புதன், 2 ஜூலை, 2025

 

இந்திரலோகத்து சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Indralogathu Sundari Kanavil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…

BGM

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

BGM

ஆண் : தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்…
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்…

ஆண் : முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு…
ஏமாந்த கதைதான் கண்கள்…
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்…
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்…

ஆண் : பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தேனோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றேனோ…

BGM

ஆண் : கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்…
மின்னும் விழியில் உள்ள வைரம் கண்டது…
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது…
கருவிழி உருளுது கவிதைகள் மலருது…
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது…
எழில் நிலா ஆடும் விழா நடக்குது…
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு…

BGM

ஆண் : பொன்னுருகும் கன்னம் குழியே…
ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்…
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்…
அந்த மானிடமே மனதைவிட்டான்…

ஆண் : அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு…
அவனியில் அவளே ஆதாரம்…
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு…
முத்துச் சரங்கள் இதழோரம்… ஆஆஆ…

ஆண் : பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…
பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஹான்…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஹோ ஹோ…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஏ ஏஹே…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஅ…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தானோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்…

பெண் : மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றானோ…

ஆண் : ஓ ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...