வியாழன், 10 ஜூலை, 2025

 

இதயமே இதயமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇதயம்

Idhayame Idhayame Song Lyrics in Tamil


ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…
என் விரகம் என்னை வாட்டுதே…
நிலவில்லாத நீல வானம் போலவே…
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : பனியாக உருகி நதியாக மாறி…
அலை வீசி விளையாடி இருந்தேன்…
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்…

ஆண் : இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…
இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…

ஆண் : கோலம் கலைந்ததே…
புது சோகம் பிறந்ததே…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…
உன் மீது படவில்லை துடித்தேன்…
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்…
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா…

ஆண் : இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...