திங்கள், 12 பிப்ரவரி, 2018

எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்

எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்

எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிப்து நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது.
இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது..
எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.
தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந் நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500 ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண் டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.
இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது.
ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். அதில் முதலாமவர்
O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான் வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.
Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் – அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது.
Eylouka 3836 – 3932 BC (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா > எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.
Kam 2713 – 2635 BC – தமிழில் காம் > காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல.இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.
Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD - தமிழில் எல்லு அப்பய்ய தி > எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் – அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி — சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.
Manturay 2180- 2145 BC – தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர > மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்கா வில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.
Azagan 2085 – 2055 BC – தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.
Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வாலமீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிபது மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர். காட்டாக, Ramesses I 1295-1294 BC - தமிழில் இராமி சே > இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் – சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் எனறும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.
Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன > வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் – சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் – தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC – தமிழில் உன்னs > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.
Piori 2000 – 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் – வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் – சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.
Kosi Yope (queen) 1871 – 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி – தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது.ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி – இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.
Etiyopus I 1856 – 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி – வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் – ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 – 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.
Lakndun Nowarari . தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள – இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் – சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.
Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் – சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.
Aktis Sanis 1531 BC - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை – சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் – இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.
Mandes 1531 – 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.
Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை – ஆனை, யாந்தை – ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் – குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC .
Titon Satiyo 1256 – 1246 BC – தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் – திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD. அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் – சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC . சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.
Sanuka 1231 – 1226 BC – தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.
Wiyankihi I 1140 – 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம் . சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது.
சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 – 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.
Pino stem 1073 BC – தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ – ப திரிபு. விண்ணன் – சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 – 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.
Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang 220 AD – தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.
Sera I (Tomai) 956 – 930 BC - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று.
Nicauta Kandae(queen) 740 – 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.
Erda Amen Awseya 681 – 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD – தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் – கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் – தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.
Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் – வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC – தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
Tomadyan Piyankhi III 671 – 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர்.
Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC - தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை – தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 – 1180 AD – தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.
Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு – வெற்றி, செருக்கு — பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர்.
Kolas 295 – 285 BC - தமிழில் காள> காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.
Stiyo 269 – 255 BC - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 – 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் – கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.
Bawawl 70 – 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 – 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர்.
Barawas 60 – 50 BC – தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன்.
Azegan Malbagad 200 – 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் — கருமைக் கருத்து, பகடு – எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின.
தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும்.
மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.
மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. குமரிக்கண்டமே தமிழர்களின் பூர்வீகம்...
__________________________________




பயணம் தொடரும்!




ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...


நண்பர்களே படித்து பாருங்கள்...
அந்தஸ்து - நிலைமை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார்விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை ( சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இணை
அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு
இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி..

புதன், 31 ஜனவரி, 2018

இயேசுவைக் கொன்ற யூத தேசியம்



கிருத்துவ சமயத்தின்நம்பிக்கைகளைக் குறித்தேநாம் இங்கே ஒவ்வொன்றாய்கண்டு வந்துகொண்டிருக்கின்றோம்.அந்த வரிசையில் நாம்இப்பொழுது இயேசு கிருத்துபலியானதைப் பற்றியே வேண்டியிருக்கின்றது.

மக்களின் பாவத்திற்காகஇயேசு மனிதனாக வந்துபலியானார் என்பதேஇன்றைக்கு கிருத்துவசமயம் கொண்டிருக்கும்நம்பிக்கையாகும்மனிதர்களின் பாவத்திற்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார்என்றே இன்று பெரிதும் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றதுஅந்தநம்பிக்கையையும் போதனையையும் பற்றி நாம் பின்னர் மெதுவாய் காணலாம்,ஆனால் இப்போதைக்கு நாம் முக்கியமாக காண வேண்டிய விடயம் என்னவென்றால்'இயேசு தன்னைத்தானே பலியாகத் தருவதற்காகத் தான் மனிதனாக வந்தார் என்கின்றஅந்த விடயத்தைஇயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் யார் யார் அறிந்திருந்தார்கள்'என்பதே ஆகும்.

இயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதை இயேசுவின் சீடர்கள்அறிந்திருந்தார்களா?

இல்லைஇயேசு மரணிப்பார் என்பதை அவர்கள் சிறிதும் கூட எண்ணியிருக்கவில்லை. 'நான் எருசலேமில் சித்திரவதை செய்யப்பட்டு மரணிப்பேன்என்று இயேசு அவர்களிடம்முன்கூட்டியே கூறிய பொழுதுஅவரை தனியே அழைத்து 'அப்படி எல்லாம் நடக்காதுஆண்டவரே!' என்று பேதுரு கூறியது இதனை மெய்ப்பிக்கின்றதுஇயேசு தங்களுடையயூத இராஜ்யத்தை மீட்டுக் கொடுத்து அதற்கு அரசராவார் என்றும் தாங்கள் அவருடையமந்திரிகளாக இருப்போம் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்ததுஎனவேஇயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது அவருடைய சீடர்களுக்குத்தெரியாது.

