புதன், 17 செப்டம்பர், 2025

 

உன் உதட்டோர சிவப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Un Uthattora Sivappe Song Lyrics in Tamil


ஆண் : தன நானா நானே நா நா…
தன நானா நானே நனனானே நா நா…

BGM

ஆண் : உன் உதட்டோர சிவப்பே…
அந்த மருதாணி கடனா கேட்கும்…
கடனா கேட்கும்…

ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்…
உளவு பார்க்கும்…

BGM

ஆண் : என் செவ்வாழை தண்டே…
என் செவ்வாழை தண்டே சிறு காட்டு வண்டே…
உன்ன நெனச்சு தான் எச பாட்டு…
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு…

BGM

பெண் : ஏன் மம்முத…
அம்புக்கு இன்னும் தாமசம்… ஆஆ…

ஆண் : அடியே அம்மணி…
வில்லு இல்ல இப்போ கை வசம்… ஆ…

பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா…
மனசிருந்தா மார்க்கம் இருக்குது…

ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க…
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது…

BGM

பெண் : முருக மலை காட்டுக்குள்ள…
விறகு எடுக்கும் வேலையில…
தூரத்துல நின்னவரே…
தூக்கி விட்டால் ஆகாதா…

BGM

ஆண் : பட்ட விறக தூக்கிவிட்டா…
கட்ட விரலு பட்டுபுட்டா…
விறகில்லாம தீ புடிக்கும்…
வெட்கம் கெட்டு போகாதா…

பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ…
சொந்தத்துல வரைமுறை இருக்கா…

ஆண் : நீ பொம்பளதானே…
உனக்கு அது நியாபகம் இருக்கா…

பெண் : உன் நெனப்புதான்…
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது… ஆஆ…

ஆண் : அட உன் கிறுக்குல…
எனக்கு இந்த பூமி சுத்துது…

BGM

ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா…
சேர்த்தடிக்க கை துடிக்கும்…
பொட்டு கன்னி உன்ன கண்டா…
புலி கூட தொட நடுங்கும்…

BGM

பெண் : உம்ம நெனச்சு பூசையில…
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்…
நீ குளிச்ச ஓடையில…
நான் குளிச்சா பூ மணக்கும்…

ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே…
என்னை ஏன் தூக்கி சுமக்குற…

பெண் : என் மனசுக்குள் புகுந்து…
ஏன் மச்சான் இறங்க மறுக்குற…

ஆண் : அடி என் நெஞ்சிலே…
ஏண்டியம்மா வத்தி வைக்குற…

பெண் : உன் ஆசைய…
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆஆ…

BGM

 

எனைக் காணவில்லையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஓ.எஸ். அருண் & ரஃபிஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM

ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்…
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்…
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்…
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்…

ஆண் : நான் என்று சொன்னாலே…
நான் அல்ல நீதான்…
நீ இன்றி வாழ்ந்தாலே…
நீர்கூடத் தீதான்…
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்…
நீ என்னை நீங்கிச் சென்றாலே…
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்…
நீ எந்தன் பக்கம் நின்றாலே…

ஆண் : மெய்யாக நீ என்னை…
விரும்பாத போதும்…
பொய் ஒன்று சொல் கண்ணே…
என் ஜீவன் வாழும்…
நிஜம் உந்தன் காதலென்றால்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM

 

கல்லூரி சாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான், ஹரிஹரன் & அஸ்லம் முஸ்தபாஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Kalloori Salai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…

ஆண் : விண்ணவர்கும் மண்ணவர்க்கும்…
விலையற்ற செல்வம் பெண்…
விலையற்ற செல்வம் பெண்…

ஆண் : ஹேய்… பசியை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவலை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு… ஹோய்…

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…

BGM

ஆண் : க க க கல்லூரி சாலை… ஹேய்…

BGM

ஆண் : ம்ம்… காலை முதல் மாலை வரை…
சாலை எங்கும் காதல் மழை…
காஷ்மீர் ரோஜா தோட்டம்…
கேட்வாக் இங்கே காட்டும்…
என்னாளும் பேஷன் ஷோ…
கல்லூரி சாலை…

BGM

ஆண் : கண்கள் சிலிகான் கிராபிக்ஸ்…
கேள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்…
வி சேனெல் சாய்ஸ் இல்…
உன் டால்பி வாய்ஸ் இல்…

