தர் கட்டவிடாமல் தடுத்த பாபேல் கோபுரத்தை அவர் மீண்டும் எழுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த கோபுரத்தை 'மர்துக்' என்ற தன் தெய்வத்திற்கு ஆலயமாக மாற்றியிருக்கிறார். "மர்துக் தான் தெய்வங்களில் பெரியவன் " என்று பொறித்து வைத்துள்ளார். இதனால் அவருக்கு கர்த்தர் மேல் இருந்த வெறுப்பு தெளிவாகிறது. அது மட்டும் இன்றி அவர் கற்களில் பொறித்து வைத்துள்ள சில செய்திகள் கீழே:

"நான் கட்டின இந்த கோபுரம் நிரந்தரமானது. நான் வெள்ளியாலும், தங்கத்தாலும், உலோகங்களாலும், கற்களாலும், செங்கற்களாலும், மரங்களாலும் கட்டி முடித்து பிரமிக்க வைத்து விட்டேன். இதுதான் பூமியின் முதல் கட்டிடம், பாபிலோனின் பழமையான கோபுரம். நான் கட்டி விட்டேன் கட்டி முடித்து விட்டேன். செங்கற்களால் மேல்பகுதியை கட்டி செப்பு தகடுகளால் மூடி அலங்கரித்து விட்டேன். அனைவரிடமும் சொல்லுங்கள் - இந்த கம்பீரமாக கட்டிடம் உலகத்திற்கு ஏழு வெளிச்சங்களை வீசும்; இதுதான் பொர்ஷிப்பாவின் பழமையான சிகரம். இதனை முன்னிருந்த ஒரு அரசன் கட்டினான் ஆனால் அவனால் மேல்பகுதி வரை கட்டி முடிக்கவில்லை. காலபோக்கில் மக்களும் மறந்து தள்ளிவிட்டனர். அதனை பற்றி பேசாமல் இருந்துவிட்டனர். அன்றிருந்து நிலநடுக்கங்களும், வானில் இருந்து விழுந்த இடிகளும் அந்த கட்டிடத்தை சிதைத்துவிட்டன. அந்த கட்டிடத்தின் செங்கற்கள் உடைந்து போயின அதன் அஸ்திவாரங்கள் பிளவுண்டு போயின. தெய்வங்களில் பெரியவனான மர்துக் அந்த கட்டிடத்தை சீர்படுத்த சொல்லி என் மனதை ஏவினான். நான் அந்த கட்டிடத்தை இடம் மாற்றவும் இல்லை, அதன் அஸ்திவாரங்களை அகற்றவும் இல்லை. ஒரு நல்ல மாதத்தில் நல்ல அதிர்ஷ்டமான நாளில் அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டி முடித்துவிட்டேன். இதில் என் பெயரையும் பொறித்துவிட்டேன்" - கல்வெட்டு

"நான் எடேமேனாங்கியை, பாபிலோனின் ஜிக்கருட்டை கட்டி முடித்து விட்டேன். உலக மக்களுக்கு ஒரு அதிசயமாக அதனை கட்டி விட்டேன். அதன் மேல்கூரையை வானளவு உயர்த்தி விட்டேன், சொர்கத்தின் கதவுகளை எட்டும் அளவிற்கு அமைத்து விட்டேன். நான் அதை செங்கற்களாலும் நீலக்கீலாலும் செய்து முடித்து விட்டேன்" - கல்வெட்டு

இந்த வாக்கியங்கள் பைபளில் உள்ள பாபேல் கோபுரத்தின் குறியீடுகளோடு பொருந்துகின்றன.

நேபுகாத்நேச்சார் காலப்போக்கில் இஸ்ரேலின் தெய்வமான கர்த்தரை ஏற்றுக் கொண்டதாக பைபிள் கூறுகிறது. தன் அகந்தையை கர்த்தர் அடக்கினதாக நேபுகாத்நேச்சார் பைபிளில் ஒரு பகுதியில் கூறுகிறார்.

"நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப் படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்" - தானியேல் 4:31

நேபுகாத்நேச்சார் எழுப்பின எடேமேனாங்கி ஜிக்கருட்டை பண்டைய சரித்திர ஆசிரியர் ஹெரோடாடஸ் கண்டு பிரமித்து போனதாக எழுதிவைத்துள்ளார். பின்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் தன் காலத்தில் (கி.மு 300) இந்த கட்டிடத்தை படையெடுப்பின் காரணமாக அழித்துவிட்டார். இன்று நம் பார்வைக்காக சிதைந்த நிலையில் ஒரு சில பகுதிகளே உள்ளன.

திங்கள், 9 மே, 2016







மனுநூல் எரிப்பு என்று ஒருபக்கம் மார்தட்டிக் கொள்ளும் பெரியாரியவாதிகள் மறுபக்கம் - ஆரியரில் சீரழிந்த பல பிரிவினரில் ஒரு பிரிவினர்தாம் திராவிடர்கள் என்று மனு கூறிய “திராவிடத்தை” தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்.
மனுநூல், குமாரிலபட்டரின் தந்திர வார்த்திக, மகாபாரதம் ஆகிய வடமொழி நூல்களில் இருந்துதான் திராவிட - திராவிடர் என்ற சொல்லைக் கால்டுவெல் எடுத்தார் என்று இதற்குமுன் பார்த்தோம். இப்போது இன்றுமுள்ள நடைமுறை உண்மைகளைப் பார்ப்போம்.
இன்றும் பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு திராவிட பிராமணர்கள் என்ற பெயரில் சங்கம் நடத்திக் கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து வரும் “பிராமின் டுடே” என்ற இதழ், பிராமணர்கள்தாம் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் - இன்றும் அழைக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறது.
“விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிராமணர்கள் கௌட என்ற பெயரிலும் தெற்கே உள்ளவர்கள் திராவிட என்ற பெயரிலும் பொதுவான இரு பிரிவுகளில் அடையாளப் படுத்தப்பட்டிருக் கிறார்கள். இதன் அடிப்படையில், கோவாவில் குடியேறிவிட்ட இந்த பிராமணர்கள், கௌட தேசமான ஸரஸ்வதி நதிக்கரையைப் பூர்விகமாகக் கொண்டாலும் பஞ்ச திராவிட பிராமணர்களின் ஒரு அம்சமாகவே தற்பொழுது திகழ்கிறார்கள்”.
- பிராமின் டுடே, செப்டம்பர், 2013.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிராமணர் களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கி றார்கள். ஒரு பிரிவினர் கௌட பிராமணர்கள் - இன்னொரு பிரிவினர் திராவிட பிராமணர்கள். விந்திய மலைக்கு வடக்கே காசுமீர் வரையில் உள்ளவர்களைக் கௌட பிராமணர்கள் என்கிறார்கள். விந்திய மலைக்குத் தெற்கேயும் விந்திய மலைக்குத் வடமேற்கே குசராத் வரையிலும் உள்ள பிராமணர்களைத் திராவிட பிராமணர்கள் என்கிறார்கள்.
கௌட பிராமணரில் பல உட்பிரிவுகள் உள்ளன. திராவிட பிராமணரிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. திராவிட பிராமணர்களை ஐந்து பெரும் உட்பிரிவு களாகப் பிரிக்கிறார்கள். அவர்கள் பஞ்ச திராவிடர்கள் (பஞ்ச - ஐந்து) என்கிறார்கள். பஞ்ச திராவிடரில் ஒரு பிரிவினர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
