திங்கள், 9 மே, 2016







மனுநூல் எரிப்பு என்று ஒருபக்கம் மார்தட்டிக் கொள்ளும் பெரியாரியவாதிகள் மறுபக்கம் - ஆரியரில் சீரழிந்த பல பிரிவினரில் ஒரு பிரிவினர்தாம் திராவிடர்கள் என்று மனு கூறிய “திராவிடத்தை” தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்.
மனுநூல், குமாரிலபட்டரின் தந்திர வார்த்திக, மகாபாரதம் ஆகிய வடமொழி நூல்களில் இருந்துதான் திராவிட - திராவிடர் என்ற சொல்லைக் கால்டுவெல் எடுத்தார் என்று இதற்குமுன் பார்த்தோம். இப்போது இன்றுமுள்ள நடைமுறை உண்மைகளைப் பார்ப்போம்.
இன்றும் பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு திராவிட பிராமணர்கள் என்ற பெயரில் சங்கம் நடத்திக் கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து வரும் “பிராமின் டுடே” என்ற இதழ், பிராமணர்கள்தாம் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் - இன்றும் அழைக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறது.
“விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிராமணர்கள் கௌட என்ற பெயரிலும் தெற்கே உள்ளவர்கள் திராவிட என்ற பெயரிலும் பொதுவான இரு பிரிவுகளில் அடையாளப் படுத்தப்பட்டிருக் கிறார்கள். இதன் அடிப்படையில், கோவாவில் குடியேறிவிட்ட இந்த பிராமணர்கள், கௌட தேசமான ஸரஸ்வதி நதிக்கரையைப் பூர்விகமாகக் கொண்டாலும் பஞ்ச திராவிட பிராமணர்களின் ஒரு அம்சமாகவே தற்பொழுது திகழ்கிறார்கள்”.
- பிராமின் டுடே, செப்டம்பர், 2013.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிராமணர் களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கி றார்கள். ஒரு பிரிவினர் கௌட பிராமணர்கள் - இன்னொரு பிரிவினர் திராவிட பிராமணர்கள். விந்திய மலைக்கு வடக்கே காசுமீர் வரையில் உள்ளவர்களைக் கௌட பிராமணர்கள் என்கிறார்கள். விந்திய மலைக்குத் தெற்கேயும் விந்திய மலைக்குத் வடமேற்கே குசராத் வரையிலும் உள்ள பிராமணர்களைத் திராவிட பிராமணர்கள் என்கிறார்கள்.
கௌட பிராமணரில் பல உட்பிரிவுகள் உள்ளன. திராவிட பிராமணரிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. திராவிட பிராமணர்களை ஐந்து பெரும் உட்பிரிவு களாகப் பிரிக்கிறார்கள். அவர்கள் பஞ்ச திராவிடர்கள் (பஞ்ச - ஐந்து) என்கிறார்கள். பஞ்ச திராவிடரில் ஒரு பிரிவினர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
“புலம் பெயர்ந்த திராவிட பிராமணர்களில் ஒரு பிரிவினர் சௌராஷ்டிராவிலிருந்து தெற்கே காவிரிக் கரைப் பகுதிக்கு வந்தார்கள். குறிப்பிட்ட இந்த பிராமணக் குழுவினர் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் ஏன் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தார்கள் என்ற காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட பிராமணர்கள் புலம் பெயர்ந்த அந்தக் காலத்தில், வடமேற்கு இந்தியக் கண்டத்தில் (இப்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியா) குசராத் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய ஊடுருவல் தாக்குதல்களால் முழு அளவில் சண்டைகளும் அழிவுகளும் நடந்து கொண்டிருந்தன. சௌராஷ்டிரர்கள் பழங்கால சரசுவதி ஆறு ஓடிய பகுதியில் வாழ்ந்தவர்கள். சௌராஷ்டிரா என்பது மேற்கிந்தியாவில், கத்தியவார் தீபகற்பத்தில், இப்போது குசராத் மாநிலமாக உள்ள பகுதியில் இருந்த ஒரு முன்னாள் நாடு; அது சொருத் என்றும் சொரத் என்றும் அழைக்கப்பட்டது; சரஸ்வதி ஆறு ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளிலிருந்து இறங்கி பேராற்றலுடன் ஓடி வந்த அந்த ஆற்றின் கரைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வை அது வளப்படுத்தியது.  அவர்களின் நாகரிகத்தை வளர்த்த தாயாக விளங்கியது. தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பிராமணர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்த சரஸ்வத் பிராமணர்களுடன் உறவு உள்ளவர்களா என்பது தெரியவில்லை. அந்த சரஸ்வத் பிராமணர்கள் தாம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இடம் பெயர்ந்து சென்றவர்கள்.
“காவிரி மண்டலத்திலிருந்து (திராவிட) பிரா மணர்கள், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் வடக்கே ஆந்திரப் பிரதேசத்திற்கும் 600 முதல் 300 ஆண்டுகள் வரை இடம் பெயர்ந்தார்கள். சென்னையிலிருந்து 194 மைல் தொலைவில் காவிரிக் கரையில் உள்ள, தமிழ்நாட்டின் தொன்மைமிக்கக் கோயில் நகரமான கும்பகோணத்திலிருந்து ஆராம திராவிட பிராமணக் குடும்பங்கள் (Aaraama dravidaBrahmin families) சில (ஆந்திரப் பிரதேசத்திற்கு) புலம் பெயர்ந்தன. கும்பகோணம் புராணக் கதைகள் தொடர்புடையது. மேல் விவரத்திற்கு Kanchi Kamakoti Peetam இணையதளத்தைப் பார்க்கவும்.
(சான்று: வெப்பச்சேடு கல்வி அறக்கட்டளை இணையதளம், http://www.vepachedu.org/mana sanskriti/ aaraamadraavida.html)
தமிழர் என்றால் அதில் பிராமணர்களும் சேர்ந்து கொள்வார்கள்; திராவிடர்கள் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது என்று பெரியார் கூறினார். அதற்கு ஆதரவாக ஏதாவது சான்றுகள் காட்டினாரா? இல்லை! பெரியாரின் “பகுத்தறிவு” வழிப்பட்ட ஆராய்ச்சி முறை இதுதானோ? “அறிவு ஆசான்” ஆதாரங்கள் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லையோ?
இதற்குமுன் நாம் காட்டியுள்ள மனுஸ்மிரிதி நூல் முதல் பிராமின் டுடே வரை உள்ள சான்றுகள் சீரழிந்த ஆரியர்களும் பிராமணர்களும் தான் திராவிடர்கள் என்று கூறுகின்றன. தமிழர்களைத் திராவிடர்கள் என்று சொல்லவில்லை. நீண்டகாலம் ஆட்சியை இழந்து அடிமைப்பட்ட நிலையில், தமிழர்கள் தங்களுக்கு ஆரியப் பார்ப்பனர்கள் இழிவாகப் பெயரிட்டழைத்த சூத்திரர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். அதே பாணியில் திராவிடர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வரலாற்று அடிப்படையில் பார்த்தால் தமிழ் இனத்தில் ஒரு போதும் நால் வருணம் இருந்ததில்லை. திராவிடர் என்ற பெயரையும் தமிழர் ஏற்றதில்லை.
மேலே நாம் காட்டியவை பழங்காலச் சான்றுகள். இப்போது பிராமணர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்கிறார்களா என்ற வினா எழலாம். இப்பொழுதும் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். தனிநபர் மட்டும் அல்லர்; பிராமணப் பிரிவுகள் பலவும் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்கின்றன.
தற்கால தனிநபர் சான்றுகளாக மைலாப்பூர் சமற்கிருதக் கல்லூரி பேராசிரியர் மணி திராவிட், மட்டை பந்து வீரர் இராகுல் திராவிட் ஆகியோர் பிராமணர்களே!
தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவே திராவிடப் பிராமணர் என்று ஒரு பிரிவினர் கூறு கிறார்கள்.   
‘புதூரு திராவிட பிராமணர்கள்’ என்ற பிரிவினர் இருக்கிறார்கள். “புதூரு’’ என்ற ஊர் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறது. புதூரைச் சுற்றியும் சித்தூர் பகுதியிலும் உள்ள பிராமணர்கள் புதூரு பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கண்ட்ரமாணிக்கம் அக்ரகாரத்திலிருந்து நெல்லூர் புதூருக்குப் போனவர்கள். புதூரு திராவிட பிராமணர்கள் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பிரகச் சரணம் என்ற பிரிவில் இவர்கள் வருகிறார்கள். விஜய நகர அரசைச் சேர்ந்த சதா சிவராயா என்பவர் நெல்லூருக்கு கிழக்கே பத்து மைலில் உள்ள மமிடிபுடி என்ற கிராமத்தை புதூரு திராவிட கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்களுக்குத் தானமாக கி.பி. 1650-இல் வழங்கினார் என்று வரலாற்றுச் சான்று உள்ளது. (காண்க: www.pudurdravida.com )
நெல்லூர் மாவட்டத்தில் இன்றைக்கும் புதூரு திராவிட சங்கம் -- புதூரு திராவிட பிராமணர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் -- அதே நெல்லூர் -- சித்தூர் பகுதிகளில் வாழும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதில்லை. அவர்களை அரவா - வாண்டு அல்லது அரவாடு என்றுதான் அழைக்கிறார்கள். அங்கு வாழும் தமிழ் பிராமணர்களை மட்டும் திராவிட பிராமணர்கள் என்று அழைக்கிறார்கள். “அரவா -- வாண்டு” என்றால் நாகப் பாம்பை வணங்குவோர் வழிவந்தவர்கள் என்று பொருள்.
புதூரு திராவிட சங்க நெல்லூர் மாவட்ட ஆயிரமாவது மலரில் (The Pudur Dravida Association of Nellore Dt. Millennium Souvenir) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதா புதூரு திராவிட பிராமணர் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான திராவிடச் செல்விதான்!
புதூரு திராவிட பிராமணர்கள் தமிழ் பேசுவோர் என்றாலும் தமிழர் அல்லர் என்பதைப் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.
புதூரு திராவிடர்கள் ஸ்மார்த்தர் எனப்படும் வேத வழியினர். அவர்கள் மனுஸ்மிருதியைப் பின்பற்றுவோர். அவர்கள் சிவனையோ அல்லது விஷ்ணுவையோ வணங்குவது அவரவரின் தனிநபர் பழக்கமே தவிர அது அவர்களின் அடிப்படை (basic) அன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த வைத்தியநாதத் தீட்சிதர் எழுதிய “வேதக் கரணவியல் கையேடு” ((Manual of Vedic rituals) என்ற நூல்தான் புதூர் திராவிடர்களுக்கும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள எல்லா தமிழ் பிராமணர் களுக்கும், விசிஸ்டாத்வைதத்தைப் பின்பற்றும் எல்லா வகைப் பிராமணர்களுக்கும் அதிகாரம் படைத்த சமயநெறி நூல்.
நெல்லூர் வரை போவானேன், சென்னையில் உள்ள திராவிடப் பிராமணர்களைப் பார்ப்போம். சென்னையில் தென் கனரா திராவிட பிராமணர் சங்கம் (The South Kanara Dravida Brahmin Association, Chennai) என்பது 1953 அக்டோபர் 19 அன்று பதிவு செய்யப்பட்டது. இன்றும் அச்சாங்கம் செயல்பாட்டில் உள்ளது. (அவர்களது இணையதளம்: www.skdb association.com).
1912 வாக்கில் கர்நாடகத்தின் தென் கனரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து சென்னையில் குடியேறிய பிராமணர்களின் சங்கம் தான் அது. தென் கனரா பிராமணர்களுக்காக 2005இல் “கரவளி அலெகளு” ((Karavali Alegalu) என்று ஓர் இதழையும் வெளியிட்டுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது திராவிடர் என்றால், அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள் என்று பெரியார் கூறியது உண்மை நடப்பிற்கு மாறான தாக இருக்கிறது. “ஒரு வேளை நாங்களும் திராவிடர்கள் தான் என்று பார்ப்பனர்கள் வந்தால் - பூணூலைக் கழற்றிவிட்டுத் தங்களின் ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்தால் அப்போது அவர் களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்” என்று பெரியார் கூறினார்.
தாங்கள் திராவிடர்கள்தாம் என்று அடையாளங் காட்டிக் கொள்ள பிராமணர்களுக்குப் பெரியாரின் சான்றளிப்புத் தேவைப்படவில்லை. காரணம், பெரியார் பிறப்பதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்பே -- அவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அடையா ளப்படுத்தி வருகிறார்கள். அதற்கான நூல்கள் எழுதி யுள்ளார்கள். பிற்காலத்தில் திராவிடப் பிராமணர்கள் சங்கம் என்று சென்னையிலேயே பதிவு செய்திருக்கி றார்கள்.
பிராமணர்களைத் திராவிடர் என்று ஆதிசங்கரர் கூறியதைப் பார்ப்போம்.
“தவ ஸ்தன்யம் மன்யே தரனிதர - கன்யே ஹ்ருதய:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம் மிவ!
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு - ராஸ்வாத்ய த்வயத்
கவீனாம் ப்ரௌடானா - மஜனி கமனீய: கவயிதா!’’
தமிழில்: அம்மா, உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்து பெருகும் பாற்கடல். கலை வாணியே அந்தப் பாலாக உருவெடுத்தது போல் தோன்றுகிறது! உன்னால் கருணையுடன் தரப்பட்ட, பாலைக் குடித்த திராவிடக் குழந்தை ஒருவன், கற்றறிந்தோர் போற்றும் பெருங்கவிஞனாக ஆகி விட்டான் அன்றோ?”
- ஆதிசங்கரர், சௌந்தர்ய லகரி, பாடல் எண்: 75.
திராவிடக் குழந்தை (திராவிட சிசு) என்று ஆதி சங்கரர், ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகிறார் என்று விளக்க மளிப்போரும் உளர். இல்லையில்லை ஆதி சங்கரர் தம்மையே திராவிட சிசு என்று கூறிக் கொண்டார் என்று விளக்கமளிப்போரும் உளர்.
இவ்விருவரும் ஆரிய பிராமணரே! இவ்விருவரில் யாரைச் சொன்னாலும் பிராமணரைத் திராவிடக் குழந்தை என்று சொன்னார் என்பதாகிறது. திருஞான சம்பந்தர், கௌனிய கோத்ர ஆரிய பிராமணர்!
பிரித்தானியா கலைக் களஞ்சியம் கூறுவதைப் பார்ப்போம்.
DRAVIDIAN, a name only applied in Indian usage to the ‘Southern’ group of the Brahmans q.v. But “Dravidian” is applied, unfortunately, to the indigenous peoples of India South of the Vindhyas and to the Nothern half of Ceylon; it should be confined to the languages of this area.
E.Thurston, Castes and Tribes of Southern Indian, i. (exhaustive introduction), 1999; Cambridge History of India vol I. (1923 ; R.D. Dixon, Racial History of Mankind (1921).
(Encylopaedia Britannica, Vol. 7. Edn. 15, (1947), p. 624)
(இம்மேற்கோள் தந்து உதவியவர் பேரா. த. செயராமன், இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர் (3), தமிழர் கண்ணோட்டம் கட்டுரை, ஏப்ரல் 2010.)
இதன் தமிழாக்கம்: “திராவிடன் என்பது இந்திய வழக்காற்றில் பிராமணர்களில் ‘தெற்கு’ குழுவினரை மட்டும் குறிப்பது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியா வில் விந்திய மலைக்குத் தெற்கேயும் இலங்கையில் வடபாதியிலும் உள்ள மண்ணின் பழங்குடி மக்களைக் குறிப்பதாயிற்று. இந்த மண்டலத்தின் மொழிகளை மட்டுமே இச்சொல் குறிப்பதாக வரம்பு கட்ட வேண்டும்’’.
தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்தான் திராவிடன் என்பது. கெடுவாய்ப்பாக, பிற்காலத்தில் மரபு வழிபட்ட மண்ணின் மக்களைக் குறிப்பதாயிற்று என்று கூறுகிறது பிரித்தானிய கலைக் களஞ்சியம்.
திராவிடர் என்ற சொல் தமிழர்களை ஒருபோதும் குறிக்காது. ஏனெனில் ஆரியர் சிந்து சமவெளிப் பகுதிக்குள் நுழையும் முன்பே இந்தியத் துணைக் கண்டமெங்கும் வளர்ச்சியடைந்த நாகரிகத்துடன், வளர்ச்சியடைந்த மொழியுடன், தமிழர் என்ற இன அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
திராவிடர் என்ற சொல் ஆரியர்களால் - ஆரியப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். சிந்து சமவெளிக்குள் புகுந்த ஆரியர்கள் வளர்ச்சியடைந்த நகர நாகரிகத்துடன் வாழும் தமிழர்களையும் வளர்ச்சியடைந்த அவர்களின் தமிழ் மொழியையும் பார்க்கிறார்கள். தமிழ், தமிழர் என்பதை த்ரமிள -- த்ரமிட - த்ரவிட - த்ராவிட என்று திரிபாக உச்சரித்தார்கள் என்று பாவாணர் கூறுகிறார். மற்றும் சிலரும் இவ்வாறு கூறுகின்றனர். “திராவிட’’ என்ற கொச்சைத் திரிபுப் பெயரைத் தமிழர்கள் ஏற்கவில்லை. எனவே, தமிழரைத் தமிழர் என்றும் தமிழர் வாழும் தாயகப் பகுதிகளை திராவிட என்றும் ஆரியப் பிராமணர்கள் அழைத்திருக்க வேண்டும்.
மேய்ச்சல் சமூகமாக இந்தியத் துணைக் கண்டத் திற்குள் நுழைந்த ஆரியர்கள் - பல நூறாண்டுகளுக்குப் பின், நிலைத்த சமூகமாகக் கங்கைச் சமவெளியில் வாழத் தொடங்கினர். அதனை ஆரிய வர்த்தம் என்றனர். ஆரிய வர்த்தத்தில் வாழும் ஆரியர்களும் ஆரியப் பிராமணர்களும் உயர்வானவர்கள். ஆரிய வர்த்தப் பிராமணர்கள் கௌட பிராமணர்கள். ஆரிய வர்த்தத்திற்கு வெளியே, விந்திய மலைக்குத் தெற்கேயும் வடமேற்கில் சிந்துச் சமவெளி மண்டல மான குசராத்திலும், இப்போதைய பாகிஸ் தானிலும் பரவி வாழ்ந்த பிராம ணர்கள் தாழ்வானர்கள். அவர் களைக் குறிக்கத் திராவிடர்கள் என்ற சொல்லைக் கௌட பிராம ணர்கள் கையாண்டிருக்க வேண் டும். ஏன்?
