ஈழத்து வரலாற்றில் துலங்கும் மர்மம்
=================================
மாங்குளம் கல்வெட்டு "கணிய் நந்த அஸிரிய்இ குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்" என்கிறது.
கணி - தியானத்தில் உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an ascetic ; குவ்வன் - பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் -- கொடுத்தான்; பணவன் - மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த - கொடுத்த, பள்ளி - கற்படுக்கை.
விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் வேத பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் "அன்" ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.
மணிக்ககல் சுரங்கம் இலங்கை மலைநாட்டில் உள்ளது அந்த ஊருக்கு இரத்தினபுரி என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதனால் அங்கு கடலன் சான்றுகள் உள்ளது.
இந்த மங்குளம் கல்வெட்டில் உள்ள பணவன் என்ற சொல்லை வைத்து பலர் பல விதமான எழுதி உள்ளார்கள்.
ஆனால் யாரும் கடலன், நெடுஞ்செழியன் என்ற சொற்களை நோக்கவில்லை .
சங்க இலக்கியத்த்தில் ஆலம்பேரி சாத்தனார் பாடிய பாடல்கள் நெடுஞ்செழியன் மற்றும் கடலன் என்ற பாண்டிய அரசர் மற்றும் பாண்டிய நாட்டில் இருந்த விளங்கில் அரசன் குறித்தும் பாடி உள்ளார். ஆதலால் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று அறிய முடிகிறது.
நெடுஞ்செழியன் மற்றும் கடலன் என்ற இரு பெயரும் மாங்குளம் கல்வெட்டில் உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
சேரர் உடன் முரண்பாடு கொண்டு இருந்த கடலனை (புறம்53) கூறுகிறது
மதுரைகாஞ்சியில் மாறன் என்ற அடையாளம் கொண்ட தளபதி கோசேர் படையை வழி நடத்திய குறிப்பு மதுரைக்காஞ்சியில் உள்ளது.
அதே நேரத்தில் தென் பரதவர் என்ற படை வீரர்கள் புகழ் மதுரைக்காஞ்சி கூறுகிறது அவர்களை பாண்டியன் நேரடியாக வழி நடத்தினான் என்றும் நெடுஞ்செழியனை warlord of southern prathava என்று நீல கண்ட சாஸ்திரி கூறுகிறார் .இங்கு விளங்கில் என்ற துறைமுக அரசன் கடலன் வழுதி கொண்டு ஒப்பீடு செய்ய முடியும்.
மாறான் என்ற அடையாளம் தளபதி என்று இருந்தது போல வழுதி என்ற பெயரும் தளபதி என்று இருக்க முடியும்.
மதுரைகாஞ்சி கூறும் மாபெரும் வெற்றிக்கு அடுத்து பாண்டியன் இளஞ்சியின் வேளாக ஒரு பரவரை நியமனம் செய்ததை அரிட்டா பட்டி கல்வெட்டு கூறுகிறது.
விளக்கில் கடலன் பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதி , சேரரின் யானைப்படையை ஓட விட்டவன் என்று மாங்குளம் தமிழி மற்றும் சங்க இலக்கிய சான்றுகள் கொண்டு அறிய முடியும்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் விளங்கில் கடலனின் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள், "கடலன்"/"ஸமுத" போன்ற பெயர்களின் ஒற்றுமை ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
கடலனின் விளங்கில் பாண்டிய மற்றும் சேர நாட்டுக்கு இடையில் தாலமி குறிப்பிடும் கரையர் நாடு என்று கருதப்பட்டது ஆனல் ஒருவர் கடலன் விளங்கில் மாங்குளம் கல்வெட்டின் படி மாணிக்கபரல் நிறைந்த நாடு அது இலங்கையில் தான் இருக்க வேண்டும் கடலன் குறித்து பல தொல்லியல் சான்றுகள் இலங்கையில் கிடைப்பதை கொண்டு கூறினர்.
