திங்கள், 4 மே, 2020

ஆங்கில வணிக சொற்களுக்கு நிகரான தமிழ்ச் 

சொற்கள்


1 டிரேடரஸ் - வணிக மையம்
2 கார்ப்பரேஷன் - நிறுவனம்
3 ஏஜென்சி - முகவாண்மை
4 சென்டர் - மையம், நிலையம்
5 எம்போரியம் - விற்பனையகம்
6 ஸ்டோரஸ் - பண்டகசாலை
7 ஷாப் - கடை, அங்காடி
8 அண்கோ - குழுமம்
9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் - மரக்கடை
18 பிரிண்டரஸ் - அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 காபி பார் - குளம்பிக் கடை
25 ஹோட்டல் - உணவகம்
26 டெய்லரஸ் - தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் - திரையகம்
30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் - நிதியகம்
33 பேங்க் - வைப்பகம்
34 லாண்டரி - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ - தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 பேக்கரி - அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 பசார் - கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 பாய்லர் - கொதிகலன்
53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் - கம்பிவடம், வடம்
55 கேபஸ் - வாடகை வண்டி
56 கபே - அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் - பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் - மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் - வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 கூரியர் - தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் - மிதிவண்டி
74 டிப்போ - கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் - விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 பேக்டரி - தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் - விரை உணா
85 பேகஸ் - தொலை எழுதி
86 பைனானஸ் - நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் - உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி - நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் - சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 பேஜர் - விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 பார்மசி - மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் - விசைத்தறி
109 பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 ரப்பர் - தொய்வை
113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 ஷோரூம் - காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் - வங்குநர்,
120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 டிரேட் - வணிகம்
122 டிரேடரஸ் - வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் - தேனீரகம்
126 வீடியோ - வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே - ஊடுகதிர்
  • அதிகாரி - அலுவலர்
  • அகாதெமி - கழகம்
  • அங்கத்தினர் - உறுப்பினர்
  • அசெம்ளி - சட்டசபை
  • அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
  • அட்மின் - சேர்க்கை
  • அட்லஸ் - நிலப்படச்சுவடி
  • அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
  • அடாப்டர் - பொருத்தி
  • அதிபர் - தலைவர்
  • அந்நியர் - அயலார்
  • அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
  • அபிN‘கம் - நீராட்டு
  • அபூர்வம் - புதுமை
  • அலங்காரம் - ஒப்பனை
  • அஸ்ட்ரோநோமி - வானநூல்
  • அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
  • ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
  • ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
  • ஆசீர்வாதம் - வாழ்த்து
  • ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
  • ஆட்டோமொபைல் - தானியங்கி
  • ஆடியோகேசட் - ஒலிப்பேழை
  • ஆதவன் - ஞாயிறு
  • ஆபத்து - இடர்
  • ஆபிஸ் - அலுவலகம்
  • ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
  • ஆயுசு - வாழ்நாள்
  • ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
  • ஆராதனை - வழிபாடு
  • ஆஸ்பத்திரி - மருத்துவமனை
  • இண்டர்வ்யூ - நேர்காணல்
  • இண்டஸ்ட்ரி - தொழிலகம்
  • இண்டஸ்ட்ரி - தொழிலகம்
  • இம்ப்ரூ - பெருக்கு
  • இருதயம் - நெஞ்சகம்
  • இலஞ்சம் - கையூட்டு
  • இலாபம் - வருவாய்
  • இன்டர்நெட் - இணையம்
  • ஈசன் - இறைவன்
  • ‘hர் - விழிப்பு
  • உத்தரவு - ஆணை
  • உத்தியோகம் - பணி
  • உபசரித்தல் - விருந்தோம்பல்
  • உபயோகம் - பயன்
  • உயில் - இறுதிமுறி
  • எடிட்டோரியல் - தலையங்கம்
  • எவர்சில்வர் - நிலைவௌ;ளி
  • என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
  • எஸ்டிமேட் - மதிப்பீடு
  • ஏரோப்ளேன் - வானூர்தி
  • ஏஜென்சி - முகவாண்மை
  • ஏஜென்ட் - முகவர்
  • ஐடென்டிபிகேன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
  • ஐதிகம் - உலக வழக்கு
  • ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
  • ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
  • ஒன் வேஒருவழிப்பாதை
  • ஓட்டல் - உணவகம்
  • ஃபிளா‘; நியூஸ் - சிறப்புச் செய்தி
  • ஃபுட் போர்டு - படிக்கட்டு
  • ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
  • ஃபேன் - மின்விசிறி
  • ஃபோலியோஎண் - இதழ் எண்
  • கண்ட்ரி - நாடு
  • கண்ட்ரோல் - கட்டுப்பாடு
  • கம்ப்யூட்டர் - கணினி
  • கம்பெனி - குழுமம்
  • கம்பெனி - குழுமம்
  • கரண்ட் - மின்சாரம்
  • கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
  • கலெக்டர் - ஆட்சியர்
  • கலெக்டர் - சேகரிப்பவர்
  • கவர் - மறை உறை
  • கவுன்சில் - குழு
  • கவுன்சில் - மன்றம்
  • காகிதம் - தாள்
  • காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
  • காபி பார் - குளம்பியகம்
  • காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
  • கார் - மகிழுந்து
  • காலேஜ் - கல்லூரி
  • காஸ்ட்யூம் - உடை
  • கிரீடம் - மணிமுடி
  • கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
  • கிரீன் ரூம் - பாசறை
  • கிரைண்டர் - அரவை இயந்திரம்
  • கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
  • கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
  • குஃவோடா - பங்கு
  • குபேரன் - பெருஞ்செல்வன்
  • குமாரன் - மகன்
  • கூல் டிரிங்ஸ்குளிர்பருகு நீர்
  • கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
  • கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
  • கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
  • கேபிள் - கம்பிவடம்
  • கேரண்டி - பொறுப்புறுதி
  • கோட்டல் - உணவகம்
  • கோர்ட் - மன்றம்
  • சக்சஸ் - வெற்றி
  • சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
  • சயின்ஸ் - அறிவியல்
  • சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
  • சாக்பீஸ - சுன்னக்கட்டி
  • சாம்பியன் - வாகை சூடி
  • சாவி - திறவுகோல்
  • சிட்டி - நகரம்
  • சிலிண்டர் - உருளை
  • சினிமா - திரைப்படம்
  • சுவிட்சு -பொத்தான்
  • சூப்பர் - சிறப்பு
  • செக் - காசோலை
  • செக் - காசோலை
  • செல்போன் - கைப்பேசி
  • சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
  • சேர் - நாற்காலி
  • சேலான் - செலுத்துச்சீட்டு
  • சைக்கிள் - மிதிவண்டி
  • ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
  • டாக்டர் - மருத்துவர்
  • டிக்‘;னரி - அகராதி
  • டிக்கெட் - பயணச்சீட்டு
  • டிசிப்ளின் - ஒழுக்கம்
  • டிசைன் - வடிவமைப்பு
  • டிபன் - சிற்றுண்டி
  • டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
  • டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
  • டிவி - தொலைக்காட்சி
  • டிஸ்க் - குறுந்தகடு
  • டீ - தேநீர்
  • டீ பார்ட்டி - தேநீர் விருந்து
  • டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
  • டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
  • டெட்லைன் - குறித்தகாலம்
  • டெய்லி - அன்றாடம்
  • டெலஸ்கோப் - தொலைநோக்கி
  • டெலிபோன் - தொலைபேசி
  • டைப்பிஸ்ட - தட்டச்சர்
  • டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
  • டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
  • டைரி - நாட்குறிப்பு
  • தம்ளர் - குவளை
  • தியேட்டர் - திரை அரங்கு
  • தெர்மா மீட்டர் - வெப்பமானி
  • ‘;டம் - இழப்பு
  • நம்பர் - எண்
  • நாலெட்ஜ் - அறிவு
  • நிபுணர் - வல்லுநர்
  • நோட்புக் - குறிப்பேடு
  • பயாலாஜி - உயிரியல்
  • ப்ர‘; - தூரிகை
  • பர்னிச்சர் - அறைக்கலன்கள்
  • பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
  • ப்ரீப்கேஸ்குறும்பெட்டி
  • ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
  • ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
  • பல்பு - மின்குமிழ்
  • பஸ் - பேருந்து
  • பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
  • பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
  • பாக்கி - நிலுவை
  • பாய்லர் - கொதிகலன்
  • பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
  • பால்கனி - முகப்பு மாடம்
  • பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
  • பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
  • பிக்னிக் - சிற்றுலா
  • பிரிசன் - சிறைச்சாலை
  • பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
  • பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
  • பிளாட்பாரம் - நடைபாதை
  • பிளாஸ்டிக் - நெகிழி
  • பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
  • பிளைட் - விமானம்
  • பீரோ - இழுப்பறை
  • பு‘;பம் - மலர்
  • புரபோசல் - கருத்துரு
  • புரோட்டோகால் - மரபுத் தகவு
  • புரோநோட் - ஒப்புச்சீட்டு
  • புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
  • புனல் - வடிகுழலி
  • பெல்ட் - அரைக்கச்சு
  • பேக்கர் - ரொட்டி சுடுபவர்
  • பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
  • பேங்க் - வங்கி
  • பேட்மிட்டன் - பூப்பந்து
  • பேரண்ட்ஸ் - பெற்றோர்
  • பேனா - தூவல்
  • பைக் - விசையுந்து
  • பைண்டிங் - கட்டமைப்பு
  • பைல் - கோப்பு
  • போலீஸ் ஸ்டேன் - காவல் நிலையம்
  • போனஸ் - மகிழ்வூதியம்
  • போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
  • மதர்லேண்ட் - தாயகம்
  • மார்க்கெட் - அங்காடி
  • மீட்டிங் - கூட்டம்
  • மெடிக்கல் ‘hப் - மருந்தகம்
  • மெஸ் - உணவகம்
  • மேஜிக் - செப்பிடுவித்தை
  • மைக் - ஒலிவாங்கி
  • மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
  • மோட்டல் - பயணவழி உணவகம்
  • யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
  • ரப்பர் - தேய்ப்பம்
  • ரயில் - தொடர்வண்டி
  • ராக்கெட் - ஏவுகணை
  • ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
  • ரிவர் - நதி
  • ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
  • ரூம் ரெண்ட் - குடிக்கூலி
  • ரெக்கார்ட் - ஆவணம்
  • ரேடியோ - வானொலி
  • ரோடு - சாலை
  • லாண்டரி - வெளுப்பகம்
  • லாரி - சரக்குந்து
  • லிவ்வர் - கல்லீரல்
  • லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
  • லெமினேன் - மென்தகடு
  • லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
  • லேட் - காலம் கடந்து
  • லைசன்ஸ் - உரிமம்
  • லைசென்ஸ் - உரிமம்
  • லைட் - விளக்கு
  • வா‘pங் மெ‘pன் - சலவை இயந்திரம்
  • விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
  • விஞ்ஞானம் - அறிவியல்
  • வீடியோகேசட் - ஒளிப்பேழை
  • வெரிபிகேன் - சரிபார்த்தல்
  • வொர்க்‘hப் - பணிமனை
  • வோல்டு - உலகம்
  • ஜங்ன் - கூடல்
  • ஜட்ஜ் - நீதிபதி
  • ஜனங்கள் - மக்கள்
  • ஜீப் - கரட்டுந்து
  • ஜெராக்ஸ் - ஒளிப்படி
  • ஜெராக்ஸ் - ஒளிப்படி
  • ஸ்கூல் - பள்ளி
  • ஸ்டேனரி ‘hப் - எழுதுபொருள் அங்காடி
  • ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
  • ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
  • ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
  • ஸ்டோர் - பண்டகம்
  • ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
  • ஸ்பீக்கர் - பேசுபவர்
  • ஸ்பெல் - தனி
  • ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
  • ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்