ஆண் : லைட்டெனிங் கண்ணங்கள் லேசெர்…
எந்தன் லவ் மேட்டெர் சொல்லாத பேஜர்…
நான் காதல் கம்ப்யூட்டர்…
நீதானே சாப்ட்வேர்…

BGM

ஆண் : செல்லுலார் போனை போல நீங்கள் இருந்தால்…
பாகி பேன்ட் பாக்கெட் குள்ள…
நாங்கள் வைத்துக்கொள்வோம்…

ஆண் : காண்டாக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்…
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக…
நாங்கள் வைத்துகொள்வோம்…

ஆண் : அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேஷன்…
முன்னேறலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்…
கல்லூரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலைதானே…

BGM

ஆண் : டேடிங்காக லேடீஸ் காலேஜ்…
கேட்டினில் காத்திருப்போம்…
ஓகே என்றால் சான் ஃப்ரான்சிஸ்கோ…
டிஸ்கோ போய் வருவோம்…

ஆண் : பாய்ஸ் அண்ட் கேள்ஸ்…
ராக் அண்ட் ரோல் ஆடியே…
கொண்டாடும் சாலை இன்ப சாலை…
எவரிடே லவ் சீசன் நியூ பேஷன்…
நாம் வாழும் தேசம் காதல் தேசம்தான்…

BGM

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
க கல்லூரி சாலை…

BGM

 

அழகிய லைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Alagiya Laila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

BGM

ஆண் : ஏ… சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே…
சூரிய நிலவாய் ஆனது அங்கே…
என் மனம் இன்று போனது எங்கே…
மன்மதனே உன் ரதி எங்கே…

ஆண் : கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்…
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்…
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்…
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்…

ஆண் : காலடி ஓசைகள் கம்பனை கேட்டது…
அம்மம்மா…

ஆண் : பிக்காசோவின் ஓவியம் ஒன்று…
பீத்தோவனின் சிம்பனி ஒன்று…
பெண்ணாய் மாறியதோ…

ஆண் : அந்தப்புரத்து மகராணி… ஓஓ ஓஓ…
அந்தப்புரத்து மகராணி…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

BGM

ஆண் : உயிருக்குள் மின்னல்கள் அடித்ததென்ன…
தாகங்கள் என்னை குடித்ததென்ன…
அழகில் என்னை வளைத்ததென்ன…
இதயம் கொள்ளை போனதென்ன…

ஆண் : ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்…
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்…
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்…
தினம் தினம் இவளை யோசித்தேன்…

ஆண் : வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது…
அய்யய்யோ…

ஆண் : பூக்கள் அவளை பார்த்து பார்த்து…
ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு…
கைகள் நீட்டியதோ…

ஆண் : அந்தப்புரத்து மகராணி… ஓஓ ஓஓ…
அந்தப்புரத்து மகராணி…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

 

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்தேவா & கிருஷ்ணராஜ்தேவாகாதல் கோட்டை

Vellerikka Pinju Vellerikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

BGM

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

ஆண் : கண்ணு அழகு கண்ணு…
காதலிக்க ஏத்த பொண்ணு…
சென்னை ரயிலுக்குள்ள…
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

BGM

ஆண் : உன்ன நானும் பாத்த நேரம்…
ஆசையோட பேச வேணும்…
என்ன தேவை சின்ன பொண்ணே… கேளம்மா…

BGM

ஆண் : ஓ… சிங்கப்பூர் சென்ட் சேலை…
சேத்துப்பட்டு அண்ணா சாலை…
ரெண்டு வீடு வாங்கிதாரேன்… போதுமா…

ஆண் : ஊர் பார்க்கவே மேளம் கொட்டி…
பூ மேடையில் தாலி கட்டி…
நாம் வாழ்ந்திட தேவையில்லை… ஜாலியா…

ஆண் : நீ பாக்குற பார்வை போதும்…
நீ பேசுற வார்த்தை போதும்…
நான் கேட்டதும் நூறு முத்தம்… தாாியா…

ஆண் : உன் நினைப்பு மயக்குதடி…
பட பட பட பட வென்று…
என் மனசு துடிக்குதடி…

ஆண் : கண்ணு இரண்டும் அலையுதடி…
கட கட கட கட வென…
கட்டி என்னை இழுக்குதடி… ஓஓஓ…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

BGM

ஆண் : அச்சம் மடம் நாணம்…
விட்டுப் போனது தான் நாகரிகம்…
எட்டு முழம் சேலை இனி வேணுமா…

BGM

ஆண் : ஓ… கத்தரிக்காய் கூட்டு வைக்க…
புஸ்தகத்தை பாக்குறது…
பேசன் ஆகி போச்சு…
இப்போ பாரம்மா…

ஆண் : பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி…
ஜாக்கெட்டுல லோக்கல் டெய்லி…
லோ ஹிப்புல நோ ரிப்ளை… ஏனம்மா…

ஆண் : லாக்கெட்டுல லாரா கம்னி…
நோட்புக்ல சச்சின் ஜாக்சன்…
ஹேர் கட்டுக்கு பியூட்டி பார்லர்தானம்மா…

ஆண் : உன் நினைப்பு மயக்குதடி…
பட பட பட பட வென்று…
என் மனசு துடிக்குதடி…

ஆண் : கண்ணு இரண்டும் அலையுதடி…
கட கட கட கடவென கட்டி…
என்னை இழுக்குதடி… ஓஓஓ…

ஆண் : வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

BGM

ஆண் : வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

ஆண் : கண்ணு அழகு கண்ணு…
காதலிக்க ஏத்த பொண்ணு…
சென்னை ரயிலுக்குள்ள…
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு…

BGM

 

சிவப்பு லோலாக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாதல் கோட்டை

Sivappu Lolakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

BGM

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

BGM

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

ஆண் : அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா…
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

BGM

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

BGM

ஆண் : மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்…
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும்…
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்…
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும்…

ஆண் : எங்கள் ஊரு காற்று வந்து இந்த ஊரில் வீசுதடி…

BGM

ஆண் : ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்தி காட்டுதடி…

BGM

ஆண் : எட்டுக் கட்டை மெட்டு கட்டி…
என்னப் பாட்டு நான் பாட…
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு…
எங்கே எங்கே நான் போட…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

BGM

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

BGM

ஆண் : தொடுவானம் தொடுவானம்…
இந்த அழகுகள் தொடும் வானம்…
தொலைதூரம் தொலைதூரம்…
தினம் கனவுகள் நடைபோடும்…

ஆண் : தொடுவானம் தொடுவானம்…
இந்த அழகுகள் தொடும் வானம்…
தொலைதூரம் தொலைதூரம்…
தினம் கனவுகள் நடைபோடும்…

ஆண் : சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி…
சுத்துறாளே சின்னக்குட்டி…

BGM

ஆண் : முத்து முத்து பல்லைக்காட்டி…
முத்தமிடும் வெல்லக் கட்டி…

BGM

ஆண் : பொட்டழகு நெத்தியிலே பித்து கொள்ள வைக்காதா…
கட்டழகு ஊசி கொண்டு குத்திக் குத்தித் தைக்காதா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

BGM

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

BGM

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

ஆண் : அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா…
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா…

ஆண் : ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு…
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு…

ஆண் : சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது…

BGM

ஆண் : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…

 

விடுகதையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Vidukathaiya Song Lyrics in Tamil


ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ…
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ…
அழுது அறியாத என் கண்கள்…
ஆறு குளமாக மாறுவதோ…

ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…

ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்…
நான் செய்த தீங்கு என்ன…
நான் செய்த தீங்கு என்ன…

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்…
எந்த இடம் சேரும் யார் கண்டார்…
மனிதர் கொண்டாடும் உறவுகளோ…
எந்த மனம் சேரும் யார் கண்டார்…

ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி…
அது கடல் சென்று சேர்வது காலன் விதி…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…

ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்…
இரண்டும் தீர்வதெப்போ…
இரண்டும் தீர்வதெப்போ…

BGM

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே…
ஒதுங்க கூடாது நல்லவனே…
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்…
தொல்லை நேராது தூயவனே…

ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்…
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்…

ஆண் : காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…

ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்…
நாங்கள் போவதெங்கே…
நாங்கள் போவதெங்கே…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...