பண்டைய தமிழ் நாட்டில் இன மொழி கலாச்சார பண்பாட்டால் ஈழமும் ஒன்றாக இருந்த படியால் பரதவர்க்கு ஈழம் மற்றும் தமிழகம் இரண்டும் ஒன்றுதான்.
எனவே கடலன் வழுதி மேற்பார்வையில் அவன் நாட்டில் நடக்கும் வாணிக நடவடிக்கைகள். விளக்கில் கடலன் பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதி , சேரரின் யானைப்படையை ஓட விட்டவன் என்று மாங்குளம் தமிழி கல்வெட்டு மற்றும் சங்க இலக்கிய சான்றுகள் கொண்டு அறிய முடியும்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் விளங்கில் கடலனின் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள், "கடலன்"/"ஸமுத" போன்ற பெயர்களின் ஒற்றுமை ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
கடலனின் விளங்கில் பாண்டிய மற்றும் சேர நாட்டுக்கு இடையில் தாலமி குறிப்பிடும் கரையர் நாடு என்று கருதப்பட்ட போது கடலன் விளங்கில் மாங்குளம் கல்வெட்டின் படி மாணிக்கபரல் நிறைந்த நாடு அது இலங்கையில் தான் இருக்க வேண்டும் கடலன் குறித்து பல தொல்லியல் சான்றுகள் இலங்கையில் கிடைப்பதை கொண்டு கூறினர்.
இந்நிலையில் விளங்கில் அரசன் கடலன் மாங்குளம் கடலன் வழுதியாக இருக்க முடியுமா என்று ஆராய்கையில் இலக்கிய சான்றுகள் மட்டும் அல்ல தொல்லியல் சான்றுகளே பரதவர்கள் வேள்(அரிட்டாப்பட்டி) அரச அலுவலர்( மாங்குளம்) , தீஸன், குவிரன், சமுதக(கடலன்) என்ற தொல்லியல் சான்றுகள் தமிழகத்திலும் , மீன், கப்பல் பரத திஸ, கபதி கடலன், நேரடியாக 21 தொல்லியல் சான்றுகள் இலங்கையிலும் பரதவர் குறித்து உள்ளன.தொல்லியல் நோக்கில் சங்க காலம் நூலில் முனைவர் கா ராஜன் மற்றும் தொல்லியல் நோக்கில் இலங்கை தமிழர் என்ற நூலில் முனைவர் புஸ்பரட்ணம் போன்றோர் இதனை தக்க சான்றுகள் உடன் விளக்கி எழுதி இருக்கிறார்கள். எனவே இந்த சங்ககால பாண்டிய அரசன் கடலன் வழுதி ஈழத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்துகின்றன.இவனை பரதவன் எனும் பொருள்பட 'ஸமுத'என அழைக்கப்படும் இலங்கை அரசன் மகாதிஸ (தேவனாம்பியச) என்று பிராகிருத மயப்படுத்தப்பட்ட அரசன் கடலன் வழுதியைக் குறிப்பதாகும். இவனது பெயரோடு மீன் அடையாளமாக கொண்ட பரதவர் பாண்டியர் என்பதை வெளிப்படுத்த போதுமானது.
அவரை, கபதிகடலன் என நாணயம் குறிப்பிடுவதால் 'கடலன்' பௌத்த இல்லறத்தான் என்பது பெறப்படுகிறது. கூடவே இலங்கையில் கி.பி 6 இன் பின்பாக ஏற்பட்ட பூர்வீக குடியல்லாத மெளரிய, கலிங்க, ஆந்திர திரிவடுக இலக்கியங்கள் இவ் உண்மையை மறைத்து வந்துள்ளன.எனவே இப் பாண்டியன் கடலன் வழுதி போன்று இன்னும் எத்தனை தமிழ் அரசர்களின் வரலாறு இவனை போன்று பிராகிருத மயப்படுத்தப்பட்டு உருத்தெரியாமல் மறைக்கப்படுள்ளதோ யாரறிவார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக