திங்கள், 27 மே, 2024

 மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

👉வேப்பமரம். 15' × 15'
👉தேக்கு மரம். 10' × 10'
👉பனைமரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉சந்தன மரம். 15' × 15'
👉தென்னை மரம். 24' × 24'
👉வாழை மரம். 8' × 8'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
👉பலா மரம். 22' × 22'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முருங்கை மரம். 12' × 12'
👉முந்திரிகை மரம். 14' × 14'.
இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
எல்லா உணர்ச்சிகளும்:
814
12 கருத்துகள்
557 பகிர்வுகள்
விருப்பம்
கருத்திடுக
பகிர்க

வியாழன், 16 மே, 2024

 தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

காஞ்சிபுரம் அல்ல;
கஞ்சிவரம்.
மதுரை அல்ல;
மருதத்துறை.
மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை.
காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்.
சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை.
திருவாரூர் அல்ல;
ஆரூர்.
பொள்ளாச்சி அல்ல;
பொழில் ஆட்சி.
சிதம்பரம் அல்ல;
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்.
கான்சாபுரம் அல்ல;
கான்சாகிபு புரம்.
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)
வத்ராயிருப்பு அல்ல;
வற்றாத ஆறு இருப்பு.
தனுஸ்கோடி அல்ல;
வில்முனை.
இராமேஸ்வரம் அல்ல;
சேதுக்கரை.
இராமநாதபுரம் அல்ல;
முகவை.
செங்கல்பட்டு அல்ல;
செங்கழுநீர்பட்டு.
சேர்மாதேவி அல்ல;
சேரன்மகாதேவி.
விருத்தாசலம் அல்ல;
முதுகுன்றம்.
வேளாங்கண்ணி அல்ல;
வேலற்கன்னி.
சைதாப்பேட்டை அல்ல;
சையது பேட்டை.
தேனாம்பேட்டை அல்ல;
தெய்வநாயகம் பேட்டை.
கொசப்பேட்டை அல்ல;
குயவர்பேட்டை.
குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.
புரசைவாக்கம் அல்ல;
புரசைப்பாக்கம்.
பெரம்பூர் அல்ல;
பிரம்பூர்.
சேத்துப்பட்டு அல்ல;
சேற்றுப்பேடு.
அரும்பாக்கம் அல்ல;
அருகன்பாக்கம்.
சிந்தாதரிப்பேட்டை அல்ல;
சின்னத்தறிப்பேட்டை.
உடுமலைபேட்டை அல்ல;
ஊடுமலைப்பேட்டை.
பல்லாவரம் அல்ல;
பல்லவபுரம்.
தாராசுரம் அல்ல;
ராராசுரம்.
ஈரோடு அல்ல;
ஈரோடை.
ஒகனேக்கல் அல்ல;
புகைக்கல்.
தர்மபுரி அல்ல;
தகடூர்.
பழனி அல்ல;
பொதினி.
கும்பகோணம் அல்ல;
குடந்தை.
தரங்கம்பாடி அல்ல;
அலைகள்பாடி.
காவிரிபூம்பட்டினம் அல்ல;
காவிரிபுகும்பட்டினம்.
பூம்புகார் அல்ல;
புகும்புகார்.
ஸ்ரீரங்கம் அல்ல;
அரங்கம்.
திருவையாறு அல்ல;
ஐயாறு.
சீர்காழி அல்ல;
சீகாழி.
வேதாரண்யம் அல்ல;
திருமறைக்காடு.
கல்பாக்கம் அல்ல;
கயல்பாக்கம்.
சேலம் அல்ல;
சேரளம்.
எடப்பாடி அல்ல;
இடையர்பாடி.
திருத்தணி அல்ல;
திருத்தணிகை.
திருவண்ணாமலை அல்ல;
அண்ணாந்துமலை.
கடலூர் அல்ல
கூடலூர்.

