வியாழன், 30 அக்டோபர், 2025

 

ஏழு ஸ்வரங்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…

BGM

பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்… ம்ம்ம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… ல்ல்ல்ல்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று…
நமக்காக நம் கையால் செய்வது நன்று…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…

BGM

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…

பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல…
வேதனையும் மாறும் மேகத்தைப் போல…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...