தங்களைத் திராவிடர்கள் என்று திரிபாகக் கூறுவதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் வாழும் நிலப்பகுதியை திராவிட நாடு, திராவிட தேசம், திராவிட பூமி என்று பிராமணர்கள் குறித் திருக்க வேண்டும். அதனால் ஆரிய வர்த்தத் திற்கு வெளியே தெற்கேயும் வடமேற் கேயும் வாழ்ந்த பிராமணர்கள் அனைவரையும் திராவிடர்கள் என் றார்கள். விரிந்து பரந்த நிலப்பகுதி களில் வாழ்ந்த திராவிட பிராமணர் களை மொழி வழி அடையாளம் காண பஞ்ச (ஐந்து மண்டல) திராவிடர்கள் என்று அடையாளப் படுத்தினார்கள்.
வடமொழியில் (சமற்கிருதத் தில்) கூறப்படும் 56 தேசங்களில் பாண்டிய தேசம், சேர தேசம், சோழ தேசம், திராவிட தேசம் என்பவை வருகின்றன. தமிழர் அனைவரும் திராவிடர் என்றால், பாண்டிய தேசம், சோழ தேசம், திராவிட தேசம் என்பவை தனித்தனி பெய ருடன் தனித்துவத்துடன் 56 தேசத் தொகுப்பில் இருந்திட வாய்ப்பில்லை.
ஆய்வாளர் பி. வி. ஜெகதீச அய்யர் 1918 இல் எழுதிய “புராதன இந்தியா’’ நூலில் 56 தேசங்களை தொகுத் துள்ளார்; அவற்றுள் சேர தேசம், சோழதேசம், பாண்டிய தேசம் ஆகியவற்றுடன் திராவிட தேசம்
என்பதும் தனியே குறிப்பிடப் பட்டுள்ளது என்று பேராசிரியர் த. செயராமன் தமது இனவியல் ஆய்வுக் கட்டுரையில் (தமிழர்கண்ணோட்டம்) குறிப்பிடுகிறார்.
எந்த வகையில் பார்த்தாலும் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. தமிழர்கள் - தமிழர்கள்தாம். பிராமணர்கள்தாம் திராவிடர்கள். எந்த வகை ஆராய்ச்சிக்கும் இடங்கொடுக்காமல், “திராவிட’’ என்ற பெயரை தமிழர் தலையில் சுமத்தினார் பெரியார். அவர் அவ்வாறு திராவிடத் திணிப்பு செய்த காலத்திலேயே தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்களைத் திராவி டர்கள் என்பதை ஏற்கவில்லை. நீதிக்கட்சியில், தெலுங்கர் தெலுங்க ராகவும், மலையாளி மலையாளியா கவும்தான் இருந்தார்கள். ஏமாளித் தமிழர்கள் தாம், பெரியாரின் திராவிடத் திணிப்பை ஏற்று, வெகு மக்கள் அளவில் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொள்ளத் தலைப் பட்டார்கள்.
பழைய சென்னை மாகாணத்திலிருந்து, தெலுங்கு, கன்னட, மலை யாளப் பகுதிகள் பிரிந்து போய் விட்டன. இப்பொழுதுள்ள தமிழ் நாட்டில் வாழும் தெலுங் கரோ, கன்னடரோ, மலையா ளியோ தங்களைத் திராவிடர் எனறு கூறிக் கொள்கிறார்களா? இல்லை. பின்னர் இன்னும் தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர் என்று ஏன் கூறிக் கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டில் வாழும் தெலுங் கர்களில் ஒரு சாரார் தங்களைத் தெலுங்கர் என்று கூறிக் கொண்டு தெலுங்கர் மாநாடு நடத்துகிறார்கள். சிலர் தெலுங்கு தேசம் கட்சியையே இங்கு தொடங் கியுள்ளார்கள்.
இங்கு மலையாளிகள், மலையா ளிகள் மாநாடு நடத்துகிறார்கள்; மலையாளிகள் சங்கம், கேரள சமாஜம் ஆகியவற்றை நடத்துகி றார்களே அன்றி திராவிடர் சங்கம் நடத்தவில்லை.
ஆனால் திராவிடக் கட்சிகள் இன்னும் ஏமாளித் தமிழர்கள் முகத்தில் திராவிட முகமூடியை மாட்டி விடுகின்றன. வரலாறு அவர்களை மன்னிக்காது! தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவை அண்மைக் காலமாக தி.க. தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் திராவிடர் திருநாளாக மாற்றிக் கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்களும், கன்னடர் களும் உகாதி விழா கொண்டாடுகிறார்கள், மலையா ளிகள் ஓணம் கொண்டாடுகிறார்கள்,
திராவிடர் கழகமோ தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடுகிறது.!
 திராவிடத் தலைவர்களுக்குத் தமிழ் இனத்தின் மீது இத்தனை காழ்ப்பு ணர்ச்சியும் வஞ்சகமும் ஏன்?
( இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள இணையதள மேற்கோள்கள் தந்தவர் தோழர் க. அருணபாரதி)