“புலம் பெயர்ந்த திராவிட பிராமணர்களில் ஒரு பிரிவினர் சௌராஷ்டிராவிலிருந்து தெற்கே காவிரிக் கரைப் பகுதிக்கு வந்தார்கள். குறிப்பிட்ட இந்த பிராமணக் குழுவினர் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் ஏன் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தார்கள் என்ற காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட பிராமணர்கள் புலம் பெயர்ந்த அந்தக் காலத்தில், வடமேற்கு இந்தியக் கண்டத்தில் (இப்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியா) குசராத் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய ஊடுருவல் தாக்குதல்களால் முழு அளவில் சண்டைகளும் அழிவுகளும் நடந்து கொண்டிருந்தன. சௌராஷ்டிரர்கள் பழங்கால சரசுவதி ஆறு ஓடிய பகுதியில் வாழ்ந்தவர்கள். சௌராஷ்டிரா என்பது மேற்கிந்தியாவில், கத்தியவார் தீபகற்பத்தில், இப்போது குசராத் மாநிலமாக உள்ள பகுதியில் இருந்த ஒரு முன்னாள் நாடு; அது சொருத் என்றும் சொரத் என்றும் அழைக்கப்பட்டது; சரஸ்வதி ஆறு ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளிலிருந்து இறங்கி பேராற்றலுடன் ஓடி வந்த அந்த ஆற்றின் கரைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வை அது வளப்படுத்தியது.  அவர்களின் நாகரிகத்தை வளர்த்த தாயாக விளங்கியது. தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பிராமணர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்த சரஸ்வத் பிராமணர்களுடன் உறவு உள்ளவர்களா என்பது தெரியவில்லை. அந்த சரஸ்வத் பிராமணர்கள் தாம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இடம் பெயர்ந்து சென்றவர்கள்.
“காவிரி மண்டலத்திலிருந்து (திராவிட) பிரா மணர்கள், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் வடக்கே ஆந்திரப் பிரதேசத்திற்கும் 600 முதல் 300 ஆண்டுகள் வரை இடம் பெயர்ந்தார்கள். சென்னையிலிருந்து 194 மைல் தொலைவில் காவிரிக் கரையில் உள்ள, தமிழ்நாட்டின் தொன்மைமிக்கக் கோயில் நகரமான கும்பகோணத்திலிருந்து ஆராம திராவிட பிராமணக் குடும்பங்கள் (Aaraama dravidaBrahmin families) சில (ஆந்திரப் பிரதேசத்திற்கு) புலம் பெயர்ந்தன. கும்பகோணம் புராணக் கதைகள் தொடர்புடையது. மேல் விவரத்திற்கு Kanchi Kamakoti Peetam இணையதளத்தைப் பார்க்கவும்.
(சான்று: வெப்பச்சேடு கல்வி அறக்கட்டளை இணையதளம், http://www.vepachedu.org/mana sanskriti/ aaraamadraavida.html)
தமிழர் என்றால் அதில் பிராமணர்களும் சேர்ந்து கொள்வார்கள்; திராவிடர்கள் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது என்று பெரியார் கூறினார். அதற்கு ஆதரவாக ஏதாவது சான்றுகள் காட்டினாரா? இல்லை! பெரியாரின் “பகுத்தறிவு” வழிப்பட்ட ஆராய்ச்சி முறை இதுதானோ? “அறிவு ஆசான்” ஆதாரங்கள் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லையோ?
இதற்குமுன் நாம் காட்டியுள்ள மனுஸ்மிரிதி நூல் முதல் பிராமின் டுடே வரை உள்ள சான்றுகள் சீரழிந்த ஆரியர்களும் பிராமணர்களும் தான் திராவிடர்கள் என்று கூறுகின்றன. தமிழர்களைத் திராவிடர்கள் என்று சொல்லவில்லை. நீண்டகாலம் ஆட்சியை இழந்து அடிமைப்பட்ட நிலையில், தமிழர்கள் தங்களுக்கு ஆரியப் பார்ப்பனர்கள் இழிவாகப் பெயரிட்டழைத்த சூத்திரர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். அதே பாணியில் திராவிடர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்த்தால் தமிழ் இனத்தில் ஒரு போதும் நால் வருணம் இருந்ததில்லை. திராவிடர் என்ற பெயரையும் தமிழர் ஏற்றதில்லை.
