சனி, 30 மே, 2020

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்
இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே.
நரை - வெண்மயிர்
நறை - தேன், மணம்.
நாரி - பெண்
நாறி - நாற்றம் வீசி
நிரை - வரிசை, மந்தை
நிறை - நிறைவு, கற்பு.
நெரி - உடை
நெறி - மதம், வழி.
பரந்த - பரவிய
பறந்த - பட்சி, புன்
பரி - குதிரை
பறி - பிடுங்கு, அபகரி
புரணி - ஊன்
புறணி - புறங் கூறுதல்
பாரை - கம்பி, கடப்பாரை
பாறை - கற்பாறை
சேரல் - கிட்டல்
சேறல் - செல்லுதல்
சொரி - பொழி
சொறி - தினவு நோய்
தரி - அணி, பொறு
தறி - வெட்டு, துணி நெய்யும் தறி.
தரு - மரம்
தறு - கட்டு, முடி.
திரம் - உறுதி
திறம் - வல்லமை
திரை - அலை
திறை - கப்பல், அரசிறை.
துரவு - பெரிய கிணறு
துறவு - துறத்தல்.
துரத்தல் - செலுத்துதல்
துறத்தல் - நீங்குதல்.
துரு - இரும்பழுக்கு
துற - நெருங்கு, அமுக்கு
துரை - பிரபு
துறை - பிரிவு, ஆற்றுத் துறை.
தெரி - தோன்று, அறி
தெறி - சிதறு. விரலால் உந்து.
தேரல் - ஆராய்தல்
தேறல் - தெளிதல், தேர்வில் தேறுதல்.
நருக்கு - நசுக்கு
நறுக்கு - துண்டி
பெரு - பெரிய
பெறு - அடை.
புரவு - காப்பு
புறவு - புறா
புரம் - பட்டணம், நகர்
புறம் - பக்கம், வெளி
அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்.
அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி.
ஆர - நிறைய
ஆற - சூடு குறைய.
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா
உரை - சொல்
உறை - அஞ்சல் உறை
எரி - தீ
எறி - வீசு
கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்
கரை - கடற்கரை
கறை - மாசு
கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்
சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை
சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்
பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட
பரவை - கடல்
பறவை - பட்சி
பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை
பெரு - பெரிய
பெறு - அடை
பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்.
இது போல இதர "ழ,ல,ள" வேறுபாடுகள் கீழே.
இலை - தழை
இழை - நூற்கிற நூல்
இளை - மெலி, வேலி
கிலி - பயம்
கிழி - கிழி (த்தல்)
கிளி - கிளிப்பிள்ளை.
ஒலி - ஓசை
ஒழி - நீக்கு
ஒளி - துலக்கம், வெளிச்சம்
உலவு - உலாத்து
உழவு - பயிர்த்தொழில்
உளவு - வேவு, அற்றம், மறை,
மறைபொருள்
உலை - கொல்லுனுலை, நீருலை
உழை - பக்கம், மான்
உளை - பிடரிமயிர், சேறு
தழை - இலை
தலை - சிரசு
தளை - விலங்கு, கட்டு
கலி - ஒலி, ஓர்யுகம்
கழி - நீக்கு, உப்பங்கழி
களி - மகிழ்ச்சி
வழி - பாதை
வளி - காற்று
வலி - நோவு, வலிமை
கலை - ஆண் மான்
கழை - கருப்பு, மூங்கில்
களை - அயர்வு
விழி - கண் மேகலை
விளி - ஓசை, அழை
தமிழார்வம் உள்ளவர்களுக்கு.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...