புதன், 20 ஏப்ரல், 2016

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்


மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். 
ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே.
மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
மர்மம் 1: நாம் ஏன் முத்தமிடுகிறோம்?
எச்சில் பரிமாற்றத்தில் மனிதர்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இயற்கையாகவே நடைபெறும் உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்க முடியவில்லை.
மர்மம் 2: நாம் ஏன் சிரிக்கிறோம்
என்டோர்ஃபின்ஸ் நம் மனநிலையை மேம்படுத்துவதற்காக நாம் சிரிக்கும் போது நம் உடலில் சுரக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எது சிரிப்பை வரவழைக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. சில நேரம் மிகப்பெரிய ஒரு நகைச்சுவை கூட சிலருக்கு சிரிப்பை வரவழைக்காமல் போகலாம்.
மர்மம் 3: நாம் ஏன் அசடு வழிகிறோம்
சரியான முறையில் அறிவியலால் பதிலளிக்க முடியாத மற்றொரு கேள்வி தான் இது. இருப்பினும் நெருக்கம் மற்றும் ஈர்ப்பை வளர்க்கும் அதிமுக்கிய காரணியாக இது விளங்குகிறது என நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நிகழ்வு நடக்கிறதோ என்னவோ.
மர்மம் 4: குணப்படுத்தும் திறன்
மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும். சிலருக்கு மட்டும் எப்படி குணப்படுத்தும் திறன் இருக்கிறது என்பதை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த குணமுடையவர்கள் சிலர், இதனை அண்டத்தின் ஆற்றல் திறனிடம் இருந்து பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது? விடை தெரியாத மர்மம் தான்.
மர்மம் 5: கனவுகள்
நாம் ஏன் கனவு காண்கிறோம்? அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவியல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது? தான் கனவில் கண்டதை நிஜ வாழ்வில் சந்திக்கும் உதாரணங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் உடலை பற்றிய வியக்க தக்க மர்மம் தானே!
மர்மம் 6: உடலில் இவ்வளவு நீரை கொண்டு என்ன தான் செய்கிறோம்?
நம் உடலில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரால் நிறைந்துள்ளது. இந்த அளவு குறைந்தால், நம் உடல் இயல்பற்ற முறையில் செயல்பட தொடங்கிவிடும். தண்ணீரே மனிதர்களுக்கு பிராதனமாக விளங்குகிறது. இவ்வளவு தண்ணீரை கொண்டு நாம் என்ன தான் செய்கிறோம்?
மர்மம் 7: உயிரினவொளியாக்கம்
நோய்வாய் பட்டிருக்கும் போதோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதோ ஒருவருக்கு உயிரின ஒளியாக்கம் ஏற்படலாம். ஹியர்வார்ட் காரிங்க்டன் என்பவர் எழுதிய "டெத்: இட்ஸ் காசஸ் அண்ட் ஃபினாமினா" என்ற புத்தகத்தில், உயிரினவொளியாக்கத்தை பற்றிய கருத்தை விளக்கியுள்ளார்.
தீவிரமான ஆஸ்துமா நோயாளி தூங்கும் போது, அவர் நெஞ்சில் இருந்து, நீல நிற ஒளி வெளிவந்துள்ளது.
அதே போல், ஒரு பையன் தான் இறந்தவுடன், அவன் நெஞ்சில் இருந்து நீல நிற ஒளி வெளிவந்துள்ளது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினவொளியாக்கமும் மிகப்பெரிய மர்மமாக விளங்குகிறது.
- See more at: http://www.manithan.com/news/20160420119631#sthash.oAZyj01R.dpuf

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016


மண்ணின் மைந்தர்களே !
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்களே !
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நாம்
மண்ணுள்ளேயே போகிறோம்…..
நாம் அனைவரும்
மண்ணின் மைந்தர்கள்
தானே !

தமிழா…

தமிழினம் மனித இனத்தின் வேர் , வெழியே தெரிவதில்லை

மாய உலகமிது

மாய உலகமிது
எதுவும் உண்மையில்லை – நம்பாதே
எதையும் நம்பாதே
யாரையும் நம்பாதே
எல்லாம் பொய்
யாரையும் எதையும்
உன்னால் மாற்ற இயலாது
மாற்றவும் வேண்டாம்
யாருக்காகவும் நீ மாறாதே !
நீ நீயாகவே வாழ் – முழுமையாக
உண்மையாக ! உறுதியாக !
நீயாக மாறிவிடு…..
உன்னைத்தேடு கண்டுப்பிடி
நீ யார் என்றறி
நீ உன்னை அறிந்தால்
இவ்வுலகமே உன்னை அறியும்

சனி, 6 பிப்ரவரி, 2016

புற்று நோயை முற்றிலும் அழிக்க வராமல் தடுக்க புதிய மருந்து

புற்று நோய் வந்து விட்டது எனும் எண்ணத்திலேயே பலர் இறந்து விடுகிறார்கள்.இக்குமருந்து இல்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர் இன் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். சிலர் அவர்களின் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை :
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும், தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016


என் கடவுள்...உன் கடவுள்...நம் கடவுள்:


முன்னொரு காலத்தில் எகிப்து நாட்டில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவனுக்கு கணிதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் பொருள் இன்மையாலும், தகுந்த ஆசிரியர் கிட்டாமையாலும் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்தது. அவனும் கணிதம் கற்றுக் கொள்ளும் தருணத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அந்த சமயத்தில் தான் அவர்களின் ஊருக்கு படித்த அறிஞர்கள் ரோமில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வந்து இருக்கும் செய்தியை அவன் கேள்விப்பட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். அவன் மிகவும் எதிர்பார்த்த தரும் இதோ அவன் அருகே வந்து உள்ளது. நிச்சயம் அந்த அறிஞர்களிடம் போனால் அவர்கள் தனக்கு கணிதம் கற்றுத் தருவார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அந்த அறிஞர்களிடம் சென்று தனது ஆசையை சொல்லுகின்றான். அவர்களும் அவனது ஆவலைக் கண்டு அவனுக்கு கற்றுத் தர சரி என்கின்றனர்.

முதலில் ரோம் நாட்டு அறிஞர் தான் கற்றுத் தருவதாக கூறி ஆரம்பிக்கின்றார்.
"முதலில் நாம் எண்களில் இருந்து தொடங்குவோம் சிறுவனே!" என்றுக் கூறி அவரிடம் இருந்த எழுத்துப் பலகையில் எதையோ எழுதிவிட்டு அவனிடம் அதைக் கொடுத்தார்.
"இதோ இந்த பலகையில் முதல் ஐந்து எண்களை எழுதி இருக்கின்றேன். இதை நீ படித்து முடித்த பின்னர் நாம் அடுத்த எண்களுக்கு போகலாம்" என்றார் அந்த ரோம் நாட்டு அறிஞர்.

