புதன், 20 ஏப்ரல், 2016

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்


மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். 
ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே.
மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
மர்மம் 1: நாம் ஏன் முத்தமிடுகிறோம்?
எச்சில் பரிமாற்றத்தில் மனிதர்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இயற்கையாகவே நடைபெறும் உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்க முடியவில்லை.
மர்மம் 2: நாம் ஏன் சிரிக்கிறோம்
என்டோர்ஃபின்ஸ் நம் மனநிலையை மேம்படுத்துவதற்காக நாம் சிரிக்கும் போது நம் உடலில் சுரக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எது சிரிப்பை வரவழைக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. சில நேரம் மிகப்பெரிய ஒரு நகைச்சுவை கூட சிலருக்கு சிரிப்பை வரவழைக்காமல் போகலாம்.
மர்மம் 3: நாம் ஏன் அசடு வழிகிறோம்
சரியான முறையில் அறிவியலால் பதிலளிக்க முடியாத மற்றொரு கேள்வி தான் இது. இருப்பினும் நெருக்கம் மற்றும் ஈர்ப்பை வளர்க்கும் அதிமுக்கிய காரணியாக இது விளங்குகிறது என நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நிகழ்வு நடக்கிறதோ என்னவோ.
மர்மம் 4: குணப்படுத்தும் திறன்
மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும். சிலருக்கு மட்டும் எப்படி குணப்படுத்தும் திறன் இருக்கிறது என்பதை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த குணமுடையவர்கள் சிலர், இதனை அண்டத்தின் ஆற்றல் திறனிடம் இருந்து பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது? விடை தெரியாத மர்மம் தான்.
மர்மம் 5: கனவுகள்
நாம் ஏன் கனவு காண்கிறோம்? அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவியல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது? தான் கனவில் கண்டதை நிஜ வாழ்வில் சந்திக்கும் உதாரணங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் உடலை பற்றிய வியக்க தக்க மர்மம் தானே!
மர்மம் 6: உடலில் இவ்வளவு நீரை கொண்டு என்ன தான் செய்கிறோம்?
நம் உடலில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரால் நிறைந்துள்ளது. இந்த அளவு குறைந்தால், நம் உடல் இயல்பற்ற முறையில் செயல்பட தொடங்கிவிடும். தண்ணீரே மனிதர்களுக்கு பிராதனமாக விளங்குகிறது. இவ்வளவு தண்ணீரை கொண்டு நாம் என்ன தான் செய்கிறோம்?
மர்மம் 7: உயிரினவொளியாக்கம்
நோய்வாய் பட்டிருக்கும் போதோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதோ ஒருவருக்கு உயிரின ஒளியாக்கம் ஏற்படலாம். ஹியர்வார்ட் காரிங்க்டன் என்பவர் எழுதிய "டெத்: இட்ஸ் காசஸ் அண்ட் ஃபினாமினா" என்ற புத்தகத்தில், உயிரினவொளியாக்கத்தை பற்றிய கருத்தை விளக்கியுள்ளார்.
தீவிரமான ஆஸ்துமா நோயாளி தூங்கும் போது, அவர் நெஞ்சில் இருந்து, நீல நிற ஒளி வெளிவந்துள்ளது.
அதே போல், ஒரு பையன் தான் இறந்தவுடன், அவன் நெஞ்சில் இருந்து நீல நிற ஒளி வெளிவந்துள்ளது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினவொளியாக்கமும் மிகப்பெரிய மர்மமாக விளங்குகிறது.
- See more at: http://www.manithan.com/news/20160420119631#sthash.oAZyj01R.dpuf

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016


மண்ணின் மைந்தர்களே !
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்களே !
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நாம்
மண்ணுள்ளேயே போகிறோம்…..
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்கள்
தானே !

