வியாழன், 30 அக்டோபர், 2025

 

குறிஞ்சி மலரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஅழகே உன்னை ஆராதிக்கிறேன்

Kurinji Malaril Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும்…
வேளை பிறந்தாலும்…
அந்தி மாலை பொழுதில் லீலை புரியும்…
ஆசை பிறக்காதோ…

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

BGM

பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு…
மேனி மீது எழுதும் மடல்தான் உறவு…
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்…

ஆண் : அதுவரையில் நான்…
அதுவரையில் நான் அனலில் மெழுகோ…
அலைக் கடலில்தான் அலையும் படகோ…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்…
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன…
என்னிடம் நாடியதென்ன…

பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறக்காதோ…
அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…

BGM

ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க…
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க…
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே…

பெண் : பிறர் அறியாமல்…
பிறர் அறியாமல் பழகும் போது…
பயம் அறியாத இதயம் ஏது…

BGM

பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்…
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்…
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்…

ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம்…
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன…
ஆண் : பூவிதழ் மூடியதென்ன…
பெண் : என்னிடம் நாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறந்தாலும்…

பெண் : அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...