ஆனால் ஆவலுடன் அந்த எழுத்துப் பலகையை வாங்கிப் பார்த்த சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. அங்கே அவனுக்கு புரியாத மாதிரி சில குறியீடுகள் இடப்பட்டு இருந்தன.

I,II,III,IV,V.

அவன் அவனது நண்பர்களில் கணித புத்தகங்களில் சில எண்களைப் கண்டு இருக்கின்றான். ஆனால் அவன் அந்த பலகையில் கண்ட எதுவுமே அவன் முன்னர் கண்டு இருந்த எண்களைப் போல இல்லை.

அவன் ஏமாற்றத்துடன் "மதிப்பிற்குரிய ஐயா! என்னை மன்னியுங்கள். நான் சில எண்களை ஏற்கனவே படித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் எதுவும் நீங்கள் எழுதி இருப்பதை போன்று இல்லை. அவை வேறுத் தோற்றம் உடையவை. தயவு செய்து எனக்கு ஏன் இவைகள் மாறுபடுகின்றன என்று கூறுகின்றீர்களா?" என்று கூறி விட்டு அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த ரோம் அறிஞர் மிகுந்த சினமுற்று "உனக்கு எண்கள் தெரியவில்லை. ஏனெனில் உனக்கு படித்த அறிவில்லை" என்று கூறி விட்டு அந்த பலகையை இந்திய அறிஞரிடம் கொடுத்தார்.

இந்திய அறிஞர் அந்த பலகையை கண்ட உடன் சிரித்தார். "சிறுவனே நீ சொல்லுவது சரிதான். இதில் எழுதி இருக்கும் எண்கள் தவறானவை தான். இரு நான் உனக்கு சொல்லித் தருகின்றேன்" என்று கூறி விட்டு அந்த எழுத்துப் பலகையில் இருந்த எண்களை அழித்து விட்டு வேறு எதையோ எழுதி விட்டு அவனிடம் அந்த பலகையை கொடுத்தார்.

"இதோ இவை தான் சரியான எண்கள். இவற்றை நீ படித்த பின்னர் நாம் மற்ற எண்களுக்கு போகலாம்" என்றார்.

அந்தச் சிறுவனும் ஆவலுடன் அந்தப் பலகையை வாங்கிப் பார்த்தான். ஆனால் இம்முறையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும் அந்த குறியீடுகள் அவன் முன்னர் கண்டு இராதவாறே இருந்தன.
1,2,3,4,5.

"ஐயா! மீண்டும் என்னை மன்னியுங்கள். இந்த குறியீடுகளையும் நான் இதற்கு முன் என் நாட்டினில் நான் கண்டதில்லை. வேறு ஏதாவது எண்கள் இருக்கின்றனவா?" என்று கூறி அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட அந்த இந்திய அறிஞரும் கோபம் அடைந்து "உனக்கு கணக்கு தெரியவில்லை. நான் எழுதி இருப்பதே உண்மையான கணக்கு! கற்க வேண்டும் என்றால் இவற்றைக் கற்றுக் கொள்" என்றார்.

அப்பொழுது  அந்த ரோம் நாட்டு அறிஞர் " அவனுக்கு கணக்கு தெரியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். ஆனால் உமது கணக்கு தான் சரியான கணக்கு என்பதை நான் ஒரு காலும் ஒப்புக் கொள்ள முடியாது. நீரும் அந்த சிறுவனைப் போலவே தவறான கணக்கை கற்று வைத்து உள்ளீர். எனது கணக்கே சரியான கணக்கு" என்று இந்திய நாட்டு அறிஞருடன் வாக்குவாதத்தை ஆரம்பித்தார்.

மிகு விரைவில் அவர்கள் இருவரும் காரசாரமாக சண்டை இட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். அதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் தான் இது வரை கற்று இருந்த கணக்கு தவறானதோ என்ற எண்ணத்தாலும் மனம் உடைந்து போய் அந்தச் சிறுவன் ஒரு ஓரமாய் நின்று அவர்களை சோகமாய் கண்டு கொண்டு இருந்தான்.

அந்தச்  சமயம் தான் அந்த சாது அங்கு வந்து சேர்ந்தார். இரு அறிஞர்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு சிறுவனோ சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றான். ஏதோ பிரச்சனை என்பதை அறிந்த அவர் 
"ஏன் குழந்தாய் சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றாய். என்ன நடந்தது" என்று பாசத்துடன் அந்த சிறுவனிடம் விசாரித்தார்.
நடந்த அனைத்தையும் அவன் அவரிடம் எடுத்து உரைக்க அவர் சிரித்தார்.