தமிழா…

தமிழினம் மனித இனத்தின் வேர் , வெழியே தெரிவதில்லை

மாய உலகமிது

மாய உலகமிது
எதுவும் உண்மையில்லை – நம்பாதே
எதையும் நம்பாதே
யாரையும் நம்பாதே
எல்லாம் பொய்
யாரையும் எதையும்
உன்னால் மாற்ற இயலாது
மாற்றவும் வேண்டாம்
யாருக்காகவும் நீ மாறாதே !
நீ நீயாகவே வாழ் – முழுமையாக
உண்மையாக ! உறுதியாக !
நீயாக மாறிவிடு…..
உன்னைத்தேடு கண்டுப்பிடி
நீ யார் என்றறி
நீ உன்னை அறிந்தால்
இவ்வுலகமே உன்னை அறியும்

சனி, 6 பிப்ரவரி, 2016

புற்று நோயை முற்றிலும் அழிக்க வராமல் தடுக்க புதிய மருந்து

புற்று நோய் வந்து விட்டது எனும் எண்ணத்திலேயே பலர் இறந்து விடுகிறார்கள்.இக்குமருந்து இல்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர் இன் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். சிலர் அவர்களின் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை :
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும், தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016


என் கடவுள்...உன் கடவுள்...நம் கடவுள்:


முன்னொரு காலத்தில் எகிப்து நாட்டில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவனுக்கு கணிதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் பொருள் இன்மையாலும், தகுந்த ஆசிரியர் கிட்டாமையாலும் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்தது. அவனும் கணிதம் கற்றுக் கொள்ளும் தருணத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அந்த சமயத்தில் தான் அவர்களின் ஊருக்கு படித்த அறிஞர்கள் ரோமில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வந்து இருக்கும் செய்தியை அவன் கேள்விப்பட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். அவன் மிகவும் எதிர்பார்த்த தரும் இதோ அவன் அருகே வந்து உள்ளது. நிச்சயம் அந்த அறிஞர்களிடம் போனால் அவர்கள் தனக்கு கணிதம் கற்றுத் தருவார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அந்த அறிஞர்களிடம் சென்று தனது ஆசையை சொல்லுகின்றான். அவர்களும் அவனது ஆவலைக் கண்டு அவனுக்கு கற்றுத் தர சரி என்கின்றனர்.

முதலில் ரோம் நாட்டு அறிஞர் தான் கற்றுத் தருவதாக கூறி ஆரம்பிக்கின்றார்.
"முதலில் நாம் எண்களில் இருந்து தொடங்குவோம் சிறுவனே!" என்றுக் கூறி அவரிடம் இருந்த எழுத்துப் பலகையில் எதையோ எழுதிவிட்டு அவனிடம் அதைக் கொடுத்தார்.
"இதோ இந்த பலகையில் முதல் ஐந்து எண்களை எழுதி இருக்கின்றேன். இதை நீ படித்து முடித்த பின்னர் நாம் அடுத்த எண்களுக்கு போகலாம்" என்றார் அந்த ரோம் நாட்டு அறிஞர்.

ஆனால் ஆவலுடன் அந்த எழுத்துப் பலகையை வாங்கிப் பார்த்த சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. அங்கே அவனுக்கு புரியாத மாதிரி சில குறியீடுகள் இடப்பட்டு இருந்தன.

I,II,III,IV,V.

அவன் அவனது நண்பர்களில் கணித புத்தகங்களில் சில எண்களைப் கண்டு இருக்கின்றான். ஆனால் அவன் அந்த பலகையில் கண்ட எதுவுமே அவன் முன்னர் கண்டு இருந்த எண்களைப் போல இல்லை.

அவன் ஏமாற்றத்துடன் "மதிப்பிற்குரிய ஐயா! என்னை மன்னியுங்கள். நான் சில எண்களை ஏற்கனவே படித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் எதுவும் நீங்கள் எழுதி இருப்பதை போன்று இல்லை. அவை வேறுத் தோற்றம் உடையவை. தயவு செய்து எனக்கு ஏன் இவைகள் மாறுபடுகின்றன என்று கூறுகின்றீர்களா?" என்று கூறி விட்டு அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த ரோம் அறிஞர் மிகுந்த சினமுற்று "உனக்கு எண்கள் தெரியவில்லை. ஏனெனில் உனக்கு படித்த அறிவில்லை" என்று கூறி விட்டு அந்த பலகையை இந்திய அறிஞரிடம் கொடுத்தார்.

இந்திய அறிஞர் அந்த பலகையை கண்ட உடன் சிரித்தார். "சிறுவனே நீ சொல்லுவது சரிதான். இதில் எழுதி இருக்கும் எண்கள் தவறானவை தான். இரு நான் உனக்கு சொல்லித் தருகின்றேன்" என்று கூறி விட்டு அந்த எழுத்துப் பலகையில் இருந்த எண்களை அழித்து விட்டு வேறு எதையோ எழுதி விட்டு அவனிடம் அந்த பலகையை கொடுத்தார்.

"இதோ இவை தான் சரியான எண்கள். இவற்றை நீ படித்த பின்னர் நாம் மற்ற எண்களுக்கு போகலாம்" என்றார்.

அந்தச் சிறுவனும் ஆவலுடன் அந்தப் பலகையை வாங்கிப் பார்த்தான். ஆனால் இம்முறையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும் அந்த குறியீடுகள் அவன் முன்னர் கண்டு இராதவாறே இருந்தன.
1,2,3,4,5.

"ஐயா! மீண்டும் என்னை மன்னியுங்கள். இந்த குறியீடுகளையும் நான் இதற்கு முன் என் நாட்டினில் நான் கண்டதில்லை. வேறு ஏதாவது எண்கள் இருக்கின்றனவா?" என்று கூறி அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த இந்திய அறிஞரும் கோபம் அடைந்து "உனக்கு கணக்கு தெரியவில்லை. நான் எழுதி இருப்பதே உண்மையான கணக்கு! கற்க வேண்டும் என்றால் இவற்றைக் கற்றுக் கொள்" என்றார்.

அப்பொழுது  அந்த ரோம் நாட்டு அறிஞர் " அவனுக்கு கணக்கு தெரியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். ஆனால் உமது கணக்கு தான் சரியான கணக்கு என்பதை நான் ஒரு காலும் ஒப்புக் கொள்ள முடியாது. நீரும் அந்த சிறுவனைப் போலவே தவறான கணக்கை கற்று வைத்து உள்ளீர். எனது கணக்கே சரியான கணக்கு" என்று இந்திய நாட்டு அறிஞருடன் வாக்குவாதத்தை ஆரம்பித்தார்.

மிகு விரைவில் அவர்கள் இருவரும் காரசாரமாக சண்டை இட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். அதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் தான் இது வரை கற்று இருந்த கணக்கு தவறானதோ என்ற எண்ணத்தாலும் மனம் உடைந்து போய் அந்தச் சிறுவன் ஒரு ஓரமாய் நின்று அவர்களை சோகமாய் கண்டு கொண்டு இருந்தான்.

அந்தச்  சமயம் தான் அந்த சாது அங்கு வந்து சேர்ந்தார். இரு அறிஞர்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு சிறுவனோ சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றான். ஏதோ பிரச்சனை என்பதை அறிந்த அவர் 
"ஏன் குழந்தாய் சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றாய். என்ன நடந்தது" என்று பாசத்துடன் அந்த சிறுவனிடம் விசாரித்தார்.
நடந்த அனைத்தையும் அவன் அவரிடம் எடுத்து உரைக்க அவர் சிரித்தார்.

