வெள்ளி, 13 ஜூன், 2025

 

நறுமுகையே நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஏ. ஆர். ரகுமான்இருவர்

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

 

அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்டூயட்

Anjali Anjali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…

ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…

பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…

பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…

பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…

ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…

ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

 

புது வெள்ளை மழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & சுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்ரோஜா

Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

—BGM—

ஆண் : பெண் இல்லாத ஊரிலே…
அடி ஆண் பூ கேட்பதில்லை…

பெண் : பெண் இல்லாத ஊரிலே…
கொடிதான் பூப்பூப்பதில்லை…

ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்…
இந்த பூமி பூப்பூத்தது…

பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை…
உந்தன் காதோடு யார் சொன்னது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…

பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

—BGM—

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்…
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்…

ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்…
உயிர்ப்பூ சருகாக உலரும்…

பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை…
உன் கண்கள் பந்தாடுதோ…

ஆண் : மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா…
எந்தன் மார்போடு வந்தாடுதோ…

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…

ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை…

பெண் : இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா…

பெண் : உடல் நனைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை…

பெண் : இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா…

பெண் : உடல் நனைகின்றது…

 

உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Uyire Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…
காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து…
உயிர்தாங்கி நானிருப்பேன்…
மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால்…
மலைமீது தீக்குளிப்பேன்…
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே…
அதற்காகவா பாடினேன்…
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே…
அதற்காகத்தான் வாடினேன்…
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…

பெண் : உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
உறவே… உறவே…
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…
கனவே… கனவே…
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்…

ஆண் : காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

பெண் : ஓா் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை…
வாராமல் போய்விடுமா…
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது…
மறு கண்ணும் தூங்கிடுமா…
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்…
கண்ணாளன் முகம் பார்க்கவே…
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்…
கண்ணா உன் குரல் கேட்கவே…
அடடா அடடா… இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…

பெண் : மழைபோல் மழைபோல்…
வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்…
மனம்போல் மனம்போல்…
உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்…
உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…

 

அன்பே அன்பே கொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Anbe Anbe Kollathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…

BGM

ஆண் : பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்…
அடடா பிரம்மன் கஞ்சனடி…
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்…
ஆஹா… அவனே வள்ளலடி…

ஆண் : மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து…
ரவிவர்மன் எழுதிய வதனமடி…
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்…
சிற்பிகள் செதுக்கிய உருவமடி…

ஆண் : இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்…
நீதான் நீதான் அழகியடி…
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து…
என்னை வதைப்பது கொடுமையடி…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…

BGM

குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த பூவே பூவே…
அவள் கூந்தல் மணம் சொல்வாயா…
கொடுத்து வைத்த நதியே நதியே…
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா…

குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த கால்கொலுசே…
கால் அளவைச் சொல்வாயா…
கொடுத்து வைத்த மணியே…
மார் அழகைச் சொல்வாயா…

BGM

ஆண் : அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி…
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்…
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு…
உயிருக்கு உயிரால் உனையிடுவேன்…

BGM

ஆண் : மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து…
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்…
தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது…
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்…

ஆண் : பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக…
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்…
தேவதை குளித்த துளிகளை அள்ளித்…
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…


 

உசுரே போகுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Usure Pogudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த…
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச…
அடி தேக்கு மர காடு பெருசுதான்…
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்…

ஆண் : அடி தேக்கு மர காடு பெருசுதான்…
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்…
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி…
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம்…
ஒட்ட நினைக்கேன் ஆகல…
மனசு சொல்லும் நல்ல சொல்ல…
மாய ஒடம்பு கேக்கல…

ஆண் : தவியா தவிச்சு…
உசுர் தடம் கெட்டு திரியுதடி…
தையிலாங் குருவி…
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி…

ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா…
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா…
என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா…

ஆண் : சந்திரனும் சூரியனும்…
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே…
சத்தியமும் பத்தியமும்…
இப்ப தலை சுத்தி கெடக்குதே…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

BGM

ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல…
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல…
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள…
விதி விலக்கில்லாத விதியுமில்ல…

ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து…
மொட்டு விரிக்குது தாமரை…
தொட்டு விடாத தூரம் இருந்தும்…
சொந்த பந்தமும் போகல…

ஆண் : பாம்பா விழுதா…
ஒரு பாகுபாடு தெரியலையே…
பாம்பா இருந்தும்…
நெஞ்சு பயப்பட நினைக்கலையே…

ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்…
என் கண்ணுல உன் முகம் போகுமா…
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள…

ஆண் : சந்திரனும் சூரியனும்…
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே…
சத்தியமும் பத்தியமும்…
இப்ப தலை சுத்தி கெடக்குதே…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

BGM

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

 

என்னோடு நீ இருந்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுனிதா சாரதி & சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்

Ennodu Nee Irundhaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம்…
ஓ… தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்…
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : தேவை எதுவும் தேவையில்லை…
தேவை எல்லாம் தேவதையே…

BGM

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : ஓ… என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே…
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே…

ஆண் : நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே…
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே…
என்னோடு நீ இருந்தால்…

BGM

ஆண் : உண்மைக் காதல் யாரென்றால்…
உன்னை என்னை சொல்வேனே…
நீயும் நானும் பொய் என்றால்…
காதலை தேடி கொல்வேனே…

ஆண் : கூந்தல் மீசை ஒன்றாக…
ஊசி நூலில் தைப்பேனே…
தேங்காய்க்குள்ளே நீர் போல…
நெஞ்சில் தேக்கி வைப்பேனே…

பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா…
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா…
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்…
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

BGM

ஆண் : ஓ… என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
உயிரோடு நான் இருப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : நீ இல்லா உலகத்தில்…
நான் வாழ மாட்டேனே…
என்னோடு நீ இருந்தால்…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...