இயேசுவின் சீடர்களுக்கே தெரியாது என்ற பொழுது இயேசு பலியாவதற்காகத் தான்வந்திருக்கின்றார் என்பது வேறு யாருக்குத் தெரிந்திருக்க கூடும்எவருக்கும்தெரிந்திருக்காது.

இயேசு ஒருவருக்கு மட்டுமே தான் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது,அதாவது தன்னை கொலை செய்வார்கள் என்பது தெரியும்இயேசுவின் மரணத்திற்குபின்னர்பவுல் அவர்கள் எழுதிய நடபடிகளில் தான் இயேசு பலியானார் என்ற விடயம்பொதுவாக வெளி வருகின்றதுஅதனைப் பற்றி நாம் விரிவாக வேறு பதிவுகளில்காணலாம்இப்பொழுது நாம் காண வேண்டியது இயேசு உயிருடன் இருந்தகாலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே தான்எனவேஇயேசு உயிருடன்இருந்த காலத்தில் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதனை அவரைத் தவிரவேறு எவரும் அறிந்திராத காரணத்தினால், 'இயேசு பலியானார்என்று நாம் இன்றுஅறிந்திருக்கும் விடயத்தினை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுஅன்று மக்கள்அறிந்திருந்த விடயமான 'இயேசு கொலை செய்யப்பட்டார்என்பதனையே நாம்கருத்தில் இப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றதுஅவ்வாறு நாம்பார்க்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியானது புறந்தள்ள முடியாத வண்ணம்முக்கியமானதொன்றாக நின்று கொண்டிருக்கின்றது. 'இயேசு எதற்காக கொலைசெய்யப்பட்டார்?' என்ற கேள்விதான் அது.

'இயேசு எதற்காக கொலை செய்யப்பட்டார்?' என்கின்ற கேள்விக்கு வருகின்ற நேரடியானவிடை என்னவென்றால், 'இயேசு தன்னைதானே இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டமையினால் கோபப்பட்ட யூத சமய மதகுருக்கள்இயேசு இறைவனை நிந்தித்துவிட்டார் ஆகையால் தங்களுடைய சட்டத்தின்படி அவர் மரணமடைய வேண்டும் என்றுகூறி அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு ரோமர்களை நிர்பந்தித்தனர்என்றேதான் வருகின்றது.  விடையினைத் தான் நாம் மேலும் கவனமாக காணவேண்டியிருக்கின்றது.

'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்று கூறியதாலா யூதர்கள் இயேசுவைகொல்ல எத்தனித்தனர்?' என்ற கேள்விக்கு இயேசுவின் வரலாற்றினை அறிந்த எவரும்கூறக்கூடிய பதில் 'இல்லைஎன்பதாகத் தான் இருக்கும்ஆம்!!! இயேசுவிற்கு மரணதண்டனை விதிப்பதற்கு அவர்கள் 'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்றுகூறி இறை நிந்தனை செய்து விட்டான்என்றே காரணம் கூறினாலும்உண்மை அதுகிடையாதுஅது வெறும் ஒரு சாக்குப்போக்குஅவ்வளவேஇதனை கிருத்துவர்கள்இயேசுவின் மீது நடந்த அந்த விசாரணையைப் பற்றிப் படித்தாலே அறிந்து கொள்வர்.

இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இயேசுவை கைதுசெய்கின்றனர்ஆனால் தவறேதும் செய்யாத அவருக்கு சட்டப்படி மரண தண்டனைவழங்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றார்கள்அவருக்கு மரண தண்டனைவழங்கக்கூடிய வண்ணம் இருக்கின்ற சாட்சிகளை அவர்கள் தேடுகின்றனர்.அவ்வேளையில், 'தான் இறைவனின் மகன்என்று இயேசு என்றோ கூறியிருந்தது அங்கேநினைவில் வரஅதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் அவருக்கு மரண தண்டனைவழங்குகின்றனர்அதாவதுஇயேசு தன்னை இறைவனின் மகன் என்று கூறியதால்அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை...மாறாகஅவருக்கு மரண தண்டனைவழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அந்த கூற்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றதுஅந்த முழு விசாரணையுமே 'இயேசுவை எப்படியாவது கொன்று விடவேண்டும்என்ற குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது.இதனை அநேகமாக அனைத்து கிருத்துவர்களும் அறிவர்.

ஏன் 'இயேசுவை கொல்ல வேண்டும்என்று யூதர்கள் அவ்வளவு முயன்றார்கள்அதுவும்யூத இனத்தின் மீட்பராக மக்கள் பலரும் அவரை எண்ணிக் கொண்டிருந்த பொழுது(இன்றும் கூட பல கிருத்துவர்கள் அவரை அவ்வாறு தான் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்யூத மக்களே எதற்காக அவரைக் கொலை செய்ய முயற்சிக்கவேண்டும்?

இந்த கேள்விகளுக்கான விடையினை நாம் காண வேண்டும்

யூதர்கள் எதற்காக இயேசுவை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றே நாம் கண்டுவந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாம் ஒரு நிகழ்வினைக் காணவேண்டியிருக்கின்றது.

முதல் நிகழ்வுஇயேசுவைகொல்ல வேண்டும் என்றுதலைமை ஆசாரியன் காய்பாமுடிவெடுத்தல்.

'இயேசுவை கொலை செய்யவேண்டும்அது தான்யூதர்களின் தேசத்திற்கும் யூதர்களின் கோவிலுக்கும் நல்லதொன்றாக இருக்கும்மாறாக அவ்வாறுசெய்யாது போனால் யூதர்கள் சிதறுண்டு போய் விடுவார்கள்ரோமர்கள் அனைத்தையும்எடுத்துக் கொள்வார்கள்எனவே ஒரு தேசத்திற்காக ஒரு மனிதனை கொலை செய்வது என்பதுதவறில்லைஎன்று யூதர்களின் தலைமை ஆசாரியனாக இருந்த காய்பா என்பவன் கூறியகருத்தின் அடிப்படையிலேயே தான் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவினை யூதமதகுருக்கள் அனைவரும் ஏற்கின்றனர்இதனை நாம் விவிலியத்தில் இருந்து (யோவான் 11) அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இந்த கூற்று சற்று விசித்திரமானதாக அல்லவா இருக்கின்றதுஏனென்றால்அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவித்து தங்களது இசுரவேல் இராஜ்யத்தை மீட்டுத்தருவதற்காக ஒரு மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த 'மீட்பராகவே தான்இயேசுவை இன்று கிருத்துவ சமயமானது சித்தரித்துக் கொண்டிருக்கின்றதுஅந்தகோட்பாட்டினை அடிப்படையாக வைத்தே தான் இன்றைக்கு ஒட்டுமொத்த கிருத்துவ சமயமேஇசுரவேல் நாட்டினை கண்மூடித்தனமாக ஆதரித்து கொண்டிருக்கின்றதுசரி இருக்கட்டும்அதுவேற கதை...அதனை பின்னர் காணலாம்இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால்'யூத தேசம் எதிர்பார்த்திருந்த மீட்பராக இன்றைக்கு கிருத்துவ சமயமானது இயேசுவைசித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில்இயேசுவை உயிரோடு விட்டால் யூத தேசமே சிதைந்துவிடும் என்று கூறியே இயேசுவை கொலை செய்வதற்காக அன்றைக்கு யூதர்கள் திட்டமிட்டுஇருக்கின்றனர்' - இந்த முரண்பாட்டினையே தான் நாம் இப்பொழுது காண வேண்டும்.

இயேசுதான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் என்றால்எதற்காக யூதர்களே அவரைக் கொல்லதிட்டமிட வேண்டும்?

இயேசு வாழ்ந்திருந்த அந்த காலக்கட்டத்தில் யூதர்கள் ரோமர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்துகொண்டிருந்தனர்யூத தேசமானது ரோமப் பேரரசின் கீழ் இயங்கி வந்து கொண்டிருந்ததுஅந்நிலையில் யூதர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால்இறைவன் அவர்களைஅடிமைத்தளையில் இருந்து மீட்டு அவர்களது அந்த இராஜ்யத்தை அவர்களுக்கே தருவார் - அதற்காக ஒரு மீட்பர் வருவார் என்பதாகவே இருந்து வந்ததுஒரு அரசியல் தலைவரைரோமர்களிடமிருந்து தங்களது தேசத்தை விடுவிக்கும் ஒரு அரசரை அவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தனர்தங்களது சமய நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும்பூர்த்தி செய்யுமாறும்தங்களது நம்பிக்கைகளை மெய்ப்பிக்குமாறும் ஒருவர் வருவார் என்றேஅவர்கள் காத்திருந்தனர்.

சிக்கல் அங்கு தான் இருந்ததுஇயேசு அவர்கள் எதிர்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.

  • யூதர்கள் ஓய்வு நாளான சபாத்தை அனுசரிக்க வேண்டும் என்றனர் - இயேசு ஓய்வு நாள்என்று எதுவும் இல்லை என்றார்.
  • யூதர்கள் விரதமிருப்பது முக்கியம் என்றனர் - இயேசு அதையும் முக்கியமில்லை என்றுகூறினார்.
  • இறைவன் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி விருத்தசேதனம் அவசியம் என்றே யூதர்கள்கூறினர் - இயேசு விருத்தசேதனத்தை தேவையற்றது என்றார் (இன்றைக்கு கிருத்துவர்கள்விருத்தசேதனம் செய்வது இல்லை)
  • யூதர்கள் சமாரியர்களை எதிரிகளாக கருதினர் - இயேசு சமாரியர்களுடன் சமமாகசகோதரராக பழகினார்அவ்வாறே அவர் மற்றவர்களையும் பழகச் சொன்னார்.
  • எருசலேமில் இருக்கின்ற கோவிலில் தான் இறைவன் வீற்று இருக்கின்றார் என்று யூதர்கள்கூறினர் - இயேசு அதனை மறுத்தார்இறைவன் மனிதர்களின் மனதில் இருக்கின்றார்என்றே அவர் கூறினார்.
  • மோசேவுக்கு கடவுள் தந்த கட்டளைகள் என்று யூதர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தகட்டளைகளையும் அவர் மறுத்தார்.
  • அனைத்திற்கும் மேலாகயூதர்கள் தாங்கள் மட்டுமே தான் இறைவனால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் தங்களின் இனம் மட்டுமே தான் சிறந்த இனம் என்றும்கருதி வந்தனர் - இயேசு அதனை முற்றிலுமாக நிராகரித்தார்இறைவன் மக்கள்அனைவரையும் சமமாகக் காண்கின்றார் என்றும் இறைவனின் பார்வையில் பல்வேறுதேசங்களோ அல்லது பல்வேறு இனங்களோ கிடையாதுஅனைத்தும் ஒன்றே என்றே அவர்கூறினார்.

இவை தான் சிக்கலுக்கு வழிவகுத்தனதாங்கள் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோஇயேசு அவ்வாறு இருந்திருக்கவில்லைமுற்றிலும் மாறாக இருந்தார்ஆனாலும் யூத மக்களுள்சிலர் இயேசு செய்த அதிசயங்கள்/போதனைகளின் காரணமாக அவர்தான் தங்களின் மீட்பராகஇருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டிருந்தனர்அது தான் யூத சமய மதகுருக்களுக்குசிக்கலாக இருந்தது.

அவர்களின் பார்வையின்படி இயேசு அவர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் அல்லஅவர் வேறு யாரோஒருவர்...ஏதோ சில நூல்களைப் படித்துவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பவர்...அவர்அதிசயம் பண்ணுகின்றார் என்று மக்கள் பலர் கூறுகின்றனர் - ஏதோ வித்தைகளின் மூலமாகஅவர் அவ்வாறு செய்யக் கூடுமாயிருக்கும் அல்லது அவை தற்செயலான நிகழ்வுகளாக இருக்கும்மக்கள் அதனை அறியாமல் அவர் அதிசயங்கள் செய்கின்றார் என்று கூறக் கூடுமாயிருக்கும்ஆனால் நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் இல்லைநம்முடையநம்பிக்கைகளுக்கும் அவருடைய கூற்றுகளுக்கும் முரண்பாடுகள் அநேகம் இருக்கின்றனநிச்சயமாக அவர் நாம் எதிர்பார்க்கும் மீட்பர் அல்ல - இது தான் பெரும்பாலான யூத சமய மதகுருக்களின் நம்பிக்கையாக இருந்தது.

அதனால் தான் அவர்கள் மக்களை இயேசுவிடமிருந்து பிரிப்பதற்கும்இயேசுவின் கூற்றுகள்தவறானவை என்று நிரூபணம் செய்வதற்கும்இயேசுவை சிக்கலில் சிக்க வைப்பதற்கும் அநேகமுயற்சிகள் எடுக்கின்றனர்அந்த முயற்சிகளை நம்மால் விவிலியத்தில் இருந்தே அறிந்து கொள்ளமுடிகின்றதுஅவர்களின் நோக்கம் ஒன்று தான் - இயேசு யூதர்களின் மீட்பர் அல்ல...இது நிச்சயம்எனவே மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்று பிரிந்து விடாதவாறு நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்அவ்வளவு தான் அவர்களது குறிக்கோள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்றுஅவர்கள் தொடக்கத்தில் எண்ணியிருக்கவில்லைஅவர் மீட்பர் அல்ல என்றும் அவருடையகூற்றுகள் தவறானவை என்றும் மக்களை நம்ப வைத்துமக்களை அவரிடமிருந்து விலக வைக்கவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்ததுஅவர் செய்த அதிசயங்களைக் குறித்தசெய்திகளை எல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லைஅவ்வாறுஇருக்கையில் திடீரென்று அவரைக் கொலை செய்வது தான் யூத இனத்தையும் யூத மக்களையும்காப்பாற்றக் கூடிய ஒரே வழி என்று அவர்கள் முடிவு செய்கின்றனர்அவர்களது இந்த திடீர்முடிவிற்கான காரணத்தை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அந்த முடிவினைஎடுத்த சுழலினை நாம் காண வேண்டியிருக்கின்றது.

இயேசு லாசருவை மரணத்தில் இருந்து உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னரே தான் யூத சமயமதகுருக்கள் அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி அதில் 'வேறு வழியில்லை...இயேசுவைகொன்றாகத் தான் வேண்டியிருக்கின்றதுஎன்று முடிவெடுக்கின்றார்கள்இங்கே ஒரு கேள்விகேள்வி எழுகின்றது...'எதற்காக இயேசு லாசருவை உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னர் அவர்கள்இம்முடிவினை எடுக்கின்றனர்இயேசு இதற்கு முன்பாக இறந்து போயிருந்த ஒரு சிறுமியைஉயிர்த்தெழ செய்தாரேஅப்பொழுது அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யாமல்எதற்காக லாசருவை உயிர்த்தெழ செய்த பொழுது அம்முடிவினை எடுக்கின்றனர்?

இதற்கு விடையாய் நாம் கண்டோம் என்றால் 'இயேசு அந்த சிறுமியை உயிர்த்தெழ வைத்தார்என்பதை பெருவாரியான யூத மதகுருக்கள் நம்பியிருக்கவில்லைஎன்றே தான் வருகின்றது. 'நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது மயங்கிஇருந்திருக்கலாம்அதனை அறியாத மக்கள் அவசரப்பட்டு அவள் இறந்து விட்டாள் என்று முடிவுசெய்திருக்கலாம்பின்னர் இயேசு அங்கே சென்றிருந்த பொழுது அவள் விழித்தெழுந்துஇருக்கலாம் - அதனை அறியாது அம்மக்கள் இயேசு சிறுமியை மரணத்திலிருந்து உயிர்த்தெழவைத்து விட்டார் என்று கூறி இருப்பர்என்பதே தான் அவர்களது எண்ணமாக இருந்ததுஆகையால் அதனை அவர்கள் ஒரு பெரிய நிகழ்வாக கருதியிருக்கவில்லை.

ஆனால் லாசருவின் கதையோ முற்றிலும் வேறானது. அவன் இறந்து நான்கு நாட்களானதற்குப் பின்னர் தான் அவனை அவனது கல்லறையிலிருந்து உயிருடன் இயேசு எழுப்புகின்றார். இறந்து போனவன் என்று ஊரால் அடக்கம் செய்யப்பட்டவன்நான்கு நாட்களுக்கு பின்னர் கல்லறையிலிருந்து உயிருடன் வருவதை தற்செயலான ஒரு செயல் என்று எவராலும் கூற முடியாது. அத்தகைய அதிசயங்கள் மக்களின் கவனத்தினை நிச்சயம் ஈர்க்கும் என்பதனை அந்த மதகுருக்கள்அறிந்திருந்தனர். எனவே தான் இயேசு எப்பொழுது லாசருவை உயிர்த்தெழ செய்தநிகழ்வு அவர்களது கவனத்திற்கு வந்ததோஅப்பொழுது அவர்கள் உடனடியாககூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவுசெய்கின்றார்கள்.

ஆனால் இங்கே முக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால்இறந்து போன லாசருவை தான்உயிருடன் எழுப்பினால்நிச்சயமாக யூத மதகுருக்கள் தன்னை கொலை செய்வதற்கு வழி தேட ஆரம்பிப்பார்கள் என்று இயேசுவும் அறிந்துதான் இருந்தார். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நான்கு நாட்கள் கழித்து லாசருவை உயிருடன் எழுப்புகின்றார். லாசரு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்று முன்னமே அறிந்திருந்தும் உடனடியாக அவனைக் காண செல்லாமல்அவன் இறந்ததற்கு பின்னரே அவனைக் காண்பதற்காக அவர் புறப்படுகின்றார். மேலும் அவன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்பதனை அறிந்த பொழுதே அவர் தன்னுடைய சீடர்களிடம் 'அவன் இந்த நோயினால் மரணம் அடைய மாட்டான். தேவனின் குமாரனை மகிமைப்படுவதற்கான இறைவனின் சித்தம் இதுஎன்றே அவர் கூறியும் இருக்கின்றார். மேலும் அவனை அவ்வாறு உயிர்த்தெழச் செய்தால் தான் அவரை மக்கள் நம்புவார்கள் என்றுமே அவர் கூறி இருக்கின்றார்.

அவர் எதிர்பார்த்தபடியேஅவர் லாசருவை உயிர்த்தெழச் செய்த நிகழ்வு யூத மதகுருக்களின் கவனத்திற்கு எப்பொழுது வந்ததோஅப்பொழுது அவர்கள் உடனடியாக கூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்கின்றார்கள்

'இயேசு அதிசயங்களை செய்கின்றார். அது உறுதி. எனவே மக்கள் அவரைப் பின்பற்றப் போவதும் உறுதி. ஆனால் மக்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்றால் நம்முடைய தேசம் சிதறுண்டு போகும்ஏனென்றால் அவர் நம்முடைய நம்பிக்கைகளுக்கு மாறானதாக இருக்கக்கூடிய விடயங்களையே போதிக்கின்றார். யூதர்களுக்கும் மற்ற மக்களுக்கும் வேறுபாடுகள் கிடையாது என்றே அவர் கூறுகின்றார். இது யூதர்கள் தனித்தன்மையானவர்கள் என்ற கூற்றினை உடைத்துவிடும். இறைவனின் பார்வைக்கு பல்வேறு தேசங்கள் என்பது கிடையாது என்றே அவர் கூறுவதை நம் மக்கள் நம்பினர் என்றால்யூத தேசம் கடவுளின் பிள்ளைகளின் தேசம் என்ற நம்முடைய கூற்றினை அவர்கள் மறுத்து விடுவர். நமக்குள்ளேயே இப்படி வேறுபாடுகள் தோன்றினால் எளிதாக ரோமர்கள் நம்மளை முற்றிலுமாக வீழ்த்தி விடுவர். எனவே நம்முடைய தேசத்தின் நலனுக்காக இயேசு கொலை செய்யப்பட வேண்டும்.என்று எண்ணியே இயேசுவை கொலை செய்வதற்கு அவர்கள் முடிவு செய்கின்றனர்.

அதாவதுதங்களது தேசம் நன்றாக இருக்க வேண்டும்தேச மக்கள் சிதறி விடக்கூடாதுயூதர்கள் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்கின்ற நம்பிக்கை மறைந்து விடக்கூடாது என்கின்ற அந்த ஒரு காரணத்திற்காகவே தான் இயேசு கொலை செய்யப்படுகின்றார். மக்கள் அனைவரும் சமம்தேசங்கள் என்று மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பிரிவினைகளை இறைவன் மதிப்பதில்லை என்கின்ற இயேசுவின் அந்த கொள்கைகளுக்காகவே அவர் கொலை செய்யப்படுகின்றார்.

இதனையே தான் நாம் இந்த முதல் நிகழ்வின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். சரி இப்பொழுது நாம் இரண்டாவது நிகழ்வினைக் காணலாம்.


இயேசுவை யூதர்கள் கொன்றதற்கானகாரணம் யூத தேசியம் தான் என்றே நாம்  கொண்டிருக்கின்றோம்நாம் அவ்வாறுகூறுவதற்கு சான்றாகஇப்பொழுதுஇரண்டாவது நிகழ்வினை நாம் காணவேண்டியிருக்கின்றது.

இரண்டாவது நிகழ்வு : இயேசுவைகிரேக்கர்கள் சந்திக்க விரும்புதல்  

யூதர்களின் பஸ்கா பண்டிகையின்பொழுது இயேசு மீண்டும் எருசலேம்நகருக்குச் செல்லுகின்றார்அது பண்டிகைகாலம் என்பதினால் எருசலேம் நகரில் யூதமக்களுடன் பல்வேறு இன மக்களும்இருக்கின்றனர்அங்கே அவர் மக்களுக்குபோதனைகள் செய்ய ஆரம்பிக்கின்றார்அப்பொழுது அங்கிருந்த கிரேக்க மக்களுள்சிலர் இயேசுவைத் தாங்கள் சந்திக்கவிரும்புவதாக பிலிப்பிடம் கூறுகின்றனர்இங்கே தான் நாம் பிலிப்பின் செயலினைக்கவனிக்க வேண்டியிருக்கின்றது.

இயேசுவை தாங்கள் சந்திக்க வேண்டும்என்று கிரேக்கர்கள் தன்னிடம் கேட்டதற்குஒன்று 'சரிஎன்று சொல்லிவிட்டுஅவர்களை இயேசுவிடம் பிலிப்புஅழைத்துச் சென்றிருக்கலாம்அல்லது 'இல்லைஎன்று மறுத்திருக்கலாம்ஆனால் பிலிப்பின்செயலோ வேறாக இருக்கின்றதுபிலிப்பு முதலில் தயங்குகிறான் - பின்னர் கிரேக்கர்கள்இயேசுவை சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக அந்திரேயுவிடம் அவன் கூறுகின்றான்பின்னர்அவர்கள் இருவருமாய் சென்று இயேசுவிடம் அந்த கிரேக்க மக்களைப் பற்றி கூறுகின்றனர்மேலும்கிரேக்கர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக தன்னுடைய சீடர்களிடமிருந்துகேள்விப்பட்ட இயேசுவின் செயல்களும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றனஅவர்கலக்கமடைகின்றார்பின்பு தன்னுடைய மரணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பிக்கின்றார்தான்மரணமடைவதற்கான தருணம் நெருங்குவதனை அறிந்தவராய்மனிதர்கள் தங்களது தனிப்பட்டவாழ்வினை பெரிதாக எண்ணக் கூடாது என்றும் அதனை இழப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றுமே அவர் கூறுகின்றார்அதாவது கிரேக்கர்கள் தன்னைச் சந்திப்பதற்குவிரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கு முன்பு இயல்பாக இருக்கின்ற அவர்அந்தவிடயத்தினை அறிந்து கொண்டதற்குப் பின்னர் கலக்கமடைகின்றார்ஏன் அவர் அவ்வாறுகலக்கமடைய வேண்டும்ஏன் அவர் அவ்வாறு மாற வேண்டும்?

முதலில் சீடர்கள் தயங்குகின்றனர்கிரேக்கர்கள் இயேசுவை சந்திப்பதில் ஏன் அந்த சீடர்களுக்குஅவ்வளவு தயக்கம்பின்னர் இயேசுவே கலங்குகிறார்...ஏன் அவர் அவ்வாறு மாறுகின்றார்?

இந்த கேள்விகளுக்கு விடை எளிதானதொன்று தான்யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள்மட்டுமே தான் இறைவனுக்கு உரியவர்கள்மற்ற இனத்தவர்களை அவர்கள் புற ஜாதியினராக - தகுதி குறைந்தவர்களாக கருதி வந்தனர்அவர்களைப் பொறுத்தவரை இறைவனிடம் இருந்துவரும் தீர்க்கத்தரிசிகள் யாவரும் யூதர்களுக்காக மட்டுமே வருபவர்கள்மற்ற இன மக்கள்இறைவனை அறியாதவர்கள் எனவே அவர்களுக்கு இறைவன் உதவ மாட்டார் - இதுவே தான்யூதர்கள் கொண்டிருந்த நம்பிக்கை.

இந்நிலையில் தான் நாம் இயேசுவை சந்திக்க வேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பிய அந்தசூழலினைக் காண வேண்டியிருக்கின்றதுலாசருவை உயிர்த்தெழ செய்ததால் இயேசுவின் புகழ்மக்களிடம் அதிகமாக பரவியிருக்கின்றதுதங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டுதங்களுடைய இராஜ்யத்தை மீண்டும் வென்று தருவதற்கு வந்திருக்கும் மீட்பர் அவர் தான்என்கின்ற நம்பிக்கையும் யூத மக்களிடம் பரவலாக பரவியிருக்கின்றதுஎனவே ரோமர்களின்பிடியில் இருந்து அவர்களை மீட்டு அவர்களது இராஜ்யத்தை தரப்போகின்ற அந்த 'மீட்பரை'க்காணவும் அவர் கூறுவதைக் கேட்கவும் அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால் இங்கே ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றதுயூத இன மீட்பர் யூத மக்களுக்கு மட்டுமேஉரியவர்யூதர்களின் நம்பிக்கை வரலாறுதோறும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றதுஏனென்றால் அவர்களது கூற்றின்படி அவர்கள் மட்டுமே தான் இறைவனை அறிந்திருக்கின்றார்கள்மற்ற இன மக்கள் எல்லாம் இறைவனை அறியாமல் சிலை வழிபாடு செய்துகொண்டிருக்கின்றார்கள்இந்நிலையில் இயேசு யூத மக்களால் புற ஜாதியினர் என்றுகருதப்படுகின்ற கிரேக்கர்களையும் யூதர்களுக்கு சமமாக மதித்து அவர்களுக்கும் போதித்தார்என்றால், 'என்ன இவர்...மற்ற இன மக்களுக்கும் போதனை செய்கின்றாரே...அவர்களையும்சமமாய் நடத்துகின்றாரே...இறைவனை அறியாத அவர்களுடன் இவர் தொடர்பு கொள்கின்றார்என்றால் இவர் உண்மையிலேயே நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் தானாஇல்லையேல்நம்முடைய மதகுருக்கள் கூறுவது போல இவர் இறைவனுக்கும் யூதர்களுக்கும் விரோதமானவரா?' என்ற எண்ணம் நிச்சயமாய் அங்கிருந்த யூத மக்களுக்குள் எழத்தான் செய்யும்யூதர்களும் மற்றமக்களும் சமமே என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காகவே இயேசுவை அந்த மக்கள்வெறுக்கவும் வாய்ப்பிருக்கத் தான் செய்கின்றது.

இயேசுவின் சீடர்கள் அதனை அறிந்து தான் இருந்தனர்அதனாலேயே தான் அவர்கள்இயேசுவிடம் கிரேக்க மக்களின் அந்த விருப்பத்தைக் கொண்டு செல்வதற்கு யோசிக்கின்றனர்இருந்தும்அவர்கள் முடிவில் இயேசுவிடம் கிரேக்கர்களின் அந்த விருப்பத்தைக் கூறத்தான்செய்கின்றனர்.

இயேசுவின் அதனை அறிந்தே தான் இருந்தார்கிரேக்கர்களுக்கும் போதித்தால் யூத மக்கள்தன்னை வெறுக்கக் கூடும் என்பதனை அவர் தெளிவாக அறிந்திருந்தார்மேலும் அதனைஅடிப்படையாக வைத்தே யூத மதகுருக்கள் மக்களை தண்னிடமிருந்து பிரிப்பர் என்பதனையும்அவர் அறிந்திருந்தார்ஏற்கனவே 'ரோமர்களிடம் பணிபுரிகின்ற வரி வசூலிக்கும் யூதர்களுடன்நெருங்கிப் பழகுகின்றார்என்று அவர் மீது யூத சமய மதகுருக்கள் குற்றம் சாட்டியிருந்தநிலையில்கிரேக்கர்களுக்கும் இயேசு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கும் போதனை செய்தார்என்றால் நிச்சயமாக அதனை வைத்தே 'இவன் நம்மை மீட்க வந்த மீட்பர் அல்லஇவன் யூத இனதுரோகிஏதோ தீய சக்தியின் ஆற்றலினால் இவன் அதிசயம் செய்கின்றான்இவன் யூதர்களைப்பிரிக்கின்றான்என்று கூறி மக்களை தனக்கு எதிராக அவர்கள் திருப்புவர் என்பதனை அவர்அறிந்திருந்தார்.