பின்னர் " அறிஞர்களே சண்டை இட்டது போதும். தீர்வுக் காணும் நேரம் வந்து விட்டது" என்றுக் கூறியவாறே அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவர்கள் அந்த சாதுவைக் கண்டு சண்டை இடுவதை நிறுத்தி விட்டு அவரின் அருகே வந்த உடன்தொலைவில் ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்களை வைத்து விட்டு அவர் அவர்களை நோக்கி " அறிஞர்களே அதோ அந்த கூடையில் உள்ள பழங்களில் இருந்து ஒவ்வொருவரும் இரண்டு பழங்களைக் எடுத்து வாருங்கள்" என்றார்.
அவர்களும் அவர் சொன்ன மாதிரியே சென்று இரண்டுப் பழங்களை எடுத்து வந்தனர்.
அப்புறம் அவர் அந்த சிறுவனை நோக்கி" சிறுவனே! நீயும் போய் அந்த கூடையில் இருந்து இரண்டு பழங்களை எடுத்து வா பார்போம்" என்றார்.
அவனும் அவர் சொன்ன மாதிரியே இரண்டு பழங்களை எடுத்து வந்தான்.
சாது சிரித்தார்.
"அறிஞர்களே!!! சற்று நேரம் வரை தனது கணக்குத் தான் சரியானது. அடுத்தவரின் கணக்கு தவறானது என்று சண்டை இட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நான் இரண்டு பழங்கள் என்று கூறிய பொழுது அனைவரும் சரியாக இரண்டு பழங்களையே எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றீர். இப்பொழுது சொல்லுங்கள், யார் கணக்கு சரியானது?" என்றார்.
அறிஞர்கள் முழித்தார்கள்.
"நீங்கள் அனைவரும் கற்றக் கணக்கு சரிதான். உங்கள் ஊருக்கு ஏற்றார்ப் போல் வார்த்தைகளில் கணக்கைக் கற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் வார்த்தைகளை மட்டுமே கற்றுக் கொண்டு விட்டது தான் தவறாகி போய் விட்டது. வார்த்தைகளை தாண்டி நிற்கும் பொருளினை நீங்கள் மறந்து விட்டர்கள். எப்பொழுது நீங்கள் பொருளினை மட்டும் பார்க்க ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது தான் நீங்கள் உண்மையிலையே அறிஞர்கள் ஆவீர்கள். அறிந்து கொள்ளுங்கள் மனிதர்களே... கற்றது கை அளவு .. கல்லாதது உலகளவு!!!" என்று கூறி விட்டு அந்த சிறுவனை நோக்கித் திரும்பினார்.
"சிறுவனே நீ என்னுடன் வா. நான் உனக்கு கற்றுத் தருகின்றேன். இவர்கள் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது." என்று கூறி விட்டு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"அவர்கள் இன்னும் கற்க வேண்டி இருக்கின்றதா?" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தான் அந்த சிறுவன்.
"ஆம்! அவர்கள் ஓரளவு கற்றதுமே அவர்கள் கற்றது தான் எல்லை. அதைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற அகந்தையுள் மாட்டிக் கொள்ளுகின்றனர். அந்த அகந்தை இருக்கும் வரை அவர்கள் கற்ற உண்மையான பொருளை அவர்கள் அறிய முடியாது. அந்த அகந்தை வட்டத்தை அவர்கள் எப்பொழுது உடைக்க கற்றுக் கொள்ளுகின்றார்களோ அப்பொழுது தான் அவர்கள் பிறருக்கு கற்றுத் தர தயாராவார்கள். இந்த அறிஞர்கள் இன்னும் தயாராக வில்லை." என்று கூறி விட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அந்த சிறுவனும் அவரைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தான்.

இதைப் போன்றே மதங்களும் சரியாக அறியப்படாமல், என் மதம் பெரியது... என் மதம் தான் கடவுளை அடையும் வழி என்று வெறும் வார்த்தைகளாக அறிந்துக் கொள்ளப் பட்டமையால் பல சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிக்கோல் இட்டுக் கொண்டு இருக்கின்றன.


