புதன், 31 ஜனவரி, 2018



இல்லுமினாட்டி 





சிறிது விசித்திரமானதொரு தலைப்புதான். வில்லங்கமானதாகவும் இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை, இன்று இல்லுமினாட்டிகள் என்ற ஒரு சொல்லாடல் நம் மத்தியிலே பரவலாக பரவி வருகின்ற பொழுது, இராஜ இராஜ சோழனையும் நாம் இழுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், முதலில் இல்லுமினாட்டி என்று இன்றைக்கு கூறப்படும் அந்த கூற்றினைப் பற்றி நாம் சிறிது கண்டு விடலாம்.

இல்லுமினாட்டி - இன்றைக்கு உலக முழுவதையும் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கும் வண்ணம் அதிகாரம் படைத்த 13 குடும்பங்களைக் கொண்ட ஒரு குழு இது. மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து அனைத்து வணிகங்களையும் சரி உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சரி கட்டுப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. பல்வேறு நாட்டின் தலைவர்களை கொலை செய்வது, வங்கிகளை வைத்துக் கொண்டு மக்களையும் நாடுகளையும் அடிமைகளாக ஆக்குவது என்று அதன் நடவடிக்கைகள் அநேகம். கிட்டத்தட்ட நமது நகரத்தின் உள்ளாட்சி செயலாளராக யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதற்கொண்டு தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக அது இருக்கின்றது. சுதந்திரமாக இருப்பதாக மனிதர்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய குடும்பங்கள் தான் அவர்கள்.

இவ்வாறு தான் இன்றைக்கு இல்லுமினாட்டிகளைப் பற்றிய செய்திகள் நம்மிடையே பரவலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் முற்றிலுமாக மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த கூற்றில் பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு சில நபர்கள் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையுமே கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், இல்லுமினாட்டிகளைப் பற்றிக் கூறுவோர், அவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறார்களேத் தவிர, அவர்கள் அந்த ஆற்றலை எப்படி அடைகின்றார்கள் என்பதனைப் பற்றி கூறுவதில்லை. இதனால், இல்லுமினாட்டிகளை வீழ்த்த முடியாது, ஒரு சாதாரண மனிதனால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்றொரு பிம்பமும், வரலாற்றில் அவர்களைப் போல் எவருமே இருந்ததில்லை, இது இதுவரை மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் தீயசக்தி என்பன போன்ற பிம்பமுமே தான் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையோ முற்றிலும் வேறாக இருக்கின்றது. மனிதர்கள் இல்லுமினாட்டிகளை காலந்தோறும் சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பல சமயங்களில் தோற்று இருக்கின்றனர், சில நேரங்களில் வென்றும் இருக்கின்றனர். இது நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம். இது புதியதொரு பிரச்சனை அல்ல. இதை மக்களை உணரச் செய்வதற்கு இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவோர் தவறி விடுகின்றனர்.

பிரச்சனையில்லை...நாம் முயல்வோம்!!! முதலில் இல்லுமினாட்டிகளைப் பற்றிய முக்கிய விடயங்களாக கூறப்படுவதை நாம் காணலாம்.

  1. உலக முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
  2. அவர்களுக்கு உடன்படும் மனிதர்களை பல்வேறு தேசங்களை ஆள செய்கின்றார்கள்.
  3. எதிர்க்கும் தலைவர்களை கொலை செய்கின்றார்கள்.
  4. மக்களை பொழுதுபோக்கு என்ற மாயையில் சிக்க வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்கின்றார்கள்.
  5. எதற்கும் பயன்படாத கல்வியை பரப்பி மக்களை விலங்குகளைப் போல் மாற்றுகின்றார்கள்.
  6. வங்கிகளை கையில் வைத்து கொண்டு உலகின் நிதியினை கட்டுப்படுத்துகின்றார்கள்.
இவைதான் இல்லுமினாட்டிகளைப் பற்றி கூறப்படும் முக்கியமான விடயங்கள். இப்பொழுது இந்த விடயங்களை நாம் வரலாற்றின் அடிப்படையில் காண வேண்டியிருக்கின்றது. அப்படி கண்டோமே என்றால்,

தங்களது ஆளுமைக்குள் வராத மற்ற தேசங்களின் மீது போர் தொடுத்துச் சென்று அவற்றை வென்ற அரசர்கள் யாவரும் இல்லுமினாட்டிகள் தான். அது அசோகனாகட்டும், சீசராகட்டும், இராஜ இராஜ சோழனாகட்டும், பாபராகட்டும், ஆங்கிலேய பேரரசாகட்டும் - இவர்கள் அனைவரும் இல்லுமினாட்டிகள் தான். ஏன், வேறொரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஒவ்வொரு மனிதனுமே இல்லுமினாட்டி தான்.

அதிகாரம் என்பது அந்தளவு போதையூட்டக்கூட ஒன்றுதான். மனித வரலாறு முழுவதும் அதிகாரத்திற்கான மோதல்களைத்தான் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

கிழக்கு கடல் முழுவதும் பயணம் செய்து போர் பல புரிந்து வெற்றி பெற்ற இராஜ இராஜ சோழன், தான் வெற்றி புரிந்த நாடுகளை ஆட்சிப் புரிய அந்த தேசத்து நபர்களைத் தேர்வு செய்தானா அல்லது அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான சோழ மனிதர்களை தேர்வு செய்தானா?

ஐரோப்பிய கண்டம் மற்றும் ஆப்பிரிக்க கண்டம் ஆகிய கண்டங்களில் பல இடங்களைப் போர் புரிந்து வெற்றி கண்ட சீசர், ரோம பேரரசினைச் சார்ந்தவர்களையோ அல்லது தனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்ற அந்தந்த தேசத்து மனிதர்களையோ தானே அந்த தேசங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தான்.

மற்ற தேசத்து அரசர்களை போரில் வெற்றி கண்டு, அவர்களது குடும்பங்களை கொன்ற பின்பு, தனக்கு வேண்டியவர்களை அந்த பதவிகளில் வீற்றிருக்க செய்வது என்பது அன்றிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறதே.

மேலும், சூழ்ச்சியால் அதிகாரங்களை கைப்பற்றுவதும் வரலாறு முழுவதிலும் நிகழத்தானே செய்திருக்கிறது. அசோகனின் பேரனான பிரகரதத்தனை, பெர்சிய வம்சாவளியைச் சார்ந்த புஷ்யமித்தர சுங்கன் என்ற படைத்தளபதி சூழ்ச்சியால் கொன்று, அரசைப் பிடித்ததை வரலாறு நமக்கு கூறத் தானே செய்கின்றது. ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணமும் சூழ்ச்சியினால் நிறைவேறியது என்ற கூற்றும் நிலவத்தானே செய்கின்றது. எனவே சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடிப்பது என்பதும் புதுமையானதொன்று அல்ல.

அவ்வாறு சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடித்தவர்கள் இல்லுமினாட்டிகள் என்றால், புஷ்யமித்திர சுங்கனும் அவனைப் போன்றவர்களும் இல்லுமினாட்டிகள் தான்.

மேலும், பொழுது போக்கினால் மக்களை அறியாமையில் வைத்திருப்பது என்பதும் புதுமையானதொன்று அல்லதான், ரோமர்கள் காலத்து அடிமை சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், ரோமர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துமஸ் கொண்டாட்டங்களும், மன்னர் காலங்களில் போற்றி வளர்க்கப்பட்ட கோவில் திருவிழாக்களும் மக்களை மயக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் தானே. மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும். அறியாமையும் சிந்திக்காத தன்மையும் அதிகாரத்திற்கு அந்தளவு முக்கியமானவை. எனவே காலத்தில் நாம் எந்தளவு பின் நோக்கி சென்றாலும், அப்பொழுதெல்லாம் மக்களை பொழுது போக்கினால் அரசுகள் மயக்கி வைத்திருப்பதை நம்மால் காண முடியும். எனவே இதிலும் புதுமை இல்லை.

சிந்திக்க வைக்காத கல்வி முறையை இல்லுமினாட்டிகள் பரப்புகின்றார்கள் என்று கூறினால், சூத்திரன் எவனும் படிக்கவே கூடாது, கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய கூடாது என்று கூறி அதிகாரத்தினால் மக்களை அறியாமையில் கல்லாமல் இருக்க வைத்த பிராமணர்களும் அவர்களுக்குத் துணை போன அரசர்களும் இல்லுமினாட்டிகளின் முன்னோர்கள் ஆவார்கள். அவ்வாறே விவிலியத்தை வேறு எவரும் படிக்கக் கூடாது, இலத்தினைத் தவிர வேறு மொழியில் மொழிபெயர்க்க கூடாது என்று கூறி அவ்வாறு செய்தவர்களை தீயிட்டுக் கொளுத்திய ரோம கத்தோலிக்கத் திருச்சபையும் இல்லுமினாட்டியின் முன்னோர் தான்.

மேலும் வங்கிகளைக் கொண்டு இல்லுமினாட்டிகள் மக்களின் நிதி நிலைமைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்றும் நிலவுகின்றது. இந்த கூற்று உண்மையானது தான்...ஆனால் புதிதானது அல்ல. ஏனென்றால் 'பணம்' அல்லது 'நாணயம்' என்ற ஒன்றினை இவர்கள் கூறுகின்ற இல்லுமினாட்டிகள் கண்டுபிடிக்கவில்லை. அவை என்றோ புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரோம பேரரசின் கீழ் இருந்த யூதர்கள், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம நாணயங்களின் மூலமாகவேதான் வரியினைக் கட்ட வேண்டியிருந்தது. ரோம நாணயங்களை அச்சிடும் உரிமை ரோம மன்னனுக்கே இருந்தது. எனவே அந்த நாணயத்தின் மூலமும் ரோமர்கள் மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தி இருந்தனர். சோழர்களும் தங்களுக்கென்று தனி நாணயங்களை வைத்துத் தான் இருந்தனர். ஒவ்வொரு பேரரசும் சிற்றரசை கப்பம் கட்ட சொல்லுவது என்பது இன்றிருக்கும் கடன்களுக்கு வட்டியினை கட்டுவது போன்றதொரு செயலாகத் தான் இருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவனொருவன் நாணயத்தினைக் கண்டு பிடித்தானோ அவன் தான் வரலாற்றிலேயே மிகப் பெரிய இல்லுமினாட்டியாக இருந்திருப்பான்.

மேலும், இல்லுமினாட்டிகள் அனைத்து வணிகங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர் என்ற ஒரு வாதமும் இங்கே இருக்கின்றது. அதனடிப்படையில் பார்த்தோமே என்றால், இங்கிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், போத்திஸ், கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கோவை பழமுதிர் நிலையம், ரிலையன்ஸ் என்பன போன்ற அனைத்து நிறுவனங்களையும் இல்லுமினாட்டிகளாக கருதலாம் தான்.

எனவே இல்லுமினாட்டிகள் என்பது, ஏதோ இதுவரை இருந்திராத புதியதொரு தீய இயக்கம் அல்ல. முற்காலங்களில் இருந்த அதே தீய வழிமுறைகள் தான் இன்றைய காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் மாறி வந்திருக்கின்றன. அவ்வளவு தான். எவ்வாறு அழியவே அழியாது என்று கருதப்பட்ட ரோம பேரரசும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியமும் வீழ்ந்தனவோ, அவ்வாறே ஒரு காலத்தில் இந்த இல்லுமினாட்டிகள் என்ற ஒன்றும் நிச்சயம் வீழ்ச்சி அடையும். ஆனால் அன்று, அவர்களுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வேறொருவர் வந்திருப்பார்.

ஏனென்றால் இல்லுமினாட்டிகள் போன்ற நபர்கள், அவர்களது பலத்தினால் அதிகாரங்களை பெற்று இருப்பதில்லை. மாறாக மக்களின் பலவீனங்களின் மூலமாகவே தான் அவர்கள் அவர்களது அதிகாரங்களை அடைந்து இருக்கின்றார்கள்.

டால்ஸ்டாய் அவர்கள் இந்தியாவின் விடுதலையைப் பற்றி கூறும் பொழுது ஒன்றைக் கூறுவார் :

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுதுதங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால்,அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.'

அதே நிலை தானே இன்றும் தொடர்கின்றது. வெறும் 13 குடும்பங்கள் உலக மக்கள் அனைவரையும் ஆட்சி புரிகின்றனர் என்றால், தவறு யார் மீது இருக்கின்றது? அதுவும் மன்னராட்சி காலம் முடிந்து மக்களால் தேர்வு செய்யப்படும் மனிதர்கள் ஆட்சி புரியக்கூடிய மக்களாட்சிக் காலத்தில் இத்தகைய நிலை இருந்தால், மக்களைக் குறை கூறாமல் வேறு எவரையோ குறை கூறி என்ன பயன்?

மனிதர்கள் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் அன்புடன் பொதுநலத்துடன் வாழ்ந்து வரக்கூடிய ஒரு தேசத்தில், அந்த மக்களை மீறி யாரால் என்ன செய்து விட முடியும்? அதே சமயம், சுய நலத்துடன் இருக்கின்ற இரு சகோதரர்களுக்குள் ஒரு சின்ன வதந்தி கூட பெரிய விரிசலை ஏற்படுத்தி மாபெரும் சேதத்தை அந்த வீட்டிற்கே உண்டாக்கி விட முடியும்.

இதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. மக்களை ஏமாற்றுபவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். மக்களோ பிரிந்து இருக்கின்றார்கள், அல்லது ஆசைகள், பயம், சுயநலம் போன்றவற்றின் காரணமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் பிரிந்து இருப்பதினால், அவர்களை மற்றைய ஒரு சில நபர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப அடக்கி ஆண்டு கொள்கின்றனர். இதனை  வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது. இனிமேலும் காண முடியும்.

எனவே, நம்முடைய இன்றைய மோசமான சூழல்களுக்கு இல்லுமினாட்டிகள் தான் காரணம் என்று மூன்றாம் நபரை காரணம் காட்டுவதை விட, 'நாம் ஒழுக்கமானவர்களாக, சுயநலமற்றவர்களாக அன்புடையவர்களாக இல்லை...அதனால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...நம்முடைய சமூகமும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது' என்று நம்மை நாமே திருத்திக் கொள்ள செய்வதே உண்மையான மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்...அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வதற்காகத் தான் நாம் இங்கே வந்திருக்கின்றோம் என்ற எண்ணம் பரவ வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதுவே தான் ஒரே வழி.

ஒற்றுமையே என்றும் பலமாம்...!!!

புதன், 17 ஜனவரி, 2018


தமிழ் மொழி உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,




பதிவு T1 :: ஏன் தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி !!!
ஒரு மொழியில் இருந்து மற்றும் ஒர் மொழிக்கு எதேச்சையாக மூன்று சொற்களுக்கு மேல் ஒற்றுமை வரவே முடியாது .
தமிழ் மொழியில் இருந்து உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரு ஒழுங்கு அமைப்புடன் கூடிய சொல் , தொனி தொடர்பு 20 % க்கு அதிகமாக உள்ளது .
படிப்படியான மொழி திரிபு வந்திராவிட்டால் இது நிகழமுடியாது .
ஆங்கிலம் தமிழில் இருந்து திரிந்து திரிந்து வந்த ஒரு மொழியே . பழைய ஆங்கிலத்திற்கும் ( Old ENGLISH ) தமிழுக்குமான தொடர்பை நிறுவுவது மிக இலகு .
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + குறிப்பு = script
S + வாள் = sword
S + இடம் = sஇட(ம்) = s + ite = site
S + தண்டு ( நிலைநிற்றல் ) = stand
S + கப்பல் = s+கப் = ship
S + கரை = shore
S + சமம் = same
S + சங்கு ( சங்கு கீதம் ) = song
S + அளதி ( உப்பு ) = salt
S + ஓது ( படி , கல் ) + 3து - ஸ்டது = study
S + உப்பர் ( உயரம் ,மேல்பக்கம் , சிறந்த ) = super
S+தார் = star ( தாரகை = தார் + கை = ஸ்+தார் = star )
S + ஏலம் = s + ஏல் = sale
S + ஆக = s+ஏக் = saku
S + தலம் = stall
வாய் + ஸ் = ( voi-ce ) voice
ஆங்கில எழுத்து A to Z தமிழ் எழுத்துக்களில் இருந்து வந்தவையே . வந்த முறையை தனி அட்டவணையில் பார்க்கவும் . ( பதிவு M :1 )

