வெள்ளி, 13 ஜூன், 2025

 

உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Uyire Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…
காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து…
உயிர்தாங்கி நானிருப்பேன்…
மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால்…
மலைமீது தீக்குளிப்பேன்…
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே…
அதற்காகவா பாடினேன்…
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே…
அதற்காகத்தான் வாடினேன்…
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…

பெண் : உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
உறவே… உறவே…
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…
கனவே… கனவே…
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்…

ஆண் : காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

பெண் : ஓா் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை…
வாராமல் போய்விடுமா…
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது…
மறு கண்ணும் தூங்கிடுமா…
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்…
கண்ணாளன் முகம் பார்க்கவே…
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்…
கண்ணா உன் குரல் கேட்கவே…
அடடா அடடா… இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…

பெண் : மழைபோல் மழைபோல்…
வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்…
மனம்போல் மனம்போல்…
உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்…
உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  வானுயர்ந்த சோலையிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் பாவலர் வரதராஜன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா இதய கோயில் Vaanuya...