மேலே நாம் காட்டியவை பழங்காலச் சான்றுகள். இப்போது பிராமணர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்கிறார்களா என்ற வினா எழலாம். இப்பொழுதும் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். தனிநபர் மட்டும் அல்லர்; பிராமணப் பிரிவுகள் பலவும் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்கின்றன.
தற்கால தனிநபர் சான்றுகளாக மைலாப்பூர் சமற்கிருதக் கல்லூரி பேராசிரியர் மணி திராவிட், மட்டை பந்து வீரர் இராகுல் திராவிட் ஆகியோர் பிராமணர்களே!
தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவே திராவிடப் பிராமணர் என்று ஒரு பிரிவினர் கூறு கிறார்கள்.   
‘புதூரு திராவிட பிராமணர்கள்’ என்ற பிரிவினர் இருக்கிறார்கள். “புதூரு’’ என்ற ஊர் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறது. புதூரைச் சுற்றியும் சித்தூர் பகுதியிலும் உள்ள பிராமணர்கள் புதூரு பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கண்ட்ரமாணிக்கம் அக்ரகாரத்திலிருந்து நெல்லூர் புதூருக்குப் போனவர்கள். புதூரு திராவிட பிராமணர்கள் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பிரகச் சரணம் என்ற பிரிவில் இவர்கள் வருகிறார்கள். விஜய நகர அரசைச் சேர்ந்த சதா சிவராயா என்பவர் நெல்லூருக்கு கிழக்கே பத்து மைலில் உள்ள மமிடிபுடி என்ற கிராமத்தை புதூரு திராவிட கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்களுக்குத் தானமாக கி.பி. 1650-இல் வழங்கினார் என்று வரலாற்றுச் சான்று உள்ளது. (காண்க: www.pudurdravida.com )
நெல்லூர் மாவட்டத்தில் இன்றைக்கும் புதூரு திராவிட சங்கம் -- புதூரு திராவிட பிராமணர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் -- அதே நெல்லூர் -- சித்தூர் பகுதிகளில் வாழும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதில்லை. அவர்களை அரவா - வாண்டு அல்லது அரவாடு என்றுதான் அழைக்கிறார்கள். அங்கு வாழும் தமிழ் பிராமணர்களை மட்டும் திராவிட பிராமணர்கள் என்று அழைக்கிறார்கள். “அரவா -- வாண்டு” என்றால் நாகப் பாம்பை வணங்குவோர் வழிவந்தவர்கள் என்று பொருள்.
புதூரு திராவிட சங்க நெல்லூர் மாவட்ட ஆயிரமாவது மலரில் (The Pudur Dravida Association of Nellore Dt. Millennium Souvenir) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதா புதூரு திராவிட பிராமணர் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான திராவிடச் செல்விதான்!
புதூரு திராவிட பிராமணர்கள் தமிழ் பேசுவோர் என்றாலும் தமிழர் அல்லர் என்பதைப் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.
புதூரு திராவிடர்கள் ஸ்மார்த்தர் எனப்படும் வேத வழியினர். அவர்கள் மனுஸ்மிருதியைப் பின்பற்றுவோர். அவர்கள் சிவனையோ அல்லது விஷ்ணுவையோ வணங்குவது அவரவரின் தனிநபர் பழக்கமே தவிர அது அவர்களின் அடிப்படை (basic) அன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த வைத்தியநாதத் தீட்சிதர் எழுதிய “வேதக் கரணவியல் கையேடு” ((Manual of Vedic rituals) என்ற நூல்தான் புதூர் திராவிடர்களுக்கும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள எல்லா தமிழ் பிராமணர் களுக்கும், விசிஸ்டாத்வைதத்தைப் பின்பற்றும் எல்லா வகைப் பிராமணர்களுக்கும் அதிகாரம் படைத்த சமயநெறி நூல்.
நெல்லூர் வரை போவானேன், சென்னையில் உள்ள திராவிடப் பிராமணர்களைப் பார்ப்போம். சென்னையில் தென் கனரா திராவிட பிராமணர் சங்கம் (The South Kanara Dravida Brahmin Association, Chennai) என்பது 1953 அக்டோபர் 19 அன்று பதிவு செய்யப்பட்டது. இன்றும் அச்சாங்கம் செயல்பாட்டில் உள்ளது. (அவர்களது இணையதளம்: www.skdb association.com).
1912 வாக்கில் கர்நாடகத்தின் தென் கனரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து சென்னையில் குடியேறிய பிராமணர்களின் சங்கம் தான் அது. தென் கனரா பிராமணர்களுக்காக 2005இல் “கரவளி அலெகளு” ((Karavali Alegalu) என்று ஓர் இதழையும் வெளியிட்டுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது திராவிடர் என்றால், அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள் என்று பெரியார் கூறியது உண்மை நடப்பிற்கு மாறான தாக இருக்கிறது. “ஒரு வேளை நாங்களும் திராவிடர்கள் தான் என்று பார்ப்பனர்கள் வந்தால் - பூணூலைக் கழற்றிவிட்டுத் தங்களின் ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்தால் அப்போது அவர் களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்” என்று பெரியார் கூறினார்.
தாங்கள் திராவிடர்கள்தாம் என்று அடையாளங் காட்டிக் கொள்ள பிராமணர்களுக்குப் பெரியாரின் சான்றளிப்புத் தேவைப்படவில்லை. காரணம், பெரியார் பிறப்பதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்பே -- அவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அடையா ளப்படுத்தி வருகிறார்கள். அதற்கான நூல்கள் எழுதி யுள்ளார்கள். பிற்காலத்தில் திராவிடப் பிராமணர்கள் சங்கம் என்று சென்னையிலேயே பதிவு செய்திருக்கி றார்கள்.
பிராமணர்களைத் திராவிடர் என்று ஆதிசங்கரர் கூறியதைப் பார்ப்போம்.
“தவ ஸ்தன்யம் மன்யே தரனிதர - கன்யே ஹ்ருதய:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம் மிவ!
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு - ராஸ்வாத்ய த்வயத்
கவீனாம் ப்ரௌடானா - மஜனி கமனீய: கவயிதா!’’
தமிழில்: அம்மா, உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்து பெருகும் பாற்கடல். கலை வாணியே அந்தப் பாலாக உருவெடுத்தது போல் தோன்றுகிறது! உன்னால் கருணையுடன் தரப்பட்ட, பாலைக் குடித்த திராவிடக் குழந்தை ஒருவன், கற்றறிந்தோர் போற்றும் பெருங்கவிஞனாக ஆகி விட்டான் அன்றோ?”
- ஆதிசங்கரர், சௌந்தர்ய லகரி, பாடல் எண்: 75.
திராவிடக் குழந்தை (திராவிட சிசு) என்று ஆதி சங்கரர், ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகிறார் என்று விளக்க மளிப்போரும் உளர். இல்லையில்லை ஆதி சங்கரர் தம்மையே திராவிட சிசு என்று கூறிக் கொண்டார் என்று விளக்கமளிப்போரும் உளர்.
இவ்விருவரும் ஆரிய பிராமணரே! இவ்விருவரில் யாரைச் சொன்னாலும் பிராமணரைத் திராவிடக் குழந்தை என்று சொன்னார் என்பதாகிறது. திருஞான சம்பந்தர், கௌனிய கோத்ர ஆரிய பிராமணர்!
பிரித்தானியா கலைக் களஞ்சியம் கூறுவதைப் பார்ப்போம்.
DRAVIDIAN, a name only applied in Indian usage to the ‘Southern’ group of the Brahmans q.v. But “Dravidian” is applied, unfortunately, to the indigenous peoples of India South of the Vindhyas and to the Nothern half of Ceylon; it should be confined to the languages of this area.
E.Thurston, Castes and Tribes of Southern Indian, i. (exhaustive introduction), 1999; Cambridge History of India vol I. (1923 ; R.D. Dixon, Racial History of Mankind (1921).
(Encylopaedia Britannica, Vol. 7. Edn. 15, (1947), p. 624)
(இம்மேற்கோள் தந்து உதவியவர் பேரா. த. செயராமன், இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர் (3), தமிழர் கண்ணோட்டம் கட்டுரை, ஏப்ரல் 2010.)
இதன் தமிழாக்கம்: “திராவிடன் என்பது இந்திய வழக்காற்றில் பிராமணர்களில் ‘தெற்கு’ குழுவினரை மட்டும் குறிப்பது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியா வில் விந்திய மலைக்குத் தெற்கேயும் இலங்கையில் வடபாதியிலும் உள்ள மண்ணின் பழங்குடி மக்களைக் குறிப்பதாயிற்று. இந்த மண்டலத்தின் மொழிகளை மட்டுமே இச்சொல் குறிப்பதாக வரம்பு கட்ட வேண்டும்’’.
தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்தான் திராவிடன் என்பது. கெடுவாய்ப்பாக, பிற்காலத்தில் மரபு வழிபட்ட மண்ணின் மக்களைக் குறிப்பதாயிற்று என்று கூறுகிறது பிரித்தானிய கலைக் களஞ்சியம்.
திராவிடர் என்ற சொல் தமிழர்களை ஒருபோதும் குறிக்காது. ஏனெனில் ஆரியர் சிந்து சமவெளிப் பகுதிக்குள் நுழையும் முன்பே இந்தியத் துணைக் கண்டமெங்கும் வளர்ச்சியடைந்த நாகரிகத்துடன், வளர்ச்சியடைந்த மொழியுடன், தமிழர் என்ற இன அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
திராவிடர் என்ற சொல் ஆரியர்களால் - ஆரியப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். சிந்து சமவெளிக்குள் புகுந்த ஆரியர்கள் வளர்ச்சியடைந்த நகர நாகரிகத்துடன் வாழும் தமிழர்களையும் வளர்ச்சியடைந்த அவர்களின் தமிழ் மொழியையும் பார்க்கிறார்கள். தமிழ், தமிழர் என்பதை த்ரமிள -- த்ரமிட - த்ரவிட - த்ராவிட என்று திரிபாக உச்சரித்தார்கள் என்று பாவாணர் கூறுகிறார். மற்றும் சிலரும் இவ்வாறு கூறுகின்றனர். “திராவிட’’ என்ற கொச்சைத் திரிபுப் பெயரைத் தமிழர்கள் ஏற்கவில்லை. எனவே, தமிழரைத் தமிழர் என்றும் தமிழர் வாழும் தாயகப் பகுதிகளை திராவிட என்றும் ஆரியப் பிராமணர்கள் அழைத்திருக்க வேண்டும்.
மேய்ச்சல் சமூகமாக இந்தியத் துணைக் கண்டத் திற்குள் நுழைந்த ஆரியர்கள் - பல நூறாண்டுகளுக்குப் பின், நிலைத்த சமூகமாகக் கங்கைச் சமவெளியில் வாழத் தொடங்கினர். அதனை ஆரிய வர்த்தம் என்றனர். ஆரிய வர்த்தத்தில் வாழும் ஆரியர்களும் ஆரியப் பிராமணர்களும் உயர்வானவர்கள். ஆரிய வர்த்தப் பிராமணர்கள் கௌட பிராமணர்கள். ஆரிய வர்த்தத்திற்கு வெளியே, விந்திய மலைக்குத் தெற்கேயும் வடமேற்கில் சிந்துச் சமவெளி மண்டல மான குசராத்திலும், இப்போதைய பாகிஸ் தானிலும் பரவி வாழ்ந்த பிராம ணர்கள் தாழ்வானர்கள். அவர் களைக் குறிக்கத் திராவிடர்கள் என்ற சொல்லைக் கௌட பிராம ணர்கள் கையாண்டிருக்க வேண் டும். ஏன்?
தங்களைத் திராவிடர்கள் என்று திரிபாகக் கூறுவதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் வாழும் நிலப்பகுதியை திராவிட நாடு, திராவிட தேசம், திராவிட பூமி என்று பிராமணர்கள் குறித் திருக்க வேண்டும். அதனால் ஆரிய வர்த்தத் திற்கு வெளியே தெற்கேயும் வடமேற் கேயும் வாழ்ந்த பிராமணர்கள் அனைவரையும் திராவிடர்கள் என் றார்கள். விரிந்து பரந்த நிலப்பகுதி களில் வாழ்ந்த திராவிட பிராமணர் களை மொழி வழி அடையாளம் காண பஞ்ச (ஐந்து மண்டல) திராவிடர்கள் என்று அடையாளப் படுத்தினார்கள்.