பிறப்பு - Birth.
பொறு - Bear.
பதின் - Ten.
உருண்டை - Round.
உருளை - Roll
அரிசி - Rice
தேங்குதல் - Tank
ஈனுதல் - Earn
களி (மண்) - Clay.
காசு = cash
பணம் = fund
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
M + ஆக்கு = m + ake = make
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
பொத்தகம் = புத்தகம் = புக் + அகம் = Book
தகதக -> தங்கம் ( அரி ) - > சொலித்தல் = சொலிக்கும் அரி = jewellary
தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது.
நாடு , நாட்டியன் என்ற தமிழ் சொல் இல் இருந்து வந்த ஆங்கில சொல் தான் நாட் + டியன் = nat + ion = NATION .
English language இல் உள்ள 14,286 சொற்களில் 286 நவீன சொற்கள் தவிர்ந்து மீதி 14 000 சொற்களும் தமிழில் இருந்து வந்தவையே .
( பதிவு : M 4 பார்க்க )
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஜரோப்பிய மொழிகளின் தாய் மொழியும் தமிழே .
-------------------------------
"" FRENCH மொழியில் :
சாயங் காலம் = = சாயல் = SOIR
நாக்கு ஒலியை = நாக்ஸ் பிரஞ்சு
நாய்ஸ் ஆங்கிலம்
பிரஞ்சு மொழி , சித்திர எழுத்தான சீன மொழி , சிங்கள மொழி , அரபு மொழி , யூதர்களின் எபிரேய மொழி ஆகியவை தமிழ் மொழியில் இருந்து வந்த முறை , இயங்கு முறையை தனி பதிவில் பார்க்கவும் . ( பதிவு M 100 ல் ) ""
தமிழ் மொழி தோன்றிய நாள் முதல் இன்று வரை ஏழு வேறு வேறு எழுத்து முறை இருந்தது . பேச்சுமொழி தமிழ் மொழியாகவே இருந்தது .
உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
இதில் ப ழகர எழுத்து முறை இன்று யூதர்களின் Hebru எழுத்து முறையாக உள்ளது . , சித்திர எழுத்து சீனர்களின் எழுத்தாக உள்ளது .
தொன்மை மொழியான தமிழுக்கும் பழந்தமிழுக்கும் பெரிதும் வேறுபாடில்லை .
ஆங்கிலத்தில் 20 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கம் தமிழ் மொழியில் இருந்து வந்து தமிழுடன் தொடர்பு உள்ள வரை வாழ்ந்தது , தமிழ் மொழி தொடர்பு அறுந்ததும் இறந்து விட்டது .
சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி . உலகில் ஒரு நாள் kyஒரு பொழுது கூட பேசப்படாத மொழி சமஸ்கிருதம் ஆகும் .
இரண்டு அல்லது மூன்று தமிழ் சொற்களினால் ஒட்டப்பட்ட சொற்கள்தான் சமஸ்கிரத சொற்கள் . உடைத்தால் தமிழ் சொற்கள் வரும் ( சிறிய எண்ணிக்கையில் கிரேக்க திரிந்த சொற்களும் உள்ளது )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
தமிழ் ஓர் இயங்கு மொழி , சமசுகிருதம் செத்தமொழி .
- திராவிடம் :
தமிழில் இருந்து உருவான ஒரு நாகரீகம் தான் திராவிட நாகரீகம் .
திராவிட மொழிகள் அனைத்துக்கும் தாய் தமிழே .
ஆபிரிக்க மொழிகள் அனைத்துக்கும் அடி ஆணிவேர் தாய்மொழி தமிழே .
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
ஆதி மொழிகளான தமிழ் , சமசுகிருதம் , சீனம் , ஹிப்ரூ , கிரேக்கம் , இலத்தீன் , ஆகியனவற்றை ஆராயும் போது காலக் கணக்கிலும் தமிழ் அறப்பழமை வாய்ந்ததாகத் தெரிகிறது .
தமிழின் பழமை- உலகின் எந்த மொழியும் எட்டிவிட இயலாத காலக்கட்டத்தில் உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
யூத இனம் தமிழ் இனத்தில் இருந்து பிரிந்த ஒரு கிளை இனம் .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு அர்த்தம் ; கருத்து ; பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .
மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான்]
உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகள் யாவும் தமிழின் கிளைகள் என்பதற்கு நம்மிடம் கிடைத்துள்ள இரு மாபெரும் ஆயுதங்கள் : ஒப்பு , மறுப்புச் சொற்கள் .
உலக மொழிகளின் அனைத்துக்கும் ஒப்பு சொற்கள் , எதிர்மறைச் சொற்கள் தமிழே :
( பதிவு M : 2 பார்க்கவும் )
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழின் ஆதிக்கம் இல்லாத மொழிகள் உலகத்தில் எதுவுமே இல்லை .
- தமிழின் பரப்பு உலகெங்கும் உள்ளது .
- தமிழ் சொற்கள் இல்லாத உலகமொழியில்லை .
-தமிழ் இலக்கணம் பயன்படுத்தாத உலகமொழியில்லை .
-----------------------------
சிலர் கேட்கலாம் அந்த மொழிகளிலிருந்து தமிழ் பிறந்திருக்காதா , தமிழ்ச் சொல் உருவாகி இருக்காதா என்று .
கி.பி ( பின் ) ஆறு அல்லது எட்டாம் நூற்றாண்டிற்கு முன் உலகில் ( 99% ) பல மொழிகள் தோன்றவே இல்லை !
கி.மு ( முன் ) ஐந்தாம் நூற்றாண்டின் முன் உலகில் இருந்த மொழிகள் : இலத்தீன் , சமஸ்கிருதம் ( ஒரு பேசப்படாத மொழி ) , சீனம் ,ஹிப்ரூ, கிரேக்கம் . இவை ஐந்தும் தமிழில் இருந்து திரிந்த மொழிகள் ஆகும் .
கி.மு 3000 க்கு முன் உலகில் இருந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே !
-----------------------------
"" - இருக்கு நூல் ( வேதங்கள் ) கூறுவதாவது: உலகில் ஒலி முதலில் எழுந்தது .
- பைபிள் கூறுவதாவது : உலகில் ஒரே மொழியும் ஒரே சப்தமாய் இருந்தது .
- குர் ஆன் கூறுவதாவது : உலகில் முதலில் ஒலி இருந்தது . ""
----------------------------------
தமிழ் நாடும் - இலங்கைத் தீவும் - கண்டத் திட்டுகளும் ஒன்றாய் இருந்த பெரு நிலப்பரப்பு தமிழ் தோன்றிய இடம் .
---------------------------------
 முதல் 1920 ல் ஈழம்-யாழ்பாணத்தில் ஈழத்து அறிஞர்களால் குமரிக்கண்டம் , லெமோரியா , தமிழர் நிலம் உலகின் முதல் நிலம் என்ற நூல் வெளியிடப்பட்டது .
#1963 ல் இயற்கை மொழிக்காவலர்,மொழிஞாயிறு " தேவநேயப் பாவாணர் " முதன் முதலில் தமிழ்தான் ஞாலமுதன்மொழி , உலக மொழிகளின் தாய் என கூறியவர் .
20 மொழிகளில் முழுமையாக ஆளுமை அவருக்கு இருந்தது . LATIN - GREC -HEBRU தமிழில் இருந்து வந்த முறையை அவர் எழுத்து மூலம் நிறுவினார் .
# 2006 ல் எம்மொழியும் எம் மொழி - பன்மொழி அறிஞர் ,அகில மொழி மேதை சாத்தூர் சேகரன் ஐயாவிற்கு 170 உலக மொழிகளில் முழுமையான ஆளுமை இருந்தமையால் தமிழில் இருந்து 170 உலக மொழிகள் பிறந்த முறையை தமது நூல்கள் ஊடாக வெளியிட்டு உலகின் மூத்த இனமும்,மொழியும் தமிழர்களுடையது என உலகிற்கு பறைசாற்றினார் .
---------------------------------

