வியாழன், 10 ஜூலை, 2025

 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநினைவெல்லாம் நித்யா

Rojavai Thalattum Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
உன் வார்த்தை சங்கீதங்கள்…
ஹா… ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

BGM

ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…

ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…

பெண் : மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு…

ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பெண் : பொன்மேகம் நம் பந்தல்…
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…

BGM

பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…

பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்… ஹா ஹா…

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள்…

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...