வியாழன், 30 அக்டோபர், 2025

 

கிண்ணத்தில் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Kinnathil Thean Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

ஆண் : எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…
நானும் ஓர் திராட்சை ரசம்…
நாயகன் உந்தன் வசம்…

பெண் : தென்றல் போல் மன்றம் வரும்…
தேவி நான் பூவின் இனம்…
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்…
கொண்டு போ அந்தப்புரம்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…
உள்ளத்தில் பூங்கவிதை…
வெள்ளம் போல் ஓடி வரும்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

BGM

ஆண் : ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…
ஆனிப்பொன் கட்டில் உண்டு…
கட்டில் மேல் மெத்தை உண்டு…

ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு…
வித்தைக்கோர் தத்தை உண்டு…
தத்தைக்கோர் முத்தம் உண்டு…
முத்தங்கள் நித்தம் உண்டு…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM

பெண் : யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…
யாழிசை தன்னில் வரும்…
ஏழிசை எந்தன் மொழி…

ஆண் : விண்ணிலே வட்டமிடும்…
வெண்ணிலா உந்தன் விழி…

பெண் : பள்ளியில் காலை வரை…
பேசிடும் காதல் கதை…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…

பெண் : கன்னத்தில் தேன் குடித்தால்…
கற்பனை கோடி வரும்…

ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…
கைகளில் ஏந்துகிறேன்…

BGM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...