புதன், 2 ஜூலை, 2025

 

மதுர மரிக்கொழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Madura Marikkozhunthu Song Lyrics in Tamil


குழு : பச்சரிசி மாவிடிச்சு…
மாவிடிச்சு மாவிடிச்சு…
சர்க்கரையில் பாகு வச்சு…
பாகு வச்சு பாகு வச்சு…

குழு : சுக்கிடுச்சு மிளகிடுச்சு…
மிளகிடுச்சு மிளகிடுச்சு…
பக்குவமா கலந்து வச்சு…
கலந்து வெச்சு கலந்து வெச்சு…

குழு : அம்மனுக்கு மாவிளக்கு…
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்…
அம்மனவ எங்களையும் காக்க வேணும்…
காக்க வேணும் தாயி…

BGM

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…
மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

ஆண் : மானோட பார்வை மீனோட சேரும்…
மானோட பார்வை மீனோட சேரும்…
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்…
இது மறையாத என்னுடைய பாசம்…

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

BGM

ஆண் : பொட்டுன்னா பொட்டு வச்சு…
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு…
பட்டுனு சேலையைக் கட்டி…
எட்டு வச்சு நடந்துகிட்டு…

ஆண் : பொட்டுன்னா பொட்டு வச்சு…
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு…
பட்டுனு சேலையைக் கட்டி…
எட்டு வச்சு நடந்துகிட்டு…

ஆண் : கட்டுன்னா கட்டிப்புட்ட…
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட…
வெட்டும் இரு கண்ணை வச்சு…
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட…

பெண் : கட்டு அது உனக்கு மட்டும்தானா…
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா…
எப்போதோ விட்டக்குறை மாமா…
அது இரு உசுர கட்டுதய்யா தானா…

பெண் : இது இப்போது வாட்டுதுன்னு…
பாட்டு ஒன்ன அவுத்துவிடு…
மதுர…

ஆண் : மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…

ஆண் : அடி மதுர மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…

BGM

பெண் : மெட்டுன்னா மெட்டு கட்டி…
இட்டு கட்டி பாடிக்கிட்டு…
கட்டுனா ராகம் என்னும்…
மாலை ஒன்னை கட்டிப்புட்டு…

பெண் : மெட்டுன்னா மெட்டு கட்டி…
இட்டு கட்டி பாடிக்கிட்டு…
கட்டுனா ராகம் என்னும்…
மாலை ஒன்னை கட்டிப்புட்டு…

பெண் : சுத்துனா சுத்தி அத…
என் கழுத்தில் போட்டுப்புட்ட…
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட…
தாலி கட்ட மறந்துப்புட்ட…

ஆண் : நீதானே என்னுடைய ராகம்…
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்…
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்…
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்…

ஆண் : என் மனசேனோ கிறங்குதடி…
சிறகடிச்சுப் பறக்குதடி…
மதுர…

பெண் : மரிக்கொழுந்து வாசம்…
ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

பெண் : மானோட பார்வை மீனோட சேரும்…
ஆண் : மானோட பார்வை மீனோட சேரும்…

பெண் : மாறாம என்னைத் தொட்டுப் பேசும்…
ஆண் : இது மறையாத என்னுடைய பாசம்…

பெண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…


 

என் ராசாத்தி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அம்பிகாபதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Yen Rasathi Nee Vazhanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…

பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…

BGM

ஆண் : பாதையை நீ மாத்திவிடு…
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு…

பெண் : போகும் வழி தெரியவில்லை…
போகும் இடம் அதுவும் புரியவில்லை… ஹோய்…
என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…

BGM

ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா…
பாதையென அறிஞ்சிடலாம்… ஆஆ…
நேர்மையெனும் வழி நடந்தா…
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்…

பெண் : கண் வீசும் வேளையிலே…
உன் விழியத் தேடுகிறேன்…
உன் நினைவின் இனிமையிலே…
நாள் தோறும் வாழுகிறேன்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…

BGM

பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும்…
என்னை நீ மணந்திடனும்…
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்…
என் ஆசை அது நிறைவேறனும்…

ஆண் : உன் ஆசையில தப்புமில்ல…
உன்னோடு நான் சேர வழியுமில்ல…
மனசை நீ மாத்திக்கனும்…
என்னை நீ மறந்திடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…

பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…


 

தெய்வீக ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி & வாணி ஜெய்ராம்இளையராஜாஉல்லாசப் பறவைகள்

Dheiveega Raagam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…

BGM

பெண் : செந்தாழம் பூவை கொண்டு…
சிங்காரம் பண்ணிக்கொண்டு…

BGM

பெண் : செந்தூர பொட்டும் வைத்து…
சேலாடும் கரையில் நின்றேன்…
பாராட்ட வா சீராட்ட வா…
நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…
தனதந்தானானா தந்தானானா…
தந்தனன தந்தனன தந்தனன னா…

BGM

குழு : தந்தனன தந்தனன தந்தனன னா…

பெண் : தழுவாத தேகம் ஒன்று…
தனியாத மோகம் கொண்டு…
தாலாட்ட தென்றல் உண்டு…
தாளாத ஆசை உண்டு…

பெண் : பூமஞ்சமும் தேன்கின்னமும்…
நீ தேடி வா ஒரே ராகம்…
பாடி ஆடுவோம் வா…

BGM

பெண் : தெய்வீக ராகம்…
தெவிட்டாத பாடல்…
கேட்டாலும் போதும்…
இள நெஞ்சங்கள் வாடும்…

BGM

 

எந்தன் பாடல்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ் & பி.எஸ். சசிரேகாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Endhan Paadalgalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே…
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே…

BGM

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…

BGM

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

BGM

ஆண் : பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற…
மங்கை நாண செய்கை செய்தாய்…
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே…
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே…

பெண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராவிடில் நித்தம் உறங்காவிழி…

BGM

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

BGM

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது…
ஆடும் பூவாய் ஆனேன் மாது…
இதழோரம் சில்லென்று நனைகின்றது…
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…

 

இந்திரலோகத்து சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Indralogathu Sundari Kanavil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…

BGM

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

BGM

ஆண் : தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்…
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்…

ஆண் : முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு…
ஏமாந்த கதைதான் கண்கள்…
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்…
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்…

ஆண் : பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தேனோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றேனோ…

BGM

ஆண் : கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்…
மின்னும் விழியில் உள்ள வைரம் கண்டது…
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது…
கருவிழி உருளுது கவிதைகள் மலருது…
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது…
எழில் நிலா ஆடும் விழா நடக்குது…
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு…

BGM

ஆண் : பொன்னுருகும் கன்னம் குழியே…
ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்…
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்…
அந்த மானிடமே மனதைவிட்டான்…

ஆண் : அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு…
அவனியில் அவளே ஆதாரம்…
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு…
முத்துச் சரங்கள் இதழோரம்… ஆஆஆ…

ஆண் : பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…
பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஹான்…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஹோ ஹோ…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஏ ஏஹே…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஅ…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தானோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்…

பெண் : மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றானோ…

ஆண் : ஓ ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…


 

வைகைக் கரை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Vaigai Karai Katre Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…

ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…

ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…

ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…

 

வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்மின்சர கனவு

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…

ஆண் : தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்…
பாலுாட்ட நிலவுண்டு…

—BGM—

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…

ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…

பெண் : பெண்ணே… பெண்ணே…
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்…
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்…

ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு…

—BGM—

ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...