புதன், 2 ஜூலை, 2025

 

என் ராசாத்தி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அம்பிகாபதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Yen Rasathi Nee Vazhanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…

பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…

BGM

ஆண் : பாதையை நீ மாத்திவிடு…
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு…

பெண் : போகும் வழி தெரியவில்லை…
போகும் இடம் அதுவும் புரியவில்லை… ஹோய்…
என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…

BGM

ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா…
பாதையென அறிஞ்சிடலாம்… ஆஆ…
நேர்மையெனும் வழி நடந்தா…
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்…

பெண் : கண் வீசும் வேளையிலே…
உன் விழியத் தேடுகிறேன்…
உன் நினைவின் இனிமையிலே…
நாள் தோறும் வாழுகிறேன்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…

BGM

பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும்…
என்னை நீ மணந்திடனும்…
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்…
என் ஆசை அது நிறைவேறனும்…

ஆண் : உன் ஆசையில தப்புமில்ல…
உன்னோடு நான் சேர வழியுமில்ல…
மனசை நீ மாத்திக்கனும்…
என்னை நீ மறந்திடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…

பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...