எனவே தான் அந்த நேரத்தில் இயேசு கலக்கமடைந்தார்தன்னை கொலை செய்வதற்கு யூதமதகுருக்கள் ஆயுத்தமாகி விட்டனர் என்பதனை அவர் அறிந்திருந்தார்லாசருவைமரணத்திலிருந்து அவர் எழுப்பிய பொழுதே அவர் அதனை அறிந்திருந்தார்இப்பொழுதோகிரேக்கர்களுக்கும் சேர்த்து தான் போதனை செய்தால்அதனைக் காரணமாக வைத்தே மக்களையூத மதகுருக்கள் தம்மிடமிருந்து பிரித்து விடுவர் என்பதனையும் அவர்கள் அவ்வாறு பிரித்துமக்களை குழப்பி விட்டால் தன்னைக் கொல்வது அவர்களுக்கு மேலும் எளிதாகி விடும்என்பதனையும் அவர் அறிந்திருந்தார்தான் மரணமடைய வேண்டிய தருணம் அருகில் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்ஏனென்றால் நிச்சயமாக கிரேக்கர்களை அவரால் புறக்கணிக்கமுடியாது - மக்கள் அனைவரும் சமமேஇறைவனின் முன்னே பல்வேறு தேசங்கள் என்றபிரிவினைகள் எதுவும் கிடையாது என்கின்ற அவரது போதனைகளுக்கு ஏற்ப அவரால் நிச்சயம்கிரேக்கர்களைப் புறக்கணிக்க முடியாதுயூதர்கள் நம்பியது போல அவர் யூதர்களின் மீட்பராகவரவில்லை மாறாக உலக மீட்பராகவே வந்திருந்தார்எனவே கிரேக்கர்களை அவரால்புறக்கணிக்க முடியாதுகிரேக்கர்களை அவர் புறக்கணிக்காவிட்டால் நிச்சயமாக மக்களைஅவருக்கு எதிராக யூத மதகுருக்கள் திருப்பி விடுவார்கள்அந்நிலையில் தான் மரணமடையவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டதை அவர் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார்ஆகவேதான் ஒரு மனிதனாய் அவர் கலக்கமடைகின்றார்தன்னுடைய மரணத்தைப் பற்றியும்பேசுகின்றார்நிற்க.

இயேசுவை கொலை செய்தது யூத தேசியமே என்றே நாம் இந்த பதிவில் கண்டு வந்துகொண்டிருக்கின்றோம்அதற்கு சான்றாய் இரண்டு நிகழ்வுகளையும் கண்டு இருக்கின்றோம். 'தேச நலனுக்காகவும் தேச மக்களின் ஒற்றுமைக்காகவுமே தான் இயேசுவை கொலை செய்ய யூதசமய மதகுருக்கள் முடிவெடுக்கின்றனர் என்பதனை முதலாம் நிகழ்வில் கண்டோம்அவ்வாறேயூதர்களை மற்ற இனமக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காததால் தான் மரணம் அடையநேரிடும் என்று இயேசு அறிந்து கொண்டதை இரண்டாவது நிகழ்வின் மூலமாக கண்டோம்.

இதன் மூலமாக 'எங்கள் தேசம் நன்றாக இருக்க வேண்டும்எங்கள் மக்கள் நன்றாக இருக்கவேண்டும்...மற்ற மக்களும் நாங்களும் ஒன்றல்லஎன்று இருக்கின்ற அந்த தேசியச் சிந்தனையேதான் இயேசுவைக் கொன்றது என்பதனை நாம் அறிந்து கொள்கின்றோம்ஆனால் வருத்தகரமாககிருத்துவ மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லைமக்களைப் பிரித்து வைக்கின்ற அந்ததேசியச் சிந்தனைகளையையே அவர்களும் போற்றிக் கொண்டிருக்கின்றனர்அந்தச்சிந்தனையே இயேசுவை கொலை செய்திருந்த போதிலும்அவர்கள் இன்றும் கூட இயேசுவைகொலை செய்த அந்த கொள்கையையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்ற கொள்கையினைஅதாவது ஒரு தேசத்தைச் சார்ந்தவர்கள் மற்ற தேசத்தைச்சார்ந்தவர்களை விட உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சமமானவர்கள் அல்ல என்றும் எண்ணிக்கொள்ளுகின்ற தேசியக் கொள்கையினை எந்த கிருத்துவன் ஏற்றுக் கொள்ளுகின்றானோஅதுஇஸ்ரேலை ஆதரிக்கும் தேசியமாக இருக்கட்டும்அமெரிக்க தேசியமாகட்டும்இந்தியதேசியமாகட்டும்தமிழ் தேசியமாகட்டும்அவன் "பரபாஸை விடுதலை செய்...இயேசுவைதூக்கில் போடுஎன்று கோஷமிட்ட யூதனாகவே இருக்கின்றானே ஒழிய இயேசு கூறியகிருத்துவனாக இருக்கவில்லைஇது நிச்சயம்இயேசு கூறிய வழிகளின்படி வாழுகின்றஒருவனால் நிச்சயமாக தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஒருபோதும் காண முடியாதுஅவ்வாறு வேறுபாடுகள் காண்பவர்களால் இயேசு கூறிய வழிகளின்படி வாழ முடியாது.

ஏனென்றால் தேசியம் மக்களைப் பிரிக்கின்றது...ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துகிறது.



பயணம் தொடரும்!



"ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு" - தீத்து 3:2 (புனித 

பைபிள்)



  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...