வெள்ளி, 13 ஜூன், 2025

  அதோ மேக ஊர்வலம்


அதோ மேக ஊர்வலம்

அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம்
இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத்தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா நாணம்
என்ன வா வா
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம்
இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  வானுயர்ந்த சோலையிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் பாவலர் வரதராஜன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா இதய கோயில் Vaanuya...