உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்..!!
இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.
கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.
தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படியானதொரு அறிவு கிட்டியது என்றும், அது குமரிக்கண்டம் எனப்படும் லொமூரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களே என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.
அதனை மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸ்சான்டர் கெந்தர்தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர். அவருடைய கூற்றின் படி எகிப்தியர்கள் வாழ்ந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து வேறு ஓர் சமூகம் அங்கு வந்து குடியேறி உள்ளது.
அந்த சமூகம் குமரிகண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமூரியாவில் இருந்து வந்த சமூகம் என்றும் கெந்தர்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எகிப்துக்கும் இந்தியாவிற்கும் கடல் வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களை கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதன் படி எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல ப்ரெந்தர் ஸ்தோதியார் என்ற ஆய்வாளர் Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள். 1927ஆம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை சேர்ந்தவையுடன் ஒத்துப்போகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடுத்து நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் எனும் மக்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என ஒக்ரான் Autran என்ற தொல் பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். (நைல் நதி என்பது நீல நதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து திரிபு படுத்தப்பட்டு வந்த ஓர் சொல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதும் ஒருவகையில் தமிழர் மரபே அப்படியான ஓர் வழக்க முறையில் உருவாக்கப்பட்டதே எகிப்திய மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறப்படுகின்றது.
இங்கு பெரிய அளவில் எழுப்பப்படும் அடக்கம் செய்யப்படும் இடமான சமாதியே பெரும் இடு (சுடுகாடு) பெருமிடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் பிரமிடு ஆக மாறிப்போனது என்ற கருத்தையும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
அதேபோன்று Edward pokoke என்ற வரலாற்று ஆய்வாளர் Indian in Greece என்ற நூலின் ஊடாக சிந்து வெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் எனவும்..,
சிந்து வெளியில் இருந்து, பெர்சிய வளைகுடாவை கடந்து Oman Hadramont, Yeman கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிஸினியா போன்ற பகுதிகளுக்கு பரவிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Heinrich Kari Brugsh என்பவர் தனது History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலை நாட்டினர் என்று கூறியுள்ளார்.
பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில் பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என Adolf Erkman என்ற ஆய்வாளர் தனது Life in ancient Egypt உன்ற நூலின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை கருத்தை Bengsch Bey என்ற எகிப்து நாட்டு வரலாற்று ஆய்வாளரும் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIliane Hornbergar என்ற பிரான்ஸ் ஆய்வாளரும் அறிஞருமான ஒருவர் எகிப்தின் முதல் வம்ச மன்னன் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்த தமிழர் ஒருவரே என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சான்றுகள் உலகம் இப்போது வியந்து கொண்டிருக்கும் எகிப்தியர்களின் அறிவியல் என்பது தமிழர்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றது.
குறிப்பாக மர்மங்கள் அனைத்திற்கும் காரணமாக தமிழர்களே இருந்து வருகின்றார்கள், அந்த வகையில் பிரமிட்டுக்குள்ளே உறங்குவது தமிழ் மன்னர்கள் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழரே தமது காலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தான் என்றும் உறுதியாகின்றது. என்றாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகம்.
எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும் அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக