வெள்ளி, 13 ஜூன், 2025

 

கனவா இல்லை காற்றா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Kanava Illai Kaatra Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவா இல்லை காற்றா…
கனவா… நீ காற்றா…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

ஆண் : இப்படி உன்னை ஏந்தி கொண்டே…
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்…
சந்திர தரையில் பாயிடவா…

BGM

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…

ஆண் : உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்…
என்னால் தாங்க முடியாது…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கனவா… நீ காற்றா…
கனவா… நீ காற்றா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  வானுயர்ந்த சோலையிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் பாவலர் வரதராஜன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா இதய கோயில் Vaanuya...