ஞாயிறு, 5 மே, 2024

 தமிழிசை`::: தொலைந்து போன வரலாற்றின், தொடக்கப் புள்ளி :-

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களைக் கூர்ந்து நோக்கினால், தமிழர் இசையுடன் இசை{புகழ்} பட வாழ்ந்த வாழ்வியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அத்தகைய காலத்தில் (இன்றைய) இந்தியாவின் பல மொழிகள் தோன்றியிருக்கவில்லை, இன்னமும் சில மொழிகள் தமக்குரிய எழுத்துகளையோ அல்லது இலக்கண- இலக்கியங்களையோ கொண்டிருக்கவில்லை. நிலைமை அப்படியிருந்திருக்க, எவ்வாறு இன்றைய தமிழன் தமது இசையினை (செவ்வியல் இசையினை) இழந்து, சில `துக்கடா` என அழைக்கப்படும் சிறு துண்டளவிலான பாட்டுடன் மன நிறைவடைய வேண்டிய நிலை வந்தது. தமிழ் மண்ணில் தமிழ்ப் பாட்டுப் பாடியதற்காகவே மேடையே கழுவப்பட்டு, `தீட்டுக்` கழிக்கப்பட்டுப் பிறகு ஏனைய மொழிப் பாடல்கள் பாடப்படும் நிலைமை எவ்வாறு வந்தது? தமிழில் முருகனைப் போற்றிப் பாடியதற்கே , கருநாடாக இசைக் கச்சேரிகளில் சீர்காழி கோவிந்தராயன் எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார்?
👆இவை எல்லாவற்றுக்கும் காரணம் தமிழன் தனது மரபுசார்ந்த இசையினைப் பறிகொடுத்ததே! எவ்வாறு தமிழன் தனது இசையினைப் பறிகொடுத்தான்? இதைப் பற்றி `தமிழிசை வேர்கள்` என்ற நூல் விரிவாக ஆய்வு செய்கின்றது{நூலாசிரியர் - நா. மம்மது, எதிர் வெளியீடு}. தமிழன் இசையினைப் பறிகொடுத்ததன் முதற்படி எது தெரியுமா? இசை தொடர்பான தமிழ்ச் சொற்களை மறந்து, அவற்றுக்குப் பதிலாக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியதே! இதுவே தொடக்கம். தமிழரே தமிழ்ச் சொற்களை மறந்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டது பெருங்கேடு.
`பண்` என்ற தமிழ்ச்சொல்லை மறந்து `ராகம்` பயன்படுத்தினோம், இவ்வாறே பின்வரும் தமிழ்ச் சொற்களை மறந்து அவற்றுக்கான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினோம்.
• பண் =ராகம்
• பதம் = ஸ்வரம்
•ஆரோசை = ஆரோஹணம் (ascending note)
•அமரோசை = அவரோஹணம் (dscending note)
• ஏழு பதங்கள் =சப்த ஸ்வரம்
ஏழு பாலைப் பண்கள்:-
1 செம் பாலை= ஹரி காம்போதி
2 படுமலைப் பாலை= நடபைரவி
3 செவ்வழிப் பாலை= (சுத்த மத்யம) தோடி
4 அரும் பாலை= சங்கராபரணம்
5 கோடிப் பாலை= கரஹரப்ரியா
6 விளரிப் பாலை= தோடி
7 மேற்செம் பாலை= கல்யாணி
பிலஹரி ராகம் = கொல்லிப் பண், மத்யமாவதி ராகம் = செந்துருத்திப் பண் என அடுக்கிக் கொண்டே போகலாம். கீழுள்ள படங்களையும் காண்க.{படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க, அவற்றின் மீது அழுத்துக}
தொலைத்த இடத்தில்தானே தேட வேண்டும். எனவே முதலில் தமிழ்ச் சொற்களை மீட்டு எடுத்துப் பயன்படுத்துவோம். அதுவே தமிழிசை மீட்பின் முதற்படி.
🙏 தமிழில் சொல்லிருக்க, வேற்று மொழிச் சொற்கள் ஏன்?
சொற்களைத் தொலைத்தால், மொழியினைத் தொலைப்போம்

 அன்பே...

அன்பே... பேரன்பே... பேரன்பே... ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் உறவொன்று கேட்கிறேன் வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன் நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன் அமுதே பேரமுதே பெண்மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா?, ஈர்க்குமா? மதியே தன் மதியே இவன் அழகின் பிம்பம் கண்கள் பார்க்குமா?, தோற்குமா? மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ? மலரோடு மலர்கள் கூட ஊர் என்ன தூற்றுமோ? திரையே திரைக்கடலே உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே, தூண்டுதே ஆ... நெஞ்சோரம் தூங்கும் மோகம் கண்ணோரம் தூபம் போட சொல்லாத ரகசியம் நீதானே ஊர் கேட்க ஏங்குதே தனிமையில் துணைவரும் யோசனை நினைவில் மணக்குதுன் வாசனை எல்லாமே ஒன்றாக மாறுதே மணந்திட சேவல் கூவுதே ஓ கோடைக்காலத்தின் மேகங்கள் கார்காலம் தூறும் ஆளில்லாத காட்டிலும் பூபாளம் கேட்கும் அன்பே பேரன்பே நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே, ஆகுதே உறவே நம் உறவே ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே, ஆகுதே ஓ ஓ உரையாத சொல்லின் பொருளை மொழி இங்கு தாங்குமோ? உறவாக அன்பில் வாழ ஒரு ஆயுள் போதுமோ?



கணிதத்தில் எந்த ஒரு எண்ணுமே ஒன்றிலிருந்து பத்துக்குள் இருக்கும் எல்லா எண்களாலும் வகுக்கப்பட முடியாது.

ஆனால் ஒரு எண் மட்டும் உலக அளவில் இருக்கும் கணிதவியலாளர்களால் புதிராகப் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம்.
இந்த எண் பாரதத்தின் அசைக்க முடியாத திறமை வாய்ந்த கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எண் : 2520
மேலோட்டமாகப் பார்த்தால் எத்தனையோ எண்களில் இதுவும் ஒன்று என்று தோன்றும்.
ஆனால் அப்படி அல்ல. உலகக் கணிதவியலாளர்களால் கடந்து போக முடியாத ஆச்சர்யத்தை அவர்களுக்குக் கொடுத்த ஒரு எண் !
ஏனெனில் 1 - 10க்குள் உள்ள எந்த ஒரு எண்ணாலும் - அது ஒற்றைப்படை எண்ணோ அல்லது இரட்டைப்படை எண்ணோ - வகுக்கப்படக் கூடிய எண்ணாக அது இருந்தது தான் !
இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடும் : முடியவே முடியாது என்று கூடத் தோணும்.
கீழேயுள்ள கணித அட்டவணையைப் பாருங்கள் :
*2520 ÷ 1 = 2520*
*2520 ÷ 2 = 1260*
*2520 ÷ 3 = 840*
*2520 ÷ 4 = 630*
*2520 ÷ 5 = 504*
*2520 ÷ 6 = 420*
*2520 ÷ 7 = 360*
*2520 ÷ 8 = 315*
*2520 ÷ 9 = 280*
*2520 ÷ 10 = 252*
இதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது:
[7 × 30 × 12] - இந்தப் பெருக்கல் தான் !
நமது பாரதம் பின்பற்றிய ஆண்டுக் கணக்குப்படி இந்தப் புதிருக்கு ஒரு விடை கிடைத்து விட்டது.
இந்த எண்ணை ஒன்றிணைத்தவை (coefficient)
வாரத்திற்கு நாட்கள் - 7
மாதத்திற்கு நாட்கள் - 30
ஒரு ஆண்டுக்கு மாதங்கள் - 12
*[7 × 30 × 12 = 2520] This is the characteristic and dominance of time.*
(This is the characteristic and dominance of time -
இறுதியாக.. இதைக் கண்டு பிடித்த அந்த அற்புதமான மூளைக்கு உரியவர் -
திரு. ஸ்ரீனிவாச இராமானுஜம் அவர்கள்.
கீழுள்ளது அந்த ஆங்கிலப் பதிவு நண்பர்களே !
*In mathematics, no number can be divided by all the numbers from 1 to 10,*
*But this one number is very strange, all the mathematicians in the world
*Shocked.*
*This number was discovered by Indian mathematicians with their unwavering intelligence.*
*See this number 2520.*
*It seems to be one of many numbers,*
*But in reality, it is not, it is a number that has surprised many mathematicians around the world.*
*This number can be divided by any number from 1 to 10.*
*Whether even or odd*
*It sounds like really amazing and impossible numbers. Now, look at the table.*
*2520 ÷ 1 = 2520*
*2520 ÷ 2 = 1260*
*2520 ÷ 3 = 840*
*2520 ÷ 4 = 630*
*2520 ÷ 5 = 504*
*2520 ÷ 6 = 420*
*2520 ÷ 7 = 360*
*2520 ÷ 8 = 315*
*2520 ÷ 9 = 280*
*2520 ÷ 10 = 252*
*The secret of the number 2520 is hidden in the multiplication of [7 × 30 × 12].**
*With regard to the Indian Hindu year, the riddle of this 2520 number is solved,*
*It is the coefficient of this number.*
*Days of the week (7),*
*Days of the month (30)*
*And months in a year (12)*
*[7 × 30 × 12 = 2520] This is the characteristic and dominance of time.*
*🙏🏻The Great Mind who discovered it was* *_Sri Srinivasa Ramanujam !

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...