புதன், 12 ஜூலை, 2017

ஆங்கிலத்திலும் இரண்டறக் கலந்துள்ள தமிழ் ! தமிழ் சொற்கள் அறிவோம்!

சுமார் 60% விழுக்காடு ஆங்கில வார்த்தைகளை நாம் சொல்லாய்வு கொண்டு ஆராய்ந்தால் தெரியவரும் . அத்தகைய சொல்லாய்வு ( Etymology ) செய்த சொற்களை சிலவற்றை காண்போம் . படத்தில் கொடுக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களோடு ஸ்(S) என்ற வார்த்தை பயன்டுத்தி மருவி வந்த ஆங்கில சொற்களை கவனிக்கவும் .
பெரும்பாலான ஆங்கில சொற்கள் தமிழுடன் நேர் தொடர்பு கொண்டவையாக இருக்கிறது , மீதம் உள்ள ஆங்கில சொற்கள் லட்டின் மொழியில் இருந்து மருவி இருக்கும் பட்சத்தில் , லட்டின் சொற்களை சொல்லாய்வு கொண்டால் ,அவை மருவி இருக்கும் இடமும் தமிழே .
குறிப்பாக மற்றொன்டையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும் அதாவது இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசும் இன்றைய தமிழில் 60% விழுக்காடு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல் அழித்து இருக்கிறோம் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.எத்தனை விவாத மேடைகளாக இருக்கட்டும் , எத்தனை பட்டிமன்றகளாக இருக்கட்டும் , பொது தளமாக இருக்கட்டும் , எப்படி கொண்டு ஆராய்ந்தாலும் சரி , தமிழ் வளர்ந்திருக்கிறதா ? ,அழிந்து இருக்கிறதா ? அல்லது அழிந்து விட்டதா ? என்ற கேள்வி எழும் நிலையில் மெய்யான முடிவுகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை தாண்டி சென்று அழிந்து விட்டது என்ற பொருள் பெரும் பெறுவதற்கான முன் நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம் .
சிலர் ..இல்லை இல்லை அதெல்லாம் அழியாது என்று வாதாடுவார்கள் ..அது எப்படி ? என் மகன் , மகள் ,பேரன் ,பேத்தி டாடி மம்மி என்று பேசினால் தமிழ் அழியும், அவை அழியாது என்று கூச்சலிடுவார்கள்.சரி அப்படி இருக்கையில் இன்று மெரும்பாலான தமிழ் மக்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகள் அறிந்ததுண்டா என்று சோதித்தால் இன்று தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில் , இன்றைய நாள் {30-06-2013}கணக்கு கொண்டு பார்த்தால் குறைந்த பட்சம் 50 லட்சம் தமிழர்களுக்கு சொந்த தாய் மொழி தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், அறிந்து இருகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மிகையே . முடிவுகள் 100% விழுக்காட்டில் 10% விழுக்காடு கூட தேராது ..சரி வாங்க அத்தகைய வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் , பயன் படுத்துவோம் , பலரை பயன்படுத்தவும் செய்வோம் .
பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...

செவ்வாய், 11 ஜூலை, 2017

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி


களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்
இந்த காலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரைவிட சிறப்பாக காட்டி கொள்ள முனைந்தனர்.
இதில் இருவர் சேர வில்லை, ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவர் தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன்.
அதே நேரத்தில் இந்த பார்ப்பன மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துகொண்டு எங்காவது கூலி வேலைக்கு தான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பார்ப்பனிடம் கூலி வேலை செய்ய வேண்டும்
முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்று நோக்க வேண்டியது என்ன வென்றால், இந்த மக்கள் புரட்சி காஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்க வில்லை.
இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, அனால் நமக்கு இந்த காலம் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் - கள பறையர், அஃதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர். இந்த புரக்ட்சிக்கு பின் அவர்கள் பல ஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பார்ப்பனருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினார்.
முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் - ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை - திரையன் - (Today's dharmapuri)
2. வேங்கடம் - புள்ளி - (Today's Tirupathi)
3. மிலாடு - காழிமலையன் - (Today's Thirukoilur)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (Today's Dottabeta - Ooty)
5. முதிரமலை - இளங்குமணன் - (Today's Palani)
6. நடுநாடு - இடக்காலி - (Today's center of Karnataka)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(Today's Mysore)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
பார்ப்பனர் வருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே (Like City states of Greece) இருந்த்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலைய வில்லை. மக்கள் அமைதியாக வாழ வழி செய்தனர்.
கி.பி. 300-ல் பாரசீகத்திலிருந்து வந்து தொண்டைமண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன் காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்பிராச்சியத்தை உருவாக்கினான்.
இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள்,
இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டுவிட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர்.
தமிழகத்தில் வருணாசிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8ஆம் நூற்றாண்டு கால கட்டமே
ஆக மொத்தத்தில்,
களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
- கிருஷ்ணவேல் தி.எஸ்

செவ்வாய், 9 மே, 2017

மனித இனத்தின் தோற்றம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? மதங்கள் கடவுள்கள் என்ற ஓர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? இவை மிகப்பெரிய கேள்விகளே.
பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருகை தந்தனர் எனவும், அவர்கள் பூமியில் தங்கம் என்ற கனிமத்தை எடுக்கவே வந்தார்கள் எனவும் கடந்த பதிவில் பார்த்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக உண்மைத் தன்மைப் பற்றியும், மனித இனத்தின் தோற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ள அதிர்ச்சிமிக்க தகவல்களை பார்க்கலாம். முதல் பதிவை பார்வையிட இங்கே அழுத்தவும்
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கத்தை எடுக்கவே வந்தார்கள் என்பதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கி.மு 3000 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த சுமேரிய நாகரீகம் ஓர், ஆதி நாகரீகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நாகரீகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துப் படிவங்களில் ஓர் விடயம் கூறப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து அநூனாக்கி (Anunnaki) எனப்படும் தமது கடவுள் பூமியில் தங்கத்தை எடுப்பதற்காக வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடவுள், அவர்களை (மனிதர்களை) தமது அடிமைகளாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை 1976ஆம் ஆண்டு Zecharia Sitchin ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்தன.
அதிலும் குறிப்பாக உலகில் முதல் மனிதன் ஆதாம் என பைபிள் கூறுகின்றதனை, அதற்கு முன்னராகவே சுமேரிய கல்வெட்டுப் படிமங்களில் உலகின் முதல் மனிதன் அடெமு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.
மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.
வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதை Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு.,
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
அதற்காக ஆரம்பகால பூமியில் புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து அவற்றின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என Zecharia Sitchin அடித்துக் கூறுகின்றார்.
இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக இன்று வரை மனிதனின் பரிணாம வளர்ச்சி சர்ச்சைக்கு உரியதாகவே காணப்பட்டு வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோன்று ஆதி மனிதர்கள், பண்டைய கால குகை ஓவியங்களில் தமது கடவுள்கள் அல்லது தலைவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆதிகாலத்தில் அதாவது கப்பல் பயணமே சாத்தியமற்ற காலப்பகுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்களும் பூமியில் காணப்படுகின்றது.
இவ்வாறாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித இனத்தை தோற்றுவித்ததாகவும், மனிதர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி மனிதர், தமக்கு அறிவு கொடுத்து, பலத்தை அதிகரித்தவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர்.
அவ்வாறு வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தங்கிய இடங்களே காலப்போக்கில் வழிபாட்டுத்தலங்களாக மாறிப் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக பிரமிட் என்ற கட்டுமானத்தில் கற்களுக்கு இடையே பூசப்பட்டுள்ள ஒரு வித பசைத் தன்மை மிக்க கனிமம் பூமியில் எங்குமே இல்லாத கனிமத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தோடு எத்தகைய தாக்கத்தாலும் அழிக்க முடியாத சக்தி மிக்கதோர் கனிமத்தைக் கொண்டு இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று இப்போதைய மனித தொழில் நுட்ப அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புராண குறிப்புகள், கதைகள் போன்ற அனைத்துமே கூறுவது தமது கடவுள்கள் வேறு உலகத்தில் இருந்து பறந்து வந்தவர்கள் என்பதனையே.
மேலும் மதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் கூறினாலும் அடிப்படையில் இந்த ஓர் கருத்தையே அனைத்து மதங்களும் முன்வைக்கின்றன என்பது தெளிவு.
அதேபோல் இப்போது வாழும் எந்த மனிதனுக்கும் கடவுளாக கூறப்பட்டவர்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை இது ஏன்? என்ற கேள்வி எவருக்கும் இலகுவில் வந்து விடாது.
அதற்கான பதில் ஆரம்ப காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் மனிதர்களின் வாழ்கையோடு பயணித்துள்ளனர், அதனால் அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர்.
ஆனால் இப்போது அவ்வாறான கடவுள்கள் பூமியை விட்டு சென்று விட்டனர் அதனால் அவர்கள் (வேற்றுக்கிரக வாசிகள்) புலப்படுவதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும் இன்றும் அவர்கள் பூமிவாசிகளை கண்காணித்தவாறே இருக்கின்றார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் உண்மையாயின், ஏன் இப்போது பூமிவாசிகளுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தென்படுவதில்லை? என்ற கேள்வி எழக்கூடும்.

வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! 



இதற்கான பதிலோடு, யார் அந்த Anunnaki எனப்பட்ட கடவுள்? இந்துக் கடவுள்களோடு இவருக்கு தொடர்பு உண்டா?
அவர் மூலம் மனித இனம் கற்றுக் கொண்டது எதனை? வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இருண்ட கிரகம் எனப்படும் Planet Nibiru எனப்படும் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
பூமியின் அழிவு இந்த கிரகத்தாலேயே ஏற்படும் என புராணக்கதைகள் கூறுவதோடு ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் அவை ஏன் வெளி உலகிற்கு சொல்லப்படவில்லை இதற்கான பதில்கள் அடுத்த பதிவில்.,

திங்கள், 10 ஏப்ரல், 2017


உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்



வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில
் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?
ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.
தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.
தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.
சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.
இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டேதான் இருப்பான்.


தமிழர் நாகரீகமே : சுமேரிய நாகரீகம்



மேரு மலை

கடல், மலை, யானை, தொடர்வண்டி: எவரையும் சிறு பிள்ளைகளாக மாற்றச்செய்து விடும் விசயங்கள்.
அதிலும் இந்த மலை குறிப்பாக மேரு மலை, படிக்கப்படிக்க ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தூண்டிய மலை. காண்பதற்கு மட்டுமல்ல கற்பதற்கும். இம்மலை பல வரலாறுகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.இந்த மேரு மலை என்பது நம்ம இமய மலைதான்.
உலக நாகரீகங்கள் பல இந்த மேரு மலையோடு தொடர்புடையதே.

சிந்து நாகரீகம், சுமேரிய நாகரீகம், சீன மஞ்சளாற்று நாகரீகம், தென்கிழக்காசிய அங்கோர்வாட் நாகரீகம், பாபிலோனிய, மெசோபேடாமியா நாகரீகம், ஏன் அமெரிக்க மாயன் நாகரீகம் என அனைத்திலும் தொடர்புடையது இந்த மலை. மேரு என்றால் மேடான பகுதி, மலை என்று பொருள். காண்க: வளவு 
இந்த மலையிலிருந்துதான் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான ஆறுகள் உற்பத்தியாகின்றன. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து,  கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா என எல்லா நாட்டுக்கும் சோறு போடுவது இந்த மலைதான்.
ஆதலால், உலகின் தொப்பூழ்க்கொடி என்று அழைக்கப்படும் இந்த மலை (Himalaya: Michael Palin),
தமிழர்களின் வாழ்க்கையோடும்  பின்னிப்பிணைந்தது. 

சிலப்பதிகாரப்பாடல் :
    
1) இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

2) பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்     கோடும் கொடுங்கடல் கொள்ள

மணிமேகலைப்பாடல் :  


1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்
 

2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண

போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப்பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன.


இதில் உள்ள எவரெஸ்ட் என்று அழைக்கப்படும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ (8848 மீட்டர்) உயரம் உள்ளது. இந்தப் பூவுலகின் உச்சபட்ச உயரமான இடம் இதுதான். 
  
எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான பெயர் சாகர்மாதா அ கடல்மாதாதான்.


 நேப்பாளியர்கள் இன்னமும் சாகர் மாதா என்று தான் அழைக்கின்றனர்.



காண்க: விக்கிப்பீடியா 


இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டேதியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh)என்பார் சூட்டினார். பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு தமிழ்ப்பெயர் வெறும் 150 ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆங்கிலேயனால் மாற்றப்பட்டிருக்கிறது. என்னவொரு கொடுமை. 
இதைப்போலவே  தஞ்சையில் கட்டப்பட்ட பெரியகோவில், உயரத்தின் காரணமாக தென்திசை மேரு, தக்ஷிண மேரு (தக்ஷிண, தெக்கண, தெற்கத்திய )என்று அழைக்கப்படுகிறது. கி.பி 1000 இல் இந்தக்கோவில் கட்டப்பட்டபோது உலகில் பிரமிடுக்கு அடுத்து மிக உயரமான கட்டடமாக இது இருந்தது.

இப்போது ஒரு முக்கியமான செய்திக்கு வருவோம். மேருவை ஒட்டியே தொல் நாகரீகங்கள் அமைந்ததால் இந்த மேரு மலையின் இருபக்க முனையில் அமைந்த நாகரீகங்களின் பெயர்கள் இந்த மலையின் பெயரைத் தாங்கியே வந்தது.
ஒன்று சுமேரிய (சு-மேரு) நாகரீகம் இன்னொன்று குமேரிய (கு-மேரு) நாகரீகம்.
காண்க: (The Su Meru and ku-Meru, are said to be the poles or the Zenith and Nadir of the residence of the gods.) தமிழ் அகராதியில் காணலாம்.

சுமேரு (Sumeria)

கசுமேருவிலிருந்து (kashmer-காஷ்மீர்) ஈராக் வரை உள்ள பகுதி அவ்வாறே அழைக்கப்பட்டது. காசுமீர், காசுமேரு, Kashmeru-kasumeru


ஆங்கிலேயர்களால் பல பெயர்கள் உருமாறியது. இன்னமும் தமிழ் நாட்டை கூட ஆங்கிலேயர்கள் போலத்தானே நாமும் எழுதுகிறோம் டமில் நடு (Tamilnadu) என்று.
சுமேரு என்பது மேரு மலையின் ஒரு முனை என்பது மட்டுமல்ல அது மேல் அ மேற்கு பகுதி என்பதையும் குறிக்கிறது.