வடமொழியில் (சமற்கிருதத் தில்) கூறப்படும் 56 தேசங்களில் பாண்டிய தேசம், சேர தேசம், சோழ தேசம், திராவிட தேசம் என்பவை வருகின்றன. தமிழர் அனைவரும் திராவிடர் என்றால், பாண்டிய தேசம், சோழ தேசம், திராவிட தேசம் என்பவை தனித்தனி பெய ருடன் தனித்துவத்துடன் 56 தேசத் தொகுப்பில் இருந்திட வாய்ப்பில்லை.
ஆய்வாளர் பி. வி. ஜெகதீச அய்யர் 1918 இல் எழுதிய “புராதன இந்தியா’’ நூலில் 56 தேசங்களை தொகுத் துள்ளார்; அவற்றுள் சேர தேசம், சோழதேசம், பாண்டிய தேசம் ஆகியவற்றுடன் திராவிட தேசம்
என்பதும் தனியே குறிப்பிடப் பட்டுள்ளது என்று பேராசிரியர் த. செயராமன் தமது இனவியல் ஆய்வுக் கட்டுரையில் (தமிழர்கண்ணோட்டம்) குறிப்பிடுகிறார்.
எந்த வகையில் பார்த்தாலும் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. தமிழர்கள் - தமிழர்கள்தாம். பிராமணர்கள்தாம் திராவிடர்கள். எந்த வகை ஆராய்ச்சிக்கும் இடங்கொடுக்காமல், “திராவிட’’ என்ற பெயரை தமிழர் தலையில் சுமத்தினார் பெரியார். அவர் அவ்வாறு திராவிடத் திணிப்பு செய்த காலத்திலேயே தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்களைத் திராவி டர்கள் என்பதை ஏற்கவில்லை. நீதிக்கட்சியில், தெலுங்கர் தெலுங்க ராகவும், மலையாளி மலையாளியா கவும்தான் இருந்தார்கள். ஏமாளித் தமிழர்கள் தாம், பெரியாரின் திராவிடத் திணிப்பை ஏற்று, வெகு மக்கள் அளவில் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொள்ளத் தலைப் பட்டார்கள்.
பழைய சென்னை மாகாணத்திலிருந்து, தெலுங்கு, கன்னட, மலை யாளப் பகுதிகள் பிரிந்து போய் விட்டன. இப்பொழுதுள்ள தமிழ் நாட்டில் வாழும் தெலுங் கரோ, கன்னடரோ, மலையா ளியோ தங்களைத் திராவிடர் எனறு கூறிக் கொள்கிறார்களா? இல்லை. பின்னர் இன்னும் தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர் என்று ஏன் கூறிக் கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டில் வாழும் தெலுங் கர்களில் ஒரு சாரார் தங்களைத் தெலுங்கர் என்று கூறிக் கொண்டு தெலுங்கர் மாநாடு நடத்துகிறார்கள். சிலர் தெலுங்கு தேசம் கட்சியையே இங்கு தொடங் கியுள்ளார்கள்.
இங்கு மலையாளிகள், மலையா ளிகள் மாநாடு நடத்துகிறார்கள்; மலையாளிகள் சங்கம், கேரள சமாஜம் ஆகியவற்றை நடத்துகி றார்களே அன்றி திராவிடர் சங்கம் நடத்தவில்லை.
ஆனால் திராவிடக் கட்சிகள் இன்னும் ஏமாளித் தமிழர்கள் முகத்தில் திராவிட முகமூடியை மாட்டி விடுகின்றன. வரலாறு அவர்களை மன்னிக்காது! தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவை அண்மைக் காலமாக தி.க. தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் திராவிடர் திருநாளாக மாற்றிக் கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்களும், கன்னடர் களும் உகாதி விழா கொண்டாடுகிறார்கள், மலையா ளிகள் ஓணம் கொண்டாடுகிறார்கள்,
திராவிடர் கழகமோ தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடுகிறது.!
 திராவிடத் தலைவர்களுக்குத் தமிழ் இனத்தின் மீது இத்தனை காழ்ப்பு ணர்ச்சியும் வஞ்சகமும் ஏன்?
( இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள இணையதள மேற்கோள்கள் தந்தவர் தோழர் க. அருணபாரதி)