அவனை வார்த்தைகளால் அறிய முயலும் மதங்கள் வெறும் மதங்களாய் தேங்கி நின்று விடுகின்றன. இறைவனை வெறும் வார்த்தைகளால் அறிய முடியாது, உணர மட்டுமே முடியும். உணர்தல் அன்பினாலையே முடியும். அன்பே அவனை அடையும் வழி என்பதினை உணர்த்தும் மதங்கள் அவனை அடையும்  வழியின் வாயில்கதவாய் நிற்கின்றன. உலகின் அனைத்து மதங்களையும் ஒழுங்காக புரிந்துக் கொண்டோம் எனில் அனைத்தும் ஒரே வழியைத் தான் காட்டுகின்றன என்பதினை அறிவோம்.

தயவு செய்து வார்த்தைகளில் இறைவனை தேட வேண்டாம். அவன் தென் பட மாட்டான்.
வார்த்தைகளைக் கடந்து பொருள் நிற்பதுப் போல, மதங்களைக் கடந்து இறைவன் நின்று கொண்டு இருக்கின்றான்.
வாழ்வின் பொருளாய்.!!!
பரம் பொருளாய்!!!

அதை உணர்ந்துக் கொள்வோம். அப்படியே அவனையும் அன்பினால் அறிந்து கொள்வோம்!

அன்பே இறைவன்!!!  

வெள்ளி, 1 ஜனவரி, 2016

சிவவாக்கியம்-131


சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!


ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் .
*******************************************  

சிவவாக்கியம்-132

காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!

காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
*******************************************  

சிவவாக்கியம்-133

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ  
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!

எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.
 
*******************************************  

சிவவாக்கியம்-134

அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர்
போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்னே.

இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும் தீட்டு என்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு எனும் பொறுமை இல்லாத நீசர்கலோடும் நீ தீட்டாகவே பொருந்தி இருப்பது எவ்வாறு இறைவா?
*******************************************  

சிவவாக்கியம்-135

சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகிய நீரிலே தவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டதேது தூய்மை கண்டு நின்றது ஏது?
பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.

சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி  அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது? என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.
*******************************************  
சிவவாக்கியம்-136

மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா!!

மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று. அது நின்று போனால் அவள் கருவைத் தான்கியிருக்கின்றால் என்பதே காரணம். அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வரர்ந்து உருவமாகி ஜனிக்கின்றது. நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது. இதில் நாதம் எது? வேதம் எது? நற்குலங்கள் எது? எல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல் வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே! நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களா? அது எப்படி எனக் கூறுங்கள்!!!
*******************************************  

சிவவாக்கியம்-137

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!!!
*******************************************  

சிவவாக்கியம்-138

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன  
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே!!!

தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே! அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன? நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள். இதை உணராது கோபப்படும் முட்டாள்களே! அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.
 
*******************************************  

சிவவாக்கியம்-139

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமை தானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமை தானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை 
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசம்?

தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம். காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள். இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?
*******************************************  

சிவவாக்கியம்-140

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் 
வேணும் என்ற அப்பொருள் விரைந்து கானல் ஆகுமே!!

உலகில் பிறப்பெடுத்த மனிதர்கள் இறைநிலை அடைவதற்கும், எட்டு சித்திகளை பெறுதற்கும், பிறவிப் பிணிமுதல் வரும் பிணிகள் யாவையும் நீக்குவதற்கும், பொன் செய்யும் வித்தைகள் செவதற்கும், மெய்ப்பொருள் கிடைக்கவேண்டும். அது கிடைத்தால் எல்லாம் செய்து வளமோடு வாழலாம் என்று வீனாசைக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து தேடுகிறார்கள். அது வேணும் என்று எங்கு சென்று தேடினாலும் கிடைக்காது. உனக்குள்ளே உள்ளதாகவும்,இல்லாததாகவும் இருப்பதை அறிந்து கொண்டு வேண்டும் என்ற ஆசைகள் யாவையும் துறந்து தியானம் செய்யுங்கள். உண்மையான யோக ஞான சாதனங்கள் வேண்டும் என்ற அந்த மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று விரைவில் சோதியான ஈசனை காண்பீர்கள் !!!

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...