சுமேரு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு  முக்கிய இடம், பாமீர் பீடபூமி அ பாமீர் முடிச்சு. (Pamir Plateau)

பாமீர் முடிச்சு அப்படின்னு வரலாறு, புவியியலில் படிச்சது நமக்கு ஞாபகத்தில் இருக்கும். இது பாமீர் அல்ல பாமேரு - அதாவது, பா-மேரு, பத்து மேரு, பத்து மலை. இதன் அருகில் தமிழர்களுக்கு முக்கியமான இடம் தட்சசீலம் (Taxila).
இந்த பாமேரு அ தட்சசீலம் என்பதன் அர்த்தம் ஒன்றே. பத்து மலைகள். உலகின் முதல் பல்கலைக்கழகம் இருந்த இடம். 



இதற்கு பிறகு வந்ததுதான் நாளந்தா, புத்த பல்கலைக்கழகம். தட்சசீலம் என்றால் தச சைலம். (தசம்-பத்து. சைலம் அல்லது சேலம்-மலை) பத்து மலைகள் சேரும் இடம், முடிச்சு. கீழே உள்ள நில படத்தைப்பார்த்தாலே பல மலைகள் வந்து சேருவது தெரிகிறது. தச சைலம்  தற்போது இருப்பது ஹரப்பா, மொஹஞ்சதாரோ இருக்கும் அதே பாகிஸ்தான் நாட்டிற்குள்.



அதே போல குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது.
கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம்.



மேருமலையின் தென் முனையில் இருக்கும் நாடு கம்போடியா. இங்கு நாட்டு மக்களே, குமர் என்றுதான்  அழைக்கப்படுகின்றனர்.
கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். 


அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்)


கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.
கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட்.
 
அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காண்க: நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம்.




அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள  பெருங்கடலை குறிக்கும். (சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்)

கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது. 



அங்கோர்வாட் கோயிலின் கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் கவர்ந்த ஒரு புராண கதை செதுக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை. இது கதையல்ல, தமிழர்களின் அறிவியல். வேறொரு தலைப்பில் இது பற்றி காணலாம். 


மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்கள். கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்களாம்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
காண்க: ஈகரை.

இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். 




கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது.


அடுத்து

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு semeru.

மேலதிக தகவலுக்கு. காண்க:

இன்னொரு மிக முக்கிய தகவல் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரையே. 
நம்மூர்ல ஆங்கிலேயர்களால் மதுரையானது madura (மஜுரா) என்றே அழைக்கப்பட்டது. நம்பாதவர்களுக்கு இன்னும் கூட, மதுரையில் ஒரு கல்லூரியின் பெயர் Madura College தான். 


அந்த மதுரை தீவு மற்றும் நீரிணைப்பு இந்தோனேசியாவிலுள்ள யாவகத்தீவில் உள்ளது.



இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுரையில் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.



காரணம் என்னவென்றால் துவக்க காலத்தில் அங்குதான் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதோடு கி.பி 10, 11 ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களின் அரசு குறிப்பாக, உலகின் முதல் கடற்படையைக்கொண்டிருந்த ராஜேந்திர சோழனுடைய கடற்படையின் காரணமாக தமிழ் மிகப்பரவலாக அங்கு இருந்தது. அவரது அரசு எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.
 


இந்தோனேசியாவின் தென் கிழக்கு முனையில் இருந்து 21 ம் நூற்றாண்டின் முதல் புதிய நாடான கிழக்கு திமோர் (இந்தோனேசியாவில் மேற்கு திமோர்). இதில் திமோர் என்பதன் பொருளே தெ-மேரு, தெற்கு-மேரு என்பதே.



சீனர்கள் மேரு மலையை மையப்படுத்தி இருந்ததன் காரணமாக உருவாக்கியிருந்த ஒரு வரைபடம். காண்க:



கொரியர்கள் மேரு மலையை மையப்படுத்தி உருவாக்கின வரைபடம்.காண்க:



ஒரு துணைச்செய்தி. மலேசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை இருக்குமிடத்தின் பெயர் பத்து மலை.

  

இந்த மேரு மலை இந்தியா, தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள தன்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயர் மேரு தான்.

இந்தியாவின் தென் முனை குமரி முனை என்று சொல்கிறோம். அது தவறு. அது குமரி முனை அல்ல, மாறாக குமேரு முனை. காரணம், மேற்கு தொடர்ச்சி மலை குறுகி கடலுள் மூழ்கும் இடம். கூகுள் வரைபடம் பார்த்தால் கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு நிலத்தை ஒட்டி மிகப்பெரும் பரப்பு கடலுக்குள்ளே இருப்பதைப்பார்க்கலாம்.


இதில் 100 மீட்டர் கடல் அளவு குறைந்தால் தமிழ்நாடும் ஈழமும் இணைந்துவிடும்.


அவ்வளவு ஏன் 18 மீட்டர் குறைந்தால் நகரப்பேருந்துலேயே போய்விடலாம். 20 கி.மீ. தான்.


இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிக்கப்படாத காலத்தில், அதாவது மிகப்பெரிய பனி உருகிய காலத்திற்கு முன்பாக (கி.மு 10,000 என்று நில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்) தமிழ்நாட்டின் பரப்பு கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரம் வரை இருந்தது. பல தமிழ்  நகரங்களின் கட்டடங்கள் தென்படுவதாக தூத்துக்குடிபகுதியில் கடல் அகழாய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இதை ஆய்வும் செய்திருக்கின்றார் திரு. பாலு என்பவர். தமிழருக்கான தமிழர்களால் உருவாகும் தமிழரசு வரும்போதுதான் இது மீண்டும் அகழ்வாய்வு செய்யப்படும்.

                                                         தொடர்ந்து தேடுவோம் ...

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...