புதன், 20 ஏப்ரல், 2016

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்


மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். 
ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே.
மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
மர்மம் 1: நாம் ஏன் முத்தமிடுகிறோம்?
எச்சில் பரிமாற்றத்தில் மனிதர்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இயற்கையாகவே நடைபெறும் உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்க முடியவில்லை.
மர்மம் 2: நாம் ஏன் சிரிக்கிறோம்
என்டோர்ஃபின்ஸ் நம் மனநிலையை மேம்படுத்துவதற்காக நாம் சிரிக்கும் போது நம் உடலில் சுரக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எது சிரிப்பை வரவழைக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. சில நேரம் மிகப்பெரிய ஒரு நகைச்சுவை கூட சிலருக்கு சிரிப்பை வரவழைக்காமல் போகலாம்.
மர்மம் 3: நாம் ஏன் அசடு வழிகிறோம்
சரியான முறையில் அறிவியலால் பதிலளிக்க முடியாத மற்றொரு கேள்வி தான் இது. இருப்பினும் நெருக்கம் மற்றும் ஈர்ப்பை வளர்க்கும் அதிமுக்கிய காரணியாக இது விளங்குகிறது என நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நிகழ்வு நடக்கிறதோ என்னவோ.
மர்மம் 4: குணப்படுத்தும் திறன்
மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும். சிலருக்கு மட்டும் எப்படி குணப்படுத்தும் திறன் இருக்கிறது என்பதை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த குணமுடையவர்கள் சிலர், இதனை அண்டத்தின் ஆற்றல் திறனிடம் இருந்து பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது? விடை தெரியாத மர்மம் தான்.
மர்மம் 5: கனவுகள்
நாம் ஏன் கனவு காண்கிறோம்? அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவியல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது? தான் கனவில் கண்டதை நிஜ வாழ்வில் சந்திக்கும் உதாரணங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் உடலை பற்றிய வியக்க தக்க மர்மம் தானே!
மர்மம் 6: உடலில் இவ்வளவு நீரை கொண்டு என்ன தான் செய்கிறோம்?
நம் உடலில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரால் நிறைந்துள்ளது. இந்த அளவு குறைந்தால், நம் உடல் இயல்பற்ற முறையில் செயல்பட தொடங்கிவிடும். தண்ணீரே மனிதர்களுக்கு பிராதனமாக விளங்குகிறது. இவ்வளவு தண்ணீரை கொண்டு நாம் என்ன தான் செய்கிறோம்?
மர்மம் 7: உயிரினவொளியாக்கம்
நோய்வாய் பட்டிருக்கும் போதோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதோ ஒருவருக்கு உயிரின ஒளியாக்கம் ஏற்படலாம். ஹியர்வார்ட் காரிங்க்டன் என்பவர் எழுதிய "டெத்: இட்ஸ் காசஸ் அண்ட் ஃபினாமினா" என்ற புத்தகத்தில், உயிரினவொளியாக்கத்தை பற்றிய கருத்தை விளக்கியுள்ளார்.
தீவிரமான ஆஸ்துமா நோயாளி தூங்கும் போது, அவர் நெஞ்சில் இருந்து, நீல நிற ஒளி வெளிவந்துள்ளது.
அதே போல், ஒரு பையன் தான் இறந்தவுடன், அவன் நெஞ்சில் இருந்து நீல நிற ஒளி வெளிவந்துள்ளது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினவொளியாக்கமும் மிகப்பெரிய மர்மமாக விளங்குகிறது.
- See more at: http://www.manithan.com/news/20160420119631#sthash.oAZyj01R.dpuf

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016


மண்ணின் மைந்தர்களே !
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்களே !
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நாம்
மண்ணுள்ளேயே போகிறோம்…..
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்கள்
தானே !

தமிழா…

தமிழினம் மனித இனத்தின் வேர் , வெழியே தெரிவதில்லை

மாய உலகமிது

மாய உலகமிது
எதுவும் உண்மையில்லை – நம்பாதே
எதையும் நம்பாதே
யாரையும் நம்பாதே
எல்லாம் பொய்
யாரையும் எதையும்
உன்னால் மாற்ற இயலாது
மாற்றவும் வேண்டாம்
யாருக்காகவும் நீ மாறாதே !
நீ நீயாகவே வாழ் – முழுமையாக
உண்மையாக ! உறுதியாக !
நீயாக மாறிவிடு…..
உன்னைத்தேடு கண்டுப்பிடி
நீ யார் என்றறி
நீ உன்னை அறிந்தால்
இவ்வுலகமே உன்னை அறியும்

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...