வியாழன், 30 அக்டோபர், 2025

 

ரொம்ப நாளாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமயம் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்என்னடி மீனாட்சி

Romba Naalaga Song Lyrics in Tamil


ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…

பெண் : சின்னப்பிள்ளை…
செய்யும் தொல்லை…
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை…
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ…
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ…

பெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ…

பெண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

பெண் : எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…

ஆண் : அன்றில் பறவை… கண்ட உறவை…
அன்றில் பறவை கண்ட உறவை…
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

 

தங்கப்பதக்கத்தின் மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்எங்கள் தங்கம்

Thangapadkathin Song Lyrics in Tamil


BGM

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

பெண் : ஆஅ… ஆஆ… ஆஆஅ…

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

BGM

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து…
மெல்லத் தவழ்வது கண்டு…
முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து…
மெல்லத் தவழ்வது கண்டு…

ஆண் : ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்…
மின்னி மறைவதும் உண்டு…
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்…
மின்னி மறைவதும் உண்டு…

ஆண் : அழகு நடையைப் பழகும் சிலையை…
அணைக்க வந்தேனே…
இதழ்கள் பொழியும் அமுத மழையில்…
மிதக்க வந்தேனே…

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

BGM

ஆண் : பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து…
பக்கம் நடந்தது என்ன…
பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து…
பக்கம் நடந்தது என்ன…

ஆண் : உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க…
தொட்டு இழுப்பது என்ன…
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க…
தொட்டு இழுப்பது என்ன…

ஆண் : பனியில் நனையும் மலரின் உடலில்…
குளிர் எடுக்காதோ…
ஒருவன் மடியில் மயங்கும்போழுது…
சுகம் பிறக்காதோ…

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே…

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

BGM

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியை…
தொட்டு தொடர்வது என்ன…

BGM

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியை…
தொட்டு தொடர்வது என்ன…
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவை…
கொட்டி அளப்பது என்ன…
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவை…
கொட்டி அளப்பது என்ன…

பெண் : ஊரும் உறவும் அறியும் வரையில்…
கண்கள் மட்டோடு…
ஊரும் உறவும் அறியும் வரையில்…
கண்கள் மட்டோடு…

பெண் : மணமாலை தோளில் சூடும் நாளில்…
கைகள் தொட்டாடு…
மணமாலை தோளில் சூடும் நாளில்…
கைகள் தொட்டாடு…

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே…

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

பெண் : ஆஆ… ஆஆ… ம்ம்…ம்ம்ம்… ம்ம்…

 

கிண்ணத்தில் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Kinnathil Thean Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

ஆண் : எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…
நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…

பெண் : தென்றல் போல் மன்றம் வரும்…
தேவி நான் பூவின் இனம்…
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்…
கொண்டு போ அந்தப்புரம்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…
உள்ளத்தில் பூங்கவிதை…
வெள்ளம் போல் ஓடி வரும்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

BGM

ஆண் : ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…
ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…

ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு…
வித்தைக்கோர் தத்தை உண்டு…
தத்தைக்கோர் முத்தம் உண்டு…
முத்தங்கள் நித்தம் உண்டு…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…
யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…

ஆண் : விண்ணிலே வட்டமிடும்…
வெண்ணிலா உந்தன் விழி…

பெண் : பள்ளியில் காலை வரை…
பேசிடும் காதல் கதை…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM


 

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆறிலிருந்து அறுபது வரை

Kanmaniyae Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண் : மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…

பெண் : பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண் : பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண் : பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…

ஆண் : நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…

பெண் : தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

 

தெய்வம் தந்த வீடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன்அவள் ஒரு தொடர்கதை

Deivam Thandha Veedu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…

ஆண் : வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா…
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா…
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி…
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி…

ஆண் : ஆதி வீடு அந்தம் காடு…
இதில் நான் என்ன…
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்…
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்…
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி…
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி…

ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன…
இதில் தாய் என்ன…
மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்…
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்…
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி…
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி…

ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன…
இதில் தேன் என்ன…
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

 

இது ஒரு பொன்மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநிழல்கள்

Ithu Oru Ponmalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்மாலை பொழுது…
இது ஒரு பொன்மாலை பொழுது…
வானமகள் நாணுகிறாள்…
வேறு உடை பூணுகிறாள்…

ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது…

BGM

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்…
ராத்திரி வாசலில் கோலமிடும்…

BGM

ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்…
ராத்திரி வாசலில் கோலமிடும்…
வானம் இரவுக்கு பாலமிடும்…
பாடும் பறவைகள் தாளமிடும்…
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ…

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது…

BGM

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…

BGM

ஆண் : வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…
ஒரு நாள் உலகம் நீதி பெறும்…
திருநாள் நிகழும் தேதி வரும்…
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்…

ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது…

BGM

 

கீரவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபாடும் பறவைகள்

Keeravani Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸா நிஸரி ஸாநி…
ஸா நிஸமக மரி…
பதஸா நிஸரி ஸாநி…
ஸா நி ஸ ம க ம ரி…
பத ஸஸஸநி ரிரிரிஸ…
கககரி மமமக பா…
ஸா நி த ப ம க ரி ஸ நி…

ஆண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே…

ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

BGM

ஆண் : கரிஸ பமக பாநி…
சரிக ரிகஸ நீ பா…

ஆண் : நீ பார்த்ததால் தானடி…
சூடானது மார்கழி…
நீ சொன்னதால் தானடி…
பூ பூத்தது பூங்கொடி…

பெண் : தவம் புரியாமலே…
ஒரு வரம் கேட்கிறாய்…
இவள் மடிமீதிலே…
ஒரு இடம் கேட்கிறாய்…

பெண் : வருவாய் பெறுவாய் மெதுவாய்…
தலைவனை நினைந்ததும்…
தலையணை நனைந்ததேன்…
அதற்கொரு விடை தருவாய்…

பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…

பெண் : இதயமே உருகுதே…
அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…

பெண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

பெண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

BGM

ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்…
குயில் வேட்டைதான் ஆடினேன்…
புயல் போலவே வந்தவன்…
பூந்தென்றலாய் மாறினேன்…

பெண் : இந்த வனம் எங்கிலும்…
ஒரு சுரம் தேடினேன்…
இங்கு உனைப் பார்த்ததும்…
அதை தினம் பாடினேன்…

பெண் : மலரில் மலராய் மலர்ந்தேன்…
பறவைகள் இவளது…
உறவுகள் என தினம்…
கனவுகள் பல வளர்த்தேன்…

பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…

ஆண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…


  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...