சிவவாக்கியம்-121
உயிரு நன்மையால் உடல் எடுத்துவந்து இருந்திடுமே
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும் உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே!!!
உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும், உடம்புச் சக்தியாகவும் இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர், உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.
*******************************************
சிவவாக்கியம்-122
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்ற தொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதொன்று கொம்பு கால் குறித்திடில் நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே!!!
'அ' முதல் 'ஔ' வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது. எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள். குற்றெழுத்தாகிய 'க' முதல் 'ன' வரையில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள். அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள். உதாரணமாக 'ச' என்பதில் கொம்பு போட்டால் 'சி' என்ற சிவனாகவும், 'சீ' என்ற சீவனாகவும், கொம்பு கால் சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது. இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்
*******************************************
சிவவாக்கியம்-123
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணியாகவே கலந்து நின்ற தென் பிரான்
மன்னிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே!!!
அமிர்தம் உண்டு அழியாமல் வானுலகில் இருக்கும் தேவர்களும் அறிய முடியாதது மெய்ப்பொருள். அதனை ஈசன் எனக்கு அறிவித்து கண்ணில் ஆணியைப் போல் கலந்து நிற்கிறான் என் குருபிரான்.. மெய்ப் பொருளை அறிந்தாலே இம்மண்ணில் பிறப்பு, இறப்பு இல்லாது போகும் ஈசனின் திருவடிகளை சிந்தையில் வைத்து தியானியுங்கள். இந்த ஞானத்தை பெற்ற யோகியரிடத்தில் அண்ணலாக ஈசன் சோதி வடிவாய் அமர்ந்து வாழ்வதும் சத்தியமே.
*******************************************
சிவவாக்கியம்-124
வின் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்து புக்கிருந்த பின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே!!!
உனக்குள் வின்வேளியாக இருக்கும் மனத்தை கடந்து அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும். அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம். இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும், மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும். விண்ணில் நிற்கும் சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.

சிவவாக்கியம்-125
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்ட பின்
நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில் பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம் உண்ட கந்தர் ஆணை அம்மை ஆணை உண்மையே!!!
இவ்வுடலுக்கு மூலமாக இயங்கும் பிராணவாயுவை அறிந்து பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை செய்யவேண்டும். நம் பிராணனில் இருந்து வெளியேறும் நாலு அங்குல மூச்சை இந்த யோகத்தில் நாட்டம் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம், என்று வாசியை நாட்டி செய்து வந்தீர்களானால் என்றும் இளமை பெற்று பாலனாக வாழலாம். இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அவ்விஷத்தை தடுத்த என் அன்னையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றேன்

சிவவாக்கியம்-126
மின் எழுந்து மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!
மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான். கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.
*******************************************
சிவவாக்கியம்-127
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரனுமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே!!
இந்த அவனியில் தியான தவத்தை மேற்கொண்டு அதனால் சித்தி பெற்று சித்தர்களைப் போல் எப்போதும் இருக்கலாம். அரண், அரி, பிரமன் என்ற மூவர்களையும் கண்டு வணங்கி அண்டங்கள் எழும் சுற்றி வரலாம். ஐந்தாவது யோனியில் பிறந்து அது கருக்கொளாத குழி, நாற்றமில்லா யோனி என்பதை உணர்ந்து புருவமத்தி எனும் மூன்றாவது கண்ணில் சுழுமுனை தாளைத் திறந்து நெருப்பாற்றைக் கடந்து சோதியில் கலந்து பின்பு நீயும் எச்சனே என்று அறிந்து கொள்ளலாம்.
*******************************************
சிவவாக்கியம்-128
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் போருந்துமாறது எங்ஙகனே
ஆகிலும் அழகிலும் அதன் கண் நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே!!
ஏகமனதுடன் ஆணும் பெண்ணும் கூடி இருவரும் ஒருவராகி புணர்ந்து போகம் செய்கின்ற சிற்றின்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக பொருத்தி ஒத்து இருக்கின்றதே அது எங்ஙகனம்? அதுபோல் ஏகமாக உனக்குள் செய்யும் யோகத்தால் சக்தியும் சிவனும் ஒன்றாகி கலந்து பேரின்ப அனுபவத்தை ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக இருப்பதை உணர்ந்தனர். அனைத்தும் ஆவதற்கும், அழிவதற்கும், அழகிற்கும் காரணம் சிவமே என்பதை அறிந்து அன்பு வைத்து தியானியுங்கள். தன்னம்பிக்கையுடன் பாடுபட்டு மெய்நிலை அடைந்தவர்களுக்கு இப்பூவுலகில் சாவதும் பிறப்பதும் இல்லாது போகும்.
*******************************************
சிவவாக்கியம்-129
வேதம் நாளும் போதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே லிங்கமாய் பரிந்து பூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்து ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே!!!
நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது. அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும். அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும். அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.
*******************************************
சிவவாக்கியம்-130
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் கலைநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே.
நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும். இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர். காலன் எனும் எமன் அணுகான். வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே 'சிவயநம' என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக