திங்கள், 21 டிசம்பர், 2015


நிலக்கடலை 




நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு

வியாழன், 17 டிசம்பர், 2015



உலகத்தில் மிகவும் பழமையான மொழிகளில் தமிழ் மொழிக்கு முதலிடம்



உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
■ 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Latin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ – ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
■ 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
■ 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
■ 6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
■ 5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
■ 4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
■ 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ – ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

நிலவாகை


நிலவாகை என்ற நிலஆவாரை மூலிகையின் சூரணம்: 



நிலவாகை சூரணம் உண்பதினால் மேகம், பித்தம், அரோசிகம், வாந்தி, வாய் நீரூறல், மலக்கட்டு, வாய்வு, காந்தல், சொறி சிரங்கு, மூல வாய்வு, கண்நேறிவு, கை கால் காந்தல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் எல்லாம் தீரும்.

இது நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் இல்லை, பூ , வேர் ஆகியவை மருத்துவப் பண்புடையது.
இது சளி நீக்கியாகவும், இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் பயன்படுகிறது.

1) இலைச்சாறும், தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேலை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.
2) இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்துவர சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.
3) ஆடா தொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமஅளவு சேர்த்து இடித்து சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு , சுவாசக்காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி ஆகியவை குணமாகும்.
4) வேர்க்கசாயத்தை கடைசி மாதத்தில் காலை,மாலை கொடுத்துவர சுகப்பிரசவம் ஆகும்.
5) ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிரந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடியை 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி.அளவாகப் பருகிவர எவ்விதச் சுரமும் நீங்கும்.

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக பற்று போட பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்கும்.

முடக்கறுத்தான்

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தானே வளரும். இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது.

வாயுவை போக்கவும், முடக்கு வாதத்தை நீக்குவதற்கு அருமருந்தாக முடக்கறுத்தான் பயன்படுகிறது.

பாரிசவாயு குணமாக, முடக்கறுத்தான் இலையுடன் வேலிப்பருத்தி இலை மற்றும் ஆவாரை இலையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை வேலை மட்டும் ஏழு நாள் சாப்பிட வேண்டும்.

இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு கலையும். இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி தீரும். வேர் ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும். காரம் நீக்கவும்.

இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

பூனை மீசைஇது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.

சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும்  காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை  நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு  குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .



காய்ச்சலுக்கு : தற்போது நமது இந்தியாவே வருத்தமும் பயமும் கொண்டு பார்ப்பது பன்றி காய்ச்சல் ().

எல்லாவிதமான வியாதிகளுக்கும் எம்மிடம் மருந்துகள் உண்டு. ஆதலால் பயமில்லை தமிழர்க்கு.

இந்நோய் பரவுவதற்கு காரணத்தை சொல்கிறேன்:
சில ஆண்டுகளாகவே நமது பாரம்பரிய வேப்பமரங்கள் யாவும் காய்ந்து பட்ட மரங்களாகி பின்பு தழுத்து வந்தன. இது வெகு காலங்களாக நடப்பினும், தற்போது 50 வயதாகி விட்ட மரங்களும் காயத் தொடங்கிவிட்டன. இயற்கை கிருமி நாசினியான வேப்ப மரங்கள் காய்ந்ததுவே நோய் வரக்காரணமானது.

இனி பன்றி காய்ச்சல் மற்றும் இதர அனைத்து வித காய்ச்சல் குணமாக மருந்து குறிப்புகள் காண்போம்.

ஆடாதோடை, கோரைகிழங்கு, பற்பாடகம், விசுனுகரந்தி, துளசி, கஞ்சாங்கோரை, சீந்தில், நிலவேம்பு, மலை வேம்பு போன்ற ஒன்பது வகையான மூலிகைகள் ஓர் அளவு கலந்து நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து, காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.

புளூச் சுரம்: கண்டங்கத்திரி சமூலம், ஆடாதோடை, விசுனுகரந்தி, பற்பாடகம், சீரகம் ( கருசீரகம் ), சுக்கு சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.

மலேரியா சுரம் : நிலவேம்பு, கண்டங்கத்திரி சமூலம், சுக்கு, சீரகம் ( கருசீரகம் ) சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.

சன்னி பாத சுரம் ( டைபாய்டு ) : தூதுவேளை, கண்டங்கத்திரி, விசுனுகரந்தி, பற்பாடகம், ஆடாதோடை போன்ற ஐந்து மூலிகைகளை சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.

கப வாத சுரம் ( நிமோனியா ) : ஆடாதோடை, கருந்துளசி ஆகிய இரண்டு மூலிகைகளை ஓர் அளவு கலந்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.

குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.

நிலவேம்பு என்ற சிறியாநங்கை:
சிறியா நங்கைத் தழையைச்
சேவித்த பேரைப் பிரியார்
மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முகமாதே தெளி.
- மூலிகை குணபாடம்

சிறியாநங்கை, நிலவேம்பு, andrographis paniculata

இதன் இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையை கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுக்க கடி நஞ்சு நீங்கும்.

கசப்பு சுவையுடைய நீண்ட இலைகளையுடைய சிறுசெடி. செடி முழுவதும் மருத்துவ குணம் உடையது. இது காய்ச்சல் அகற்றுதல், பசியுண்டாக்குதல், தாது பலபடுத்துதல், முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளையுடையது. நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் வகைக்கு கைபிடியளவு, சுக்கு 10 கிராம் சேர்த்து ஒரு குவளைக்கு அரை குவளையாகக் காய்ச்சி நாளைக்கு 3 முறையாகக் குடிக்க மலேரியா,சிக்குன்குனியா காய்ச்சல் குணமாகும்.

குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.

கரிசலாங்ககன்னி:
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.
— தேரையார்

ECLIPTA PROSTRATA ROXB1, பொற்கரிசலாங்கன்னி, செந்துரத்தாதி, கரிசலாங்ககன்னி

கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் வேறு பெயர்கள் : பொற்றலை, பொற்கரிசலை, பொற்றலை கையாந்தகரை.

ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும்.

கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.

தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.

இது ஒரு காயகற்ப மூலிகை.

பேய் மிரட்டி வேர், குமரி என்கிற கற்றாளை மற்றும் கொல்லங்கோவை என்கிற ஆகாய கருடன் இம்மூன்று மூலிகைகளையும் வீட்டின் முன் கட்ட காத்து, கருப்பு, கண் நேரல் நீங்கும்.

பேய்மிரட்டி, ANISOMELES MALABARICA

பெருந்தும்பை என்ற பேய்மிரட்டி மூலிகை – இதன் மனம் காத்து, கருப்பு சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் வருமுன் காக்கும் மூலிகை.

இந்த இலையின் சாரு, சிறுவர் முதல் பெரியவர் வரைலான எல்லாவித வயிற்று நோய் மற்றும் வயிற்று வலி குணமாக்குகிறது.

தசை சம்மந்தமான வீக்கம் கட்டி எளிதில் குணமாக்கும்.

காலரா குணமாக, பேய்மிரட்டி மூலிகையின் இலையுடன் நெற்பொறி சேர்த்து வதங்கி தீயும் வரை வறுத்து இரண்டு குவளை தண்ணீர் விட்டு ஒரு குவலையாக வற்ற வைத்து குடிக்க வாந்தி பேதி பூரண குணமாகும்.

சீந்தில் சூரணம் என்ற சஞ்சீவி சூரணம்



சீந்தில்கொடி – சாகாமூலிகை, காய கர்ப்ப மூலிகை. இது ஒரு ஒட்டுண்ணி – ராமாயணக் கதையில் வரும் வாலிக்கு தன் எதிரில் பட்டவர் பலம் பாதி வருவதைப் போல், சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்கிறது.

இது உயிர் கொல்லி நோய்களான சர்க்கரை, புற்று நோய், எலும்புரிக்கி (எய்ட்ஸ்) நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது

சீந்தில் கொடி,TINOSPORA CORDIFOLIA

போமென்ற பொற்சீந்தி யானால் நன்று
புகழான சிவப்புநன்று கருப்புநன்று
நாமொன்று கிடையாவிடால் நல்ல சீந்தில்
நறுக்கியே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டு
ஏமேன்ற நி நிழலுலர்த்தி யிடித்துத் தூளாய்
யேற்றமாய் வடிகட்டிச் சூரணமே செய்து
தாமென்ற நாலிலொன்ரு சர்கரையே கூட்ட
சமத்தாக மண்டலந்தான் வெருக்கடிதூள் கொள்ளே
....
கொள்ளவே காமப்பா லுடம்பி லூறுங்
கணக்கான அமிர்தஞ் சீவி தானே.



கொள்ளவே சஞ்சீவி சூரணத்தைச் சொல்வேன்
குணமான சீந்திலடித் தண்டுவாங்கி 
விள்ளவே மேற்றோலை வாங்கிப்போட்டு 
வெருளாதே நறுக்கியதை யுலரப்போட்டு 
கள்ளவே யிடித்து நன்றாய்ச் சூரணித்துக்
கருவாக வடிகொண்டு படித்தூள்வாங்கி
நல்லாவே முந்நூற்றில் சுத்திசெய்து 
நலமான பொடிபடிக்கு ஆவின்பாற்படியே


படியாக வரைப்படிதான் சீனிபோட்டு 
பாங்காக ரவியுலர்த்திக் காய்ந்தபின்பு 
அடியாக உரலிலிட் டிடித்துக்கொண்டு 
அப்பனே சாதிக்கரங் சாதிபத்திரி 
கடியாக வால்மிளகு ஏலங்கிராம்பு 
கசகசா தாளிசமு மாசக்காயும் 
வடிவாக வவைக்குவெரரு பலந்தான் கூட்டே 

கூட்டியே யிரண்டுமொன்றாய் சேர்த்துக்கொண்டு 
குறையாம லாறுபலஞ் சீனிசேர்த்து 
நாட்டியே வொருகடிதா ணெய் யிற்கொள்ள 
நலமாகத் தீருநோய் நவிலக்கேளு
தாட்டிகமா மேகநீ ரிருபதும்போம் 
தளமான பிரமியங்கள் மேகமெல்லாம்
வாட்டியே வற்றியதோர் தேகமெல்லாம்
வளமாகு மச்திசுரம் வெட்டைபோமே


போமப்பா மூலத்தின் சூடுபோகும் 
பொல்லாத தத்தவகை எல்லாம்போகும் 
நாமப்பா கண்னெரிவு கைகால்காந்தல் 
நாடாது தேகமெல்லாங் குளிர்ச்சியாகும் 
தாமப்பா வூரலெல்லாந் தவறுண்டேபோம்
தளமான கபாயித்தின் ரணங்கள் தீரும்
வெகுசுருக்காய் பனவெடையப் பிரேகங் கொள்ளே

இது சிறிய முட்டை வடிவ இலைகளையும்,சிவப்பு நிறப் பூக்களையும்,கொத்தான காய்களையும்,சிவப்பு நிற தண்டினையும் உடைய சிறிய செடி. செடி முழுவதும் மருத்துவ குணமுடையது.

சிவனார் வேம்பு

தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.

செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து சமன் கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.

செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்து தடவிவர சொறி, சிரங்கு, கபாலக்கரப்பான் ஆகிவை தீரும்.

இலைகளை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைந்து கொள்ளும்.

வேரால் பல் துலக்கவோ அல்லது வேரை மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி தீரும்.

இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

பூனை மீசைஇது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.

சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும்  காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை  நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு  குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு.

காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக்
கலங்காமல் சமூலந்தான் பிடுங்கி வந்து
ஊணவே நிழலுலர்த்தா யுலர்த்திக் கொண்டு
உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
பாணவே பால் நெய்யில் தேனிற் கொள்ள
பாங்கான திங்கள்ஒன்றில் சடநாற்றம் போம்
வாணவே திங்களிரண்டில் வாதம் போம்
மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போம்.

போகுமே நான்கு திங்கள் குட்டமெல்லாம்
புகழான ஐந்து திங்கள் வன்னி மீதும்
நாகுமே யாறுதிங்கள் ஞான மீறும்
நலமான ஏழு திங்கள் தேகம் பொன்னாம்
யேருமே எட்டுதனிற் சட்டைப் போகும்
யேற்றமா யொன்பதிலே கவனங் கொள்ளும்
பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார்
பாங்கை யெல்லாங் கண்டுரைத்த படிதானென்றே

என்றான கரந்தையைத் தான் கொண்டு வந்து
யடித்துமே படிசாறு வடிகட்டிக் கொண்டு
கண்டான கரண்டிதனைத் துப்புரவாய் விளக்கிக்
களிம்பகற்றிச் சூதத்தை யதிலே போட்டு
தன்றான கரியோட்டில் வைத்து ஊதி
சாறுதான் சுருக்கிட்டு நாலு சாமம்
பன்றாகக் கட்டியது வெண்ணை யாகும்
பாங்கான வெண்ணை யெல்லாம் வாங்கிக்கொள்

sphaeranthus hirtus

வாங்கியே உருண்டை போல் வைத்துக் கொண்டு
மறுபடியும் யிலையரைத்துக் கவசங் கட்டித்
தாங்கியே பத்தெருவிற் புடத்தைப் போட்டு
தப்பாமல் மறுபடியு மிலைய ரைத்துத்
தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத்
திரண்டுமே மணிபோலக் கரியிலாடும்
ஓங்கியே உருண்டைதனைக் குகையிலிட்டு
உருகையிலே நாளிலொன்று தங்கம் போடே

தங்கத்தி னெடையொக்க நாகமே போடு
தாக்கியே கலந்தொன்றா யுருக்கி வாங்கி
பங்கத்தின் கல்வத்தி லிதனை யிட்டு
பாங்காக பொடித்திட்டு பொடிக்குப் பாதி
லிங்கத்தைக் கூட்டியே தாளகமுங் கெந்தி
நேரான சிலையொரு கால்வாசி கூட்டி
அங்கத்தில் கரந்தை யொன்ற சாறு தன்னால்
அரத்துமே பொடியாக்கி மேருக் கேத்தே

ஏத்தியே பனிரெண்டு சாமந்த்தீயை
எழிலான கதிராலே கிண்டிப் பாரு
மாத்தியே மாதளம்பூ போலே நிற்கும்
மாசற்ற நவலோகம் நூற்றுக் கொன்று
கோத்தியே கொடுத்தாக்கால் கனக மாகுங்
கூர்ந்து பண விடைதன்னை கரந்தையிலே யுன்னு
தேத்தியே மண்டலந்தா னுண்டாயானால்
சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்த் தேறே

தேறியே சங்குநிற மாங்கரந்தை
தேடியே பாக்களவு பாலிலுண்ணு
மாரியே மண்டலந்தா னுண்டா யானால்
மாசற்ற சந்திரன் போல் முகமுமாமே
வீரியே வெள்ளைமயிர் காகயிறகாகும்
மேனியுமே ரசிக்கென்று சிவந்து மின்னும்
மூரியே யமிர்தந்தான் யோகத்திற் பரந்து
உத்தமனே அமிர்தத்தை உண்ணு உண்ணே.

பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட மிகச்சிறுசெடி. சிறிய பந்து போன்ற உருண்டையான செந்நிற பூங்கொத்தினை உடையது. செடி முழுமையும் மருத்துவப் பண்புடையது. இது ஒரு காயகற்ப ரசவாத மூலிகையாகும்.

பூக்காத செடிகளை பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் சிறிது கற்கண்டுப்பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை குணமாகும். நீண்ட நாள் சாப்பிட்டு வர இதயம், நரம்பு பலம் பெறும்.

மேற்கண்ட பொடியுடன் கரிசலாங்கன்னிப்பொடி சமமாகக்கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இளநரை நீங்கும், உடல் பலம் பெறும்.

கரிசலாங்ககன்னி:
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.
— தேரையார்

ECLIPTA PROSTRATA ROXB1, பொற்கரிசலாங்கன்னி, செந்துரத்தாதி, கரிசலாங்ககன்னி

கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் வேறு பெயர்கள் : பொற்றலை, பொற்கரிசலை, பொற்றலை கையாந்தகரை.

ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும்.

கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.

தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.

இது ஒரு காயகற்ப மூலிகை.

விராலி – இரசவாத மூலிகை – அடிபட்ட வீக்கம் ,கட்டிகளை போக்கும்.

ஆய கலை 64இல் ஒன்று ரசவாத கலை.
ரசவாத கலையில் தேர்ச்சி பெற விராலி மூலிகை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு சாரு வரா மூலிகை.

விராலி மூலிகையில் சாரு எடுக்க தெரிந்தால் மட்டுமே தமிழ் வைத்தியர் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரசமணி கட்ட இந்த சாருதான் பயன்படுகிறது, ரசமணி கட்டியவரே ரசவாதி.

விராலி மூலிகை, dodonaea viscos

விராலி, காச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.

தொழுகண்ணி - யோகாசன மூலிகை: மூலிகைகளில் யோகாசனம் செய்யும் ஒரே ஒரு மூலிகை தொழுகண்ணி ஆகும்.

பூரண டைடாளியாசனம் : இரண்டு கைகளாலும் பாதங்களைப் பிடித்துக் கொண்டு முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கும் ஆசனம்.

இந்த ஆசனத்தை தொழுகண்ணி மூலிகை இயற்கையாகவே செய்கின்றது.

தொழுகண்ணி (தொழுகன்னி) மூலிகை, இதன் இலை அலறி இல்லை போலவும், தூர் கருப்பு நிறமாகவும் இருக்கும். இது எப்போதும் கதிரவனை நோக்கியே இருக்கும் இந்த தொழுகன்னி இலையும், அழுகண்ணி இலையும் சேர்த்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.


உங்களுக்கு தெரியுமா


மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.


வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200


மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன. 

அவையாவன, 
1. இடகலை 
2. பிங்கலை 
3. சுழுமுனை 
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி 
7. அத்தி 
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி 

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும். 

அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு 
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே 

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி 
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி 
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே 

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.


இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று 
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல் 
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல் 

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...