பின்னர் " அறிஞர்களே சண்டை இட்டது போதும். தீர்வுக் காணும் நேரம் வந்து விட்டது" என்றுக் கூறியவாறே அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவர்கள் அந்த சாதுவைக் கண்டு சண்டை இடுவதை நிறுத்தி விட்டு அவரின் அருகே வந்த உடன்தொலைவில் ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்களை வைத்து விட்டு அவர் அவர்களை நோக்கி " அறிஞர்களே அதோ அந்த கூடையில் உள்ள பழங்களில் இருந்து ஒவ்வொருவரும் இரண்டு பழங்களைக் எடுத்து வாருங்கள்" என்றார்.
அவர்களும் அவர் சொன்ன மாதிரியே சென்று இரண்டுப் பழங்களை எடுத்து வந்தனர்.
அப்புறம் அவர் அந்த சிறுவனை நோக்கி" சிறுவனே! நீயும் போய் அந்த கூடையில் இருந்து இரண்டு பழங்களை எடுத்து வா பார்போம்" என்றார்.
அவனும் அவர் சொன்ன மாதிரியே இரண்டு பழங்களை எடுத்து வந்தான்.
சாது சிரித்தார்.
"அறிஞர்களே!!! சற்று நேரம் வரை தனது கணக்குத் தான் சரியானது. அடுத்தவரின் கணக்கு தவறானது என்று சண்டை இட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நான் இரண்டு பழங்கள் என்று கூறிய பொழுது அனைவரும் சரியாக இரண்டு பழங்களையே எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றீர். இப்பொழுது சொல்லுங்கள், யார் கணக்கு சரியானது?" என்றார்.
அறிஞர்கள் முழித்தார்கள்.
"நீங்கள் அனைவரும் கற்றக் கணக்கு சரிதான். உங்கள் ஊருக்கு ஏற்றார்ப் போல் வார்த்தைகளில் கணக்கைக் கற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் வார்த்தைகளை மட்டுமே கற்றுக் கொண்டு விட்டது தான் தவறாகி போய் விட்டது. வார்த்தைகளை தாண்டி நிற்கும் பொருளினை நீங்கள் மறந்து விட்டர்கள். எப்பொழுது நீங்கள் பொருளினை மட்டும் பார்க்க ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது தான் நீங்கள் உண்மையிலையே அறிஞர்கள் ஆவீர்கள். அறிந்து கொள்ளுங்கள் மனிதர்களே... கற்றது கை அளவு .. கல்லாதது உலகளவு!!!" என்று கூறி விட்டு அந்த சிறுவனை நோக்கித் திரும்பினார்.
"சிறுவனே நீ என்னுடன் வா. நான் உனக்கு கற்றுத் தருகின்றேன். இவர்கள் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது." என்று கூறி விட்டு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"அவர்கள் இன்னும் கற்க வேண்டி இருக்கின்றதா?" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தான் அந்த சிறுவன்.
"ஆம்! அவர்கள் ஓரளவு கற்றதுமே அவர்கள் கற்றது தான் எல்லை. அதைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற அகந்தையுள் மாட்டிக் கொள்ளுகின்றனர். அந்த அகந்தை இருக்கும் வரை அவர்கள் கற்ற உண்மையான பொருளை அவர்கள் அறிய முடியாது. அந்த அகந்தை வட்டத்தை அவர்கள் எப்பொழுது உடைக்க கற்றுக் கொள்ளுகின்றார்களோ அப்பொழுது தான் அவர்கள் பிறருக்கு கற்றுத் தர தயாராவார்கள். இந்த அறிஞர்கள் இன்னும் தயாராக வில்லை." என்று கூறி விட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அந்த சிறுவனும் அவரைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தான்.

இதைப் போன்றே மதங்களும் சரியாக அறியப்படாமல், என் மதம் பெரியது... என் மதம் தான் கடவுளை அடையும் வழி என்று வெறும் வார்த்தைகளாக அறிந்துக் கொள்ளப் பட்டமையால் பல சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிக்கோல் இட்டுக் கொண்டு இருக்கின்றன.


அவனை வார்த்தைகளால் அறிய முயலும் மதங்கள் வெறும் மதங்களாய் தேங்கி நின்று விடுகின்றன. இறைவனை வெறும் வார்த்தைகளால் அறிய முடியாது, உணர மட்டுமே முடியும். உணர்தல் அன்பினாலையே முடியும். அன்பே அவனை அடையும் வழி என்பதினை உணர்த்தும் மதங்கள் அவனை அடையும்  வழியின் வாயில்கதவாய் நிற்கின்றன. உலகின் அனைத்து மதங்களையும் ஒழுங்காக புரிந்துக் கொண்டோம் எனில் அனைத்தும் ஒரே வழியைத் தான் காட்டுகின்றன என்பதினை அறிவோம்.

தயவு செய்து வார்த்தைகளில் இறைவனை தேட வேண்டாம். அவன் தென் பட மாட்டான்.
வார்த்தைகளைக் கடந்து பொருள் நிற்பதுப் போல, மதங்களைக் கடந்து இறைவன் நின்று கொண்டு இருக்கின்றான்.
வாழ்வின் பொருளாய்.!!!
பரம் பொருளாய்!!!

அதை உணர்ந்துக் கொள்வோம். அப்படியே அவனையும் அன்பினால் அறிந்து கொள்வோம்!

அன்பே இறைவன்!!!  

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...