Railway Station – புகைவண்டி நிலையம்
2. Financial Year – நிதியாண்டு
3. Dictionary       – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
4. Judge – நீதிபதி, நீதியரசர்
5. Computer    – கணினி, கணிப்பொறி
6. Xerox – ஒளிநகல்
7. Gold coin    – பொற்காசு
8. Coffee Bar – குளம்பியகம்
9. Pesticides – பூச்சிக்கொல்லி
10. First Rank    – முதல் தரம்
11. Video Cassette- ஒளி – ஒலி நாடா
12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
13. Key – திறவுகோல்
14. Certificate    – சான்றிதழ்
15. Room – அறை
16. Principal – கல்லூரி முதல்வர்
17. Cheque – காசோலை
18.Town – நகரம்
19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
20. Consumer    – நுகர்வோர்
21. Congratulation – நல்வாழ்த்துக்கள்
22. Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
23. Company – நிறுவனம் குழுமம்
24. Register post – பதிவஞ்சல்
25. Missile – ஏவுகணை
26. Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
27. Transport corporation- போக்குவரத்துக் கழகம்
28. Geography     – புவியியல்
29. Liver – கல்லீரல்
30. News paper   – செய்தித்தாள்
31. Internet – இணையம்
32. Traitor – துரோகி
33. Plot      – மனையிடம்
34. Honesty   – நேர்மை
35. Platform – நடைமேடை
36. Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
37. Meritorisus service- உயர்ந்த பணி
38. High Court  – உயர்நீதிமன்றம்
39. Town bus- நகரப்பேருந்து
40. Twig – சிறுகிளை
41. Refraction – விலகல்
42. Mischief – முட்டாள்தனம்
43. Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
44. Scholarship    – படிப்பு உதவித்தொகை
45. Chalk Piece – சுண்ணக்கட்டி
46. Beast – விலங்கு ஃ மிருகம்
47. Fiction – புனைகதை
48. Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
49. Travel – பயணம் , செலவு
50. Note Book   – குறிப்பேடு
51. atron- ஊர்க்காவலர்
52. Farmer – உழவர் , விவசாயி
53. Manager – மேலாளர்
54. Head office – தலைமை அலுவலகம்
55. Private company – தனியார் குழுமம்
56. Compressibility      – அழுந்துந்தன்மை
57. Shelter – புகலிடம்
58. Television – தொலைக்காட்சி
59. Admission   – சேர்க்கை
60. Documentary – விளக்கத்திரைப்படம்
61. Remote sensing – தொலை உணர்தல்
62. Website  – இணையதளம்
63. Student – மாணவர்
64. Agent – முகவர்
65. Sacrifice – தியாகம்
66. University – பல்கலைக்கழகம்
67. Application – விண்ணப்பம்
68. World  – உலகம்
69. Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
70. Office – அலுவலகம்
71. Harvest – அறுவடை
72. Change – மாற்றம், சில்லறை
73. International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
74. Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
75. Supreme Court – உச்சநீதிமன்றம்
76. Writs – சட்ட ஆவணம்
77. Substantive Law – உரிமைச்சட்டம்
78. Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
79. Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
80. Flash News   – சிறப்புச் செய்தி
81. Deadline – குறித்த காலம்
82. Folio no – இதழ் எண்
83. Editorial  – தலையங்கம்
84. Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
85. Fake News   – பொய்ச்செய்தி
86. Layout – வடிவமைப்பு
87. Car   – மகிழ்வுந்து
88. Aero plane   – வானூர்தி
89. Departmental Store – பல்பொருள் அங்காடி
90. Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
91. Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
92. Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
93. Persistence       – பார்வைநிலைப்பு
94. Dubbing – ஒலிச்சேர்க்கை
95. Director – இயக்குநர்
96. Shooting – படப்பிடிப்பு
97. Cartoon – கருத்துப்படம்
98. Camera – படப்பிடிப்புக் கருவி
99. Micro Phone – நுண்ணொலி பெருக்கி
100.Projector – படவீழ்த்தி
101. Lense – உருபெருக்கி
102. Motion Pictures – இயங்குருப்படங்கள்
103. B.A.- Bachelor of arts – இளங்கலை
104. B.Sc- Bachelor of Science – அறிவியல்
105. B.com-Bachelor of Commerce – வணிகவியல்
106. B.E.- Bachelor of Engineering – பொறியியல்
107. B.Tech-Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
108. B.Lit-Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
109. B.Ed-Bachelor of Education  – கல்வியியல்
110. M.A.- Master of Arts – முதுகலை
111. Ph.D.Doctor of Philosophy – முனைவர்
112. I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
113. I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
114. I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
115. I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
116. Classical Language   – உயர்தனிச் செம்மொழி
117. Green Rooms – பாசறை
118. Instinct – இயற்கை அறிவு
119. Order of Nature – இயற்கை ஒழுங்கு
120. Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
121. Biology – உயிரியல் , உயிர்நூல்
122. Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
123. கவுண்டிங் – எண்ணிக்கை
124. ஹோட்டல் – உணவகம்
125. மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
126. பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
127. போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
128. கால்குலேட்டர் – எண்சுவடி
129. ஆஸ்பத்திரி – மருத்துவமனை
