வெள்ளி, 18 ஜூலை, 2025

 பிறக்கும் போதும் அழுகின்றாய்....

படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...