130. குட்பாய் – நல்ல பையன்
131. மதர்லேண்ட் – தாயகம்
132. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
133. ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
134. கோர்ஸ் – பாடப்பிரிவு
135. ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
136. பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
137. ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
138. சுவிட்ச் – பொத்தான்
139. டீ – தேநீர்
140. டீபார்ட்டி – தேனீர்விருந்து
141. கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
142. கிரைண்டர் – அரவை இயந்திரம்
143. பிசிக்ஸ் – இயற்பியல்
144. பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
145. லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
146. கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
147. ப்ஃரை – வறுத்தல்
148. அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
149. கண்டக்டர் – நடத்துநர்
150. அசெம்பிளி – சட்டமன்றம்
151. டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
152. போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
153. வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
154. என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
155. போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
156. டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
157. டிக்கெட் – கட்டணச்சீட்டு
158. டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
159. பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
160. கரென்ட் – மின்சாரம்
161. தாசில்தார் – வட்டாட்சியர்
162. கவர்னர் – ஆளுநர்
163. வில்லேஜ் – சிற்றூர்
164. பஜார் – கடைத்தெரு
165. கேசியர் – காசாளர்
166. ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
167. ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
168. லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
169. பால் பேரிங் – கோளந்தாங்கி
170. ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
171. லிப்ட் – மின் தூக்கி
172. பேக்ஸ் – தொலை நகலி
173. பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
174. ஆர்டர் – கட்டளை
175. டி.வி. – தொலைக்காட்சி
176. ரேடியோ – வானொலி
177. டிபன் – சிற்றுண்டி
178. டெலிபோன் – தொலைபேசி
179. ஃபேன் – மின்விசிறி
180. சேர் – நாற்காலி
181. லைட் – விளக்கு
182. டம்ளர் – குவளை
183. சைக்கிள் – மிதிவண்டி
184. ரோடு – சாலை
185. பிளாட்பாரம் – நடைபாதை
186. பிளைட் – விமானம்
187. சினிமா – திரைப்படம்
188. சினிமா தியேட்டர் – திரையரங்கம்
189. தியேட்டர் – திரை அரங்கு
190. பேங்க் – வங்கி
191. டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
192. காலேஜ் – கல்லூரி
193. யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
194. சயின்ஸ் – அறிவியல்
195. டெலஸ்கோப் – தொலைநோக்கி
196. மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
197. தெர்மாமீட்டர் – வெப்பமானி
198. நம்பர் – எண்
199. லைசென்ஸ் – உரிமம்
200. இண்டர்வியூ – நேர்காணல்
201. கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
202. எலாஸ்டிக் – நெகிழி
203. பீரோ – இழுப்பறை
204. அட்லஸ் – நிலப்படத்தொகுதி
205. ரயில் – தொடர்வண்டி
206. பேனா – தூவல்
Technology — தொழில் நுட்பம்
  1. What’s App — புலனம்
  2. YouTube — வலையொளி
  3. Instagram — படவரி
  4. WeChat — அளாவி
  5. Messanger — பற்றியம்
  6. Twitter — கீச்சகம்
  7. Telegram —தொலைவரி
  8. Skype — காயலை
  9. Bluetooth — ஊடலை
  10. WiFi — அருகலை
  11. Hotspot — பகிரலை
  12. Broadband — ஆலலை
  13. Online — இயங்கலைநேரலை
  14. Offline — முடக்கலை
  15. Thumbdrive — விரலி
  16. Hard Disk — வன்தட்டு
  17. GPS — தடங்காட்டி , புவிநிலை உணரி, புவியிடங்காடி, இடநிலை உணர்வி
  18. Tv — தொலைக்காட்சி
  19. Radio — வானொலி
  20. Computer — கணனி
  21. Laptop — மடிக்கணினி
  22. Watch — கைக்கடிகாரம்
  23. Hand phone — கைபேசி, அழைபேசி
  24. Phone — தொலைபேசி
  25. Smart phone — திறன்பேசி
  26. CCTV — மறைகாணி
  27. LED — ஒளிர்விமுனை
  28. 3D — முத்திரட்சி
  29. Selfie — சுயஉரு
  30. Digital — எண்மின்
  31. Broadband — ஆலலை
  32. Charger — மின்னூக்கி
  33. Printer — அச்சுப்பொறி
  34. SIM card — செறிவட்டை
  35. Hardisk — வன்தட்டு
  36. Scanner — வருடி
  37. Projector — ஒளிவீச்சு
  38. Cyber — மின்வெளி
Food — உணவு
  1. Cake — அணிச்சல்
  2. Bread — வெதுப்பி
  3. Biscuit — மாச்சில்லு
  4. ICE Cream — பனிக்கூழ்
Rose — முளரிப்பூ
Zero — சுழியம்
Problem — சிக்கல்
Mistake — தவறு
Window — காலதர்சாளரம்
Door — கதவுவாயில்
Chair — இருக்கைநாற்காலி
Plate — தட்டு
Cup — குவளை
Clock — மணிக்கூடுகடிகாரம்
Bulb — மின்குமிழ்
Kitchen. — சமையலறைஅடுப்பங்கரைஅடுப்படி
Bathroom — குளியலறைநீராடும் அறை
Toilet — கழிப்பறைமலக்கூடம்
  1. Car = சகடை/சகடம்
  2. Cockpit = கொடிஞ்சி
  3. Calculus = கலனம்
  4. Media = மிடையம்
  5. Text = பனுவல்
  6. Video = விழியம்
  7. Audio = அடுகு
  8. Extreme = எக்கிய
  9. Connection = கணுக்கம்
  10. Strain = துறுங்கு
  11. Motor - முயதர்
  12. Power = புயவு
  13. Safety = ஏமம்
  14. Zone = பகுந்தம்
  15. Warp = பாவு
  16. Widget = இடுக்கை
  17. Version = வேற்றம்
  18. Value = விழுமம்
  19. Vector = வேயர்
  20. Volume = வெள்ளம்

தமிழ் என்று எப்படி பொருள் வந்தது

தமிழ் என்று எப்படி பொருள் வந்தது
தமிழ்
மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்…
========================================================================
க், ச், ட், த், ப், ற் – ஆறும் வல்லினம்.
ங், ஞ், ண், ந், ம், ன் – ஆறும் மெல்லினம்.
ய், ர், ல், வ், ழ், ள் – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்,
உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = ‘த’ வாகவும்,
ம் + இ = ‘மி’ யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று “தமிழு” என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா.. தமிழ் அதிசயம்

புதன், 30 அக்டோபர், 2019

அறுசுவை என்றால் என்ன


அறுசுவை  எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம்தசைகொழுப்புஎலும்புநரம்புஉமிழ்நீர்மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

இனிப்புச் சுவை (sweet)[தொகு]

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
பழவகைகள், உருளைக் கிழங்குகாரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசிகோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour)[தொகு]

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல்இரத்தக் கொதிப்புஅரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

காரச் சுவை (Pungent)[தொகு]

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம்மிளகாய்இஞ்சிபூண்டுமிளகுகடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt)[தொகு]

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கிபூசணிக்காய்சுரைக்காய்பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

துவர்ப்புச் சுவை (Astringent)[தொகு]

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய்மாதுளை,நாவல் பழம்மாவடுமஞ்சள்அவரைஅத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter)[தொகு]

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய்சுண்டக்காய்கத்தரிக்காய்வெந்தயம், பூண்டு, எள்வேப்பம்பூஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

அண்ணே சூத்திரன்னா. ?


இந்து மதத்திலேயே கீழ்சாதி சூத்திரனா..
அப்ப நாம இல்லியா.?
சூத்திரன்னா யாருணே.?


நாயுடு, ரெட்டி, முதலி, செட்டி, கவுண்டன், வன்னியன், உடையான், முக்குலம், கோனார் னு ஊருக்குள்ள தன்னை மேல்சாதி, ஆண்டபரம்பரை னு அடிச்சுவிட்டுகிட்டு உன்னை ஏமாத்தி திண்ணுகிட்டு இருக்கான் பாரு...அவன்தான் சூத்திரன்...!

அண்ணே சூத்திரன்னா. ?

அதுவா...பாதத்தில பொறந்தவன் , அடிமை, பார்ப்பானோட வைப்பாட்டி மகன்....

அப்ப நாம..?

டேய் ....நீ இந்துவே இல்லைடா...அது வெள்ளைக்காரன் காலத்துல உனை இந்துன்னு சேர்த்துகிட்டான்டா....!

ஓ ...அப்படியா.? அந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாம இப்படியே இருந்திரலாம்ணே...!

நீதான்டா மானஸ்தன்...!



உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..

உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.

மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று

இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.

இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.

காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.

நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.

இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.

ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.

பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.

இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...